மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 18-ஆம் தேதிவரை ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். மாத முற்பகுதியில் உங்கள் காரியங் கள் மிக விரைவாக நிறைவே றும். 18-ஆம் தேதிக்குப்பிறகு செவ்வாய் 2-ல் மாறி ராகு வோடு இணைகிறார். அதனால் உங்கள் செயல்பாடுகளில் மந்தத் தன்மையும், காரியங்கள் நிறைவேறுவதில் தாமதமும் உருவாகும். 2-க்குடைய சுக்கிரன் பத்தாம் இடமான மகரத்தில் இருக்கிறார். அவருடன் சூரியன், புதன், குரு, சனி இணைந்து காணப் படுகிறார்கள். எனவே, 10-ல் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படு கிறது. இது நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்ற ஆராய்ச்சிக்கு இடம்தர வேண்டாம். நரி வலம் போனால் நல்லதா- இடம் போனால் நல்லதா என்றால், மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது. 9-க்குடைய குரு 10-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம். எனவே, எது எப்படியிருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். தொழிலில் இயக்கம் இருக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது. அதேசமயம் சேமிப்பும் இருக்காது. வரவும் செலவும் சமமாக நடைபெறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்கிறார். அவருடன் சூரியன், குரு, புதன், சனி ஆகியோர் சேர்ந் திருக்கிறார்கள். ராசிநாதன் திரிகோணம் பெறுவதுடன், குருவும் ராசியைப் பார்க்கிறார். எனவே உங்கள் செயல்பாடு களில் வேகம், சிந்தனையில் நிதானம் போன்றவை தென்படலாம். ஜென்ம ராகு சோர்வையும் அசதியையும் தந்தாலும், குரு ராசியைப் பார்ப்பதால் அவற்றை சமாளித்து செயல்படலாம். 9-ல் உள்ள சூரியன் தந்தை வழியில் சங்கடம் அல்லது தந்தை யுடன் வாக்கு வாதம் போன்றவற்றை ஏற்படுத் தினாலும், உறவும் ஒற்றுமையும் பாதிக்காது. கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தைரியம், தன்னம்பிக்கையைத் தரும். எனவே புதிய முயற்சிகளை செயல் படுத்தலாம். பத்தாம் தேதிமுதல் 2-க்கு டைய புதன் வக்ர நிவர்த்தியாகிறார். பொருளாதாரம் சிறப் பாக இருக்கும். நண்பர் களால் சகாயம் உண்டா கும். சகோதர- சகோதரி வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம். 7-ல் உள்ள கேது குடும்பத்தில் சங்கடங்களை உண்டாக் கினாலும், மகிழ்ச்சி கெடாது. குரு பார்வை நன்மை தரும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 2-ல் மறைவாக இருந்தாலும் வக்ரமாக இருக்கிறார். மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. என்றாலும் புதன் வக்ரநிவர்த்திக்குப்பிறகு (10-ஆம் தேதி) நீங்கள் எடுக்கும் முயற்சிகள் படிப்படியாக செயல் படும். 8-ஆமிடத்தில் ஐந்து கிரகச் சேர்க்கை உள்ளது. சூரியன் 8-ல் மறைவதால், ராஜாங்க காரியங்களில் எதிர்பார்த்த உதவி கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரி களு
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 18-ஆம் தேதிவரை ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். மாத முற்பகுதியில் உங்கள் காரியங் கள் மிக விரைவாக நிறைவே றும். 18-ஆம் தேதிக்குப்பிறகு செவ்வாய் 2-ல் மாறி ராகு வோடு இணைகிறார். அதனால் உங்கள் செயல்பாடுகளில் மந்தத் தன்மையும், காரியங்கள் நிறைவேறுவதில் தாமதமும் உருவாகும். 2-க்குடைய சுக்கிரன் பத்தாம் இடமான மகரத்தில் இருக்கிறார். அவருடன் சூரியன், புதன், குரு, சனி இணைந்து காணப் படுகிறார்கள். எனவே, 10-ல் ஐந்து கிரகச் சேர்க்கை ஏற்படு கிறது. இது நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்ற ஆராய்ச்சிக்கு இடம்தர வேண்டாம். நரி வலம் போனால் நல்லதா- இடம் போனால் நல்லதா என்றால், மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது. 9-க்குடைய குரு 10-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம். எனவே, எது எப்படியிருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். தொழிலில் இயக்கம் இருக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது. அதேசமயம் சேமிப்பும் இருக்காது. வரவும் செலவும் சமமாக நடைபெறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்கிறார். அவருடன் சூரியன், குரு, புதன், சனி ஆகியோர் சேர்ந் திருக்கிறார்கள். ராசிநாதன் திரிகோணம் பெறுவதுடன், குருவும் ராசியைப் பார்க்கிறார். எனவே உங்கள் செயல்பாடு களில் வேகம், சிந்தனையில் நிதானம் போன்றவை தென்படலாம். ஜென்ம ராகு சோர்வையும் அசதியையும் தந்தாலும், குரு ராசியைப் பார்ப்பதால் அவற்றை சமாளித்து செயல்படலாம். 9-ல் உள்ள சூரியன் தந்தை வழியில் சங்கடம் அல்லது தந்தை யுடன் வாக்கு வாதம் போன்றவற்றை ஏற்படுத் தினாலும், உறவும் ஒற்றுமையும் பாதிக்காது. கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தைரியம், தன்னம்பிக்கையைத் தரும். எனவே புதிய முயற்சிகளை செயல் படுத்தலாம். பத்தாம் தேதிமுதல் 2-க்கு டைய புதன் வக்ர நிவர்த்தியாகிறார். பொருளாதாரம் சிறப் பாக இருக்கும். நண்பர் களால் சகாயம் உண்டா கும். சகோதர- சகோதரி வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம். 7-ல் உள்ள கேது குடும்பத்தில் சங்கடங்களை உண்டாக் கினாலும், மகிழ்ச்சி கெடாது. குரு பார்வை நன்மை தரும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 2-ல் மறைவாக இருந்தாலும் வக்ரமாக இருக்கிறார். மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. என்றாலும் புதன் வக்ரநிவர்த்திக்குப்பிறகு (10-ஆம் தேதி) நீங்கள் எடுக்கும் முயற்சிகள் படிப்படியாக செயல் படும். 8-ஆமிடத்தில் ஐந்து கிரகச் சேர்க்கை உள்ளது. சூரியன் 8-ல் மறைவதால், ராஜாங்க காரியங்களில் எதிர்பார்த்த உதவி கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரி களுக்கு இடமாற்றம் உண்டாகும். அது விருப்பமில்லாத இடமாற்றமாகவும் அமையலாம். 11-க்குடைய செவ்வாய் 12-ல் மாறியபிறகு விரயங்களும் செலவுகளும் அதிக மாகக் காணப்படும். தேவையற்ற மன உளைச்சல், நிம்மதியின்மை உண்டாகலாம். "அட்டமத்துச் சனி தொட்டது துலங்காது' என்பார்கள். ஆனால் இங்கு சனி ஆட்சிபெறுவதாலும், 7-க்குடைய குரு நீசபங்கம் பெறுவதாலும் கெடுதல் நடக்காதென்று நம்பலாம். வேலைதேடி அலையும் படித்த இளைஞர்களுக்கு, குடும்பத்தை விட்டுப் பிரிந்துவாழும் சூழல் அமையலாம். வெளியூர், வெளி மாநிலங்களில் வேலை அமையும்.
கடகம்
கடக ராசிக்கு 7-ல் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் சேர்க்கை. 7-ல் சுக்கிரனும் சூரியனும் இருப்பதால், கணவன்- மனைவிக்குள் கருத்து மோதல்கள், வாக்குவாதங்கள், தந்தையுடன் மன வருத்தம் அல்லது தந்தையால் பிரச்சினைகள் போன்றவற்றை சந்திக்க நேரும். எனினும் குரு அங்கு நின்று ராசியைப் பார்ப்பதால், இவையனைத்தையும் எதிர்கொண்டு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் பெறலாம். 10-ல் ஆட்சியாக இருக்கும் செவ்வாய் 18-ஆம் தேதிமுதல் 11-ஆமிடத்துக்கு மாறுவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில்துறையில் லாபகரமான முன்னேற்றம் உண்டா கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிட்டும். திடீர்ப் பயணங்களால் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். 5-க்குடைய செவ்வாய் 5-ஆமிடத்தைப் பார்ப்பதால், தடை, தாமதங்களைத் தகர்த் தெறிந்து வெற்றி காணலாம். ஆடை, ஆபரணம், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தவிர்க்கமுடியாத சுபமங்களச் செலவுகளும் அமையும். உறவினர் களால் மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 13-ஆம் தேதிவரை மறைவாக இருக்கிறார். அவருடன் 5-க்குடைய குருவும் மறைவு. 2, 11-க்குடைய புதனும், 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைவு. இவையெல்லாம் ஒரு வகையில் மைனஸ் என்றாலும், 6-க்குடைய சனி 6-ல் ஆட்சி என்பது ஒருவகையில் ஆறுதலை யும் தேறுதலையும் தரும். சனிக்கு 3, 6, 11 ஆகிய இடங்கள் யோக மானவை. அந்த வகையில் மற்ற கிரகங்களின் மறைவை சனி ஈடுசெய்து நன்மை தருவார் என்று எதிர்பார்க்கலாம். 9-ல் செவ்வாய் ஆட்சி. பூர்வீகச் சொத்து சம்பந்த மான பிரச்சினைகள் விலகும். வழக்கு வியாஜ்ஜியங்களில் சாதக மான பலன்கள் உண்டாகும். வரவும் உண்டாகும்; செலவும் ஏற்படும். தொழில் யோகம், வேலைவாய்ப்பு அமையும். பூமி, வீடு, கட்டடம் சம்பந்தமான துறையில் இருப்பவர்களுக்கு கூட்டுத்தொழில் புரியும் வாய்ப்பு களும் உண்டாகும். வங்கிக் கடன் அல்லது தனியார் கடன் கிடைக் கும். பிள்ளைகளால் நன்மையும் பாராட்டும் உண்டாகும். தேக நலனில் வைத்தியச் செலவுகள் ஏற்படும். தாயார் உடல்நலனில் அக்கறை கொள்வது அவசியம். 13-ஆம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பார். எனவே உங்கள் செயல்பாடுகளில், காரியங்களில் வெற்றி உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 10-ஆம் தேதிவரை வக்ரகதியில் செயல்படுகிறார். வக்ரத்தில் உக்ரபலம். உங்கள் எண்ணங்கள், திட்டங்கள், காரியங்கள் பூர்த்தியாகும். ராசியைப் பார்க்கும் குருவும் அதற்குத் துணைபுரிவார். பிள்ளைகள்வகையில் சுபகாரிய நிகழ்வுகள், திருமணம், மக்கட்பேறு, சடங்கு போன்றவகையில் மங்களச் செலவுகள் ஏற்படலாம். 9-க்குடைய சுக்கிரனும் புதனும் இணைந்து 5-ஆமிடத்தில் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அத்துடன் குரு 11-ஆமிடத்தையும் பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் ஆகியவற்றில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உங்கள் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும். திட்டமிடாத காரியங்கள்கூட நல்லவிதமாகப் பூர்த்தியாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு விசுவாசமான வேலையாட்கள், சகலவிதமான சம்பத்துகள், மந்திர உபதேசம் கிடைக்கப் பெறுதல், குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, நீண்டகாலப் பிரார்த்தனைகள் நிறைவேறுதல் போன்ற நன்மைகளை அடைய லாம். கணவன்- மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். புதுமணத் தம்பதியருக்கு வாரிசு யோகம் கிடைக்கும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் (மகரம்) இருக்கிறார். அவருடன் குரு, புதன், சனி, சூரியன் இணைந்திருக்கிறார்கள். குரு நீச பங்கம். சனி 4-ல் ஆட்சி. தாய்சுகம், தன்சுகம் சிறப்பாகக் காணப்படும். பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் நற்பலன் கள் உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 18-ஆம் தேதிமுதல் 8-ல் மறைகிறார். என்றா லும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில் வரவும் உண்டு; செலவும் உண்டு. கணவனால் மனைவிக்கும், மனைவி யால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் ஏற்படும். தொழில்துறையில் முன்னேற்றமும் லாபமும் காணப்படும். சிலர் தொழிலில் புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி விரிவுபடுத்தலாம். 4-ல் உள்ள சனி அர்த்தாஷ்டமச் சனி எனப் படும். என்றாலும் துலா ராசிக்கு சனி ராஜ யோகாதிபதி என்பதால் பாதிப்புகளை ஏற்படுத்தாது. 6-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தொழில்துறைக்காக கடன்படும் சூழ்நிலை களை ஏற்படுத்தினாலும், வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். கடனைத் திரும்ப அடைத்து விடலாம். தொட்டது துளிர்க்கும்; பட்டமரம் தழைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு ஜென்மத்தில் கேது, சப்த மத்தில் ராகு. 7-ஆமிடத்து ராகு திருமணத்தடை தோஷங்களைக் குறித்தாலும், 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகும். ஏழரைச்சனி முடிந்துவிட்டபடியால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். 18-ஆம் தேதிக்குப்பிறகு ராசிநாதன் செவ்வாய் 7-ல் மாறி ராசியைப் பார்ப்பார். எனவே, உங்களது திறமைகளை இனிமேல்தான் உங்களுடன் இருப்பவர்கள் அறிவார்கள். 10-க்குடைய சூரியன் 3-ல் மறைவு. தொழில்துறையில் தேக்கம், தயக்கம் காணப்படலாம். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறலாம். நண்பர்களால் சகாயம் உண்டாகும். சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டா லும் பாதிப்பு உண்டாகாது. 5-ஆமிடத்தை சனி பார்த்தாலும், சனியுடன் குரு இணைந் திருப்பதால் 5-ஆமிடத்துப் பலனான எண்ணம், மனது, திட்டம், பிள்ளைகள், பூர்வபுண்ணியம் ஆகியவற்றில் கெடுதலுக்கு இடமில்லை. ஜனனகால ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துப் பலன்களை அறிந்து செயல்படவும். தைரியம், தன்னம்பிக்கை உங்களை வழிநடத்தும்.
தனுசு
தனுசு ராசிநாதன் 2-ல் நீசபங்கம். 6, 11-க் குடைய சுக்கிரன் 2-ல் இருக்கிறார். 6-க்குடைய வர் 2-ல் இருந்தால் அந்நியர் பணம் நம்மிடம் புரளும்; 2-க்குரியவர் 6-ல் இருந்தால் நம் பணம் அந்நியரிடத்தில் புரளும் என்பது ஜோதிட மொழி. அந்தவகையில் தனகாரகன் குரு 2-ல் இருக்கிறார். 6-க்குடைய சுக்கிரனும் இருக்கிறார். எனவே பொருளாதாரத்தில் தாராள பணப்புழக்கம் இருக்கும். திடீர்ப் பயணங்களால் செலவுகள் அதிகரித்தாலும், அதை ஈடுசெய்ய வரவும் வந்துகொண்டிருக்கும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளால் நன்மை உண்டாகும். நீண்டநாட்களாகப் பேச்சு வார்த்தை இல்லாமல் மன வருத்தத்தில் இருந்த சகோதர- சகோதரி உறவில் மறுமலர்ச்சி உண்டாகும். அனுகூலம், ஆதாயம், உதவியும் அமையும். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்னும் அடிப்படையில், நீங்களும் "மறப்போம் மன்னிப்போம்' என்று செயல்படுவீர்கள். 13-ஆம் தேதிக்குப்பிறகு சூரியன் 3-ல் மறைகிறார். தகப்பனாருடன் கருத்து வேறுபாடு, பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்க வியாஜ்ஜியங்களை எதிர்கொள்ள நேரலாம்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடக்கிறது. ராசிநாதன் சனி ஜென்மத் தில் ஆட்சியென்பதால் மகர ராசியைக் கெடுக்க மாட்டார். 12-க்குடைய குரு நீசபங்கம் பெற்று சனியுடன் இணைகிறார். விரயங்கள், செலவுகள் ஏற்படலாம். அது சுபவிரயச் செலவுகளாக அமையும். 5-ல் மாறும் செவ்வாயும், ஏற்கெனவே அங்கிருக்கும் ராகுவும் உங்களது திட்டங்களில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தலாம். பிள்ளைகள்வகையில் சங்கடமான சூழல்களை உருவாக்கலாம். என்றாலும் குரு அங்கு நின்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல, உருவாகும் இன்னல்கள், இடையூறுகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துவிடும். ஆன்மிகம், குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், தியானம் போன்ற பயிற்சிகளில் நாட்டம் ஏற்படும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் சனி திருமண பந்தத்தில் சச்சரவுகளை உண்டாக்கினாலும் பிரிவு, பிளவுகள் ஏற்படாது. குரு பார்வையால் ஒற்றுமைக்கும் இடமுண்டு. வீண் கற்பனை பயத்தை விலக்கவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச்சனி நடக்கிறது. 11-க்குடைய குரு, 7-க்குடைய சூரியன், 4, 9-க்குடைய சுக்கிரன், 5-க்குடைய புதன் அனைவரும் 12-ல் மறைவாக இருப்பது ஒருவகையில் "மைனஸ்'தான். எதிர்பாராத விரயம், ஏமாற்றம், செலவு போன்றவற்றை சந்திக்கும் நிலை. அத்துடன் 12-ல் மாறிய குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் போட்டி, பொறாமை, இடையூறு, எதிர்ப்பு, வழக்கு, வில்லங்கம், விவகாரம் போன்றவற்றையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையும் காணப்படலாம். குரு 12-ல் வந்தபோது "இராவணன் முடியற்று வீழ்ந்தான்' என்பது ஜோதிடப் பாடல். என்றாலும் 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உடல்நலனில் சௌகரியத்தையும், பூமி, வீடு, கட்டட வகையில் சுபச் செலவுகளையும் உண்டாக்குவார். சிலர் புதிய மனை அல்லது புதிய வீடுகட்டும் யோகத்தையும் சந்திக்கலாம். அதற்காகக் கடன்வாங்கும் அவசியம் ஏற்படலாம். கடன்வாங்க நேர்ந்தால் உடல் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். கடனில்லை என்றால் உடல்நலக்குறைவு ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறைக்கு இடமிருக்காது. செலவும் தாராளமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். காரிய வெற்றி, லாபம், ஜெயம் போன்றவற்றை சந்திக்கலாம். 11-ல் சூரியன் இருப்பது மிக யோகம். எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு சூரியன் 11-ல் இருக்கும்படி நேரம் அமைத்துக் கொடுத்தால் அக்காரியம் ஜெயமாகும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத கருத்து. அத்துடன் 11-க்குடைய சனி 11-ல் ஆட்சி! இத்தனை "பிளஸ் பாயின்டு'கள் உங்களுக்கு அமைவது நல்ல யோகத்தைத் தரும். உத்தியோக யோகம், வேலை யோகம், வெளிநாட்டு யோகம் அமையும். 2-ல் செவ்வாய் ஆட்சி. வரவு- செலவுகளும், பணப்புழக்கமும் அமையும். 3-ஆமிடத்தை குரு பார்க்கிறார். அது சகோதர ஸ்தானம்; சகாய ஸ்தானம்; தைரிய, வீரிய, பராக்கிரம ஸ்தானம். அந்த இடத்துக்கு 9-ல் குரு திரிகோணம் பெற்று 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள்தான் நடக்கும். தைரியமும் தன்னம் பிக்கையும் உருவாகும். எடுக்கும் முயற்சிகளில் காரிய வெற்றியும் நற்பயனும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்பு, கூட்டுத் தொழில் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும். அதற்கேற்ற வகையில் உங்கள் திட்டம், எண்ணம், நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும். நேர்மையுடன் செயல்படுங்கள்; வெற்றி நிச்சயம்.