Advertisment

பேரொளி காட்டும் ஞானக் கல்வி! -யோகி சிவானந்தம்

/idhalgal/om/enlightenment-education-shines-yogi-sivanandam

"ஓம் சரவணபவ' இதழ் வாசக

அன்புள்ளங்களுக்கு 2022 புத்தாண்டு,

தைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

நம்மில் பலரும் இயற்கையை மறந்து வருகிறோம். இறைவனையே மறக்கத் தெரிந்த நமக்கு இயற்கையை மறப்பது சிரமமா என்ன? அதனால் என்ன விளைவுகள் நடந்துகொண்டிருக்கின்றன? இயற்கையாக நடக்கவேண்டிய நிகழ்வுகள் அதற்கெதிராக நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கருவுறுதல் (எங்ழ்ற்ண்ப்ண்ற்ஹ்) என்பது இன்றைக்கு மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. இதைப்பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தான் கற்ற கல்வியை மட்டும் நம்பி, சரியான முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். உரிய வயதில் திருமணம் செய்யாமல் தள்ளிப் போடுகின்றனர்.

Advertisment

ee

"ஏண்டா, ஒரு கல்யாணம் கில்யாணம் செஞ்சுக்கக்கூடாதா? வயது போய்க்கிட்டே இருக்கு' என்று ஊரி லுள்ள பெரியவர் களோ- அக்கறையுள்ள நண்பர்களோ- உறவு களோ கேட்கும்போது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் சிலர் சொல்லும் பதிலைக் கேட்டால் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும்- ஏன், சிரிப்பாகவும் இருக்கிறது. அப்படி என்ன பதில்? வேறொன்றும் இல்லை. "செட்டிலாயிட்டு கல்யாணம் பண்ணிக்கி றேன்' என்பதே அது! திருமணம் செய்து கொண்டால்தான் "செட்டில்' ஆகமுடியும். "செட்டில் ஆயிட்டு கல்யாணம் பண்ணிக்கி றேன்' என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட பதிலை உடம்பு கேட்காது. "செட்டில் ஆகிறேன்...' என்று ஓடிக்கொண்டிருக்கும்போது உடம்பிலுள்ள அவயங்களின் செயல்பாடு சுருங்கிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இதற்குப் பல

"ஓம் சரவணபவ' இதழ் வாசக

அன்புள்ளங்களுக்கு 2022 புத்தாண்டு,

தைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

நம்மில் பலரும் இயற்கையை மறந்து வருகிறோம். இறைவனையே மறக்கத் தெரிந்த நமக்கு இயற்கையை மறப்பது சிரமமா என்ன? அதனால் என்ன விளைவுகள் நடந்துகொண்டிருக்கின்றன? இயற்கையாக நடக்கவேண்டிய நிகழ்வுகள் அதற்கெதிராக நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கருவுறுதல் (எங்ழ்ற்ண்ப்ண்ற்ஹ்) என்பது இன்றைக்கு மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. இதைப்பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தான் கற்ற கல்வியை மட்டும் நம்பி, சரியான முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். உரிய வயதில் திருமணம் செய்யாமல் தள்ளிப் போடுகின்றனர்.

Advertisment

ee

"ஏண்டா, ஒரு கல்யாணம் கில்யாணம் செஞ்சுக்கக்கூடாதா? வயது போய்க்கிட்டே இருக்கு' என்று ஊரி லுள்ள பெரியவர் களோ- அக்கறையுள்ள நண்பர்களோ- உறவு களோ கேட்கும்போது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் சிலர் சொல்லும் பதிலைக் கேட்டால் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும்- ஏன், சிரிப்பாகவும் இருக்கிறது. அப்படி என்ன பதில்? வேறொன்றும் இல்லை. "செட்டிலாயிட்டு கல்யாணம் பண்ணிக்கி றேன்' என்பதே அது! திருமணம் செய்து கொண்டால்தான் "செட்டில்' ஆகமுடியும். "செட்டில் ஆயிட்டு கல்யாணம் பண்ணிக்கி றேன்' என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட பதிலை உடம்பு கேட்காது. "செட்டில் ஆகிறேன்...' என்று ஓடிக்கொண்டிருக்கும்போது உடம்பிலுள்ள அவயங்களின் செயல்பாடு சுருங்கிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. இதில் மின்சாரமும், மின்னணுவியலும் பெரும் பங்குவகிக்கின்றன. நாம் யாரையும், எதையும் குறைக்கூறக் கூடாது. குணம், குறைகளைப் பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.'

நற்குணமும், குற்றமும் என இரண்டும் உடையவரே உலகத்தில் இருப்பதால், ஒருவனின் குணங்களை முதலில் ஆராய்ந்து, அதன்பின் குற்றங்களையும் ஆராய்ந்து, அவ்விரண்டில் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து, குணம் மிகுதியாக இருப்பின் தகுதியுடையவன் என்றும், குற்றம் மிகுதியாக இருப்பின் தகுதியில்லாதவனென்றும் கொள்ளவேண்டும்.

ஒருவன் பகுத்தறிவுக் கல்வியைப் பயன்படுத்தி ஞானக்கல்வியை அடையும் போது அவன் நிறை- குறைகளை ஆராய்ந்து, நிறையைத் தேர்வு தெளிவாகப் பயணிக்க முடியும்.

இன்றைய தலைமுறையினரில் பலர் மிகப்பெரிய கல்வியைப் படித்துவிட்டு, ஒவ்வொருவரும் கர்வத்துடனும், தான் எனும் அகந்தையை சுமந்துகொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் சிந்திக்கத் தவறியதால் அதைத் தொலைந்து விட்டோம். இன்று பல்வேறு கல்விகளை (உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கல்வி) முடித்த இளைஞர்களும் யுவதிகளும் உயர்கல்வி யில் பெற்ற தேர்ச்சியின் விகிதம் அதிக அளவில் இருக்கிறது. ஆனால் இவர்களின் வாழ்வியல் மற்றும் உளவியல் சார்ந்த வாழ்க்கைக்குத் தேவை யான கண்டுபிடிப்புகள் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். பள்ளிக் கூடத்திலிருந்து ஆசிரியர் களால் திரும்ப அனுப்பப் பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் பிற்காலத்தில் மிகப்பெரும் விஞ்ஞானி யாக உருவெடுத்தார். பல அரிய கண்டுபிடிப்பு களை உலகிற்கு வழங்கி னார். இதற்கெல்லாம் காரணம் அவரின் தாயார் தன் மகனுக்கு மிகச் சிறந்த ஆசிரியராக வும், வழிகாட்டியாகவும் இருந்தார் என்பதே.

"தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை

தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.'

இன்று நிலை என்ன?

தாய்- தந்தை இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பாவம் குழந்தைகள் ஏதோ ஒரு விளையாட் டுப் பள்ளியில் (Play School) வளர்கிறார்கள். நம் குழந்தைகளை மிகப்பெரிய (கடன் வாங்கி) கல்விக்கு சொந்தக்காரர்களாக உருவாக்கிவிடுகிறோம். ஆனால் சுதந்திர அடிமைகளாக வேலை பார்க்கின்றனர். ஏன் இந்த அவலநிலை? உலகத்திலேயே நம்மிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ திருடமுடியாத மாபெரும் செல்வம் ஒன்றுண்டு என்றால் அது நாம் பெற்ற, கற்ற கல்வி மட்டுமேயாகும்.

கல்வியை எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும்- கற்ற கல்வியின்மூலம் மகிழ்ச்சியான விஷயத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.'

மிகப்பெரிய செல்வந்தர்முன் வறியவர் நிற்பதுபோல், தாமும் ஆசிரியர்முன் ஏங்கித் தாழ்ந்துநின்று (அவர் நம்மைக் கடிந்து கொள்வதைப் பொருட்படுத்தாமல்) கல்வியைக் கற்றுக்கொண்டவரே மிக உயர்ந்தவராவார். அவ்வாறு தாழ்ந்து நிற்பதற்கு நாணி பொறுமையில்லாமல் கற்காமல் விட்டவர் இழிந்தவர் ஆவார்.

இந்த திருக்குறளைப் பின்பற்றி ஒருவர் கல்வி கற்றுத் தேர்ந்துவிட்டால் அவருக்கு துன்பம் என்பதே இல்லை.

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து'

என்பது குறள். ஒரு பிறப்பில் கற்ற கல்வி, ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தொடர்ந்து பாதுகாவலனாக நின்றுதவும் தன்மையுடையது.

ஒருவன் சிறந்த கல்வியைக் கற்றுத் தேர்ந்துவிட்டால், அவன் விவசாயமாகட்டும்- வேறு தொழிலாக இருந்தாலும் உயர்ந்து வளரமுடியும். அப்படி ஒருவன் வளர்ச்சிபெற வேண்டுமெனில் அவனிடம் சோம்பல் இருக்கக்கூடாது.

"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்'

என்கிறது குறள். காலம் நீட்டிக்கும் தன்மை (ஒரு செயலை ஏற்ற காலத்தில் செய்யாதிருத்தல்), மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் உபயோகமில்லாத மரக்கலங் களாகும்.

சிறந்த கல்வியைக் கற்றவன் பகுத்தறிந்து செயல்படவேண்டும். இயற்கையுள் இறைவனும், இறைவனில் இயற்கையும் என்பதே பிரபஞ்சத்தில் அடங்கிய பஞ்சபூதத் தத்துவ மாகும். பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் கடவுளர்களே. பஞ்சபூதங்கள் பிரபஞ்சத்தில் அநேகத் தன்மையில் தனித்தனியாக செயல்படுகின்றன. இவையனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே தத்துவமாக- அனேகனாக இருந்து செயல்படும் பரம்பொருளே "ஏகன்' எனப்படும் சிவமாகும். சிவமே அனைத்திலும் எனும் தத்துவப் பொருளை உணர்ந்து கல்வியைக் கற்கவேண்டும்.

அப்போது ஞானக்கல்வி புரிபட ஆரம்பிக்கும். ஞான வெளிச்சம் ஏற்படும்போது அது மெய்ஞ்ஞானமாக விரிவடைந்து அஞ்ஞான மாய இருளைப் போக்கி, விஞ்ஞானத்தில் தெளிவாக- தவறில்லாமல் பீடுநடை போட வழிவகுக்கும். ஞானக் கல்வியின் சிறப்பைப்பற்றி திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்.

"நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்

கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்

சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்

மற்றொன் றிலாத மணிவிளக்(கு) ஆமே.'

உயிரானது உடலில் இருக்கும் போதே- அதாவது இவ்வுலகில் உயிரோ டும் உணர்வோடும் வாழ்ந்துகொண்டி ருக்கும்போதே, அழிவற்று என்றும் நிலை யாய் இருக்கின்ற சிவப்பரம்பொருளை உணர்ந்து அறியும் ஞானக் கல்வியைக் கற்க முயலவேண்டும். செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடிப் போகும். மனம் ஒன்றி ஈசனை வழிபாடு செய்வோர் அளப்பரிய சோதி ஒளியைக் காணப் பெறுவார்கள்.

எத்தகைய கல்வியறிவு இருந்தும், எவ்வளவு பொருட்செல்வம் இருந்தும், இயற்கை அறிவும் இறையறிவும் இல்லாத வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்காது. சிவபெருமானை உள்ளத்துள் வைத்து வழிபடுவோர்க்கு ஞானவெளிச்சம் என்பது எளிதான ஒன்றாகும்.

"ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்

தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்

ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு

வாய்ந்த மனமல்கு நூலேணி ஆமே.'

என்கிறது திருமந்திரம். ஞானக்கல்வி நன்கு அமையப்பெற்றவர்களுக்கு அகத்தி னுள் சிவக்காட்சி தெரியும். உள்ளத்தில் தோன்றிய சிவக்காட்சி தூய மணிபோல் ஒளிவீசித் திகழும். இப்படிச் சோதி ஒளியும் சிவக்காட்சியும் சித்திக்கப் பெற்றவர்களுக்குப் பக்குவப்பட்ட மனம் ஏணிபோல் இருந்து மேன்மையடைய துணைசெய்யும்.

கல்வி கற்பதுமட்டும் முக்கியமல்ல. கற்ற கல்வியின் பயனை நாமும் அனுபவித்து, நம்மைச் சார்ந்தவர்களும் பயன்பெறச் செய்யவேண்டும். இறையுணர்வும், இறைபயமும்தான் தனிமனித சுய ஒழுக்கத்தை நெறிபடுத்தும் கருவிகளாகும். அதனால் எல்லாம்வல்ல எம்பெருமான் சிவபெருமானின் ஞானக்கல்வியைக் கற்போம். நமது வாழ்க்கை ஆனந்தப் பட்டொளி வீசிப் பறக்கட்டும்.

Advertisment
om010122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe