எல்லாரும் பெறுக இன்பம்! - முனைவர் இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/enjoy

பிரசவ நேரத்தில் தன்னை கவனிக்க பெற்ற தாய் உடனில்லையே என்னும் ஏக்கம், வணிகர் குலத்தில் பிறந்த ரத்னாவதியை வாட்டியது. வலிதாங்காமல் அவள் "அம்மா! அப்பா!' என துடிக்க, சகல உலகத்துக்கும் தந்தையான சிவபெருமான் காதில் அது விழுந்தது. காவிரியில் நீர் பெருகிச் செல்வதால், ரத்னா வதியின் தாயால் ஆற்றைக் கடந்து மகளின் வீட்டிற்குச் செல்லமுடியவில்லை. எனவே சிவபெருமானே அப்பெண்ணின் தாய் வடிவில் அங்கு சென்று, ரத்னாவதிக்குப் பிரசவம் பார்த்து, சில நாட்கள் அங்கேயே தங்கி தாய், சேய் இருவரையும் நன்கு கவனித்தார். அதனால் திருச்சி மலைக்கோட்டையிலிருக்கும் செவ்வந்திநாதருக்கு தாயாக வந்து காத்ததால் தாயுமானவர் (தாயுமானேஸ்வரர், மாத்ருபூதேஸ்வரர்) என்னும் பெயர் நிலைத்தது.

அன்றுமுதல் கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவமாக-

"ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாத

மன்னாத ஸாம்ப சகிசூட ஹர த்ரிசூலின்

சம்போ ஸுகப்பிரஸவக்ருத் பவமே தயாளோ

ஸ்ரீமாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே'

என்னும் மந்திரம் சொல்லி வழிபட்டு, வாழைத்தாரை இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உண்டானது.

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த சிவபக்தரான கேடிலியப்பப் பிள்ளை தனக்கு குழந்தை வரம் வேண்டி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமியை வேண்ட, அங்ஙனமே அவருக்கு ஆண் மகவு நல்ல நாளில் ஈசனின் திருவருளால் பிறந்தது. அக்குழந்தைக்கு இறைவனின் பெயரான "தாயுமானவர்' என்பதையே சூட்டினர். இக்குழந்தையே பின்னாளில்-

"எல்லாரு மிள்புற் றிருக்க நினைப்பதுவே

யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே!'

என்று, உலகத்தில் வாழும் அனைவரும் சுகமாக வாழவேண்டும் என்கிற பொருளில், மேற்படி வைர வரியை "பராபரக் கண்ணி' எனும் நூலில் எழுதிய தாயுமானவ சுவாமிகளாவார். இவர் இறையருள் பெற்ற ஞானி மட்டுமல்ல; மனித சமுதாயம் உயரவேண்டுமென்னும் பரந்த மனப்பான்மை கொண்ட பட்டினத்தார், அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார் வரிசையில் ஒருவர். சைவ சித்தாந்தக் கருத்துகளுடன் எளிய தமிழில் 56 தலைப்புகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட அருட்பாடல்க

பிரசவ நேரத்தில் தன்னை கவனிக்க பெற்ற தாய் உடனில்லையே என்னும் ஏக்கம், வணிகர் குலத்தில் பிறந்த ரத்னாவதியை வாட்டியது. வலிதாங்காமல் அவள் "அம்மா! அப்பா!' என துடிக்க, சகல உலகத்துக்கும் தந்தையான சிவபெருமான் காதில் அது விழுந்தது. காவிரியில் நீர் பெருகிச் செல்வதால், ரத்னா வதியின் தாயால் ஆற்றைக் கடந்து மகளின் வீட்டிற்குச் செல்லமுடியவில்லை. எனவே சிவபெருமானே அப்பெண்ணின் தாய் வடிவில் அங்கு சென்று, ரத்னாவதிக்குப் பிரசவம் பார்த்து, சில நாட்கள் அங்கேயே தங்கி தாய், சேய் இருவரையும் நன்கு கவனித்தார். அதனால் திருச்சி மலைக்கோட்டையிலிருக்கும் செவ்வந்திநாதருக்கு தாயாக வந்து காத்ததால் தாயுமானவர் (தாயுமானேஸ்வரர், மாத்ருபூதேஸ்வரர்) என்னும் பெயர் நிலைத்தது.

அன்றுமுதல் கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவமாக-

"ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாத

மன்னாத ஸாம்ப சகிசூட ஹர த்ரிசூலின்

சம்போ ஸுகப்பிரஸவக்ருத் பவமே தயாளோ

ஸ்ரீமாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே'

என்னும் மந்திரம் சொல்லி வழிபட்டு, வாழைத்தாரை இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உண்டானது.

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த சிவபக்தரான கேடிலியப்பப் பிள்ளை தனக்கு குழந்தை வரம் வேண்டி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமியை வேண்ட, அங்ஙனமே அவருக்கு ஆண் மகவு நல்ல நாளில் ஈசனின் திருவருளால் பிறந்தது. அக்குழந்தைக்கு இறைவனின் பெயரான "தாயுமானவர்' என்பதையே சூட்டினர். இக்குழந்தையே பின்னாளில்-

"எல்லாரு மிள்புற் றிருக்க நினைப்பதுவே

யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே!'

என்று, உலகத்தில் வாழும் அனைவரும் சுகமாக வாழவேண்டும் என்கிற பொருளில், மேற்படி வைர வரியை "பராபரக் கண்ணி' எனும் நூலில் எழுதிய தாயுமானவ சுவாமிகளாவார். இவர் இறையருள் பெற்ற ஞானி மட்டுமல்ல; மனித சமுதாயம் உயரவேண்டுமென்னும் பரந்த மனப்பான்மை கொண்ட பட்டினத்தார், அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார் வரிசையில் ஒருவர். சைவ சித்தாந்தக் கருத்துகளுடன் எளிய தமிழில் 56 தலைப்புகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட அருட்பாடல்களை எழுதி, சைவ நெறியை 17-ஆம் நூற்றாண்டில் வளர்த்த மகான்.

முன்பொரு சமயம் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் யாவும் தேவதை வடிவில் வந்து இறைவனை தினமும் பூஜித்துவந்தன. ஒரு கட்டத்தில் அவை பூஜை செய்வதை நிறுத்திக்கொண்டு கோவிலின் கதவுகளை மூடிவிட்டுச் சென்றுவிட்டன. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் யாராலும் கோவிலைத் திறக்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் (அப்பர் சுவாமிகள்),

"பண்ணி னேர் மொழி

யாளுமை பங்கரோ

மண்ணி னார்வலஞ்

செய்ம்மறைக் காடரோ...'

எனத் தொடங்கும் ஐந்தாம் திருமுறையில் வரும் பதிகத்தைப்பாட, கோவில் கதவு தானே திறந்தது. திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் இறைவன் திருமறைக்காடாரை தரிசனம் செய்தனர். பின்னர் திருஞான சம்பந்தர்-

"சதுரம் மறைதான்

துதிசெய் துவணங்கும்

மதுரம் பொழில்சூழ்

மறைக்காட் டுறைமைந்தா...'

எனத் தொடங்கும் இரண்டாம் திருமுறையில் வரும் பதிகத்தைப்பாட, மீண்டும் கோவில் கதவுகள் தானே மூடிக்கொண்டன. அதன்பின்னர் பழைய நிலையை இருவரும் உண்டாக்கி நித்திய பூஜைகள் செய்ய வழிவகுத்தனர். அப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த புண்ணிய தலம்தான் திருமறைக்காடு எனும் வேதாரண்யம். திருமறை என்பதற்கு வேதம் என்னும் பொருளுண்டு.

ee

இந்தத் தலத்தில் விவசாயத் தொழில் செய்து வந்த கேடிலியப்பப் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் சிறந்த சிவ பக்தர் மட்டுமின்றி நல்ல பண்பாளர். இவர் மனைவியின் பெயர் கஜவல்லி. தம்பதியர் இருவரும் நல்ல முறையில் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவரது குணநலன்களை அறிந்த ஊர்ப் பெரியவர்கள் இவரை வேதநாயகி சமேத திருமறைக்காடர் (சப்தவிடத்தலங்களில் ஒன்று) கோவிலின் நிர்வாக அலுவலராக நியமித்தனர்.

அதன்படி அவர் கோவில் நிர்வாகம் மற்றும் வரவு- செலவு கணக்குகளைத் திறம்பட பராமரித்து, சிவத்தொண்டையும் செய்து வந்தார். இவருக்கு சிவசிதம்பரம் என்னும் முதல் மகன் பிறந்தான். தன் அண்ணன் வேதாராண்யப் பிள்ளைக்கு நீண்டநாட்களாக குழந்தை இல்லாததால், அவரது மனக் குறையைப் போக்க, தன் முதல் மகன் சிவசிதம்பரத்தை சுவீகாரம் (தத்து) கொடுத்து விட்டார்.

அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வம்சாவளியான முத்துக்கிருஷ்ண நாயக்கர் திருச்சி பகுதியை ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் திருமறைக்காட்டு இறைவனை தரிசிக்க பரிவாரங்களுடன் வந்தார். கோவில் நிர்வாக அதிகாரியான கேடிலியப்பப் பிள்ளை மன்னரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்து, இறைவனை நன்றாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த முனைப்புடன் பணியாற்றிய அவரது செயல்கள் மன்னரை வெகுவாகக் கவர்ந்தன.

எனவே, மன்னர் அவரைத் தம் அரண் மனையின் "பெரிய சம்பிரதி' (தலைமைக் கணக்கு அலுவலர்) பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். மன்னரின் வேண்டு கோளை ஏற்று கேடிலியப்பப் பிள்ளை தன் குடும்பத்துடன் திருச்சியில் தங்கி, அரண்மனைப் பணியை சிறப்பாகச் செய்துவந்தார். திருச்சியிலிருக்கும் சமயத்தில் அடிக்கடி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் மட்டுவார்குழலம்பிகை சமேத தாயுமானவரையும், மலை உச்சியிலுள்ள விநாயகப் பெருமானையும் தரிசிப்பது வழக்கம். தனக்கு மீண்டும் பிள்ளை பாக்கியம் வேண்டுமென இறைவனை வேண்டினார். ஈசனின் திருவருளால் தாயுமானவர் பிறந்தார்.

சிறுவயதில் முறைப்படி கல்வி கற்று நன்கு தேறினார் தாயுமானவர். சைவத் திருமுறைகள், தேவாரம், பெரிய புராணம், மெய்கண்டார் நூல்கள், திருப்புகழ் போன்ற நூல்களைக் கற்று, தத்துவ ஆராய்ச்சியில் திளைத்திருந்தார். நேரம் கிடைக்கும்போது தன் தந்தையுடன் அரண்மனைக்குச் சென்று வருவதுண்டு.

மன்னர் முத்துக்கிருஷ்ண நாயக்கர் மறைவுக்குப் பிறகு, முத்துவீரப்ப நாயக்கர் அரசுப் பொறுப்பேற்றார்.

அவருக்குப்பின் விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1627-1654) ஆட்சிபுரிந்தார். அந்த வேளையில் கேடிலியப்பப் பிள்ளை இறைவனடி சேரவே, அவர் வகித்து வந்த பொறுப்புமிக்க பதவியை ஏற்குமாறு தாயுமானவரிடம் கூறினார். அவருக்கு அப் பதவியை ஏற்க மனமில்லாவிட்டாலும், மன்னரின் உத்தரவென்பதால் ஏற்கவேண்டிய சூழ்நிலை உண்டானது. அவருக்கு அரசுப் பதவியைவிட இறைசிந்தனையும், ஆத்ம தத்துவத்தை அறிவதிலும் அதிக நாட்டமிருந்தது.

ஒருநாள் மலைக்கோட்டைக் கோவிலுக்கு போகும்போது, வழியிலிருக்கும் சாராமுனிவர் மடத்திற்குச் சென்றார். அது நந்திதேவர் வழியில்வந்த திருமூலர் மரபின் மடாலயம். மடத்தின் அன்றைய காலத்தின் மடாதிபதியான (17-ஆவது பட்டம்) ஸ்ரீமௌனகுரு சுவாமிகளின் (இவரது இயற்பெயர் சிதம்பரநாதர்) தரிசனம் செய்யும் பாக்கியம் தாயுமானவருக்குக் கிட்டியது. அவரைப் பார்த்த பொழுதிலேயே இவர் மனம் ஆனந்த மடைந்து, அவரையே தனது குருவாக ஏற்க முடிவு செய்தார். தன் எண்ணத்தை அவரிடம் தெரிவிக்க, அவரும் இவருக்கு சிவதீட்சை உபதேசங்களைச் செய்தார். துறவற தீட்சை கேட்க, "அதற்கான பக்குவ நிலை திருமணத்திற்குப் பிறகே வரும். அதுவரை காத்திரு' என்றார் மடாதிபதி.

வேதாந்த தத்துவத்தில் தனக்கிருந்த சந்தேகங்களுக்கு குருவின்மூலம் தெளிவு பெற்றார். ஸ்ரீமௌனகுரு சுவாமிகள் தாயுமானவரிடம் "சும்மா இரு' என்று உபதேசித்தார். இந்த சொல் தாயுமானவரின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீமௌனகுரு சுவாமிகள் தமக்குப் பிறகு சாராமுனிவர் மடாலயத்தை (மௌன மடம்) தருமபுரம் ஆதீனம் கவனித்துக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையில் மன்னர் விசயரங்க சொக்கநாத நாயக்கர் மறைந்துவிட, அவரது பட்டத்தரசியான மீனாட்சி யின் அதிகாரத்தின்கீழ் ஆட்சி வந்தது. தாயுமானவரின் அழகிலும் அவரது புலமையிலும் தன்னையே மறந்த அரசி, தன் ஆசையைத் தீர்க்க தகாத செல்லுக்கு உட்படுமாறு தாயுமானவருக்கு உத்தரவிட்டாள். மேலும் அரச பதவியையும், செல்வங்களையும் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினாள். ஆனால் தாயுமானவரோ பொன், பொருள், அதிகாரப் பதவி, காமசுகம் என எதற்கும் ஆசைப்படாமல், அரசிக்கு தக்க அறிவுரைகளைக் கூறிவிட்டு, யாருக்கும் தெரியாமல் அரண்மனையைவிட்டு வெளியேறினார். உலக வாழ்க்கையை வெறுத்த தாயுமானவர் விராலிமலைக்குச் சென்று தங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு சில சித்தர்களின் தொடர்பு ஏற்பட்டது. பிறகு இராமேஸ்வரம் சென்றார். அங்குள்ள அம்பிகைமீது "மலைவளர் காதலி பதிகம்' என்னும் துதிப்பாடலைப் பாடினார்.

நீண்டநாட்களாக இராமேஸ்வரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் மழையில்லாமல் மக்கள் அவதிப்படுவதையறிந்து,

"சைவ சமயஞ் சமயமெனி லச்சமயத்

தெய்வம் பிறைசூடுந் தெய்வமெனி லைவரைவென்

றானந்த வின்பி லழுந்துவது முத்தியெனில்

வானங்காண் பெய்ம்மின் மழை'

என்று சிவபெருமானை வேண்டிப்பாட மழை பெய்தது. இதனால் ஊர் மக்கள் இவர்மீது அன்பு செலுத்த ஆரம்பித்தனர்.

இராமேஸ்வரத்தில் தனது தம்பி தங்கி யிருப்பதை அறிந்த சிவசிதம்பரம், தாயுமானவரை திருமறைக்காட்டிற்கு அழைத்துச்சென்றார்.

தாயுமானவரை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர் வற்புறுத்தினர்.

தன் குருவும் திருமணத்திற்குப் பிறகு துறவற தீட்சை தருவதாகக் கூறியிருப்பதால் அதற்கு சம்மதித்தார். மட்டுவார்குழலி என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டார். ஒரு ஆண் குழந்தை பிறக்க, அதற்கு கனகசபாபதி என்று பெயர் சூட்டி வளர்த்தார். சில ஆண்டுகளில் மனைவி இறந்துவிடவே, மகனைத் தன் அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு தனது குருவான மௌனகுரு சுவாமிகளைக் காண திருச்சிக்கு வந்தார். தாயுமானவரின் மனநிலையை அறிந்த குரு அவருக்கு மலைக்கோட்டை தட்சிணாமூர்த்தி சந்நிதியில் ஞானனோபதேசத்தைச் செய்து துறவற தீட்சையையும் வழங்கினார். அன்றுமுதல் இவர் தாயுமான சுவாமிகள் என அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் குருவுடன் தங்கிய பின்னர் அவரிடமிருந்து விடைபெற்று சிவத்தலங்களை தரிசனம் செய்து, பாடல்களைப் பாடினார்.

இராமநாதபுரத்தை அடைந்த தாயுமானவர் காட்டூரணி எனும் இடத்தில் புளிய மரத்தடியில் தவம் செய்யத் தொடங்கினார்.

அந்த இடம் தற்போது லட்சுமிபுரம் என அழைக்கப்படுகிறது. நீண்டநாட்கள் தவமிருந்து அங்கேயே சித்தியடைந்தார். தை மாதம், திங்கட்கிழமை, விசாக நட்சத்திரம், பௌர்ணமி திதியன்று சித்தியடைந்ததாக அவரது மாணவராகிய கோடிக்கரை ஞானியாரின் பாடல்மூலம் அறியப்படுகிறது.

எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தாயுமானவர் எழுதிய பாடல் திரட்டுகள்- சைவத் திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரக் கருத்துக்களின் ஞானப் பெட்டகம்.

om010719
இதையும் படியுங்கள்
Subscribe