கலியின் இறுதிக் காலம்! -ராமசுப்பு

/idhalgal/om/end-kali-ramasuppu

"43,20,000 மனித ஆண்டுகள் என்பது மனித வருடங்களான ஒரு சதுர்யுகமாகும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களில் இப்போது நடப்பது கலியுகம். வைவஸ்த மனுவினுடைய 27 நான்கு யுகங்கள் முடிந்து, இப்போது நடப்பது 28-ஆவது நான்கு யுகங்களின் கலியுகத்தின் சந்தி காலமாகும். கி.பி. 1997-க்குபிறகு கலியுகத்தில் 5098-ஆவது ஆண்டாக இப்போது கலியுகம் நடைபெறுகிறது. இந்த யுகத்தின் ஆரம்பத்தில் 36,000 ஆண்டுகள் சந்தி காலம் உண்டு என்று சொல்லப்படுகிறது. அந்தக் கணக்குப்படி கலியுகத்தின் காலம் இன்னும் 30,902 ஸௌரமான ஆண்டுகள் எஞ்சியுள்ளன. இவையெல்லாம் உத்தேசமான கணக்குகளே ஆகும்.

ff

ஒருசமயம் வேதவியாசர் கங்கையில் குளிக்கும்போதும், குளித்து நீரிலிருந்து மேலே எழுந்து வரும்போதும், "கலி சாது; சூத்திரன் சாது; பெண்கள் புண்ணியவதிகள்' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதைக்கேட்ட முனிவர்கள் அதன் பொருள் என்னவென்று கேட்டனர். அதற்கு வேத வியாசர், ""எந்தப் புண்ணியத்தை கிருதயுகத்தில் செய்தால் அது பத்து ஆண்டுகளில் பலன் தருமோ, அதுபோல திரேதாயுகத்தில் புண்ணியும் செய்தால் அது ஒரே ஆண்டில் பலன் தரும். அதுவே துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் பலன் கிடைக்கும். ஆனால் கலியுகத்

"43,20,000 மனித ஆண்டுகள் என்பது மனித வருடங்களான ஒரு சதுர்யுகமாகும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களில் இப்போது நடப்பது கலியுகம். வைவஸ்த மனுவினுடைய 27 நான்கு யுகங்கள் முடிந்து, இப்போது நடப்பது 28-ஆவது நான்கு யுகங்களின் கலியுகத்தின் சந்தி காலமாகும். கி.பி. 1997-க்குபிறகு கலியுகத்தில் 5098-ஆவது ஆண்டாக இப்போது கலியுகம் நடைபெறுகிறது. இந்த யுகத்தின் ஆரம்பத்தில் 36,000 ஆண்டுகள் சந்தி காலம் உண்டு என்று சொல்லப்படுகிறது. அந்தக் கணக்குப்படி கலியுகத்தின் காலம் இன்னும் 30,902 ஸௌரமான ஆண்டுகள் எஞ்சியுள்ளன. இவையெல்லாம் உத்தேசமான கணக்குகளே ஆகும்.

ff

ஒருசமயம் வேதவியாசர் கங்கையில் குளிக்கும்போதும், குளித்து நீரிலிருந்து மேலே எழுந்து வரும்போதும், "கலி சாது; சூத்திரன் சாது; பெண்கள் புண்ணியவதிகள்' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதைக்கேட்ட முனிவர்கள் அதன் பொருள் என்னவென்று கேட்டனர். அதற்கு வேத வியாசர், ""எந்தப் புண்ணியத்தை கிருதயுகத்தில் செய்தால் அது பத்து ஆண்டுகளில் பலன் தருமோ, அதுபோல திரேதாயுகத்தில் புண்ணியும் செய்தால் அது ஒரே ஆண்டில் பலன் தரும். அதுவே துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் பலன் கிடைக்கும். ஆனால் கலியுகத்திலோ ஒரேநாளில் கிடைத்துவிடும். ஏன் கலியுகத்தில் மட்டுமே ஒரே நாளில் கிடைக்குமென்றால், மக்களிடம் கடவுள் பக்தி குறைந்து காணப்படும். நாத்திகம் அதிகமாக இருக்கும். எனவே, அந்த காலகட்டத்தில் மக்கள் பக்தியுடன் பகவானின் பெயரை உச்சரித்தாலே போதும்; பலன் கைமேல் கிடைக்கும். கலியானவன் "ஹரே ராம ஹரேகிருஷ்ணா' என்ற ராமகிருஷ்ண நாமத்தைக் கேட்டாலே பயந்து ஓடிவிடுவான். கலி ஓடிவிட்டால் மக்களுக்கு நடப்பதெல்லாம் நல்லவையே. அதனால்தான் "கலி சாது' என்றேன்.

அடுத்து "சூத்திரர் சாது' என்றேன்.

அதாவது கலிகாலத்தில் பல அந்தணர்கள் வேதம் ஓதுவது, வேத ஆச்சாரப்படி நடப்பது போன்றவற்றைக் கைவிட்டு, அவர்களது தர்மரீதியாக இல்லாமல் அதர்மவழியில் நடப்பது போன்று வேத அத்யயணம்கூட செய்யாமல் இருப்பார்கள். இது அவர்களுக்கு மிகவும் மோசமானதாகும். நிறைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் சூத்திரர்களுக்கு வேத அத்யயணம், அக்னி, யாகம் முதலியவை ஏதுமில்லை. அவர்களுக்கு ஆசார, அனுஷ்டானங்கள் ஏதுமில்லை. எந்த நியமமும் இல்லாததால் கொடுத்துவைத்தவர்கள். இவர்கள் நியம, தர்ம, தேவ அனுஷ் டானம், ஆச்சாரங்களைப் பின்பற்றும் உத்தம அந்தணர்களுக்குப் பணிவிடை செய்தாலே போதும்; அந்த நிமிடமே கலி அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவான். அப்போது சூத்திரர்களுக்கு நல்லதே நடக்கும். ஆகவே சூத்திரர்களை சாது என்றேன்.

கடைசியாக பெண்களைப் புண்ணியவதிகள் என்றேன். அதாவது கலிகாலத்தில் பெண்களில் பலர் மோசமாக நடந்து கொள்வார்கள். கணவனை மதிக்கமாட்டார்கள். அவர்கள் இந்த கலிகாலத்தில் கணவருக்குப் பணிவிடை செய்தாலேபோதும்; நற்கதியை அடைந்துவிடுவார்கள். ஆகவே, பெண்கள் புண்ணியவதிகள் என்றேன்'' என்று வியாசர் விளக்கம் கூறியதாக விஷ்ணு புராணம் உரைக்கிறது.

இதேபோல கலியுகம் எப்படியெல்லாம் இருக்குமென்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.

கலியுகத்தில் மனிதரிடத்தில் ஆச்சார, சாஸ்திர நடவடிக்கைகள் இருக்காது. நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் முறையாக இருக்காது.

அக்னியில் செய்யத்தக்க தேவ வேள்வி களும் முறைப்பட நடக்காது. குரு- மாணவ ஒழுக்கமுறை இருக்காது. கல்வி, ஒழுக்க முடையவனுக்கு மதிப்பிருக்காது. அந்தணன் எந்த வழியானாலும் சாஸ்திரவிதிப்படி நடந்துகொள்ளமாட்டான். எவனுக்கு எது பிடிக்கிறதோ, அது எப்படி இருந்தாலும் அதுவே சாஸ்திர சம்பிரதாயமாகக் கருதப்படும். இன்னாருக்கு இன்ன ஆசிரமம்- அதாவது சம்பிரதாயம் என்பது இராது.

சூத்திரர்கள் பிராமணர்களைத் தங்களைப் போன்று சூத்திரராகவே எண்ணி, சாதாரண மனிதர்களாகக் கருதி, அவர்களை நன் மதிப்பிற்குள்ளவர்களாக மதித்து நடக்க மாட்டார்கள். அந்தணர்களும் அந்தண ரீதியாக இருக்கமாட்டார்கள்.

ஆட்சியாளர்கள் மக்களைக் காப்பதை விட்டு, அந்தவரி, இந்தவரி என்று எதை யாவது சொல்லி குடிமக்களின் பொருளை அபகரிப்பார்கள். எவனிடத்தில் அதிகம் பணம், செல்வம் இருக்கிறதோ அவனே அரசனாவான். எந்தத் தொழிலை யார் செய்யவேண்டுமென்று இல்லாமல், யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் பொருளுக்காக வெட்கமின்றி செய்து பிழைப்பார்கள். சிலர் சந்நியாசி வேஷம் தரித்து, பிச்சை எடுத்துண்டு, போலிப் பிழைப்பு பிழைப்பார்கள். (உதாரணமாக இன்றைய போலிச் சாமியார்களைக் குறிப்பிடலாம்). மனிதர்கள் பணத்திற்காக ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள். பேராசையால் பிடுங்கிக்கொண்டு ஓடுவார்கள்.

பெண்கள் தலைவிரி கோலமாகத் திரிவார்கள். மேலும் சிலர் பொருளில்லாத கணவனை விட்டுவிட்டு, பொருள் நிறைந்த வனைத் தேடிப்போவார்கள். தர்மமான திருமணங்கள் நடைபெறாது. தம்பதிகளுக்குள் நடந்துகொள்ளும் முறையும் நியதியும் தர்மமாக இருக்காது. பிரிந்துவிடுவதை வழக்கமாகக் கொள்வார்கள். பெரும்பாலும் மழை பொய்த்துவிடும். அதனால் எப்போது மழைபெய்யுமென்று வானத்தையே கண்காணிப்பார்கள். கலி வளர வளர மானிடர்கள் பஞ்சத்திலும், துன்பத்திலுமே தவிப்பார்கள். பெண்கள் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். முதியோர் களை அலட்சியப்படுத்தி, அவமதிப்பார்கள். ஆண்கள் நேர்மையின்றி சம்பாதிப்பார்கள். பணத்திற்காகக் கொலை செய்வது, இளம் பெண்களைக் கெடுப்பது போன்றவற்றையெல்லாம் சர்வசாதாரணமாக செய்வார்கள். ஆண்களிடம் புருஷ லட்சணமே இருக்காது.

தருமம் எத்தனைக்கெத்தனை இழிவானதாகிறதோ, அத்தனைக்கத்தனை கலி வளர்ந்துகொண்டே வருவான். ஆகையால் அதர்மம் மேலோங்கும். வேதவழியே இல்லாமல் போகும். மக்களின் ஆயுள் அற்பமாய் குறைந்து போகும். இளம் வயதினரே அநியாயமாக இறந்துபோவார்கள். பெண்கள் ஆறு, எழு வயதிலேயே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்கள் ஒன்பது வயதுக்குள் பிள்ளையை உண்டாக்கும் திறமையைப் பெற்றுவிடுவார்கள். பன்னிரண்டு வயதுக்குள்ளேயே நரை திரை விழுந்து வயோதிகர்களாகி விடுவார்கள். இருபது வயதுக்குமேல் பிழைத்திருக்கமாட்டார்கள். உயரம் குறைந்து விடுவார்கள். தெய்வ சிந்தனையே இருக்காது. "தெய்வங்கள் எதற்கு? வேதங்கள் எதற்கு? தண்ணீர்விட்டுக் கழுவுவதால் மட்டும் என்ன சுத்தம்' என்றெல்லாம் கேள்விகேட்டு ஆனந்தப் படுவார்கள். மனிதனிடம் அற்ப புத்தியே தலையோங்கும். தினந்தோறும் பாவத்தையே விரும்பிச் செய்வார்கள்.

இதுபோன்று இன்னும் ஏராளமான செய்திகள் மனதை அச்சுறுத்தும்படி விஷ்ணு புராணத்தில் கலிகாலம் பற்றி கூறப்பட்டுள்ளது. இன்று நாம் வாழும் வாழ்க்கையைவிட, எதிர் வரும் இந்தக் கலிகாலம் மிகமோசமானதாக இருக்கும்.

om010321
இதையும் படியுங்கள்
Subscribe