புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம். மூன்றாம் நந்திவர்மன் காலம்முதல் சோழர்கள் ஆட்சிக்காலம்வரை இந்த களத்தூர் ஒரு பெரும் கோட்டமாக திகழ்ந்துள்ளது. அப்போது இக்கோட்டத்தில் பல கூற்றங்களும், பல நகரங்களும், பல தனி ஊர்களும், ஏன்? மதுராந்தகம் நகரம் கூட அடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்படிப்பட்ட களத்தூர், பொன்விளைந்த களத் தூராக போற்றப்படக் காரணம் என்ன? பார்ப்போமா? களைந்தயென்றும், களத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சுமார் 700 வருடங்களுக்குமுன்பு சுவாமி நிகமாந்த மகா தேசிகர் யாத்திரையின்போது ஒருநாள் இரவு இங்கு தங்கினார். தன்னுடன் தான் நித்திய பூஜை செய்யும் சாளகிராமத்தையும், குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவ பெருமானையும் கொண்டு வந்திருந்தார்.
மகா தேசிகர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, ஹயக்ரீவர் முழு குதிரையாக வடிவெடுத்து, ஊரை வலம்வந்து விளைந்திருந்த நெற்க்கதிர்களை மேய்ந்தார். குதிரை வாய்ப்பட்ட கதிர்கள் எல்லாம் பொன்னாக மாறியது. மறுநாள் அதிகாலை விவசாயிகள் நெல்லறுக்க கழனிச் சென்று பார்க்க....வயல்வெளிகளில் பொன் கதிர்கள் பரவி கிடப்பதைக்கண்டு அதிசயித்துப் போயினர். தேசிகரிடம் விவசாயிகள் வந்து நடந்தவற்றை கூறிட..... எல்லாம் அந்த நாராயணரின் செயல் எனக் கூறி மகிழ்ச்சி அடைந்தார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் இவ்வூர் பொன்விளைந்தகளத்தூர் ஆனது. நெற்கதிர்கள் குவிக்கப்பட்டு சேமிக்கும் இடம் (களம்) "பொற்க்களந்தை' என்றும், அருகிலுள்ள கொல்லையில் நெல் மணிகளை பதர் நீக்கி தூற்றியதால் "கொல்லைமேடு' என்றும், தூற்றப்பட்ட நெற்ப்பதர்களை அருகாமையில் (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்) ஒன்றாகக் குவித்ததால் "பொன்பதர்கூடம்' என்றும், பண்டமாற்று முறையில் பொன்னை மாற்றி, பணம் பெற்று வாணிகம் செய்ததால் "பொன்மார்' என்ற ஊரும் இந்
புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம். மூன்றாம் நந்திவர்மன் காலம்முதல் சோழர்கள் ஆட்சிக்காலம்வரை இந்த களத்தூர் ஒரு பெரும் கோட்டமாக திகழ்ந்துள்ளது. அப்போது இக்கோட்டத்தில் பல கூற்றங்களும், பல நகரங்களும், பல தனி ஊர்களும், ஏன்? மதுராந்தகம் நகரம் கூட அடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்படிப்பட்ட களத்தூர், பொன்விளைந்த களத் தூராக போற்றப்படக் காரணம் என்ன? பார்ப்போமா? களைந்தயென்றும், களத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சுமார் 700 வருடங்களுக்குமுன்பு சுவாமி நிகமாந்த மகா தேசிகர் யாத்திரையின்போது ஒருநாள் இரவு இங்கு தங்கினார். தன்னுடன் தான் நித்திய பூஜை செய்யும் சாளகிராமத்தையும், குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவ பெருமானையும் கொண்டு வந்திருந்தார்.
மகா தேசிகர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, ஹயக்ரீவர் முழு குதிரையாக வடிவெடுத்து, ஊரை வலம்வந்து விளைந்திருந்த நெற்க்கதிர்களை மேய்ந்தார். குதிரை வாய்ப்பட்ட கதிர்கள் எல்லாம் பொன்னாக மாறியது. மறுநாள் அதிகாலை விவசாயிகள் நெல்லறுக்க கழனிச் சென்று பார்க்க....வயல்வெளிகளில் பொன் கதிர்கள் பரவி கிடப்பதைக்கண்டு அதிசயித்துப் போயினர். தேசிகரிடம் விவசாயிகள் வந்து நடந்தவற்றை கூறிட..... எல்லாம் அந்த நாராயணரின் செயல் எனக் கூறி மகிழ்ச்சி அடைந்தார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் இவ்வூர் பொன்விளைந்தகளத்தூர் ஆனது. நெற்கதிர்கள் குவிக்கப்பட்டு சேமிக்கும் இடம் (களம்) "பொற்க்களந்தை' என்றும், அருகிலுள்ள கொல்லையில் நெல் மணிகளை பதர் நீக்கி தூற்றியதால் "கொல்லைமேடு' என்றும், தூற்றப்பட்ட நெற்ப்பதர்களை அருகாமையில் (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்) ஒன்றாகக் குவித்ததால் "பொன்பதர்கூடம்' என்றும், பண்டமாற்று முறையில் பொன்னை மாற்றி, பணம் பெற்று வாணிகம் செய்ததால் "பொன்மார்' என்ற ஊரும் இந்த தலத்தில் நடந்த நிகழ்வைத் தொட்டு ஏற்பட்ட ஊர் களாகும். இக்களந்தை என்னும் கலத்தூரை பல்லவ வழித்தோன்றலான கூற்றுவர் ஆட்சி செய்து வந்தார். மறப்போர், விறப்போர், வாட்ப்போர் என அனைத்திலும் வல்லவரான இவர் எதிரிகளுக்கு எமன் போன்று விளங்கியதால் "கூற்றுவர்' என அழைக்கப்பெற்றார். சிற்றரசராகத் திகழ்ந்த இம்மன்னர் தனது படை வலிமையால் பற்பல மன்னர்களை விழித்து, வெற்றி கண்டார். சோழர்களையும் வென்று தன் ஆதிக்கத்தால் அடக்கினார்.
சிறந்த சிவபக்தரான இவர், தில்லைவாழ் அந்தணர் களிடம் சென்று, தனக்கு முடிசூட்டுமாறு கோரினார். தில்லை அந்தணர்களோ.... ""தாங்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தவிர வேறு யாருக்கும் முடி சூட்டமாட்டோம்'' என மறுத்துவிட்டனர். கூற்றுவரோ அந்தணர்களை அடிபணிய செய்யாமல், தில்லை நடராஜப் பெருமானிடம் சென்று உன் திருவடியையே எமக்கு முடிசூட்ட வேண்டும் என்று வேண்டினார். இறைவன் அவர் கனவில் தோன்றி அவரது தலையில் தனது திருவடிகளை சூட்டினார். அதுமுதல் கூற்றுவர் பரமனின் திருவடியையே மணிமுடியாகக்கொண்டு ஆட்சிபுரிந்தார். அதன்பின் கூற்றுவர், கூற்றுவ நாயனாராகப் போற்றலானார். தொன்றுதொட்டு சிவாலயங்களில் பூசனைப் புரிந்துவருவது சிவாச்சாரியார்கள். அவ்வாறான சிவாச்சாரியார் ஒருவர் இங்கு ஈசனை அனுதினமும் செவ்வனே பூஜை செய்துவந்தார். அப்படி பூஜை புரியும் பூஜைக்கான சாற்று மாலையை தினமும் அரசனிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அரசக் கட்டளையாகும். ஒருநாள் ஈசனுக்கு சாற்றிய மாலையை (பக்தி பூரிப்பால்) தான் சூடிப்பார்க்கவேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தது அக்குருக்களின் மனைவிக்கு. அப்படியொரு தினம் ஈசனுக்குச் சாற்றிய மாலையை, குருக்களின் அனுமதியின்றி சூடி மகிழ்ந்தாள். அதை கண்ட குருக்கள் அதிர்ச்சி அடைந்தார். மனைவியை கோபித்துக்கொண்டு, அம்மாலையினை வாங்கி, அரசனிடம் சென்று சேர்ப்பித்தார் சிவாச்சாரியார்.
அன்றைய தினம் ஆவலுடன் அந்த பிரசாத மாலையை வாங்கிய அரசன், அம்மாலையில் ஓர் தலைமுடி இருப்பதைக்கண்டு கோபங்கொண்டார். மாலையில் தலைமுடி எப்படி வந்ததென கோபக்கணை வீசினார். பயந்து நடுங்கிய குருக்கள், அது சிவனின் தலைமுடி என்று பொய் கூறிவிடுகின்றார். இதைக்கேட்டஅரசன், "சிவனின் தலை முடியா? ஒருகாலும் இருக்காது. அப்படி சிவனுக்கு தலைமுடி இருந்தால் நாளையே நான் அதை பார்க்க வேண்டும். இல்லையென்றால் உமக்கு கடும் தண்டனை அளிப்பேன்' என கடுஞ்சினத்துடன் குருக்களிடம் கூறி அனுப்பினார்.பயத்தில் நடுங்கிய குருக்கள், சிவனே கதியென ஈசனது பாதத்தில் விழுந்துக் கதறினார். மயக்கமடைந்தார். குருக்கள் நித்தியப்படி நியமத்துடனும், பக்தி சிரத்தையுடனும் செய்த பூஜையில் மகிழ்ந்த ஈசன் அசரீரி வாயிலாக, ""அர்ச்சகரே!! அச்சம் வேண்டாம். நாளை அரசனை அழைத்துவாரும். யாம் சடைமுடியுடன் காட்சிதருகிறேன். நிம்மதியாக வீடு செல்க'' என்று வாக்களித்தார். கண்விழித்த குருக்கள் உள்ளம் பூரித்து, துணிவுகொண்டு எழுந்தார். நேராக அரசனிடம் சென்று, ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். தனது படையுடன் ஆலயம் அந்த அரசனுக்கு ஈசன் சடாமுடி தாங்கிய தனது தலையில் முன் குடுமியுடன்அருட்காட்சி தந்து அரசனை அசர வைத்தார். அரனாரோடு ஆலய அர்ச்சகரையும் அடிபணிந்து போற்றினார் அரசர்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் இத்தல ஈசர் முன் குடிமீஸ்வரர் என்று போற்றலானார். வள்ளல் இராமலிங்கர் பதிப்பித்த தொண்டை மண்டல சதகம் மற்றும் புள்ளிருக்குவேளூர் கலம்பகம் முதலிய நூல்களை எழுதி, பெரும் புகழ்பெற்ற படிக்காசுப்புலவர் இங்கு வாழ்ந்த காலத்தில் தினசரி இறைவனிடம் பொற்காசு பெற்று தனது இறைப்பணியை நிறைவாக செய்துவந்ததும் இத்தலத்திற்குரிய கூடுதல் பெருமையாகும். நளவெண்பாவை எழுதி, "வெண்பாவுக்கு ஓர் புகழேந்தி' எனப் பெரும் பெயர் படைத்த புகழேந்திப்புலவர் பிறந்தது இவ்வூரில்தான். கண்பார்வை இல்லாமல் ஆயிரம்கோடி ஏடுகளை எழுதாமல், மனதில் எழுதிப்படித்த வித்தகரான அந்தகக்கவி என்று போற்றப்பட்ட வீரராகவ முதலியார் வாழ்ந்த ஊர் இது. ஊரின் வடகிழக்கு திசையில் பரந்த இடப்பரப்பிற்கு நடுவே அமையப்பெற்றுள்ள இவ்வாலயம், மத்திய அரசினுடைய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு பார்த்த ஆலயம். உயர்ந்த மதில் சுவர். தெற்கே வாயில் கதவு அமைந்துள்ளது. உள்ளமைப்பு பாதி மூடுதளமாகவும், பாதி திறந்த வெளியாகவும் உள்ளது. கிழக்கு பக்கமாகவும் வாயில் கதவுஅமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப்புறம் பலிபீடம் மற்றும் நந்தி அமைந்துள்ளது. தெற்கு வாயிலுள் நுழைய 32 தூண்கள்கொண்ட மகாமண்டபம். நேராக அம்பாள் சந்நிதி.
அம்பிகையாக ஸ்ரீ மீனாட்சியம்பாள் நின்ற கோலத்தில் எழில் சிந்துகின்றாள். அடுத்தபடியாக இறைவன் சந்நிதியை அடைகிறோம். இறைவன் சந்நிதி மண்டபம், அந்தராளம், கருவறை அமைப்பில் அமையப்பெற்றுள்ளது. விசாலமான கருவறை. அதன் நடுவே சதுர ஆவுடையார்கொண்டு முன் குடுமியுடன்அபூர்வமாக காட்சிதருகின்றார் ஸ்ரீ முன்குடி மீஸ்வரர். அதியற்புத தரிசனம். பிராகாரத்தை வலம்வருகையில் முதலில் கணபதி தரிசனம்தருகின்றார். கோஷ் மாடங்களில் அழகிய சிலா வடிவங்களைக் கண்ணுறுகின்றோம். வடமேற்கில் சுப்ரமணியரை காண்கின்றோம். வடகிழக்கில் நவகிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு கூற்றுவ நாயனாருக்கும் சிலாரூபம் உள்ளது. ஏனைய சிவாலய தெய்வங்களையும் முறையே தரிசிக்கின்றோம். சுவாமி விமானம் தூங்கானை மாடம் எனப்படும் கஜபிருஷ்ட விமானமாகத் திகழ்கிகிறது. விமானம் தவிர ஏனையவைகள் கல்கட்டடமாக விளங்குகின்றன. பெருமைகள் பலகொண்ட இவ்வாலயம் கி.பி. 750-ல் நந்திவர்மப் பல்லவனால் எழுப்பப்பட்டதாகும். கூற்றுவ நாயனார் அரசாண்ட இத்தலம் சோழ, பல்லவ, விஜயநகர பேரரசுகளின் வரலாற்றுப் பதிவுகளைக் கல்வெட்டுகளாகக் கொண்டுள்ளது. இவ்வாலயத் தில் சுமார் 20 கல்வெட்டுகள் கண்டெடுக் கப்பட்டுள்ளன.
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1075-ல் இறைவழிபாட்டிற்கு நிலமும், விளக்கெறிக்க பொன்னும் தானமாக தந்துள்ளான். கி.பி. 1093-ல் மூன்று சந்திகளிலும் விளக்கெறிக்க ஏற்பாடு செய்துள்ளான். கி.பி. 1133-ல் விக்ரம சோழன் ஆட்சியில் பிராமணர்களுக்கு நிலம் ஒதுக்கிய குறிப்பு காணப்படுகிறது. 1145-ல் இரண்டாம் குலோத்துங்கன் இக்கோவிலுக்கு நந்தவனம் அமைத்து தந்துள்ளான். அதோடு இவ்வூருக்கு "குலோத்துங்க சோழன் திருத்தொண்டை தோகநல்லூர்' எனவும் பெயரிட்டுள்ளான். மூன்றாம் குலோத்துங்கன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரும் இவ்வாலயத் திருப்பணிகளை அதிகம் செய்துள்ளனர். கி.பி. 1264-ல் சடையவர்மன் இவ்வாலயத்தை பராமரித்து, நிலம் ஒதுக்கியுள்ளான். அதோடு இவ்வுரை "கங்கைகொண்ட சதுர்வேதிமங்கலம்' எனவும் அழைத்துள்ளான். கி.பி. 1265-ல் விஜயகண்ட் கோபாலன், கி.பி. 1507-ல் வீரநரசிம்ம பல்லவன் ஆகியோர் ஆட்சிக் காலத்திலும் நிலங்கள் பலவற்றைத் தானமாக அளித்துள்ளனர்.
இங்கு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் நந்தவனம் அமைக்கப்பட்டு எழில் சிந்துகின்றது. 2004-ஆம் ஆண்டு இவ்வாலய குடமுழுக்கு நடந்துள்ளது. இத்தல தீர்த்தமாக ஆனந்த கூபம் (கிணறு) உள்ளது. இவ்வாலயத்தில் மாதப் பிரதோஷங்கள், பௌர்ணமி மற்றும் சித்ரா பௌர்ணமியில் 108 பால்குட அபிஷேகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம் 108 சங்காபிஷேகம் மற்றும் கூற்றுவ நாயனார் குருபூஜை, நவராத்திரி, அன்னாபிஷேகம், கந்தர்சஷ்டி, கார்த்திகை சோமவாரம்,, தைப்பூசம் 108 திருவிளக்கு பூஜை, சிவராத்திரி, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் என அனேக விசேடங்கள் சிறப்புற கொண்டாடப்படுகின்றன. இரண்டுகால பூஜைகள் நடக்கிறது. பகல் வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் ஆலயத்தை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோல்வி கண்டு துவளும் மனங்களுக்கு வெற்றிக்கனி தர காத்திருக்கின்றார் ஸ்ரீ முன்குடுமீஸ்வரர். செங்கல்பட்டு மாவட்டம், திருக் கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றத் திலிருந்து வல்லிப்புரம் வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொன்விளைந்த களத்தூர். திருக்கழுகுன்றம் மற்றும் செங்கல்பட்டிலிருந்து இங்குவர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.