ந்துமதம் என்பது கடவுளை முழுமையாக நம்பக்கூடிய மதம். விஞ்ஞானரீதியாக இன்று செயல்படும் எத்தனையோ உண்மைகளை இந்துமதம் எப்போதோ சொல்லிவிட்டது. தண்ணீருக்கு ஒரு கடவுள் வருணன் என்றும், நெருப்பிற்குரிய கடவுள் அக்னி பகவான் என்றும், வாயு என்ற கடவுளே காற்று என்றும், சூரியன் வெளிச்சத்தைத் தரும் கடவுள் என்றும், பூமிக்கு பூமா தேவி என்றும் வகைவகையாகக் கடவுளைப் பிரித்துவைத்து, மனித வாழ்க்கையின் குறிக்கோளை இந்துமதம் பூர்த்திசெய்கிறது.

sss

எத்தனையோ இருந்தும் நாஸ்திகன் "கடவுள் இல்லை; இல்லவே இல்லை' என்கி றான். ஆஸ்திகனோ "அனைத்தும் கடவுளின் இயக்கம்தான்' என்கிறான். இருவருமே கடவுளைப் பற்றிதான் பேசுகிறார்கள். ஆக, மனிதனின் மூச்சிலும் பேச்சிலும் கடவுள் தான் இருக்கிறான் என்பது நிரூபண மாகிறது. இன்றைய காலகட்டத்தில் கடவுளிடம் பக்தி செலுத்துவதை விட்டு விட்டு, அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்மீது பக்தி செலுத்துகிறார்கள். இவர்களிடம் பணிந்து கிடைப்பதையே பெரிய சாதனையென்று நினைக்கிறார்கள். எல்லாரும் பணிந்து வணங்கவேண்டியது, நம்மையெல்லாம் படைத்த ஆதிமூலமான- ஆதியந்தமில்லாத முழுமுதற் கடவுளைத்தான் என்பதை நாம் முழுமையாக உணரவேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுளைப் பற்றிய சொந்த அபிப்ராயங்கள் இருக்கும். "பரலோகத்திலிருக்கும் பரம பிதாவான கர்த்தர், தேவகுமாரனை தூதுவராக நமக்கு அனுப்பியிருக்கிறார்' என்று ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். இன்னொரு பிரிவினர் நபிகள் நாயகமே தங்கள் இறைத்தூதர் என்றும், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றும் கூறுகிறார்கள். இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புரிந்துகொண்டிருந்தாலும் சகலருக்கும் பொதுவானவர் ஒரே கடவுள்தான். கடவுள் என்பவர் ஜனன- மரணவிதிகளுக்கு அப்பாற் பட்டவர். அவரைவிட மேலானவர் எவருமில்லை. இந்த உலகத்திலுள்ள அனைத்து அணுவிலும் இருக்கும் ஆதி மூலம் கடவுள்தான். இந்த அளவற்ற பலகோடி அண்டங்களும், அதனை அடக்கிய பிரம் மாண்டங்களும் கடவுளை ஆதாரமாகக் கொண்டே இயங்கிவருகின்றன. இருபத்து நான்கு மணி நேரமும் பூமி சுழன்றுகொண்டே இருக்கிறது. இதில் இம்மியளவு பிசகு ஏற்பட்டாலும் அனைத்தும் நிர்மூலமாகும். இதை இவ்வாறு குறையேதுமின்றி இயக்குபவர் கடவுள் ஒருவரே.

Advertisment

இந்த உலகிலுள்ள அனைத்திற்கும் கடவுள் ஒருவரே உரிமையுள்ளவர் என்பதை உணராத பலர், "இந்த வயலும் வரப்பும் என்னுடையது; இந்த பெரிய மாளிகை என்னுடையது; இதில் ஒரு அடி நிலம்கூட கொடுக்கமாட்டேன்' என்று சண்டையிட்டுக் கொள்கின்றனர். பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் மனம் தான்; இது மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவும் என்பதை பலரும் உணர மறுக்கிறார்கள்.

கடவுள் ஒருவரே என்றால் ஏன் இந்து மதத்தில் மட்டும் இத்தனைக் கடவுள்கள் என்று கேட்கத் தோன்றும். பல்வேறுபட்ட தேசங்களையும், மொழிகளையும் இந்திய நாடு உள்ளடக்கியுள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்- தந்தை, மகன், பாட்டன், தாத்தன், பேரன் என்று எத்தனையோ சொந்தங்கள் உள்ளன. ஒரு மனிதனுக்கே இவ்வளவு சொந்தங்கள் என்றால் அகிலத்தையாளும் கடவுளுக்கு இருக்காதா? ஒவ்வொரு தெய்வமும் அதனதன் கடமையைச் செய்கின்றன. சூரியன் பணக்காரன்- ஏழை, குடிசை- அடுக்குமாடி வீடு என்று பிரித்துப் பார்த்து ஒளியை வழங்குவதில்லை. அதற்கு எல்லாம் ஒன்றுதான். பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் கடவுள் ஒருவரே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு சமயம் நாரதர், "என்னைவிட பகவான்மீது பக்தி செலுத்துபவர்கள் யார் இருக்கிறார்கள்? எந்த நேரமும் நான் பகவான் பெயரையே உச்சரித்துக்கொண்டே இருக்கிறேன். பகவத் பக்தியிலேயே என்னை விட உயர்ந்தவர் யார்?'' என்று மகாவிஷ்ணு விடம் கேட்டாராம். அதற்கு அவர், "ஒருவன் இருக்கிறான்'' என்றார். அதிர்ச்சிடைந்த நாரதர், "அவனை நான் பார்க்கவேண்டுமே'' என்றுகூற, நாரதருக்கு ஒரு விவசாயியை சுட்டிக்காட்டினார் மகாவிஷ்ணு.

Advertisment

அந்த விவசாயி என்ன செய்கிறான் என்பதை நாரதர் கூர்ந்து கவனித்தார். அவன் தினமும் முதலில் பத்து நிமிடங்கள் கடவுளை நினைத்துத் துதித்துவிட்டு, தன்னுடைய வயலுக்குச் சென்று வேலைகளை கவனித் தான். மாலை வீட்டுக்குவந்து குளித்துவிட்டு, இரவு உணவருந்திவிட்டு, கடவுளை ஒருமுறை வழிபட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்றான்.

"இவன் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தான் கடவுளை நினைக்கிறான். அதிலும் ஓரிரு நாழிகைக்குமேல் பகவானை தியானித்து வணங்குவதில்லை. இவனைப்போய் "என்னைவிட உயர்ந்தவன்' என்கிறாரே கடவுள் என்று பகவானிடமே சென்று கேட்டார் நாரதர். அதற்குக் கடவுள், "இந்தக் கிண்ணம் நிறைய எண்ணெய் இருக்கிறது. ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தாமல், இதைக் கையில் வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிவா'' என்றார். நாரதரும் மிக கவனமாக ஒரு சொட்டு எண்ணெய்கூட கீழே சிந்தாமல், கண்ணும் கருத்துமாகக் கொண்டு வந்து கடவுளிடம் ஒப்படைத்தார்.

அப்போது இறைவன் நாரதரைப் பார்த்து, "இந்த எண்ணெய்யைக் கையில் வைத்துக்கொண்டு இந்த உலகத்தைச் சுற்றிவந்தபோது நீ எத்தனைமுறை கடவுளை நினைத்து அவர் நாமத்தைச் சொன்னாய்?' என்று கேட்டார். அதற்கு நாரதர், "பகவான் நாமத்தைச் சொல்லிக்கொண்டே வந்தால் எண்ணெய் கீழே சிந்திவிடுமே என்று, முழுக்கவனத்தையும் எண்ணெய்மீதே செலுத்தி வந்தேன்'' என்று கூறினார். "நாரதா, இந்த சின்ன காரியத்தைச் செய்வதற்கே உன்னால் என்னை நினைக்கமுடியவில்லை. அந்த விவசாயி நாளெல்லாம் உழைக்கிறான்.

இருந்தாலும் அவன் என்னை மறக்கவில்லை. எனவே உன் ஆணவத்தை விட்டுவிடு'' என்று அறிவுரை கூறினார்.