உலகைத் தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவரத் துடித்த கிரேக்க மன்னரான மாவீரன் அலெக்சாண்டர் (கி.மு. 356-323) வைத்திருந்த வீரவாள், சேலம் கஞ்சமலையில் கிடைத்த இரும்புத்தாது மூலம் செய்யப்பட்டதாக ஒரு செய்தி யுண்டு. கிரேக்க மன்னர் காலத்திலிருந்து கஞ்சமலை மற்றும் சுற்றுப்புறப்பகுதி களின் இரும்புத்தாது சிறப்புடன் விளங்கிய தாலும், மாவட்டத்தின் சுற்றுப்பகுதி களிலும் கனிமவளம் மிகுதியாக இருந்த காரணத்தாலும் மத்திய அரசு 1973-ஆம் ஆண்டு சேலத்தில் இரும்பாலையை (Salem Steel Plant) நிறுவியது.
சேலம் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கஞ்சமலையில் திருமூலரின் முதன்மைச் சீடரான காலாங்கிநாத சித்தரின் (கஞ்சமலைச் சித்தர்) ஜீவாலயமானது அருள்மிகு சித்தேசுவரசுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் அமைந்துள்ளது. இக்கோவிலை அமாவாசைக் கோவில், சித்தர் கோவில் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவிலில் காலாங்கிநாத சித்தர் தவக்கோலத்தில் உயிரோட்டத்துடன் காட்சிதருகிறார்.
"மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்
முந்நீருள் ளிருப்பினும் மூச்சடங்கு வோம்
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்'
என்னும் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்மூலம், உண்மையான ஞானநிலையையும் இறைத் தன்மையையும் அடைந்த சித
உலகைத் தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவரத் துடித்த கிரேக்க மன்னரான மாவீரன் அலெக்சாண்டர் (கி.மு. 356-323) வைத்திருந்த வீரவாள், சேலம் கஞ்சமலையில் கிடைத்த இரும்புத்தாது மூலம் செய்யப்பட்டதாக ஒரு செய்தி யுண்டு. கிரேக்க மன்னர் காலத்திலிருந்து கஞ்சமலை மற்றும் சுற்றுப்புறப்பகுதி களின் இரும்புத்தாது சிறப்புடன் விளங்கிய தாலும், மாவட்டத்தின் சுற்றுப்பகுதி களிலும் கனிமவளம் மிகுதியாக இருந்த காரணத்தாலும் மத்திய அரசு 1973-ஆம் ஆண்டு சேலத்தில் இரும்பாலையை (Salem Steel Plant) நிறுவியது.
சேலம் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கஞ்சமலையில் திருமூலரின் முதன்மைச் சீடரான காலாங்கிநாத சித்தரின் (கஞ்சமலைச் சித்தர்) ஜீவாலயமானது அருள்மிகு சித்தேசுவரசுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் அமைந்துள்ளது. இக்கோவிலை அமாவாசைக் கோவில், சித்தர் கோவில் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவிலில் காலாங்கிநாத சித்தர் தவக்கோலத்தில் உயிரோட்டத்துடன் காட்சிதருகிறார்.
"மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்
முந்நீருள் ளிருப்பினும் மூச்சடங்கு வோம்
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்'
என்னும் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்மூலம், உண்மையான ஞானநிலையையும் இறைத் தன்மையையும் அடைந்த சித்தர்களின் குணத்தன்மையை நாம் உணரலாம். இவர்கள் பல இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர். சிலர் இன்னும் பல உருவங்களில் காட்சிகொடுத்து வாழ்ந்துவருகிறார்கள்.
"எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்'
என மகாகவி பாரதியார் தன்னை ஒரு சித்தர் என்றே சித்திரித்துள்ளார். "நிஜானந்த போதம்' எனும் நூல் பதினெட்டு சித்தர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாகக் கூறுகிறது. பொதுவாக சித்தர்களை ஞான சித்தர்கள், நவநாத சித்தர்கள், ராஜேஸ் வர சித்தர்கள் என மூன்று வகையாகச் சொல்வதுண்டு.
திருமூலரின் சீடரும் போகரின் குருவுமான காலாங்கிநாத சித்தர் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திர நாளில் பிறந்தார். திருமூலரைப் போன்று இவரும் நெடுங்காலம் வாழ்ந்தார்.
அஷ்டமாசித்திகளை நன்கு அறிந்தது மட்டுமின்றி காற்றையே உணவாகக்கொண்டு பல ஆண்டுகள் தவம்புரிந்தவர். இவர் அடிக்கடி வான்வெளிமூலம் சீன தேசம் சென்றுவந்ததாக இவரைப்பற்றிய பாடல்கள்மூலம் தெரியவருகிறது. சீன தேசத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து சமாதி நிலையில் (தவம்) இருந்த தம் குருவைக் காண சீன நாட்டுக்குச் சென்று வருவதை போகர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தவநிலையில் இல்லாத காலத்தில் பல அரிய சித்த ரகசிய நூல்களை காலாங்கிநாதர் இயற்றி யுள்ளார். அவற்றில் முக்கிய மானவை காலாங்கி வைத்திய காவியம்- 1000, காலாங்கி ஞான சாராம்சம்- 500, காலாங்கி வகாரத் திரவியம்- 200, காலாங்கி சூத்திரம்- 33 போன்றவையாகும். இவருடைய பலநூல்கள் காலப்போக்கில் நமக்குக் கிடைக்கவில்லை.
காடு, மலை என பல்வேறு இடங்களில் சுற்றிவந்த காலாங்கிநாதர் சதுரகிரி மலையில் தங்கித் தவம்செய்துகொண்டிருந்த சமயத்தில், ஒரு வணிகர் சிவாலயம் கட்டவேண்டும் என்றெண்ணி காலாங்கிநாதரை அணுகியதாகவும், அவர் மலையிலிருந்த அரிய மூலிகைகளைக் கொண்டு வகாரத் தைலம் தயாரித்து, அதன் மூலம் பொன்னை உருவாக்கி வணிகருக்கு உதவினார் என்றும் சதுரகிரி தலபுராணத்தின்மூலம் அறியப்படுகிறது. இப்படியே பல இடங்களுக்குச் சென்ற காலாங்கிநாத சித்தர் சேலத்திலுள்ள கஞ்சமலைக்கு வந்தார்.
"மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்சமலையனோடு
இந்த எழுவரும் என்வழியாமே'
என்னும் திருமந்திரத்தின் 132-ஆம் பாடல்மூலம் கஞ்சமலையின் சிறப்பை அறியலாம். அரியவகை சித்த வைத்திய மூலிகைகள், கனிமவள ஆராய்ச்சிக்கு கஞ்சமலை புகழ்பெற்றது.
நீண்ட ஆயுளுடன் வாழவைக்கும் அரியவகை நெல்லிக்கனியைத் தான் உண்ணாது, அதை அதியமான் நெடுமான் அஞ்சி மன்னன் ஔவைக்கு அளித்தான் என்பர். இதை சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்றான சிறு பாணாற்றுப் படை நூலின்-
"... மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக்கீந்த
உரவுச்சினங் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடற்றானை அதிகனும்...'
என்னும் பாடல்மூலம் அறியலாம்.
அந்த அரியவகை நெல்லிக்கனியை இந்த கஞ்சமலையில்தான் மன்னன் பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
தவம்செய்யத் தகுந்த இடம் தேடியும், அரிய மூலிகைகளை சேகரிக்கவும் பல காடு, மலைகளுக்குச் சென்ற திருமூலரையும் காலாங்கிநாத சித்தரையும் இந்த கஞ்சமலையின் இயற்கை வளமும் வனப் பும் வெகுவாகக் கவர்ந்தது. இருவரும் சில ஆண்டுகள் இங்கு தங்கினர். ஒருநாள் காட்டில் கிடைத்த பொருட்களை சேகரித்து தனது குருவுக்கு உணவு தயாரிக்கும் பணியில் காலாங்கிநாத சித்தர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். காட்டில் கிடைத்த விறகு, சுள்ளிகளைக்கொண்டு தீமூட்டி மண்பாண்டம்மூலம் சமையல் செய்யும்போது, பாண்டத்தில் வேகும் உணவை அங்கிருந்த ஒரு செடியின் கிளையைக்கொண்டு கிளறினார். குச்சியிலிருந்த மருத்துவத்தன்மை உணவில் பட்டவுடன் அது கருப்பாக மாறியது. இதைக்கண்டு திடுக்கிட்டுக் கலங்கிய காலாங்கிநாத சித்தர், கருப்பான உணவை குருவுக்கு எப்படிக் கொடுப்பதென நினைத்து அதைத் தானே உண்டார். திருமூலருக்காக மீண்டும் சமைக்கத் தொடங்கினார். அப்போது காலாங்கிநாதர் தான் உண்ட உணவின் மருத்துவத் தன்மை யால் இளைஞ னாக மாறிவிட்டார். இதற்கிடையில் திருமூலர் உணவருந்த வரவே, நடந்த நிகழ்ச்சிகளை காலாங்கி நாதர் திருமூலருக்கு விவரித்தார். திருமூலரும் அந்த உணவை சாப்பிடவே அவருக்கும் இளமை ஏற்பட் டது. இப்படிப்பட்ட அரியவகை மூலிகை கள் இங்குள்ளதால் அதை ஆராய்ச்சி செய்ய வெளிநாட்டிலிருந்தும் பலர் இங்குவருகின்றனர்.
இத்தனை சிறப்புவாயந்த கஞ்ச மலையிலுள்ள கோவிலின் மூலவராக சித்தேசுவரர் என்னும் பெயரில் காலாங்கிநாத சித்தர் சின்முத்திரையுடன் காட்சிதருகிறார். கோவிலிலுள்ள "காந்த தீர்த்தம்' என்கிற தீர்த்தக் குளத்தில் உப்பு, வெல்லம், மிளகு போன்ற பொருட்களைப் போடுவதன் மூலம் துன்பங்கள் நீங்குவது மட்டுமின்றி தோல் நோய்களும் குணமடைவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று பக்தர்கள் திரளாக வருகைதந்து சித்தரை வழிபட்டுச் செல்கின்றனர். காலாங்கிநாத சித்தரைப் போற்றும்-
"கார்முகில் மழைவளம் அளிக்கவல்ல
காலாங்கிநாத சித்தரே போற்றி
பார்தனில் பாவியும் கடைத்தேற
உபதேசிக்கும் காலாங்கிநாத சித்தரே போற்றி
ஊர்தனில் மாந்தர்க்கு உவந்தே
பிணிபோக்கும் காலாங்கிநாத சித்தரே போற்றி
சீர்மிகு சிவயோகம் எமக்கருள்
பெருந்தகை காலாங்கிநாத சித்தரே போற்றி! போற்றி'
என்னும் பாடலைத் துதித்து அவரை வணங்கினால் சித்தரின் பரிபூரண அருள் நிச்சயம் கிட்டும்.