உணவு, உணர்வு, பரம்பொருள்! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/food-emotion-substance-yogi-sivananda

புத்தி (அறிவு) எங்கே இருக்கிறது? அது நமது மூளையில் இருக்கிறது. மூளை சாதாரண விஷயமல்ல. கடந்தகால, நிகழ்கால, எதிர் கால வினைப் பதிவுகள் (கர்மா) அடங்கிய பொக்கிஷப் பெட்டகமாகும். அத்தகைய மூளை யின் சரியான, தெளிவான செயல்பாடுகளைப் பொருத்தே நமது நிகழ்காலமும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது.

மூளையின் செயல்பாடு துல்லிய மாக இருக்கவேண்டுமெனில் என்ன மாதிரி யான உணவுப் பழக்கங்கள் நமக்கு இருக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் உட்கொள்ளும் உணவு நமது உணர்வுகளில் பிரதிபலிக்கும். நமது இந்திய நாட்டின் பெருமை, கௌரவம், தனி அடை யாளம் விவசாயமாகும். ஒருமைப்பாடும், விவசாயமும் நமது நாட்டின் இரண்டு கண்கள்.

இவ்வளவு வசதிகள் நிரம்பிய நமது இந்திய நாடு உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. நாம் யாரைக் குறை சொல்வது? பாவம் விவசாயிகள். இங்கே மிகப்பெரும் தவறு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது, அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற முக்கியமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் கொடுமையாகும். இது மிகவும் வருந்தத்தக்க செயல். ஏனென்றால் உணவு உற்பத்தியில் நாமே உலகிற்கு எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும்.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்

ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்

உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...'

"மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ

வழங்கும் குணம் உடை யோன் விவசாயி...'

"கருப்பென்றும் சிவப் பென்றும் வேற்றுமையாய்

கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய்

பொறுப்புள்ள பெரியோர் கள் சொன்னபடி

உழைத்தால் பெருகாதோ சாகுபடி...'

1967-ஆம் வருட வந்த ஒரு திரைப்படப் பாடல் வரிகள் இவை. எவ்வளவு நிதர்சனமான உண்மை. இப்போது விவசாயம் எப்படியிருக் கிறது? நாம் உணவுப் பொருட்களை இறக்கு மதி செய்ய ஆரம்பித்தவுடன், நமது விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கிறது. ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை திருவள்ளுவர் பெருந்தகையின் திருக்குறளில் அறிவோம்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

குறையாத விளைபொருளும், தகுதியுள்ள பெரியோரும், கேடில்லாத செல்வம் உடையவர

புத்தி (அறிவு) எங்கே இருக்கிறது? அது நமது மூளையில் இருக்கிறது. மூளை சாதாரண விஷயமல்ல. கடந்தகால, நிகழ்கால, எதிர் கால வினைப் பதிவுகள் (கர்மா) அடங்கிய பொக்கிஷப் பெட்டகமாகும். அத்தகைய மூளை யின் சரியான, தெளிவான செயல்பாடுகளைப் பொருத்தே நமது நிகழ்காலமும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது.

மூளையின் செயல்பாடு துல்லிய மாக இருக்கவேண்டுமெனில் என்ன மாதிரி யான உணவுப் பழக்கங்கள் நமக்கு இருக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் உட்கொள்ளும் உணவு நமது உணர்வுகளில் பிரதிபலிக்கும். நமது இந்திய நாட்டின் பெருமை, கௌரவம், தனி அடை யாளம் விவசாயமாகும். ஒருமைப்பாடும், விவசாயமும் நமது நாட்டின் இரண்டு கண்கள்.

இவ்வளவு வசதிகள் நிரம்பிய நமது இந்திய நாடு உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. நாம் யாரைக் குறை சொல்வது? பாவம் விவசாயிகள். இங்கே மிகப்பெரும் தவறு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது, அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற முக்கியமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் கொடுமையாகும். இது மிகவும் வருந்தத்தக்க செயல். ஏனென்றால் உணவு உற்பத்தியில் நாமே உலகிற்கு எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும்.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்

ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்

உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...'

"மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ

வழங்கும் குணம் உடை யோன் விவசாயி...'

"கருப்பென்றும் சிவப் பென்றும் வேற்றுமையாய்

கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய்

பொறுப்புள்ள பெரியோர் கள் சொன்னபடி

உழைத்தால் பெருகாதோ சாகுபடி...'

1967-ஆம் வருட வந்த ஒரு திரைப்படப் பாடல் வரிகள் இவை. எவ்வளவு நிதர்சனமான உண்மை. இப்போது விவசாயம் எப்படியிருக் கிறது? நாம் உணவுப் பொருட்களை இறக்கு மதி செய்ய ஆரம்பித்தவுடன், நமது விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கிறது. ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை திருவள்ளுவர் பெருந்தகையின் திருக்குறளில் அறிவோம்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

குறையாத விளைபொருளும், தகுதியுள்ள பெரியோரும், கேடில்லாத செல்வம் உடையவரும், நற்செங்கோல் அரசனோடும், சிறந்த அமைச்சனோடும் சேர்ந்திருப்பதே நாடு.

மேலும் பின்வருமாறும் கூறியுள்ளார்.

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.'

நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல்வேறு வகையான கூட்டங்களும், உடனிருந்தே தீங்கு செய்யும் உட்பகைவரும், சமயம் வாய்க்கும்போதெல்லாம் அரசனையும், குடிமக்களையும் துன்புறுத்தும் காலிக் கும்பலும் இல்லாதது நாடு.

இப்படித்தான் ஒரு நாடு இருக்கவேண்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ மாமேதை திருவள்ளுவர் உரைத்திருக்கின்றார்.

உணவு பற்றியும், பசியைப் பற்றியும் திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது.

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.'

கடும்பசியும், தீராத நோயும், அழிக்கும் பகையும் இல்லாமல் இனிதே நடப்பதே நாடு என்கிறார்.

இதற்கு எது முக்கியம்? விவசாயி முக்கியம். இன்று உணவுப் பொருட்களை நாம் இறக்கு மதி செய்வது மிகவும் வருந்தக்கூடிய செயலாகும். நமது நாட்டில் உணவு உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்று, உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் தேவையான உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து கொடுக்கக்கூடிய வல் லமை நமக்குண்டு.

dd

உழவுத் தொழில் பற்றி திருவள்ளுவர்-

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.'

என்கிறார். உழவுத் தொழிலைச் செய்யும் வலிமையின்றிப் பிறதொழில்களை மேற்கொள்பவரைத் தாங்குவதால், உழுவோர்- அதாவது உழவுத் தொழில் செய்பவர் உலகத் தாராகிய தேருக்கு "அச்சாணி' ஆவர்.

நமது பிள்ளைகள் அணைவரையும் விவசாயக் கல்வியைப் படிக்கவைத்து அதில் விற்பன்னர்களாக உருவாக்க வேண்டியது நம் கடமை. உடனே ஒருவர் கேள்வி கேட்கிறார்- "பொறியியல், மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் என்ன செய்வது?' மிக அருமையான கேள்வி! பொறியியல்Mechanical Engg) படித்தவரிடம் விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகளைக் கண்டறிந்து உருவாக்கி உற்பத்தி செய்யும் பொறுப்பை ஒப்படைக்கலாம். இவர்களோடு Bsc.Physics படித்தவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். மின்பொறியியல் (Electrical Engg) படித்தவர்களை மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான ஆராய்ச்சி மற்றும் வழங்கல் துறையில் பயன் படுத்தலாம். மின்னணுவியல் படித்தவர்களை(Electronics & Communication)நாம் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை உலகம் முழுக்க கொண்டுசெல்ல தொலை தொடர்புத் துறையில் பயன்படுத்தலாம். (Electronics & Communication) படித்தவர்களை விதை ஆராய்ச்சி, இயற்கை உரம் வளமாகத் தயாரிப் பது, நுண்ணுயிரிகள் ஆராய்ச்சி போன்ற துறைகளில் பயன் படுத்திக்கொள்ளலாம்.

விவசாயக் கல்வியை ஒவ்வொரு வரும் குறைந்தது ஒருவருடமாவது படிக்க வேண்டும் என்பதைக் கட்டாயக் கல்வியாக முன்னெடுக் கலாம். மற்ற அனைத்து கல்வி பயின்ற வர்களையும், அவரவர் தகுதி, திறன் மேம்பாட்டினைப் பொருத்து வேலைவாய்ப்பினை அனைவருக்கும் உருவாக்கலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இப்போதுள்ள நிலை நீடித்தால் நம் ஒவ்வொருவரிடமும் கார் இருக்கும்; பைக் இருக்கும்; குடியிருக்க வீடும் இருக்கும். ஆனால் உயிர்வாழத் தேவையான உணவிருக்காது.

உழவுத் தொழிலை முறைப்படுத்தினால், உணவைப் பதப்படுத்த முடியும். அதுமட்டு மல்லாமல் பலவகையான ருசியான, சத்தான உணவுகளை தரமாகத் தயாரித்து நாமே ஏற்றுமதி செய்யமுடியும். இதைவிட்டுவிட்டு, நாம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட் களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்வ தென்பது நாம் நமக்கே தோண்டிக்கொள்ளும் படுகுழியாகும். இதற்குக் காரணம் அடிப்படைக் கல்வியின் அவசியத்தை உணராததேயாகும். பகுத்தறிவு வேறு; மூடநம்பிக்கை வேறு. மதம் வேறு; மனிதாபிமானம் வேறு.

ஏனென்றால், மதம், வேதம் இதிலெல்லாம் எந்த பாகுபாடுமின்றி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள முத்தமிழ் வேதமே சதாசிவம் எனும் சர்வேஸ்வரன் ஆவான். திருமந்திரம் சொல்வதைப் பார்ப்போம்.

"சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனியா திருந் தேனிற காலம்

இதாசனியா திருந்தேன் மனம் நீங்கி

உதாசனியாது உடனே உணர்ந் தோமால்.'

சதாசிவம் எனும் பரம்பொருள் தத்துவமே முத்தமிழ் வேதம் எனும் தமிழ் மறையாகும். இதனை இத்தனை நாளும்

அளவுடன் உணர்ந்தவனாகவே இருந்தேன். இப்படி இருந்த நான் என் அலட்சிய மனப்பாங்கை விட்டுவிட்டு, விருப்பத்தோடு "தமிழ்வேதம்' உறைவிடமாகக் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்தே வேதம் குடிகொள்ள மனம் கொண்டோம் என்று திரு மூலர் தன்னைக் குறிப்பிடுகிறார்.

பக்தியைப் பற்றி எழுதவேண்டிய நேரத்தில், விவசாயத்தைப் பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன என்று படிப்பவர்கள் மனதில் கேள்வி எழுவது நிச்சயம். மறுப்பதற்கில்லை. பக்தி செய்யவேண்டுமெனில் சக்தி தேவை.

"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.'

உடல்நிலை முதலியவற்றோடு மாறுபாடு கொள்ளாத உணவை ஒருவன் நிரம்ப உண்ணவேண்டுமென்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவு குறைத்து உண்டால், அவன் உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாவதில்லை என்பது வள்ளுவர் கூற்று.

"ஊனுடம்பு ஆலயம், உள்ளம் பெருங்கோயில்' எனும் திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்கிறது? மனிதன் உயிரோடு, உணர்வோடு நடமாட உணவு முக்கியமல்லவா? மனிதனின் ஊனுடம்பு (சப்த தாதுக்களால் ஆனது) உயிரோடு செயல்பட மிகவும் அவசியமானது சத்தான ஊட்டச் சத்துடன் கூடிய நல்ல உணவாகும்.

உணவு உற்பத்திக்கு உழவு (விவசாயம்) முக்கியமாகும்.

நினைவூட்டலுக்காக ஒரு செய்தியைப் பார்ப்போம். தமிழ்நாட்டைவிட அளவில் சிறிய நாடான கியூபாவுக்கு சர்க்கரை ஏற்றுமதியை அமெரிக்கா ரத்து செய்து, பொருளாதாரத் தடையையும் விதித்தது. ஆனால் கியூபா மண்டியிடவில்லை. பயப்படவுமில்லை. மாறாக கரும்பு விளைச்சலை உடனடியாகத் துவங்கி, சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. அதுமட்டுமில்லாமல், பொருளாதரத்தையும் உயர்த்தி இன்று உலகில் தலைசிறந்த நாடாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் பிடல்காஸ்ட்ரோவுக்கு நமது தமிழ்நாட்டிலுள்ள முருங்கைக் கீரை யைப் பற்றி தெரிந்த அளவுக்கு, நாம் அறிந்திருக்க வில்லை என்றே சொல்லலாம். இன்று உலகில் பலநாடுகளில் இராணுவப் பயிற்சி கட்டாயமாக இருப்பதுபோல, தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இளைஞனுக் கும் விவசாயப் பயிற்சியைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பது திருவள்ளுவரின் தெய்வ வாக்கு. தனி மனிதனின் பசி உணர்வைக் கொன்றுவிட்டு மதம் வளர்ப்பதில் பெரும்பான்மையான நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயனுமில்லை. மனிதாபிமானமும், சுய ஒழுக்கமும் இல்லாத எந்த ஒரு மதத்தாலும் யாருக்கும் பயனும் இல்லை. தொய்வில்லாமல் நமது குழந்தை களுக்கும், இளைஞர்களுக்கும் நம் மண்ணின் மகத்துவத்தையும், விவசாயத்தில் மறைபொருளாக இருக்கும் மிகச் சிறந்த சுயஒழுக்கத் தையும் இப்போதாவது நாம் உடனடியாகத் துவங்கவேண்டும். இல்லையெனில் கடுமையான உணவுப் பஞ்சத்தை நாடு சந்திக்கும். பட்டினியால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

"எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு

அட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர்

ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்

விட்டுக் கிடக்கில் விருப்பு அறியாரே...'

என்பது திருமூலர் வரிகள்.

திசையெட்டிலும் தென்படும் அடியவர் களுக்குப் படைத்த உணவை, இறைவன் சிவபெருமான் அமுதமென்று தானே எதிர்வந்து ஏற்றுக்கொள்வார். ஏனெனில் பயிர் விளையக்கூடிய கழனியை (நிலத்தை) உடையவர் அதனை வீணே கிடக்க விட மாட்டார். நிலத்தில் பயிர்செய்து பயனடையவே விரும்புவார். இறைவனடியார்கள் தாங்கள் உண்ணும் உணவானது, உடலாகிய நிலத்தை வீணே செத்தொழிய விடாது, அவ்வுடலினுள்ளே இருக்கின்ற உயிரை வளர்ப்பதற்காகவே என்பதால், அந்த உணவை அமுதம் என ஏற்று மகிழ்வார்கள்.

இவ்வாறு உணவின் பயனைச் சொல்லிய திருமூலர், அது உணர்வுகளில் எவ்வாறு பிரதிபலிக்கிறது (செயல்படுகிறது) என்பதைப் பின்வரும் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.

"உயிரது வேறாய் உணர்வெங்குமாகும்

உயிரை அறியில் உணர்வறிவாகும்

உயிரன்று உடலை விழுங்கும் உணர்வை

அயரும் பெரும்பொருள் ஆங்கறியாரே'.

உயிரானது உடம்பினின்று வேறாக, உணர்வாக உடலெங்கும் பரவி நிற்கும். உயிரின் இயல்பைப் புரிந்துகொண்டால் உணர்வு தொழில்படும் விதமும் புரியும். உடல் முழுவதும் பரவி நிற்பது உணர்வே. இந்த உணர்வோடு ஒன்றிக் கலந்திருக்கும் பெரும் பொருள் ஒன்றுள்ளது. அந்த பெரும்பொருள் எது என்றால், பரம்பொருளாகிய சிவம் எனும் அரும்பொருளாகும்.

உணர்வு ஒழுங்காக இருந்தால் உழைப்பு ஒழுக்கமாக இருக்கும். உணவின் அவசியம், உணர்வின் முக்கியத்துவம், அதில் ஒளிந்து கொண்டிருக்கும் எண்குண பரம்பொருள் தத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள வழிவகை செய்யும்.

தாய்மொழிக் கல்வியைப் போற்றுவோம். விவசாயத்தையும், விவசாயியையும் காப்போம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவற்றில் சிறந்து உயர பரம் பொருள் சிவத்தை அறிந்து புரிந்து பக்தி செய்வோம். ப்

om010922
இதையும் படியுங்கள்
Subscribe