பத்துப் பாவங்களைப் போக்கும் தேவநதி! டி.ஆர். பரிமளரங்கன்

/idhalgal/om/goddess-ten-sinners-dr-parimalarankan

தேவநதி என்று போற்றப்படும் கங்கை நதிக்கரையோரங்களிலுள்ள திருத்தலங்களில் எல்லா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அதுவும் விசேஷ நாட்களில் அத்திருத்தலங்கள் விழாக்கோலம் காணும். அந்த வகையில், வடஇந்திய பஞ்சாங்கத்தின்படி "ஜேஷ்ட மாத சுக்லபட்ச தசமி திதி' அன்று புனித கங்கை நதி பாயும் திருத்தலங்களில் எல்லாம் "கங்கா தசரா' என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இது பாபஹர தசமி விழா என்று போற்றப்படுகிறது.

இந்த வருடம் ஜூன் மாதம் 22-ஆம் தேதி பாபஹர தசமி என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

devariver

இந்தப் பத்து நாட்களும் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் காலையில் புனித கங்கை நதியில் நீராடிவிட்டு, கங்கையை வணங்கி விரதம் மேற்கொள்வார்கள். மாலையில் மீண்டும் நீராடி, கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து பூஜைகள் செய்த பின், அன்றைய விரதத்தினை நிறைவுசெய்வார்கள். வெளியூர் பக்தர்களும் இதில் கலந்துகொண்டு புனிதம் பெறுகிறார்கள்.

ஆனி மாத வளர்பிறை தசமி திதியன்று- அதாவது பாபஹர தசமியன்றுதான் தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை, பூலோகத்திற்கு இறங்கி வந்து, பாதாள உலகில் சாம்பலாகிக் கிடந்த சகரபுத்திரர்களின் அஸ்தியில் கலந்து புனிதப்படுத்தி சொர்க்கலோகத்திற்கு அனுப்பினாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கை நதியில

தேவநதி என்று போற்றப்படும் கங்கை நதிக்கரையோரங்களிலுள்ள திருத்தலங்களில் எல்லா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அதுவும் விசேஷ நாட்களில் அத்திருத்தலங்கள் விழாக்கோலம் காணும். அந்த வகையில், வடஇந்திய பஞ்சாங்கத்தின்படி "ஜேஷ்ட மாத சுக்லபட்ச தசமி திதி' அன்று புனித கங்கை நதி பாயும் திருத்தலங்களில் எல்லாம் "கங்கா தசரா' என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இது பாபஹர தசமி விழா என்று போற்றப்படுகிறது.

இந்த வருடம் ஜூன் மாதம் 22-ஆம் தேதி பாபஹர தசமி என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

devariver

இந்தப் பத்து நாட்களும் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் காலையில் புனித கங்கை நதியில் நீராடிவிட்டு, கங்கையை வணங்கி விரதம் மேற்கொள்வார்கள். மாலையில் மீண்டும் நீராடி, கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து பூஜைகள் செய்த பின், அன்றைய விரதத்தினை நிறைவுசெய்வார்கள். வெளியூர் பக்தர்களும் இதில் கலந்துகொண்டு புனிதம் பெறுகிறார்கள்.

ஆனி மாத வளர்பிறை தசமி திதியன்று- அதாவது பாபஹர தசமியன்றுதான் தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை, பூலோகத்திற்கு இறங்கி வந்து, பாதாள உலகில் சாம்பலாகிக் கிடந்த சகரபுத்திரர்களின் அஸ்தியில் கலந்து புனிதப்படுத்தி சொர்க்கலோகத்திற்கு அனுப்பினாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கை நதியில் நீராடினால் மானிடர்களைப் பிடித்திருக்கும் பத்துவிதமான பாவங்கள் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது.

தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை பகீரதன் தவத்தால் பூலோகத்திற்கு வருவதற்குமுன், சிவபெருமான் அருளால் அவரது ஜடாமுடியில் தங்கி, பிறகு கங்கோத்ரியில் பூமியில் இறங்கி தேவப்பிரயாகை, லட்சுமணன் ஜூலா, ஹரித்வார் என பயணித்து வாரணாசி என்னும் காசிக்கு வருகிறாள். பிறகு கங்காசாகர் சென்று தன்னைக் கடலில் அர்ப்பணித்துக் கொள்கிறாள். அவள் கடலை நோக்கி ஓடிவரும் இடங்களெல்லாம் புனிதத்தலங் களாக மாறின.

குறிப்பாக, வாரணாசி என்னும் காசியில் கங்கை நதிக்கரையோரத்தில் 64 கட்டங்கள் உள்ளன. எனினும் தசாச்வமேத கட்டத்தில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. இது பிரம்மதேவன் அசுவமேத யாகம் செய்த இடம் என்கிறது புராணம்.

காசியில் இந்த அசுவமேதக் கட்டம் மற்றும் சில கட்டங்களில் (படித்துறைகளில்) மாலையில் நடைபெறும் மங்கள ஆராத்தி பூஜை மிகவும் புகழ்பெற்றது. இந்தப் பூஜை வருடம் முழுவதும் தினமும் நடந்தாலும், கங்கை பூமிக்கு வந்த தசமியன்று மாலையில் கங்கை நதிக்குப் பூஜைசெய்து, அந்த மங்கள ஆரத்தியையும் கடைசியாக தரிசித்தால்தான் மானிடர்களின் அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்கின்றன வேதநூல்கள். அதுவும் பாபஹர தசமி அன்று விரதம் மேற்கொண்டு வழிபடுவது மிகவும் போற்றப்படுகிறது. பாபஹர தசமி என்றால் பத்துப் பாவங்களைப் போக்கும் தசமி என்று பொருள்.

வாக்கில் செய்வது நான்கு; சரீரத்தால் செய்வது மூன்று; மனத்தால் இழைப்பது மூன்று. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் இந்த பத்துப் பாவங்களைப் போக்கிக் கொள்ள பாபஹர தசமி உதவுகிறது.

வாக்கினால் செய்வது: கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.

சரீரத்தால் செய்வது மூன்று: நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக்கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர்மனை நோக்குவது.

மனத்தால் இழைக்கும் பாவங்கள் மூன்று: மற்றவர் பொருளை அடைய திட்டமிடுவது; கெட்ட எண்ணங்களை நினைத்தல்; பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.

மேற்கண்ட பத்துப் பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான பாபஹர தசமியன்று கங்கை நதியில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.

அந்த தினத்தில் காசிக்குச்சென்று கங்கையில் நீராடுவது எல்லாருக்கும் இயலாத காரியம். எனவே, அந்தப் புண்ணிய காலத்தில் அவரவர் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள புனித நதியிலோ, குளத்திலோ நீராடலாம். நதியிலும் குளத்திலும் நீரில்லாது போனாலும், சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து, "இனிமேல் பாவங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வீட்டில் வடக்குதிசை நோக்கிக் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது.

அன்று அன்னதானம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு ஆடைகள் தானம் செய்வது நமக்கு புனிதம் சேர வழிவகுக்கும்.

புத்தர் சொன்ன பத்து

பாபஹர தசமியில் குறிப்பிட்டுள்ள பத்துப் பாவங்கள் எவ்வளவு கொடுமையானதோ, அதேபோல் மகான் புத்தரும் பத்துப் பாவங்கள் என்னவென்பதை தன் சீடர்களுக்கு உபதேசித்திருக்கிறார்.

அவை:

உடலின் பாவங்கள் மூன்று; நாவின் பாவங்கள் நான்கு; உள்ளத்தின் பாவங்கள் மூன்று.

கொலை, களவு, விபச்சாரம் ஆகியவை உடலிலின் பாவங்கள்.

பொய்மை, புறங்கூறல், பயனற்ற பேச்சு, நிந்தனை ஆகியவை நாவின் பாவங்கள்.

பொறாமை, துவேஷம், உண்மையை உள்ளவாறு உணராமல் தவறு செய்தல் ஆகியவை உள்ளத்தின் பாவங்கள் ஆகும்.

அதனால் கீழ்க் கண்ட விதிகளை வகுத்தருளினார் புத்தர்.

1.கொல்ல வேண்டாம்; உயிரைப் பேணுங்கள்.

2. எந்த நேரத்திலும் களவு வேண்டாம். மற்றவர்கள் பொருள் களையும் பறிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தனது

கடின உழைப்பின் மூலமே பயனடைய வேண்டும்.

3. தீய செயல்களைத் தவிர்க்கவும். கற்புநெறியில் என்றும் எப்பொழுதும் வாழ்க்கையை நடத்துங்கள்.

4. எக்காலத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய்பேச வேண்டாம். உண்மையை மட்டும் பேசுங்கள். அதுவும் அன்பு கனிந்த நிலையில் பேசுங்கள். காவலனாக இருக்கும் நீயே கள்வனாக மாறாதே.

5. பிறரை இழிவுபடுத்தும் செய்திகளைக் கற்பனையில்கூட நினைக்கவேண்டாம். பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம். மற்றவர்களின் குறைகளைக் கூறவேண்டாம்; அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுங்கள்.

6. அனைவரிடமும் அன்புடன் பேசுங்கள். அதிகாரத் தோரணையில் யாரிடமும் பேசவேண்டாம்.

7. தேவையில்லாதவற்றையும், பயனில் லாதவற்றையும் பேசி அடுத்தவர் மனதை காயப்படுத்தவேண்டாம். குறித்த விஷயத்தை மட்டுமே சுருக்கமாகப் பேசுங்கள் அல்லது பேசாமல் மௌனமாக இருப்பது நல்லது.

8. பிறர் சொத்துகளை அடைய பேராசை வேண்டாம். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்களும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

9. அனைத்து ஜீவன் களிடமும் அன்பாக இருங்கள். ஒருவரைப் பற்றி அவதூறு பேச வேண்டாம்; வெறுப்பும் வேண்டாம்.

10. உண்மையை அறிய ஆவல் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்திலிருக்கும் அறியாமையை அகற்றுங்கள். ஆசையே தவறுகள் செய்ய வழி வகுக்கும். எனவே, ஆசையை அறவே அழியுங்கள். ஆசையே பேராசையாக மாறி, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

இந்தப் பத்துப் பாவங்களையும் அறவே அழித்துவிட்டால் என்றும் மகிழ்ச்சியுடனும் நலமுடனும் அமைதியுடனும் வாழலாம் என்று அறிவுறுத்துகிறார் புத்தர்.

பாபஹர தசமி குறித்து சாஸ்திரங்கள் கூறும் நல்வழியில் நடப்பதுடன், புத்தர் அருளிய பத்துப் பாவங்களையும் கவனத் தில்கொண்டு நல்வழியில் நடந்தோமானால் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும் என்பது ஆன்றோர் கூற்று.

இதையும் படியுங்கள்
Subscribe