மேஷம்

இந்த மாதம் மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத முதல் தேதியிலேயே 12-ல் இருந்து ஜென்மத்திற்கு ஆட்சியாக வருகிறார். வேலையில் புதிய திருப்பங்களும் நல்ல மாற்றங்களும் நிகழலாம். உங்களது காரியங்களில் வெற்றி உண்டாகும். இந்த மாதம் 13-ஆம் தேதி 4-ல் இருக்கும் ராகு 3-ஆம் இடத்திற்கும், 10-ல் இருக்கும் கேது 9-ஆம் இடத்துக்கும் மாறுகின்றன. ராகுவுக்கு 3-ஆம் இடம் நல்ல இடம். தைரிய, வீரிய, சகோதர ஸ்தானம். உடன்பிறந்த வகையில் நல்ல முன்னேற்றகரமான சூழல் தென்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மறுமலர்ச்சியும் உண்டாகும். கூட்டு முயற்சிகளில் ஆதரவும் ஆதாயமும் ஏற்படும். மக்கள் வகையிலும், மைத்துனர் வகையிலும், சம்பந்தம் செய்த வகையிலும் சில நன்மைகள் கிடைக்கும். பொதுவாக இதுவரைக்கும் நீங்கள் மற்றவர்களுக்கு உழைத்து அவர்களை ஆளாக்கி உருவாக்கியதற்கு இப்போது பலனை அனுபவிக்கலாம். உடல்நலத்தில் மட்டும் அவ்வப் போது சிறுசிறு தொந்தரவு கள் ஏற்படலாம். ஆனால் பாதிப்புகளுக்கு இடமில்லை.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் சனியுடன் கூடியிருக்கிறார். ராசிநாதன் 8-ல் மறைந்தாலும், 7-ல் உள்ள குரு ராசியைப் பார்ப் பது சிறப்பு. இந்த மாதம் 13-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. 3-ல் உள்ள ராகு 2-லும், 9-ல் உள்ள கேது 8-லும் மாறுகிறார்கள். 7-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால், ராசிநாதன் மறைவு பெற்ற தோஷம் விலகும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். தாய்மாமன்வழி விசேஷ வைபவங்கள் போன்றவற்றில் செலவினங் கள் தவிர்க்க முடியாதவையாக அமையும். 9-ல் கேது இருந்தபோது சிலர் தகப்பனா ரால் பிரச்சினை அல்லது தகப்பனாருடன் கருத்து வேறுபாடு, மனவருத்தம் போன்றவற்றை சந்தித்திருந்தாலும், இப்போது கேது 8-ல் மாறியவுடன் அவை மாறி நல்லுறவும் ஒற்றுமையுணர்வும் ஏற்படும். கணவன்- மனைவி வகையில் அன்யோன்யமும் அன்பும் அதிகமாகும். கருத்து வேறுபாடு விலகும். உடன்பிறந்த வகையில் சிறுசிறு சச்சரவுகள் உண்டாகும். என்றாலும் பிரிவு ஏற்படாது. "நீரடித்து நீர் விலகாது' என்ற அடிப்படை யில் செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும்.

Advertisment

மிதுனம்

இந்த மாதம் மிதுன ராசிக்கு 11-க்குடைய செவ்வாய் 11-ல் ஆட்சியாக அமர் கிறார். உங்கள் காரியங்களில்- முயற்சிகளில் வெற்றி யுண்டாகும். திட்டங்கள் பூர்த்தியாகும். சுயதொழில் புரிவோருக்கு சில மாற்றங்கள் நிகழும். அவை நல்ல மாற்றமாகவும் அமையும். 13-ஆம் தேதி 2-ல் உள்ள ராகு ஜென்மத்திற்கும், 8-ல் உள்ள கேது 7-ஆமிடத்துக்கும் மாறுகிறார் கள். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு பூசல்கள் தோன்றி மறையும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தகப்பனார் வகையில் நிலவும் கருத்து வேறுபாடு விலகும். தாயின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். பொருளாதாரத்தில் சிக்கல்கள் உருவானாலும், 2-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் அவற்றை சமாளிக்கலாம். பிள்ளைகளால் பெருமையும் மதிப்பும் உண்டாகும். புதிய வாகன முயற்சிகள் பலனளிக்கும். கட்டட திட்டங்கள் செயல் படும். வீடுகட்ட வங்கிக்கடன் முயற்சி மேற் கொள்வோருக்கு கடன் கிடைக்கும். தனியார் கடனும் அமையும். பெரியோரின் ஆதரவும் அனுசரணையும் கூடும்.

கடகம்

Advertisment

கடக ராசியில் ஜென்ம ராகு இருப்பது ஒருவகையில் பாதிப்புதான் என்றாலும், அவரை 9-க்குடைய குரு பார்ப்பதால் தோஷம் விலகும். குரு பார்க்கக் கோடி நன்மை என்பது விதி! அதிலும் அவர் 9-க்குடைய திரிகோணாதிபதி. எந்த ஒரு தோஷமும் திரிகோணம், கேந்திரம் சம்பந்தம் என்றால் அந்த தோஷம் விலகும். ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் உங்களை அதிகமாக அலையச் செய்து அலைக்கழித்தது. ஓய்வில்லாத உழைப்பைத் தந்தது. அடுத்து மனைவி அல்லது கணவருக்கு உடலளவில் அல்லது மனதளவில் பிரச்சினைகள் உருவாகி இருக்கலாம். இந்த மாதம் 13-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. எனவே மேற்கண்ட பலன்களிலிருந்து விடுபடலாம். 12-ஆம் இடத்துக்கு ராகுவும், 6-ஆம் இடத்துக்கு கேதுவும் பெயர்ச்சியாவது ஒருவகையில் நன்மைதான். பொருளாதாரம், குடும்பம் போன்றவற்றில் குழப்பம் ஏற்படாது. எது வந்தாலும் அதை எளிதாக சமாளித்துவிடலாம். தெளிவான நதியினிலே ஓடம் அமைதியாக நகரும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 13-ஆம் தேதிவரை 6-ல் மறைவாக இருக்கிறார். ராசிநாதன் மறைவது நல்லதல்ல என்றா லும், 13-ஆம் தேதிக்குப் பிறகு 7-ல் மாறுகிறார். ராசியைப் பார்க்கிறார். இந்த மாதம் முதல் தேதியில் செவ்வாய் 9-ஆமிடத்துக்கு மாறி ஆட்சி பெறுகிறார். பூர்வீக சொத்துகளி லிருக்கும் வில்லங்கங்கள், வியாஜ்ஜியங்கள் சாதகமாக மாறும். உடன்பிறந்தவர்களோடு நிலவும் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் விலகி சுமுகமான உடன்பாடுகள் உண்டாகலாம். சொந்தத்தொழில் செய்பவர் கள் சிலர் தொழில் சரியாக அமையாத காரணத்தால் வேறு ஒருவரிடம் சம்பளத்துக்கு வேலை செய்யும் சூழல் நிலவியது. சூரியன் 7-ல் மாறி ராசியைப் பார்க்கும் காலம், அந்த நிலை மாறி சுயதொழில் வாய்ப்புகள் மீண்டும் செயல்படும். 11-ல் மாறும் ராகு செயல்பாடுகளில் வெற்றியையும் அனுகூலத் தையும் உண்டுபண்ணுவார். 5-ல் உள்ள சனியும், 5-ல் மாறும் கேதுவும் பிள்ளைகள் வகையில் சில வருத்தங்களை உருவாக்கலாம்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார். புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. இம்மாதம் 13-ஆம் தேதி 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் மாறுகிறார்கள். 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். அங்கு மாறும் ராகு தொழில்துறையில் அல்லது வேலையில், உத்தியோகத்தில் சில மாறுதல்களை உருவாக்குவார். 4-ல் கேது- தாய் சுகம், தன்சுகம் இவற்றில் சிறு மருத்துவச்செலவு, தொந்தரவுகள் ஆகியவற்றைத் தரலாம். சிலர் குடியிருப்பு மாற்றம், வாகன மாற்றத் தைச் சந்திக்கலாம். 3-ல் உள்ள குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வ புண்ணிய வகையில் பல நன்மைகளைப் பெறலாம். 8-க்குடைய செவ்வாய் 8-ல் ஆட்சி. திடீர் ராஜயோகம் அல்லது அதிர்ஷ்டங்களைப் பெறும் வாய்ப்புகளும் ஏற்படலாம். எதிர்கால முன்னேற்றம் கருதி சிறுசேமிப்பு, சீட்டு போன்ற திட்டங்கள் பூர்த்தியாகும். 5-ல் இருந்த கேது புத்திர தோஷங்களை உண்டு பண்ணியிருந்தாலும், 13-ஆம் தேதிக்குப் பிறகு 4-ல் மாறுவதால் புத்திர தோஷம் விலகும். 6-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி, தொழில் போட்டி போன்றவற்றை சமாளித்து செயல்பட வைப்பார்.

துலாம்

saraswathi

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் சனியுடன் கூடியிருக்கிறார். 2-ல் குரு. பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். தேவைகள் நிறைவேறும். திறமை, கீர்த்தி இவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. பணிபுரியும் இடத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு யாரும் தடைசொல்லமாட்டார்கள். முதலாளியும் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். 3-ல் உள்ள சனி சகோதரவழியில் சங்கடங் களையும், குழப்பம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்ற அடிப்படை யில் நீங்கள் செயல்படுங்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. 2, 7-க்குடைய செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று ராசியையும், 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். தொழில்துறையில் தைரியமான சில நல்ல மாற்றங்களை செயல்படுத்தலாம். நண்பர்களால் சகாயம் உண்டாகும். இம்மாதம் 13-ஆம் தேதி 9-ல் ராகுவும், 3-ல் கேதுவும் மாறுகிறார்கள். 5-ல் புதன்- தாய்மாமன் வகையில் சுபவிரயங்களை உண்டுபண்ணலாம்.

விருச்சிகம்

1, 6-க்குடைய செவ்வாய் இந்த மாதம் முதல் தேதியிலிலிருந்து 6-ல் ஆட்சி பெறுகிறார். 6-ல் ஆட்சி பெற்றாலும் ராசியைப் பார்க்கிறார். உங்களது திறமை, புகழ், கீர்த்தி, செயல்பாடு ஆகியவையெல்லாம் சிறப்பாக அமையும். விருச்சிக ராசிக்குக் கடைசிக்கூறு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. ஏழரைச்சனி முதல் கூறில் வசதி வாய்ப்புகளை அனுபவித்தவர்களுக்கு பின்பாதியில் கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிக்க நேரிடும். முதல் கூறில் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தவர்களுக்கு பிற்கூறில் நன்மைகளும் மகிழ்ச்சியும் ஏற்படும். சனி பாவகிரக வரிசையில் இருந்தாலும் அவர் நீதி தவறாதவர். அவரவர் செய்த வினைக்கேற்ப பலாபலன்களைத் தருபவர். இம்மாதம் 13-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சியாகிறார் கள். 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் மாறுகிறார் கள். 2-ல் வரும் கேது குடும்பத்தில் குழப்பம், விரயம், பொருளாதாரத்தில் தேக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். 8-ல் உள்ள ராகு சஞ்சலம், அபகீர்த்தியை உருவாக்கினாலும், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதற்கேற்ப திடீர் ராஜயோகங்களும் ஏற்படலாம்.

தனுசு

இம்மாதம் 8-ல் உள்ள ராகு 7-ஆம் இடத்துக்கும், 2-ல் உள்ள கேது ஜென்மத் திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. சிலரது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சிலருக்கு பட்ட இடத்திலேயே காயம்பட்டு, மேலும் உபாதைகளையும், மருத்துவச் செலவுகளையும் சந்திக்கநேரும். வேறு சிலருக்கு கடவுள் நம்பிக்கையே போய் கடவுளைத் திட்டுமளவு பிரச்சினைகளைச் சந்திக்கலாம். அவரவர் ஊழ்வினை என்பதை யாராலும் மாற்றமுடியாது. வினைப் பயனை அனுபவித்தேயாக வேண்டும். 12-க்குடைய செவ்வாய் 5-ல் ஆட்சி. பூமி, வீடு, கட்டடம் சம்பந்தமான திட்டங்களும், முயற்சிகளும், எண்ணங்களும் நிறைவேறும். சிலர் வீடுகட்ட வங்கிக்கடன் உதவியை நாடலாம். 7-ல் மாறும் ராகு கணவன்- மனைவிக்குள் சச்சரவுகளையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்தலாம். சிலர் திருமணத்தடை, தாமதங்களை சந்திக்கலாம். சனி 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தைரியம், சகாயம் இவற்றில் நற்பலன்கள் அமையும். நண்பர்களின் ஆதரவும் அனுகூலமும் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்கு ஜென்மத்தில் கேது, 7-ல் ராகு. அத்துடன் ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. எனவே, சாண் ஏற முழம் வழுக்கிய நிலையாகப் பலன்களைச் சந்திக்கநேரும். என்றாலும் இம்மாதம் ராகு 6-லும், கேது 12-லும் பெயர்ச்சியாகின்றனர். ராகு- கேதுக்களுக்கு 3, 6, 11 ஆகிய இடங்கள் நல்ல இடங்கள். 6-ஆமிடம் ரோகம், ருணம், சத்ரு, போட்டி போன்றவற்றைக் குறிக்கும் இடம். ஒரு கெட்ட கிரகம் கெட்ட இடத்திற்கு வரும்போது அந்த இடத்துக் கெடுபலனைக் கெடுப்பார். போட்டி, பொறாமைகள் விலகும். கடன் சுமைகள் படிப்படியாகக் குறையும். சப்தம ராகுவால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு போன்ற பலன்கள் நிகழ்ந்திருந்தாலும், இனி அவை மாறி ஒற்றுமையுணர்வு ஏற்படும். உங்களின் அனுசரிப்புத் தன்மையால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். தியானம், யோகா, ஆன்மிகப் பயணம் இவற்றில் மனதைச் செலுத்தி நிம்மதி காணலாம். தொழிலமைப்பில் சில புதிய நிகழ்வுகளை ஏற்படுத்துவதன்மூலம் காரிய சித்தி பெறலாம். 2-க்குடைய சனி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். அத்தியாவசியப் பொருட்களின் சேர்க்கை அமையும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி கும்ப ராசியை 11-ல் நின்று பார்ப்பது நன்மைதான். அதோடு 3, 10-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தையே பார்க்கிறார். (3-ல் ஆட்சி பெற்று). தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் எவ்வித பாதிப்புக்கும் இடமில்லை. சிலர் உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையே தொழில் பார்ட்னர் ஷிப் முறையில் செயல்படலாம். 2-க்குடைய குரு 2-ஆம் இடத்தையே பார்ப்பதால் பொருளாதாரத்தில் சிக்கல், சிரமங்களுக்கு இடமில்லை. எந்த ஒரு காரியத்தையும் சர்வசாதாரணமாக சாதிக்கும் வாய்ப்புகள் அமையும். இம்மாதம் 13-ஆம் தேதி 6-ல் இருக்கும் ராகு 5-ஆம் இடத்துக்கும், 12-ல் இருக்கும் கேது 11-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். கேதுவுக்கு 11-ஆம் இடம் நல்ல இடம். காரிய வெற்றி, அனுகூலம் ஆகிய பலன்கள் கைகூடும். ராகு மாறும் 5-ஆம் இடம் சில சங்கடங்களையும், மன சஞ்சலங்களையும் ஏற்படுத்தலாம். சகோதர- சகோதரி வகையில் சில சுபவிரயங்களையும் மேற்கொள்ள நேரிடும். 11-ல் உள்ள சுக்கிரன் 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது பலம். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகரியங்களுக்குக் குறைவிருக்காது. என்றாலும் சிலநேரம் தேவையற்ற அலைச்சல்களையும், அலைக்கழிப்புக் களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும். வாங்கிய இடத்தில் நாணயம் தவறாமல் வாக்கைக் காப்பாற்றலாம். ஜனனகால தசாபுக்திகளை அனுசரித்து நடந்துகொள்வது நலம். 2-க்குடைய செவ்வாய் 2-ல் ஆட்சி. குடும்பக் குழப்பம் விலகும். நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இந்த மாதம் 13-ஆம் தேதி 5-ல் உள்ள ராகு 4-லும், 11-ல் உள்ள கேது 10-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். தொழிலிலில் புதிய வாய்ப்புகளும் நல்ல மாற்றங்களும் அமையும். 4-ல் மாறும் ராகு உடல் உபாதைகள் சிலவற்றைத் தந்தாலும், பிளவு, பிரிவு போன்ற பலன்கள் ஏற்படாது. நினைப்பதெல்லாம் உடனுக்குடன் நடக்க வேண்டுமென்று துடிப்பீர்கள். சில காரியங் களில் மிகமிக அதிகமாக பலனை எதிர் பார்ப்பீர்கள். அது மனோவேகம். சில காரியங் களில் நீங்கள் ஒரு திட்டம் போட, அவை செயல்படுவதில் தாமதம் ஏற்படலாம்.