மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் 2-ல் இருக்கிறார். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் உங்கள் தேகநலத்திலும், கணவர் அல்லது மனைவியின் தேகநலத்திலும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். பொருளாதாரநிலை ஓரளவு சீராக இருக்கும். 12-ல் குரு இருப்பதால் ஒரு சிலநேரம் விரயச்செலவுகள் ஏற்பட்டு விலகும். 2-க்குடைய சுக்கிரன் 11-ல் சஞ்சாரம். எனவே எல்லாவற்றையும் சமாளிக்கலாம். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதியில் 10-ல் இருப்பது ஒரு பலம்தான். சனி அவருடன் ஆட்சி என்பதால் சூரியன், சனி பகைபற்றி கவலைப்படத் தேவையில்லை. தொழில் மற்றும் வேலையில் தடைகளுக்கு இடமேதும் இல்லை. 3-க்குடைய புதனும் 10-ல் சேர்க்கை (4-ஆம் தேதிமுதல்). உத்தியோகத்தில் புது வேகமும் நன்மையும் எதிர்பார்க்கலாம். பூமி, இடம், வீடுவகையில் சொந்தமாக வாங்கும் முயற்சிகள் பலனளிக்கும். ஒரு அட்வான்ஸ் தொகையைக் கொடுத்து ஆரம்பிக்கலாம். 9-ஆமிடத்தை செவ்வாய் பார்க்கிறார். தெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பாதிவரை 10-ல் சஞ்சாரம். 11-ல் குரு. 10-க்குடைய சனி 9-ல்- தர்மகர்மாதிபதி யோகம். ஆக, எல்லாம் ப்ளஸ் பாயின்ட்டாக அமைகிறது. வாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் குறையேதும் ஏற்படாது. முன்வைத்த காலைப் பின்வைக்கும் சூழ்நிலையும் அமையாது. வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகளுக்கு தடையோ, தாமதமோ நேராது. உத்தியோக உயர்வுக்கான செயல்களும் நடைபெறும். 16-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 11-ல் உச்சம் பெறுகிறார்; குருவுடன் சேர்க்கை. பழம்நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரியான நற்பலன்களை சந்திக்கலாம். 13-ஆம் தேதிமுதல் 4-க்குடைய சூரியன் 10-ல் மாறுகிறார். அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வுக்காகக் காத்திருப்போருக்கு இந்த காலகட்டத்தில் உயர்வும் ஏற்படும். 6-ல் உள்ள கேது நோய் நொடியிலிருந்து விமோசனம் தருவார். தேகநலம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 7-ல் நிற்கிறார்; ராசியையும் பார்க்கிறார். முதல் வாரத்தில் 8-ல் மறைகிறார். அட்டமத்துச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. அட்டமச் சனியில் தொட்டது துலங்காது என்ற ஒரு ஜோதிடமொழி உண்டு. ஆனால் இங்கு சனிக்கு 8-ஆமிடம் ஆட்சி வீடு. ஆகையால் பெரிய பாதிப்புகளைக் கொடுத்திருக்கமாட்டார். என்றாலும் ஒருசில விஷயத்தில்
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் 2-ல் இருக்கிறார். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் உங்கள் தேகநலத்திலும், கணவர் அல்லது மனைவியின் தேகநலத்திலும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். பொருளாதாரநிலை ஓரளவு சீராக இருக்கும். 12-ல் குரு இருப்பதால் ஒரு சிலநேரம் விரயச்செலவுகள் ஏற்பட்டு விலகும். 2-க்குடைய சுக்கிரன் 11-ல் சஞ்சாரம். எனவே எல்லாவற்றையும் சமாளிக்கலாம். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதியில் 10-ல் இருப்பது ஒரு பலம்தான். சனி அவருடன் ஆட்சி என்பதால் சூரியன், சனி பகைபற்றி கவலைப்படத் தேவையில்லை. தொழில் மற்றும் வேலையில் தடைகளுக்கு இடமேதும் இல்லை. 3-க்குடைய புதனும் 10-ல் சேர்க்கை (4-ஆம் தேதிமுதல்). உத்தியோகத்தில் புது வேகமும் நன்மையும் எதிர்பார்க்கலாம். பூமி, இடம், வீடுவகையில் சொந்தமாக வாங்கும் முயற்சிகள் பலனளிக்கும். ஒரு அட்வான்ஸ் தொகையைக் கொடுத்து ஆரம்பிக்கலாம். 9-ஆமிடத்தை செவ்வாய் பார்க்கிறார். தெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பாதிவரை 10-ல் சஞ்சாரம். 11-ல் குரு. 10-க்குடைய சனி 9-ல்- தர்மகர்மாதிபதி யோகம். ஆக, எல்லாம் ப்ளஸ் பாயின்ட்டாக அமைகிறது. வாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் குறையேதும் ஏற்படாது. முன்வைத்த காலைப் பின்வைக்கும் சூழ்நிலையும் அமையாது. வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகளுக்கு தடையோ, தாமதமோ நேராது. உத்தியோக உயர்வுக்கான செயல்களும் நடைபெறும். 16-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 11-ல் உச்சம் பெறுகிறார்; குருவுடன் சேர்க்கை. பழம்நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரியான நற்பலன்களை சந்திக்கலாம். 13-ஆம் தேதிமுதல் 4-க்குடைய சூரியன் 10-ல் மாறுகிறார். அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வுக்காகக் காத்திருப்போருக்கு இந்த காலகட்டத்தில் உயர்வும் ஏற்படும். 6-ல் உள்ள கேது நோய் நொடியிலிருந்து விமோசனம் தருவார். தேகநலம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 7-ல் நிற்கிறார்; ராசியையும் பார்க்கிறார். முதல் வாரத்தில் 8-ல் மறைகிறார். அட்டமத்துச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. அட்டமச் சனியில் தொட்டது துலங்காது என்ற ஒரு ஜோதிடமொழி உண்டு. ஆனால் இங்கு சனிக்கு 8-ஆமிடம் ஆட்சி வீடு. ஆகையால் பெரிய பாதிப்புகளைக் கொடுத்திருக்கமாட்டார். என்றாலும் ஒருசில விஷயத்தில் தாமதம், இழுபறி, மனக் கிலேசம் போன்றவற்றை சந்தித்திருக்கலாம். 11-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவு. செய்தொழில், முயற்சியில் சில தடங்கல், விரயச் செலவுகளை ஏற்படுத்தலாம். 16-ஆம் தேதிமுதல் 12-க்குடைய சுக்கிரன் 10-ல் உச்சம் பெறுகிறார். ஆட்சிபெற்ற குருவுடன் சேர்க்கை. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். அட்டமத்துச்சனியின் தொடக்கத்தில் பிரச்சினைகளை சந்தித்தவர்களுக்கு இப்போது விடுபடுகிற நேரத்தில் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். மாதக்கடைசியில் புதன் 4-ல் மாறுகிறார். தகப்பனார்வழியில் ஆதாயம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கு 9-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். உங்கள் முயற்சி கள் செயல்வடிவம் பெறும். 16-ஆம் தேதிக்குப்பிறகு 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம். 10-க்குடைய செவ்வாயும் 11-ல் இருக்கிறார். எனவே பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கம், விவகாரம் சாதகமான முடிவுகளைத் தரும். 10-ல் கேந்திர பலம்பெற்ற ராகு தொழில்வகையில் திருப்தியும் முன்னேற்றமும் தரும். 4-ல் கேது அவ்வப் போது தேகநலத்தில் வைத்தியச் செலவுகளைத் தந்தாலும் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. 2-க்குடைய சூரியனும் 12-க்குடைய புதனும் 7-ல் சனியுடன் சேர்க்கை. களஸ்திரவகையில் முரண்பட்ட கருத்துகள் உருவாகும். ஒருவருக்கொருவர் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து வந்தால் ஒற்றுமைக்குறைவு நேராதவண்ணம் செயல்படலாம். பூமி, மனை சம்பந்தப்பட்ட வகையில் முன்னேற் றம் ஏற்படும். சொந்தமாக வீடுவாங்க முயற்சிப்போருக்கு வங்கிக்கடன் அல்லது தனியார் கடன் கிடைக்கும். மாதப் பிற்பாதியில் பொருளாதாரத்தில் சிறிது திருப்தியற்ற சூழல் உருவாகலாம்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 6-ல் மறைகிறார். எனவே உங்கள் செயல்பாடுகளில் சில தடைகளும் தடுமாற்றங்களும் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சலினால் தேக சுகத்தில் ஆரோக்கியக் குறைவு உண்டாகும். ஒருசிலருக்கு பொறுப்புகள் மாறலாம். எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பது அரிதான விஷயமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகமாகும். என்றாலும் 3-ல் உள்ள கேது தைரியத்தையும் தன்னம் பிக்கையையும் தருவதோடு சமாளிக்கும் ஆற்றலையும் தருவார். சூரியன் 7-ல் மாறியபிறகு உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். 3-க்குடைய சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே நன்மைகள் ஏற்படும். அவர் 10-க்கும் உடையவர் என்பதால் வேலை, உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அன்பும் பாசமும் கூடும். ஸ்தம்பித்து நின்ற தொழில் வெற்றி நடைபோட எடுத்த முயற்சிகள் பலனளிக்கும். 21-ஆம் தேதிமுதல் புதன் கும்பத்திற்கு மாறுவார். பொருளாதார வளர்ச்சியில் நிலவிய தேக்கம் விலகும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 4-ல் நின்றாலும் 4-ஆம் தேதிமுதல் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். வருமானவகையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். சொந்த வீடு அல்லது சொந்தமாக மனை வாங்க முயற்சி செய்பவர்களுக்கு பலன் தரும்வகையில் வங்கிக்கடனும் ஏற்படும். தொழில் ஸ்தானாதிபதியான புதன் 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். தாய்மாமன், மைத்துனர்வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் நிகழும். 2-ஆமிடத்துக் கேது குடும்பத்தில் ஒரு சிலநேரம் சலசலப்பை ஏற்படுத்தினாலும் குருபார்வை ராசிக்கு கிடைப்பதனால் சமாளித்துவிடலாம். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 16-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 4-ல் உச்சம்பெற்று ராசியைப் பார்க்கிறார். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு இடமுண்டு. 9-ல் உள்ள செவ்வாய் 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். உடன் பிறப்புகளால் அனுகூலம், உதவி கிடைக்கும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரி கோணம் பெற்று நிற்கிறார். அவர் 1, 8-க்குடைய வர். மனச் சஞ்சலங்கள் விலகும். உத்தியோகத்தில் காணப்பட்ட அலைச்சல்களும் அலைக்கழிப்பு களும் குறையும். 2-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தையே பார்க்கிறார். பொருளாதாரத்தில் மிகையான வரவுகள் இல்லையென்றாலும் தேவைகள் ஓரளவுக்கு நிறைவேறும். ஒருசில தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். ஜென்ம கேது- சப்தம ராகு மனதில் இரட்டிப்புச் சிந்தனைகளை உருவாக்கியவண்ணம் இருக்கும். 16-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 6-ல் உச்சமாகிறார். அங்கு ஆட்சிபெற்ற குருவுடன் சேர்க்கை. பொதுவாக ஆட்சி, உச்சம்பெற்ற கிரகத்திற்கு மறைவு தோஷம் பாதிக்காது என்றொரு ஜோதிடவிதி உண்டு. இங்கும் அந்த நிலை பொருந்தும். 12-ஆமிடத்தை குரு, சுக்கிரன் இணைந்து பார்ப்பதால் விரயங்களைத் தவிர்க்க இயலாது. வாழ்க்கைத் துணைவழியே அனுசரித்துச் செல்வதன்மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். மனைவியால் கணவருக்கு ஆதரவு உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். மேலும் 5-க்குடைய குரு 5-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே டபுள் பாஸிட்டிவ் ஆக செயல்படும். மனதில் எண்ணிய திட்டங்கள் செயலாகும். பிள்ளைகள்வழியில் நல்லவை நடைபெறும். மனக்குழப்பங்கள் விலகும். தன ஸ்தானத்தை ராசிநாதன் பார்ப்பதால் தனவரவு உண்டாகும். மாதத் தொடக்கத்தில் 10-க்குடைய சூரியன் 3-ல் மறைந்தாலும் தொழில் இயக்கம் பாதிக்காது. 3-ல் உள்ள சனி தைரியத்தையும் தன்னம்பிக் கையையும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் தருவார். 7, 12-க்குடைய சுக்கிரன் 5-ல் உச்சம் பெறுகிறார். பிள்ளைகளுக்கு நல்லகாரியப் பேச்சுவார்த்தைகள் முடிவாகும். அதன்மூலம் சுபச்செலவு உண்டாகும். புதன் 8-க்குடையவர். 4-ஆம் தேதிமுதல் 3-ல் மாறுகிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்பதால், மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதுபோல உத்தியோக வகையில் பொறுப்புகளும் உயர்வும் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. கடைசிக்கூறு நடைபெறுகிறது. இதில் ஜனன ஜாதகத்தில் பாதகமான தசா புக்தியோ, ராகு தசாபுக்தியோ அல்லது சந்திர தசையோ, சந்திரபுக்தியோ நடைபெற்றால், அப்படிப்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது அவசியம். ராசிநாதன் குரு 4-ல் ஆட்சிபெறுகிறார். தேகநலனில் ஆரோக் கியம் பிறக்கும். 2-ல் உள்ள சனி, "வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும்' என்பது ஜோதிமொழி. ஆக, உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் பேச்சுக்களால் குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் பாதிக்கப்படலாம். நிதானத் துடன் கையாளவேண்டும். 4-ஆமிடத்துக் குரு புதிய வீடு அல்லது புதிய மனை ஏற்படலாம். 16-ஆம் தேதிமுதல் 4-ல் சுக்கிரன் உச்சம்பெறுகிறார். உத்தியோகத்தில் முன்னேற்ற கரமான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். உயரதிகாரிகளினால் ஆதரவு உண்டாகும். சகோதர சகாயம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சி. அவருடன் 8-க்குடைய சூரியன் சேர்க்கை. மனதில் தேவையில்லாத ஏதோவொரு கலக்கம் இருந்துகொண்டிருக்கும். வாகனவகையில் விரயங்கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகலாம். 5, 10-க்குடைய சுக்கிரன் 2-ல் இருக்கிறார். மேற்கண்ட விரயங்களை சமாளிக்கும்வகையில் தனவரவும் ஏற்படும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். ஆடை, ஆபரண, அலங்காரப் பொருட்கள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வும் கிடைக்கும். 16-ஆம் தேதிமுதல் சுக்கிரன் உச்சம். உடன்பிறந்தவர்களால் ஆதாயத்தைத் தருவார். 5-ல் உள்ள செவ்வாய் மக்களுக்கு படிப்பு, வேலை இவற்றில் திருப்திகரமான பலனைத் தருவார். ஒரு வீட்டை விற்று மற்றொரு வீட்டை வாங்கலாம். அதாவது பழையதை விற்றுப் புதியன வாங்கலாம். 9-க்குடைய புதன் ராசியில் இருப்பது தடைகளை அகற்றும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி விரயஸ்தானத்தில் இருக்கிறார். ஏழûச்சனியில் விரயச்சனி நடக்கிறது. ராசிநாதனே விரயாதிபதியாவதால் கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரிய வர்கள் என்பது எனது தந்தையின் கருத்து. அதில் பொய் எதுவும் இல்லை. உண்மைதான். சாண் ஏற முழம் வழுக்கிய நிலையைத்தான் நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். எதிர்பார்த்தது ஒன்று- நடந்தது ஒன்றாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகமாகும். 2-ல் ஆட்சிபெற்ற குரு தனவரவைத் தந்தாலும், மறுபுறம் சனி அதை விரயப்படுத்திக்கொண்டிருப்பது மனதை வருத்தத்தில் ஆழ்த்தும். 7-க்குடைய சூரியன் 12-ல் மறைவு. கணவன் அல்லது மனைவிவழியே வரவேண்டிய பங்குபாகப் பிரிவினைகள் தள்ளிப்போகலாம். அல்லது தனக்கு வரக்கூடிய பாக ஆஸ்திகளும் தடையாகலாம். 5-க்குடைய புதன் 12-ல் மறைகிறார். எண்ணிய செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் சிக்கல், சிரமங்கள் உண்டாகும். மொத்தத்தில் எண்ணம் எவ்வாறோ செயலும் அவ்வாறாகவே அமையும்.
மீனம்
ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் பலம்பெறுகிறார். 6-க்குடைய சூரியன் 11-ல் சஞ்சாரம். 5, 7, 9 ஆகிய இடங்களுக்கு குருபார்வை. பொதுவாக எந்தவொரு சுபகாரியத்திற்கும் 11-ல் சூரியன் இருக்கும்போது லக்னம் அமைத்துக் கொடுத்தால் அது வெற்றிகரமாக இருக்கும். இங்கு சூரியன் 11-ல் இருந்தாலும் சனியுடன் சேர்க்கை. இருவரும் பகை. அப்போது எவ்வாறு நற்பலன் நடக்குமென்ற சந்தேககம் வரலாம். சூரியன் 6-க்குடையவர். சனி ஆட்சி. எனவே "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல, ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் உங்கள் முயற்சிகளில் தொய்விற்கு இடமிருக்காது. பாதைகளையும் சரியாகத் தேர்ந்தெடுத்தால் பயணத்திலும் தடையேற்படாது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பது பொன் மொழி. 3-ல் இருக்கும் செவ்வாய் அதை உங்களுக்குத் தருவார். 10-ஆமிடத்தையும் பார்க்கிறார். செவ்வாய் 9-க்குடையவர். எனவே தர்மகர்மாதிபதி யோகம் துணை நிற்கும். விபரீத ராஜயோகம் செயல்படும். 4-க் குடைய புதன் 4-ஆம் தேதிமுதல் 11-ல் மாறுகிறார். புதிய வாகன யோகம் உண்டாகும்.
அலைபேசி: 99440 02365.