பீஷ்மாஷ்டமி 12-2-2019
கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனத்தைப் பெற்ற கையோடு... பிரபஞ்சத்திலேயே முதன்முதலிலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஓதியவராய்... விஷ்ணு நாமங்கள் மட்டுமே நாவிலில் தவழ... "விதேக முக்தி' பெற்றார் பீஷ்மாச்சாரியார்.
இந்த விஸ்வரூப தரிசனம் அக்ரூர், வசுதேவர், தேவகி, அர்ஜுனன் போன்றோருக்குக் கிட்டியதைவிடப் பெரிதும் வித்தியாசமானது.
விழிப்பு நிலையிலேயே- அதாவது மானுட உடலிலில் உயிர் நிலைக்கையிலேயே அடைவது விதேக முத்தி. இறைவனே நேரில் பிரசன்னமாகி இருந்தால்தான், எவருக்கும் இவ்வரிய முக்திநிலை கிட்டும்.
இத்தகைய பேற்றை இவர் பெறக் காரணம், அனைத்தையும் இறைவனு டைய திருவடிகளில் அர்ப்பணித்
பீஷ்மாஷ்டமி 12-2-2019
கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனத்தைப் பெற்ற கையோடு... பிரபஞ்சத்திலேயே முதன்முதலிலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஓதியவராய்... விஷ்ணு நாமங்கள் மட்டுமே நாவிலில் தவழ... "விதேக முக்தி' பெற்றார் பீஷ்மாச்சாரியார்.
இந்த விஸ்வரூப தரிசனம் அக்ரூர், வசுதேவர், தேவகி, அர்ஜுனன் போன்றோருக்குக் கிட்டியதைவிடப் பெரிதும் வித்தியாசமானது.
விழிப்பு நிலையிலேயே- அதாவது மானுட உடலிலில் உயிர் நிலைக்கையிலேயே அடைவது விதேக முத்தி. இறைவனே நேரில் பிரசன்னமாகி இருந்தால்தான், எவருக்கும் இவ்வரிய முக்திநிலை கிட்டும்.
இத்தகைய பேற்றை இவர் பெறக் காரணம், அனைத்தையும் இறைவனு டைய திருவடிகளில் அர்ப்பணித்ததே. இந்த சமர்ப்பணமே, பல கோடி மடங்காய்ப் பெருகி, விதேக முக்தி நிலையை வார்த்தது.
இதுபோன்றே அருணாசல கிரிவலத் தின் பலாபலன்களை இறைத் திருவடி களிலேயே அர்ப்பணித்தலும், பல கோடி மடங்காய் விருத்தியாகும் என்பதற்கு மகாபாரதத்தின் "பீஷ்மவிஜயம்' ஒரு உரைகல்.
பீஷ்மாச்சாரியார் மகத்தான அர்ப் பண, தர்ப்பண, சமர்ப்பணத் துதியைக் கடைப்பிடித்ததனால்தான் "இச்சா மிருத்யு' எனும் விதேக முக்தி நிலையை பரம்பொருளாம் கண்ணபிரான் முன்னிலையிலேயே பெற்றார். அர்க்கி யம் அளிக்க வேண்டிய மகான்களின் வரிசையிலும் பீஷ்மர் சிறப்பிடம் பெறுகிறார்.
இவருடைய பெயரிலேயே "பீஷ்மத் தர்ப்பண நாள்' என்ற விசேஷமான நாளொன்றும் ரதசப்தமி தினத்தை ஒட்டி வருவதைப் பஞ்சாங்கத்தில் காணலாம். இந்த ஆண்டு ரதசப்தமியும், பீஷ்மத் தர்ப்பண நாளும் ஒரே நாளில் வருவதால், ஒரே தர்ப்பணம் மட்டுமே போதும்.
மொத்தத்தில், கலிலியுகத்தின் இளைய சமுதாயம், தீய வழக்கங்களில் சிக்காது கட்டிக்காத்து, நல்லொழுக்கம் பரிமளிக்கும் நல்வாழ்வைப் பெற்றிட, பீஷ்மருக்கு தினமும் அர்க்கிய பூஜை ஆற்றி வருதல் உத்தம மாமருந்தாம்.
சந்தியாவந்தனக் கிரியையில், காயத்ரி தேவிக்கு காயத்ரி மந்திரம் ஜெபித்து, இரு கைகளில் நீரை ஏந்தி, குதிங்கால்களை சற்று உயர்த்தி, "பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி' என்று ஓதியவாறே இணைந்த கரங்களைச் சற்றே சாய்த்து விரல் நுனிகளின் வழியே பூமியில் நீரை வார்க்கவேண்டும். இதுவே அர்க்கியம். இதேபோல் ஏனைய தோத்ராதிபதி, குருமார்கள், 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள், கிராம தேவதைகள், இஷ்ட தெய்வம் என விரும்பியவர்களுக்கு அளிக்கலாம். அர்க் கிய வழிபாடு காப்பு ரட்சையாய் முன்னின்று காக்கும். யாவரும் தினமும் ஆற்றிவர வேண்டிய ஒன்று.
தேவர்களுக்கு விரல்களின் நுனிவழியாகவும், ரிஷிகளுக்கு வலப்புறமாகவும், பித்ரு தேவர்களுக்கு எதிர்ப்புறமாக- அதாவது சுட்டுவிரல் மற்றும் கட்டை விரலிலின் இடைப்பட்ட பகுதியில் விட வேண்டும். அங்குதான் பித்ரு மண்டலம் உள்ளது. அங்குபோய்ச் சேரும்.
"சுத்தனோ அசுத்தனோ, உன்னுடைய திருநாமத்தைச் சொல்லிலி ஆசமனப்புனலாக மூன்றுமுறை வலது உள்ளங்கையில் உத்தரணியி னால் நீர்வார்த்து உட்கொண்டு, அச்சுதா, அனந்தா, கோவிந்தா எனக்கூறினேன். ஸ்ரீ ராம ராம ராம எனக்கூறியதனால் பவித்ரனாகி விட்டேன். இதில் சந்தேகமே இல்லை' என்னும் பொருளில் மந்திரம் உள்ளது.
திருமாலிலின் பன்னிரண்டு நாமங்களால் எனது அவயங்களைத் தொட்டேன். விபூதி, திருமண் என அவரவர் மரபுப்படி அணிந்தேன். "கங்கே கங்கே கங்கே' என்று மும்முறை அழைத்து விட்டதால் நதி தேவதை எழுந்தருளி என்னைப் புனிதமாக்கிவிட்டாள். எனவே, இந்தக் கிரியை செய்ய நான் தகுதியாகி விட்டேன்' என்று சொல்லலாம்.
பீஷ்மாஷ்டமி தினத்தில் பீஷ்மருக்காக செய்யும் தர்ப்பணம் பாவங்கள் அனைத்தையும் போக்கும்.