முனிவர்கள் பலர் ஒன்றாய் இணைந்து சூத முனிவரிடம் சென்று "பஞ்சாட்சர மந்திரத்தின் ஆற்றலை விளக்குங்கள்' என்று பணிந்து வேண்டினர்.
அதற்கு சூத முனிவர் பதில் தந்தார். அதன் விவரம்...
அண்ட சராசரங்களிலெல்லாம் விளங்கும் அன்னை பரமேஸ்வரி சிவபெருமானை வணங்கி, "பஞ்சாட்சரத்தின் வல்லபத்தை எங்களுக்குச்சொல்லி வழிகாட்டுங்கள்' என்று பணிவோடு முறையிட்டாள். சிவபெருமானும் அவை சார்ந்த உண்மைதனை எடுத்துரைத்தார்.
"சூன்ய கேடுகாலத்தில் அல்லது பிரளய காலத்தில் எல்லாம் உன்னிடத்தில் (சக்தி) விளங்கின. அதன் பின் நீ என்னிடத்தில் ஐக்கிய மாகிவிட்டாய். எனவே சதுர்வேதங்களும், எல்லா சாஸ்திரங்களும் ஐந்து எழுத்துகளுக்குள் அடங்கி ஒடுங்கின. அச்சமயத்தில் நான் பரமாத்வாக வெளிப்பட்டேன். பிரகிருதியாய் நீ தோற்றம் கொண்டாய். இந்த வினையில் ரிஷிகளும் முனிவர்களும் தோன்றினார்கள். நாராயணன் பாற்கடலில் யோக நித்திரையில் இருந்தார். அவருடைய உந்திக் கமலத்திலிருந்து நான்முகன் தோன்றினார்.
படைத்தல் தொழிலுக் காக தோற்றுவிக்கப்பட்ட பிரம்மதேவன், படைக்கும் சக்தி இல்லாதவனாக வருந்தி என்னிடம் வேண்டினார். வேதங்கள் போற்றிப் புகழ்ந்திடும் பஞ்சாட்சரத்தை, அந்த சமயத் தில் சிவபெருமானாகிய நான் பிரம்மன்முன் தோன்றி என்னுடைய ஐந்து முகங்களால் உபதேசம் செய்தேன்.
அந்த மந்திரத்தின் வல்லமை யால் பிரம்மதேவன் பிரம்ம ஞானம் பெற்று தன் படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்ம தேவனிடமிருந்து பத்து பிரம்மாக்கள் வெளிப்பட்டனர். அவர்களுக்கு இம்மந்திரத்தை உபதேசித்து, அண்ட சராசரங் களுக்கும் சென்று பஞ்சாட்சரத்தின் பெருமை யைப் பரவச் செய்தார் பிரம்மா.
பஞ்சாட்சரம் வேதத்தின் சாரமாக உள்ளது. பஞ்சாட்சரம் பிறவிப்பிணியை அறவே நீக்கும்'' என்று தன் தேவிக்கு அருள்பாலித் தார் சிவன்.
பஞ்சாட்சரம், அழிவில்லாத ஆனந்த முக்தி தரும். சக்திய சொரூபத்தில் நின்று சிவபெருமானை ஆழ்ந்து சிந்தித்து பஞ்சாட்சரத்தை ஜெபித்துவந்தால் கயிலாய பதவி கிடைக்கும்.
பஞ்சாட்சரத்தை உச்சரிக்கும் விதம் சிவபெருமானால் கூறப்பட்டுள்ளது. முதலில் "நம' என்னும் பதத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு "சிவாய' என்னும் பதத்தை உச்சரிக்கவேண்டும். இவ்வைந்து எழுத்துகளே பீஜம்.
இவ்வைந்து எழுத்துகளும் மஞ்சள்நிறம், கருநீலம், புகைநிறம் (கிரே), பொன்னிறம், செந்நிறங்களாக விளங்கும். இந்த எழுத்து களை விந்து, நாதங்களுடன் கூட்டி உச்சரிக்க வேண்டும். இவ்வைந்து எழுத்துகளும் சிவனது ஐந்து முகங்களில் பொருந்தியிருக்கும் என்பது சிவனின் தத்துவம்.
நகாரம்- கிழக்கு முகம்.
மகாரம்- தெற்கு முகம்.
சிகாரம்- மேற்கு முகம்.
வகாரம்- வடக்கு முகம்.
யகாரம்- ஈசானிய முகம்.
பஞ்சாட்சரத்தை மானசமாக ஜெபம் செய்வது பக்தனுக்கு உத்தமம். பிறர் கேளாத ஒலியில் உச்சரிப்பது மதிதிமம். யாவரும் கேட்கும்படிச் செய்வது அதமம். பஞ்சாட்சர மந்திரம் ஜெபிப்ப வனுக்கு லக்னம், திதி, வாரம், யோகம், நட்சத்திரம் போன்ற எவையும் தீங்கு நினைக்காது. அவனுக்கு பகைவர் கள் இருக்கமாட்டார்கள். பஞ்சாட்சர மந்திரத்தை பக்தியுடன் சொல்பவர், கேட்பவர் இருவருக்கும் சகல பாவங்களும் ஒழிந்து, உத்தம பதவி கிடைக்குமென்று உமாதேவிக்கு பரமசிவன் எடுத்துரைத்துள்ளார்.
"எவ்விதத்தில் பூஜை செய்தால் சிவபெருமானை அடையலாம்' என்று மகரிஷிகள் வியாச பகவானைக் கேட்டனர்.
வியாசர் சிவபெருமானால் கூறப்பட்ட சிவதர்மங்களைக் கூறினார்.
சிவதர்மங்களை மிகுந்த ஈடுபாட்டோடு செய்யவேண்டும். பஞ்சாட்சரம் மோட்சம் அளிக்கக்கூடியது. மனோகரமானது.
சர்வேஸ்வர பிரீதிபாதமானது. அனேக சித்திகளை அளிக்கவல்லது. உலகிலுள்ள யாவரும் விரும்பத்தக்கது. சிவ மூலமந்திரமாகும். எண்ணிறந்த பொருட்களைக் கொடுக்க வல்லது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தரவல்லது. இந்த மந்திரத்தை சிவ சொரூபமாக உறுதிகொண்டு கூறுபவன் பரப்பிரம்மத்தில் இருப்பான். இது விதியின் வாக்கியம். தன் பிதுர்களை மோட்சத்தில் சேர்த்துத் தானும் சிவபதவி அடைவான் என்பது சாஸ்திர உண்மை.
உலகில் நாம் அனுபவிக்கும் வினைகள் எட்டு. அதாவது எட்டுவகை கர்மங்கள்.
அவற்றின் தன்மைகளை ஆய்வுசெய்வோம்.
கர்மம் என்றால் வினை. வினையென்றால் செயல்கள். மனிதனுடைய செயல்கள் விதியினால் எதிர்செயலாக மாற்றப்பட்டு, நல்லது செய்தால் நன்மையும், தீயது செய்தால் தீமையும் அந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ ஆற்றச் செய்கிறது. கர்மம் என்பது வடமொழிச் சொல். வினையென்பது தமிழ்ச்சொல்.
இந்த உலகில் இறைவனால் அருளப்பட்ட எட்டு வினைகளும் எவ்வாறு உணரப்படும்?
உலகியல் நிலையிலும், கடவுள் நிலையிலும், மாந்திரீக நிலையிலும், தாந்திரீக நிலையிலும், தீயவர்களிடமும், நல்லவர்களிடமும் இவற்றைப் பார்க்கலாம். இந்த எட்டு வினைகளையும் புறச்செயல்கள் வாயிலாக எல்லாரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அக்காலத்திலிருந்து இன்றுவரை இவை எவ்வாறு பேசப்படுகின்றன என்பதை ஆராய்வோம்.
வசியம், மோகனம், ஆகர்ஷணம், வித்வேஷணம், பேதனம், தம்பனம், உச்சாடணம், மாரணம் என்பதே அவை.
1. வசியம்: நட்புகொள்ளுதல்; நட்பாகுதல்; நட்பை அதிகப்படச் செய்தல்.
இதற்கான மூலமந்திரம்: "ஓம் யநமசிவ அரியும் ஐயும் கிலியும் சுவாஹா.'
2. மோகனம்: மோகித்தல்; ஒன்றோடு ஒன்றாதல்; கிரகித்தல்; ருசிப்பித்தல்; சந்தோஷமடைதல் மற்றும் இவை சார்ந்தவை.
மூலமந்திரம்: "ஓம் மசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாஹா.'
3. ஆகர்ஷணம்: அழைத்தல்; இன்புறுதல்; அன்புகாட்டுதல்; ஆனந்த மடைதல் மற்றும் இவை தொடர்புடையவை.
மூலமந்திரம்: "ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாஹா.'
4. வித்வேஷணம்: மனமென்ற குரங்கு அங்குமிங்கும் சென்று கொம்பேறாமல், ஒரே இடத்தில் நிலைகொள்வது.
மூலமந்திரம்: "ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.'
5. பேதனம்: பிரித்தல்; விலகுதல்; சேர்ந்து வாழ்வோரை இரண்டாகப் பிரித்தல்; பிரிவினை உண்டாக்குதல்.
மூலமந்திரம்: "ஓம் உபவசிமந அரியும் ஸ்ரீயும் சவ்வும் சுவாஹா.'
(மாந்த்ரீக நிலையில் கணவன்- மனைவியைப் பிரித்தல்; தாய்- மகனைப் பிரித்தல்; இருதார அமைப்பில் ஒரு மனைவி யைப் பிரிப்பது; நண்பர்களைப் பிரித்தல்; நல்லவர்களைப் பிரித்தல்; அரசவையில் கலகமுண்டாக்குதல் மற்றும் இவை சார்ந்த செயல்கள்.)
6. தம்பனம்: அப்படியே எதையும் செயலிழக்கச் செய்தல்.
மூலமந்திரம்: "ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாஹா.'
7. உச்சாடணம்: இருக்கும் ஒரு சக்தியை விரிவுபடுத்தி, விஸ்வரூபமாக்கி ஆடவைத்தல்.
மூலமந்திரம்: "ஓம் வயநமசி ஸ்ரீயும் அரி ஓம் ஐயும் சுவாஹா.'
(மாந்திரீகர்களும் தாந்திரீகர்களும் இதனைச் செய்வார்கள். இக்காலத்தில் அரசியல் ஈடுபாடுடையோர்களும் இதைச் செய்கிறார்கள். மாந்திரீகவாதிகள், பேய், பூத, பைசாசங்களை ஆடவைத்து மனிதனுள்ளிலிருந்து விலக்குவார்கள்.)
8. மாரணம்: மாரணம் என்றால் இல்லாமல் செய்தல். மாந்திரீக சக்தியினால் ஜீவனை உடலி-ருந்து பிரிக்கச் செய்தல்.
மூலமந்திரம்: "ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரி ஓம் சுவாஹா.'
இது உண்மையோ பொய்யோ- தெரிந்துகொள்ளும் வாய்பில்லை. அது தாவரங்களாக இருக்கலாம்; மிருகங்களாக இருக்கலாம்; மனிதர்களாக இருக்கலாம். இதை செய்யத் தெரிந்தவர்கள் அஷ்டமா சித்துகளில் வல்லவர்களாக இருப்பர். ஆனால் இன்று இவ்வுலகில் குறைந்தது பத்து அல்லது இருபது பேர்களாவது இருப்பார் களா என்பது சந்தேகத்திற்குரியது.
ஆனால் இந்த அஷ்டகர்மத்தில் உயிர்ப் பிக்கும் வித்தை தெரிவிக்கப்படவில்லை. உடலி-ருந்து சென்ற உயிரை மீண்டும் அந்த உடலுக்குள் கொண்டுவரும் வித்தையை எவரும் சொல்லிக்கொடுக்கவில்லை.
எட்டு வினைகளை ஆற்றுவதற்கான உபகரணங்களையும் முன்னவர்கள் கூறியுள்ளனர். அவற்றையும் பார்ப்போம்.
ஆசனப் பலகை வகை தம்பனம் செய்வதற்கு பலாப்பலகை. மோகனம் செய்வதற்கு மாம்பலகை. வசியத் திற்கு வில்வப்பலகை. பேதனம் செய்வதற்கு பேய்தேத்தான் பலகை. வித்வேஷணத்திற்கு எட்டிப்பலகை. மாரணம் செய்வதற்கு அத்திப்பலகை. அழைப்பு செய்வதற்கு வெண்நாவல் பலகை. உச்சாடணம் செய்வ தற்கு வேப்பாலைப் பலகை.
வஸ்திரம்
வசியத்திற்கு செம்பட்டு; மோகனத்திற்கு மஞ்சள்; தம்பனத்திற்கு பச்சை; பேதனத்திற்கு வெள்ளை; வித்வேஷணத்திற்கு கருமை நிறம் அல்லது கிரே. உச்சாடணத்திற்கு பஞ்சவர்ணம்; அழைப்புக்கு ஆந்தையின் நிறம்; மாரணத்திற்கு தூய கருப்பு.
மலர்கள்
வசியம்- மல்லிகை; மோகனம்- முல்லை; உச்சாடணம்- தும்பை; ஆகர்ஷணம்- அரளி; பிரிவுசெய்ய- காக்காளத்தி (கருங்குவளை); பேதனம்- ஊமத்தம்பு; மாரணம்- கடலைச் செடிப்பூ; தம்பனம்- தாமரைப்பூ.
மாலை
வசியம்- ருத்திராட்சம்; மோகனம்- மிளகு; உச்சாடணம்- துளசி; தம்பனம்- தாமரை; மாரணம்- நாகமணி; அழைப்பு- சங்குமணி; வித்வேஷணம்- எட்டி மணி; பேதனம்- முத்து.
கிழமைகள்
வசியம்- ஞாயிறு; மோகனம்- செவ்வாய்; ஆகர்ஷணம்- வெள்ளி; உச்சாடணம்- வியாழன்; தம்பனம்- திங்கள்; மாரணம்- புதன்; வித்வேஷணம்- சனி; பேதனம்- ஞாயிறு.
திசைகள்
வசியம்- ஈசான்யம்; மோகனம்- அக்னி; உச்சாடணம்- நிருதி; தம்பனம்- இந்திரன்; மாரணம்- எமன்; அழைப்பு- வருணன்; வித்வேஷணம்- வாயு; பேதனம்- குபேரன்.
உலோகம்
வசியம்- காரீயம்; மோகனம்- பித்தளை; ஆகர்ஷணம்- பசும்பொன்; தம்பனம்- செம்பு; உச்சாடணம்- வெள்ளீயம்; வித்வேஷணம்- வெண்கலம்; பேதனம்- இரும்பு; மாரணம்- வெள்ளி.
நமசிவாய மந்திரம்
ஓங்காரம் விக்னம் யுத்தம்
ஓங்காரம் சக்தி ரூபகம்
ஓங்காரம் மோதகம் சிவாய
ஓங்காரய நமோ நமஹ.
நாமாமீ பரமேச நாம்
நாமாமீ புவனேஸ்வரம்
நாமாமீ சர்வதம் நித்யம்
நகாராய நமோ நமஹ.
மஹாரூபம் வாம நேத்ரம்
மதனாந் தகம் ஈஸ்வரம்
மகாசக்தி மயம் ஸர்வம்
மகாராய நமோ நமஹ.
சிவன் ரூபகம் சிவன் நித்யம்
சிவன் ஆதாரம் ஈஸ்வரம்
சிவன் சக்தி மயம் சர்வம்
சிகாராய நமோ நமஹ.
வாசுகி கண்டராய பூஷணம்
வாசகம் பரமேசா நாம்
வாசுகம் பரமேசா நாம்
வகாராய நமோ நமஹ.
நிதம் பஞ்சாட்சரத்தின் நித்யம்
வடத்தேஹ பாப நாசனம்
ஸர்வ பாப விமுக்தியாத்ம
சிவலோகம் ஸாகஸதே.
பாபோகம் பாப கர்மாகம்
பாபாத்மா பாப ஸம்பவம்
தேஹீமாம் கிருபாயாம் தேவ
சரண தபஸ்தா நமோஸ்துதே.
ஓம் சர்வ மங்கள மந்த்ர புஷ்ப ஸமர்பயாமி.
பஞ்சாட்சரத்திற்குரிய காயத்திரி தேவர்கள்
ந- இந்திரன் (அனுஷ்டிப்பு).
ம- உருத்திரன் (திரிஷ்டிப்பு).
சி- விஷ்ணு (சந்தஸு).
வ- பிரம்மன் (பிரஹதி).
ய- குமார ஸ்வாமி (விராட்).
திருச்சிற்றம்பலம்.