முனிவர் ஒருவர் இறைவனைக் குறித்து தனது சீடர்களிடம் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சம்பவத்தைக் கூறினார். ஒரு பெரிய குடும்பத்தைக் கட்டிக்காத்த பெரியவர் ஒருவர் வயது முதிர்வின் காரணமாக மரணப்படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றிலும் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் சூழ்ந்து நின்றிருந்தனர். அவர்கள் படுக்கையிலிருந்த பெரியவரிடம், "”எங்களுக்கு ஏதாவது நல்வாக்கு கூறுங்கள்'' என்று கேட்டனர்.
அப்போது முதியவர், "உங்கள் வாய்க்குள் என்ன இருக்கிறது?'' என்று கேட்டார். "எங்கள் வாயில் நாக்கு, பற்கள் உள்ளன'' என்று பதில் சொன்னார்கள்.
அந்தப் பெரியவர் மெல்ல பேச ஆரம்பித்தார். "மனிதன் பிறக்கும்போது நாக்கோடுதான் பிறக்கிறான். நாளடைவில் பற்கள் முளைக்கின்றன. அந்த பற்கள் நாக்கைவிட வலிமையாக உள்ளன. ஆனால் மனிதன் முதுமையைத் தழுவும்போது வலுவான அந்தப் பற்கள் விழுந்துவிடுகின்றன. ஆனால் மென்மையான நாக்கு மட்டும் உறுதியாக நிலைத்து நிற்கிறது. காரணம் நாம் எப்போதும் எல்லாரிடமும் கனிவான வார்த்தைகளைப் பேசவேண்டும்.
அதற்காகவே நாக்கு நமது இறுதி மூச்சுவரை நமது உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது. மேலும் வாழ்க்கையில் இன்ப- துன்பங்கள் மாறிமாறிவரும். அதை ஏற்றுக்கொண்டு, அந்த அனுபவங்களை உங்கள் சந்ததிகளிடம் எடுத்துக்கூற வேண்டும். மனித வாழ்க்கையா னது கடலில் செல்லும் மரக்கலங்களைபோல் தள்ளாடிக்கொண்டுதான் செல்லும்.
அப்படிச் செல்லும் மரக்கலம் கலங்கரை விளக்கின் ஒளி அடையாளத்தைக் கொண்டு கரைசேர்வதைப்போல, மனிதர்கள் தன்னம் பிக்கையோடும் நல்ல செயல்களோடும் அறவழியில் இறைநம்பிக்கையோடு உழைத்தால் உயரலாம்.
மரத்தில் பழுக்கும் பழம் அதற்குள் இருக்கும் விதைமூலம் இன்னொரு மரத்தைக் உருவாக்குகிறது. வாழைமரத்தின் அடியில் கன்றுகள் வளர்வதுபோல வம்சம் வளரவேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஒரு பகுதிதான் மீண்டும் விதையாக விதைக்கப்பட்டு மீண்டும் உணவாகிறது. அதுபோல் பிறருக்கு உதவிசெய்பவர்கள் மற்றொருவர் வளர்ச்சிக்கு உதவுகிறார் கள். இறைவன் நன்மை- தீமைகளைக் காண்பதற்காக நமக்கு இரண்டு கண்களைக் கொடுத்துள்ளார். நடந்து முன்பின் செல்ல இரண்டு கால்கள். மற்றவர்களுக்குக் கொடுக்கவும் வாங்கவும் இரண்டு கைகள். நல்லதை மட்டுமே சிந்திப்பதற்கு ஒரே ஒரு மனம். நல்லதை மட்டுமே பேசவேண்டும் என்பதற்காக ஒரே ஒரு வாய்.
இப்படி மனிதனைப் படைத்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். உன்னால் முடிந்ததைச் செய்; பலனை

இப்படி மனிதனைப் படைத்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். உன்னால் முடிந்ததைச் செய்; பலனை எதிர்பார்க்காதே. எதிர்பாராத நேரத்தில் நீ சிரமப்படும்போது, நீ செய்த உதவிகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும். ஒருவரிடமிருந்து உதவிகளை ஏற்றுக்கொள்ளும்போதும் திரும்பக் கொடுக்கும்போதும் நன்றியை எதிர்பார்க்கக்கூடாது. நிலத்தில் வளரும் புல்லுக்கு விதை கிடையாது. அதனால் அதற்குப் பெருமை இல்லை. அதனால்தான் கீழ்த்தரமான மனிதர்களை புல்லர்கள் என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் புல்லர்களாக இல்லாமல் நல்லவர்களாக வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவிசெய்து வழிகாட்டியாக விளங்கவேண்டும்.''
இப்படி அவரைச் சுற்றி நின்றவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை அந்த முதியவர் விதைத்து மறைந்தார். அப்படிப்பட்ட ஞானிகள் ஏராளமானோர் தமிழ் மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவரான வசிஷ்ட மாமுனிவர் குருகுலம் அமைத்து, அதில் ஏராளமான ஆண்- பெண் சீடர்களுக்கு மனித வாழ்க்கைக்குத் தேவையான நன்மைகளைப் பற்றி போதித்துவந்தார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் வசிஷ்டமா முனிவரின் வழிகாட்டுதல்படி வாழ்ந்தனர்.
அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 401 இளம்பெண்களுக்குத் திருமணமாகாமல் இருந்தது. அவர்களில் ஒருவராகத் தோன்றி வளர்ந்து வந்தாள் அம்பாள் அசனாம் பிகை. அந்த 401 பெண்களுக்கும் வசிஷ்ட முனிவர் தனது துணைவியார் அருந்ததி உதவியுடன், தனது குருகுலத்தில் பயின்ற சீடர்கள் பலரை இல்லறத்தில் நல்லறம் செய்து வாழும் வகையில் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தார். 401 பெண்களில் 400 பெண்களுக்கு மணமகன் அமைந்தனர்.
ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் (உமையவள் வடிவில் இருந்தவளுக்கு) மணமகன் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில் வயது முதிர்ந்த தோற்றத் தில் ஒருவர் அங்குவந்து, "நான் அந்தப் பெண்ணை மணந்துகொள்ளத் தயார். எனக்குப் பெண்ணைக் கொடுங்கள்'' என்று கேட்டார். முதியவரின் தோற்றத் தைப் பார்த்த அருந்ததி அம்மையார் முகம் சுளித்தார். கணவர் வசிஷ்டரிடம், "சாட்சாத் அம்பாள்போல அழகு வடிவமாக உள்ள அந்தப் பெண்ணுக்கு, தள்ளாத வயதிலுள்ள இந்தப் பெரியவரை எப்படி மணமகனாகத் தேர்வுசெய்து பெண்கொடுக்க முடியும்? இவரை வெளியே அனுப்பிவிடுங்கள்'' என்று கூறினார்.
அப்போது முனிவர், "இது இறைவன் செய்யும் சோதனையா' என்று தனது ஞானதிருஷ்டிமூலம் பார்த்து, வந்திருப்பது எம்பெருமானே என்பதை உணர்ந்தார். வைத்தியநாத சுவாமியே முதியவர் தோற்றத் தில் வந்துள்ளார் என்பதை உணர்ந்து, தனது துணைவியார் அருந்ததியிடம் சமாதானம் பேசி, அந்த 401-ஆவது மணமகனாக வந்த முதியவருக்கும், 401-ஆவது மணப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்திவைத்தார்.
அதன்பிறகே 401-ஆவது மணமகனாக வந்து, அம்மன் உருவிலிருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் சிவபெருமானே என்பதை அனைவருக்கும் உணர்த்த, அங்கே அம்மையப்பன் இருவரும் காட்சி கொடுத்தனர். அப்போது தேவலோகத்திலிருந்து பூமாரி பொழிந்தது.
இப்படி இறைவன் 401-ஆவது மணமகனா கத் திருமணம் செய்துகொண்ட இடத்தில் தற்போது கல்யாண சுந்தரேஸ்வரராக சிவலிங்க வடிவில் கோவில் கொண்டுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொண்ட அம்பாள் நித்தியகல்யாணி என்ற பெயரில் அருளாட்சி செய்கிறாள்.
வசிஷ்ட மாமுனிவர் வேதபாடசாலை அமைத்து வாழ்ந்த இடம் வதிஷ்டபுரம், வசிஷ்டர்குடி என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் வதிட்டக்குடி என மருவி, தற்போது திட்டக்குடி என அழைக்கப்படுகிறது. இதனை ஒட்டிய பகுதி தற்போதும் வதிஷ்டபுரம் என்ற பெயரில் உள்ளது. வசிஷ்ட முனிவர் இங்கு வாழ்ந்தபோது அவரிடமிருந்த காமதேனு பசு புற்றில் பால் சுரந்து, அதிலிருந்து சிவலிங்கத்தை அடையாளம் காட்டியது. அந்த இடத்தில் வசிஷ்ட முனிவர் இறைவனுக்குக் கோவில் எழுப்பினார். அதனால் அவ்வாலய இறைவனுக்கு வசிஷ்டீஸ்வரர் என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் அது மருவி தற்போது வைத்தியநாத ஈஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானிடமிருந்து பார்வதி பிரிந்து, இங்குவந்து தவமிருந்து மீண்டும் அய்யனுடன் இணைந்ததால், அசனாம்பிகை என்ற பெயருடன் அன்னை விளங்குகிறாள்.
இந்த ஆலயத்திலிருந்து 100 மீட்டர் கிழக்கில் நாநூற்று ஒருவர் ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானது இவ்வாலயம். வசிஷ்டரின் வேதபாடசாலை அமைந்த இடத்தில் இறைவன், அம்பாள் உட்பட 401 பேர்களுக்குத் திருமணம் நடைபெற்ற அந்த இடத்தில், பல தலைமுறைகளுக்குமுன்பு வசிஷ்ட முனிவரின் வேதபாடசாலையில் பயின்ற வம்சாவளியில் வந்தவர்களில் ஒருவரான சுப்பிரமணியம், அவரது மகன் பஞ்சாபகேசன், அவரது மகன் தியாகி கல்யாணசுந்தரம், அவரது மகன் லட்சுமிபதி என இந்த வம்சாவளியினர் இறைவனுக்கும் அம்பாளுக்கும் தொடர்ந்து வழிபாடு நடத்திவருகிறார்கள்.
தற்போது இவர்களின் வாரிசாக உள்ளவரும், பரம்பரை அறங்காவலருமான 90 வயது லட்சுமிபதி, இவ்வாலயம் குறித்தும், இறைவன்- அம்பாள் குறித்தும் மனமுருகப் பேசினார்.
"வசிஷ்டர் வாழ்ந்த காலத்தில் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வடக்குவீதி முழுவதும் வாழ்ந்துள்ளனர். தற்போது பலர் பலதிசைக்குச் சென்றுவிட்டனர். சில குடும்பங்கள் மட்டுமே கோவில் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். இக்கோவிலின் தல விருட்சங்களாக வன்னி, வில்வம், மகிழ மரங்கள் உள்ளன. இவ்வாலயத்தை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத் தியாகி கல்யாண சுந்தரம் புனரமைப்புசெய்து கும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு மீண்டும் கோவிலைப் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்துவருகிறோம். தற்போது எனது இறுதிக் காலத்திலாவது பக்தர்கள் ஆதரவுடன் கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத்துறையின் அனுமதி பெறுவதற்காக மனுக்களை அனுப்பி யுள்ளோம். இந்த தள்ளாத வயதிலும் நேரில் சென்று பல அதிகாரிகளைப் பார்த்து கேட்டுவருகிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்கள் சிறப்பாக விளங்கவேண்டுமென்று பல்வேறு திட்டப் பணிகளை மிகச்சிறப்பாக செய்து நடைமுறைப்படுத்தி வருகிறார். அவர் இந்த நானூற்று ஒருவர் கோவிலையும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதி தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
இவ்வாலய இறைவன்- அம்பாளுக்கு முப்பத்தாறு எலுமிச்சம்பழங்களை மாலையாக சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், ஆண்- பெண்களுக்குள்ள திருமணத் தடைகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவற்றை உடைத்து திரு மணத்தை நடத்திவைக்கிறார்கள் சுந்தரேஸ்வர ரும் நித்தியகல்யாணி அம்மையும்.
குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் இங்குவந்து வழிபட்டு, வம்சம் வளர குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.
அப்படி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைக் கொண்டுவந்து சந்நிதியில் கிடத்தி, பெண் குழந்தையாக இருந்தால் நித்யஸ்ரீ, நித்யகல்யாணி, நித்யசுந்தரி போன்ற பெயர்களையும்; ஆண் குழந்தையாக இருந்தால் கல்யாணசுந்தரம், கல்யாணசுந்தரேஸ்வரர் எனவும் பெயர்வைக்கிறார்கள்.
திருமணத்தடை மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பத்திலும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு கிரக சஞ்சாரங்கள் காரணமாக ஏதாவது தடை ஏற்படும்
அப்படிப்பட்டவர்கள் இவ்வாலய இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு, தடைகள் விலகி வெற்றியடைந்து சந்தோஷமாக உள்ளனர்.
இவ்வாலயத்தின் இறைவனுக்கு எதிரில் ஒரு நந்தி, அம்பாளுக்கு எதிரில் ஒரு நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. அதேபோல் வலஞ்சுழி விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், நவகிரகங்கள் என அனைத்து சந்நிதிகளும் சிறப்புற அமைந்துள்ளன. வசிஷ்டர்- அருந்ததி இருவரும் தனிச் சந்நிதியில் உள்ளனர். மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் அருகில் வைத்தியநாதேஸ்வரர், அசனாம்பிகை அம்மன் உள்ளனர். வைத்தியநாதேஸ்வரர் முதியவர் தோற்றத்தில் அம்பாளைத் திருமணம் செய்ய கல்யாண சுந்தரேஸ்வரராக இங்கு வந்ததன் காரணமாக, சிவலிங்க வடிவில் வைத்தியநாதேஸ்வரரும் இங்கே உள்ளார்.
அதேபோல் 401 பெண்களில் ஒருவராக அசனாம்பிகை அம்மனும் இங்கேவந்து நித்தியகல்யாணியாக இறைவனைத் திருமணம் செய்துகொண்டதால் அவருக்கும் இங்கே சிலை உள்ளது. மேலும் இடம்பெயர்ந்து இங்கு மணமகனாக வந்ததால் இறைவன் பிரதிகிரகேஸ்வரர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்'' என்கிறார்.
"இறைவனும் அம்பாளும் அபரி மிதமான சக்தி படைத்தவர்கள். மனத் தூய்மையோடு அடிக்கடி குடும்பத்தினருடன் வந்து வழிபட்டுவருகிறோம். வசிஷ்ட முனிவர் குடில் அமைத்து வேதங்களைக் கற்றுக்கொடுத்த இந்த மண்ணில் வாழ்வதற்கு இறைவன் அருள்தான் காரணம். இந்த ஊர் இதிகாச புராணங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது'' என்கிறார் திட்டக்குடியைச் சேர்ந்த பக்தர் பட்டாணிக்கடை ராஜ்.
மேலும் திட்டக்குடி நகரிலுள்ள நாநூற்று ஒருவர் கோவில் மற்றும் சுப்பிரமணியர், மாரியம்மன், முக்களத்தி அம்மன், இளமங்கலம் ஐயனார், செல்லியம்மன், பெருமாள் ஆகிய பிரசித்திபெற்ற பழமையான பல கோவில்கள் உள்ளன. இவற்றை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி பல ஆண்டுகள் ஆவதால், மீண்டும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிடுமாறு திட்டக்குடி நகர தொழிலதிபர் பி.டி. ராஜன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், "கோவில்கள் நிறைந்தது எங்கள் ஊர். இங்குள்ள வைத்தியநாதேஸ்வரர் கோவிலுக்கு சேர, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர் கள்வரை வந்து வழிபாடு செய்துள்ளனர்.
அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. பல கோவில்கள் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடிய நிலையில் உள்ளன. பொதுமக்களும் பக்தர்களும் அதற்காகக் காத்திருக்கிறார்கள். நிச்சயம் அறநிலையத்துறை அனுமதி அளிக்குமென்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்'' என்றார்.
விரைவில் கோவில்கள் சீரமைப்பு நடக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் திட்டக்குடி மற்றும் சுற்றிலுமுள்ள கிராம ஆன்மிக அன்பர்கள்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம்- தொழுதூர் நெடுஞ்சாலையில் திட்டக்குடி நகரம் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந் துள்ளது நாநூற்று ஒருவர் ஆலயம். தொடர்புக்கு: 84891 48471