மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் 8-ல் ஆட்சியாக இருக்கிறார். 9-ஆம் தேதிமுதல் 9-ஆமிடமான தனுசுவுக்கு மாறுகிறார். பொருளாதாரத் தடைகள் விலகும். உத்தியோக உயர்வுகள் எளிதில் கிடைக்கும். நண்பர்களிடம் பிரச்சினைகள் விலகும்; ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். 2-க்குடைய சுக்கிரன் 12-ல் இருப்பதால் அவ்வப் போது சில விரயங்களும் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் ஆடம்பரச் செலவுகள் குறையும். கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மை உருவாகும். பிள்ளை களைப் பற்றிய எதிர்கால சிந்தனை மாறி நம்பிக்கையும் அனுகூலமும் ஏற்படும். தேகசுகம் தெளிவு பெறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடலாம். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறு வீர்கள். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் மனநிறைவு உண்டாகும். சிலருக்குப் பதவி உயர்வும் பணியிட மாற்றமும் ஏற்படலாம். துர்க்கையம்மனை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் 11-ல் உச்சமாக இருக்கிறார். உங்களுடைய செயல் பாட்டில் வெற்றியும் உற்சாகமும் தென்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும் என்றாலும், புதிய கடன்களும் உருவாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கினால் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தலாம். தொழில், வியாபாரம் செய்கிறவர்களுக்குத் தேக்கங்கள் விலகும்; மாற்றங்கள் உண்டாகும். தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு குடியிருப்பு மாற்றமும் ஏற்படலாம். வேலைப்பளு சற்று அதிகமாக இருப்பதால் உடல்சோர்வு உண்டாகும். கொடுக்கல்- வாங்க−ல் சரளமான நிலை காணப்பட்டாலும் கவனம் தேவை. வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப் போருக்கு சாதகமான சூழல் காணப்படும். 8-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீண்விரயங்கள் வந்து விலகும். திடீர் அதிர்ஷ்டம் அல்லது தனயோகம் ஏற்பட வாய்ப்புண்டு. தந்தைக்கு உடல்நலக் குறைவு, வைத்தியச்செலவு உருவாகலாம். ஆனாலும் கவலைப்படுமளவு இருக்காது. தன்வந்திரி பகவானை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 7-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். உடலி−ல் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த காரியத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கலாம். பொருளா தாரநிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கை கூடும். கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றலாம். வெளிவட்டாரத் தொடர்பு கள
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் 8-ல் ஆட்சியாக இருக்கிறார். 9-ஆம் தேதிமுதல் 9-ஆமிடமான தனுசுவுக்கு மாறுகிறார். பொருளாதாரத் தடைகள் விலகும். உத்தியோக உயர்வுகள் எளிதில் கிடைக்கும். நண்பர்களிடம் பிரச்சினைகள் விலகும்; ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். 2-க்குடைய சுக்கிரன் 12-ல் இருப்பதால் அவ்வப் போது சில விரயங்களும் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் ஆடம்பரச் செலவுகள் குறையும். கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மை உருவாகும். பிள்ளை களைப் பற்றிய எதிர்கால சிந்தனை மாறி நம்பிக்கையும் அனுகூலமும் ஏற்படும். தேகசுகம் தெளிவு பெறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடலாம். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறு வீர்கள். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் மனநிறைவு உண்டாகும். சிலருக்குப் பதவி உயர்வும் பணியிட மாற்றமும் ஏற்படலாம். துர்க்கையம்மனை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் 11-ல் உச்சமாக இருக்கிறார். உங்களுடைய செயல் பாட்டில் வெற்றியும் உற்சாகமும் தென்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும் என்றாலும், புதிய கடன்களும் உருவாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கினால் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தலாம். தொழில், வியாபாரம் செய்கிறவர்களுக்குத் தேக்கங்கள் விலகும்; மாற்றங்கள் உண்டாகும். தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு குடியிருப்பு மாற்றமும் ஏற்படலாம். வேலைப்பளு சற்று அதிகமாக இருப்பதால் உடல்சோர்வு உண்டாகும். கொடுக்கல்- வாங்க−ல் சரளமான நிலை காணப்பட்டாலும் கவனம் தேவை. வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப் போருக்கு சாதகமான சூழல் காணப்படும். 8-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீண்விரயங்கள் வந்து விலகும். திடீர் அதிர்ஷ்டம் அல்லது தனயோகம் ஏற்பட வாய்ப்புண்டு. தந்தைக்கு உடல்நலக் குறைவு, வைத்தியச்செலவு உருவாகலாம். ஆனாலும் கவலைப்படுமளவு இருக்காது. தன்வந்திரி பகவானை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 7-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். உடலி−ல் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த காரியத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கலாம். பொருளா தாரநிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கை கூடும். கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றலாம். வெளிவட்டாரத் தொடர்பு களில் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழி−ல் மத்திமமான பலனை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையலாம். 7-ல் கேது, சனி இருப்பதால், கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், குரு அங்கிருப்பதால் பிரிவினைக்கு இடமேற்படாது. வியாபாரத்தில் கூட்டாளிகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் மாறி புரிந்துணர்வு உண்டாகும். யாருக்கும் ஜாமின் பொறுப்பேற்பதைத் தவிர்ப்பது அவசியம். அரசுவகையில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்கநேரும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 9-ஆம் தேதிமுதல் 6-ல் மறைகிறார். 6-ல் சனி, குரு, கேது, செவ்வாய் ஆகியோர் சஞ்சாரம். இந்த மாதம் தொழில்துறையில் சற்று மந்தநிலை காணப்படும். வேலையாட்கள் சரியாக வராத காரணத்தால், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவேண்டிய வேலைகள் தள்ளிப் போகலாம். கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்லும் நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு உருவாகும். அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். திறமைக்கேற்ற பாராட்டும் நன்மதிப்பும் உண்டாகும். என்றா லும், ஓய்வில்லாத உழைப்பினால் உடல் சோர்வும், மனச்சோர்வும் ஏற்படலாம். மனைவிவகையிலும் வைத்தியச் செலவுகள், தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் விலகி சுமுக தீர்வு காணப்படும். நண்பர்களின் நல்லுதவி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலி−ல் கவனம் தேவை. தொழில்ரீதியான போட்டிகளை சமாளிக்கலாம். அதற்குண்டான ஆற்றலும் பிறக்கும். இளைய சகோதரவகையில் சிறு மனவருத்தம் உண்டாகும். பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதற்கான முயற்சிகள் கைகூடும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைக்கும் வழிபிறக்கும். லட்சுமி நாராயணருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
சிம்மம்
இந்த மாதம் புதிய முயற்சிகளை தைரியமாக மேற் கொள்ளலாம். 10-க் குடைய சுக்கிரன் 8-ல் இருந்தாலும் உச்சம் பெறுகிறார். எனவே, தொழில்துறையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உருவாகும். வருமானம் அதிகமாகும். உடல்நிலையில் நல்ல முன்னேற் றம் தென்படும். இருப்பினும் ஒருசிலருக்கு சிறுசிறு வைத்தியத் தொந்தரவுகள் ஏற்படலாம்; பாதிப்புக்கு இடமில்லை. குடும்பத்தினரிடையே விட்டுக்கொடுத்துச் செல்லும் குணத்தையும், மன்னிக்கும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக்கொண்டால் குடும்பத்தில் நிம்மதியும் ஆனந்தமும் மேலோங்கும். 9-ஆம் தேதிமுதல் செவ்வாய் 5-ல் மாறி, அங்கு சஞ்சரிக்கும் சனி, கேது, குருவோடு இணைகிறார். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். திருமணமான தம்பதிகள் சிலருக்கு பிள்ளைகள் இல்லையே என்ற வருத்தமும் உண்டாகும். மாத முற்பகுதிவரை ராசிநாதன் சூரியன் 6-ல் மறைவு. எனவே, சில காரியங்கள் தாமதமாக நடைபெறும். சில காரியங்கள் ஏமாற்றத்தைத் தரும். 13-ஆம் தேதிக்குப்பிறகு இந்த நிலை மாறிவிடும். வியாபாரிகளுக்கு வேலையாட்கள் மீது கண்காணிப்பு அவசியம். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் இடைஞ்சல்களை சந்திக்கநேரும். பெருமாளை வணங்கவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் இம்மாதம் 21-ஆம் தேதிவரை 6-ல் (கும்பம்) மறைவு. 10-ஆம் தேதிமுதல் வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். எனவே உங்களது முயற்சி, செயல்பாடு எல்லாவற்றிலும் சிக்கல், சிரமங்களை சந்தித்துப் போராடிய பின் தான் பூர்த்தியாகும். உடன்பிறந்த வகையில் பிரச்சினைகளை சந்திக்கநேரும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமைக்குறைவும் சச்சரவும் உண்டாகலாம். 9-ஆம் தேதிமுதல் செவ்வாய் சனியோடு இணைவதால் சிலர் காதல்வயப்படலாம். சிலர் காதல் மற்றும் கலப்புத் திருமணத்தை எதிர்கொள்ளலாம். தொழிலதிபர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரி களின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். விரும்பிய இடமாறுதலும், அதிகாரிகளின் கனிவும் கிடைக்கப்பெறலாம். நிலுவைத் தொகை வந்துசேரும். அண்டை அயலாருடன் எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசிய மானது. வேலைதேடும் இளைஞர்களுக்கு வெளியூர் அல்லது வெளிமாநில உத்தியோகத் திற்கு வாய்ப்புண்டு. சிலர் வெளிநாடு செல்லும் திட்டமிருந்தால் அது நிறைவேறும். ஆன்மிகப் பயணமும் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். வடக்குப் பார்த்த காளியம்மனை நெய்தீபமேற்றி வழிபடலாம்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் உச்சம் பெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு ஊழியர்கள் வேலை பார்க்குமிடத்தில் "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்றில்லாமல் நிதானமாக செயல்பட்டால் நற்பெயர் எடுக்கலாம். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தலாம். செல்வாக்கு உயரும். பழக்க வழக்கங்களும் விரிவடையும். எதையும் குறுகிய மனப்பான்மையோடு எதிர்கொள்ளா மல் இருந்தால் பெரிய மனிதர்களின் சந்திப்பும் ஏற்படும். அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். பொருளாதாரத்தில் பற்றாக் குறை இருக்கத்தான் செய்யும். குரு 11-ஆமிடத் தைப் பார்ப்பதால் அரசு சார்ந்த உதவி கிடைக் கப் பெறலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான விவகாரம் சிலரை நிலைகுலையச் செய்யும். சகோதரவழியில் ஆறுதலும் ஆதரவும் உருவாகும். திருமண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல வரன் அமையும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் உண்டாக லாம். தொழில் பிரச்சினைகள் விலகும். வியாழக்கிழமை நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும். அல்லல்கள் அகலும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ஆம் தேதிமுதல் 2-ல் மாறுகிறார். ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால் காரியதாமதம் உண்டாகும். பொருளாதாரரீதியாக சிறிது நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்க−ல் கவனமுடன் செயல்படவும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகலாம். தேவையற்ற அலைச்சலால் உடல்பாதிப்புகளை சந்திக்கநேரும். அன்றாடப் பணிகளில்கூட சிலசமயம் செயல்படமுடியாமல் அவஸ்தை கள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் அதிலி−ருந்து விடுபடலாம். சொத்துவகையில் வழக்குகள் முடிவுக்கு வருவதில் தாமதமாகும். பிள்ளைகள்வகையில் சிறிது மனக்கவலைகள் உண்டாகும். அவர்களிடம் பொறுமையையும் அனுசரிப்புத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்யோன்யம் பாதிக்காது. தரகு போன்ற துறையில் உள்ளோருக்கு அனுகூலமான பலன்கள் நடைபெறும். மாணவியருக்கு கல்வியில் மந்தத்தன்மை ஏற்படுமென்பதால், ஹயக்ரீவரை வழிபட்டு ஹயக்ரீவர் மந்திரத்தைப் பாராயணம் செய்யவும்.
தனுசு
தனுசு ராசிக்கு 12-க்குடைய செவ்வாய் 9-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். ஏற்கெனவே ஜென்மராசியில் சனி, கேது சஞ்சாரம். குரு ஆட்சி. பொதுவாக செவ்வாய், சனி சேர்ந்தாலும்- பார்த்துக்கொண்டாலும் நல்லதல்ல என்பது ஜோதிடவிதி. ஆனால் இங்கு குரு இணைந்திருப்பதால் கெடுபலன்கள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை. பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். பொருளாதாரப் பற்றாக்குறைக்கு இடமில்லை. தேவையற்ற அலைச்சலால் சோர்வு ஏற்படலாம். சிறுசிறு வைத்தியச்செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வாக்குவாதம், பிரச்சினைகள் விலகும். தாய்மாமன்வழியில் சில செலவினங்களை சந்திக்கநேரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சிலர் வீடு, வாகனவகையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். புதிய வீடு குடிபோகலாம். சொந்தவீட்டு முயற்சிகளும் நிறைவேறும். 7-ல் ராகு இருப்பது திருமணத்தடையை ஏற்படுத்தினாலும், குரு பார்ப்பதால் விலகும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பணியில் முன்னேற்ற மும் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. 12-ஆம் தேதிவரை 8-க்குடைய சூரியன் ஜென்மராசியில் சஞ்சாரம். காரியங்கள் பூர்த்தியாவதில் தடை, தாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டிய சூழ்நிலை. பொருளாதார நிலை மிதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் ஒருபுறம் இருந்தாலும், சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். 11-க்குடைய செவ்வாய் 9-ஆம் தேதிமுதல் 12-ல் மாறுகிறார். விரயங்களைக் கட்டுப்படுத்த முடியாது. வாகனப் பழுது, அதனால் செலவு போன்றவையும் உண்டாகலாம். கடன்வாங்கும் நிலை ஏற்படும். இன்னும் சிலருக்கு ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைக்கவேண்டியதும் நேரலாம். எனவே, அந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. கடனை வாங்கி கடனை அடைப்பது மரமேறிக் கைவிடுவதற்குச் சமம். எந்த ஒரு செயலி−லும் நிதானம், விவேகம் முக்கியம். புதிய தொழில் ஒப்பந்தங்களை ஆராய்ந்து செயல்படுத்துவது நல்லது. 6-க்குடையவர் 2-ல் இருப்பதால் அந்நியர் தனம் கையில் புரளும். எச்சரிக்கையுடன் கையாள்வது முக்கியம். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்ப்பது சிறப்பு. உங்கள் எதிர்பார்ப்புப்படி எல்லா காரியங்களும் நிறைவேறும். நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். 10-க்குடைய செவ்வாய் 11-ல் குரு, சனி, கேதுவோடு சேர்க்கை. குரு 11-ல் ஆட்சியாக இருப்பது நன்மை. தொழில்துறையில் வெற்றியும் லாபமும் உண்டாகும். முன்னேற்றகரமான பலன்கள் அமையும். அரசு ஊழியர்களுக்கு இதுவரை தாமதமாகிவந்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் திட்டமிட்டபடி காரியங் களைப் பூர்த்தி செய்யலாம். கூட்டுத் தொழில்புரிவோருக்கு புதிய கூட்டாளியைச் சேர்க்கும் அமைப்பு உண்டாகும். அது நல்லமுறையில் கைகொடுக்கும். குடும்பத்தில் கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதரவும் ஒற்றுமையும் உண்டாகும். தந்தை- மகன் உறவிலி−ருக்கும் பிரிதல், புரிதலுக்குப் பின் ஒன்றுசேரும். நீரடித்து நீர் விலகாது என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து, அனுசரித்துச் செல்லவும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்குத் திருமணம் கைகூடிவரும். பிள்ளைகள்வகையில் இருக்கும் மனக்கலக்கம் மாறி, அவர்களால் நன்மதிப்பு ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு செம்பருத்திப்பூ மாலை சாற்றி வழிபடவும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. 3, 8-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் உச்சம். குருவின் பார்வை 2-ஆமிடத்துக்குக் கிடைக்கிறது. பொருளாதாரரீதியாகப் பற்றாக்குறைக்கு இடமில்லை என்றாலும், சில தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். கடந்த மாதம் இழுபறியாக இருந்துவந்த செயல்பாடுகள் இந்த மாதம் விறுவிறுவென நடைபெறும். 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். (9-ஆம் தேதிமுதல் விருச்சிகச் செவ்வாய் தனுசுவுக்கு மாறுகிறார்). புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொடங்கிய தொழிலைத் தற்காலி−க மாக நிறுத்தியவர்களுக்கும் மீண்டும் தொடங்கி முன்னேற்றகரமாக செயல்படும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நிறைவேறும். எதிர்பார்த்த உயர்வுகளையும் இடமாற்றங்களையும் தடையின்றிப் பெறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டும், உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் உற்சாகத்தைத் தரும். வெளியூர் அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய எண்ணுபவர் களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீக சொத்துரீதியான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் தள்ளிப்போகலாம். செவலூர் சென்று பூமிநாதசுவாமியை வழிபடவும்.