ரகசியமாக நடந்த விநாயகர் பூஜை! - ராமசுப்பு

/idhalgal/om/ganesha-pooja-secret-ramasubu

ற்பொழுது நாம் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவைப் பொது விழாவாக மாற்றியவர் லோகமான்யர் என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் ஆவார்.

கி.பி. 1893-ல் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே இருந்த வகுப்புவாதம் மற்றும் ஜாதிப்பிரிவினையைப் பயன்படுத்தி உண்டாக்கிய பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக ஒரு சமூகப் புரட்சியை உண்டாக்க வேண்டி, பாலகங்காதர vvதிலகர் பொது இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை உருவாக்கி, சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பூஜைசெய்து, பின் அந்த மண் விநாயகரைக் கடலில் கரைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் ஜாதி பேதம் நீங்கி- பொதுமக்களிடையே ஒற்றுமையை உண்டாக்க இந்த விநாய

ற்பொழுது நாம் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவைப் பொது விழாவாக மாற்றியவர் லோகமான்யர் என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் ஆவார்.

கி.பி. 1893-ல் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே இருந்த வகுப்புவாதம் மற்றும் ஜாதிப்பிரிவினையைப் பயன்படுத்தி உண்டாக்கிய பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக ஒரு சமூகப் புரட்சியை உண்டாக்க வேண்டி, பாலகங்காதர vvதிலகர் பொது இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை உருவாக்கி, சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பூஜைசெய்து, பின் அந்த மண் விநாயகரைக் கடலில் கரைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் ஜாதி பேதம் நீங்கி- பொதுமக்களிடையே ஒற்றுமையை உண்டாக்க இந்த விநாயகர் சதுர்த்தி விழா வழிவகுத்தது.

ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த நாம், எதையும் சுதந்திரமாக செய்யமுடியாமல் அவதிப்பட்டு வந்தோம். விநாயகரை வழிபட்டால் நாடு சுதந்திரமடைந்துவிடும் என்று முழுமையாக நம்பிய திலகர், மும்பை நகரத்திலும், சுற்றுப் புறத்திலுள்ள கிராமங்களிலும் பொது மக்களிடத்தில் விநாயகர் பூஜை செய்யுமாறு ரகசியமாகப் பரப்பினார். ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் மறைவாக ஓரிடத்தில் விநாய கரை வைத்துப் பூஜைசெய்து, திரைச்சீலை யிட்டு இரவு நேரத்தில் மறைத்து வைக்கும்படி அறிவுறுத்தினார். அதிகாலை நான்கு மணிக்கு அந்த விநாயகரை வெளியே எடுத்து, யாருக்கும் தெரியாமல் அமைதி யாக பூஜையைச் செய்ய உத்தரவிட்டிருந்தார். மிகவும் முன்னெச்சரிக்கையுடன், இந்த விநாயகர் வழிபாட்டை ரகசியமாக நடத்தி மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டினார். நாடு சுதந்திரம் பெற்றதும் இந்த விநாயகர் பூஜையால்தான் விடுதலை கிட்டியது என்று அனைவருக்கும் தெரிவித்தார். அன்று ரகசியமாக ஆரம்பித்த விநாயகர் பூஜை இன்று அமர்க்களமாக ஒவ்வொரு தெருவிலும் கொண்டாடப்படுகிறது.

இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்ட வீரசிவாஜிக்கும் விநாயகர்மீது அளவிட முடியாத நம்பிக்கை இருந்தது. விநாயகரை பூஜித்துப் போருக்குப் போனால் வெற்றி கிட்டுமென்ற அபார நம்பிக்கை வைத்திருந்தவர் வீரசிவாஜி. தான் போரில் வெற்றிபெற்றுத் திரும்பும்வரை விநாயகரைப் பூஜித்து வாருங்கள் என்று நாட்டு மக்களிடம் கூறிச்செல்வாராம். அப்படியே மக்களும் விநாயகரைப் பூஜிக்க, சிவாஜி பகைவர்களை வென்று வீரசிவாஜியாக வருவாராம். இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா "கணேஷ் சதுர்த்தி' என்ற பெயரில் அமோகமாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

குஜராத் மாநிலத்திலிருந்து "ஷாகிடுமட்டி' என்ற மாவு மண்ணில் விநாயகரின் சிலைகள் பல வடிவங்களில் மிக உயரமாக வடிவமைக்கப் பட்டு, அவற்றை ஒவ்வொரு தெருவிலும் வைத்துப் பூஜை செய்து, அதைப் பொதுமக்கள் பக்தி யோடு வந்து தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள்.

நிறைவு நாளான பௌர்ணமியன்று அத்தனை விநாயகர் சிலைகளையும் ஒன்றாகத் திரட்டி, ஊர்வலமாக வண்டிகளில் வைத்தும், பல்லக் கில் வைத்துத் தூக்கிக்கொண்டும் வருவார்கள்.

அப்போது பக்தர்கள் அனைவரும் திரளாக ஒன்று கூடி வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கை களுடன், மலர்களை விநாயகர்மீது வாரி இறைத்துக்கொண்டு, பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து கடற்கரையில் நிற்பார்கள்.

விநாயகர் சிலைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி, "எங்களிடமிருந்து பிரிந்து செல்லும் விநாயகப் பெருமானே! இன்றுபோய் அடுத்த ஆண்டில் விரைந்து வருவீர்' என்று பிரார்த்தனை செய்து கடலில் இறக்கி, விநாயகரைக் கரைத்து வழியனுப்பி வைப்பார்கள்.

எந்தவொரு செயலையும் விநாயகரை முன்வைத்து ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும் என்பது பாலகங்காதர திலகர், வீரசிவாஜி போன்றோர் காட்டிய நல்வழியாகும். விநாயக ரைப் பூஜிப்போம். வெற்றிபெறுவோம்.

om010919
இதையும் படியுங்கள்
Subscribe