யானை புகா ஆலயம் எழுபது கண்ட நாயனார்!

/idhalgal/om/elephant-reaper

கோச்செங்கட் சோழ நாயனார் ஆராதனை-22-3-2019

மும்பை ராமகிருஷ்ணன்

ம்பாளுக்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. புரட்டாசி மாத நவராத்திரியையே யாவரும் கொண்டாடுவர். மற்ற மூன்றை ஸ்ரீவித்யா உபாசகர்கள் வழிபடுவர்.

சிவனுக்கு ஒரே இரவு மகாசிவராத்திரி- மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவு கொண்டாடப்படுகிறது. கோவில்களில் இரவு முழுவதும் ஸ்ரீருத்ரம் சொல்லி நான்கு கால அபிஷேகம் நடைபெறும். சிவபக்தர்களுக்கு மகாசிவராத்திரி வெகு உன்னத வழிபாட்டு இரவு.

யஜுர் வேதத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படும் தைத்ரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நான்காவது காண்டத்தில் உள்ளது ருத்ரம். இதன் இதயஸ்தானம் நமசிவாய எனும் பஞ்சாட்சரமே. இது ஜபம், அபிஷேகம், பூஜை, ஹோமம் எனப் பலவிதமாகப் பூஜிக்கப்படுகிறது. "பஞ்சாட்சரம் ஜபித்தால் பஞ்சம் தீரும்' என்பர். "சிவ தஞ்சமடைந்தால் அஞ்சா நெஞ்சம் படைப்பர்; வஞ்சம் செய்யார்' என்பர்.

ஸ்வசாகோபநிஷத் கீதா விஷ்ணோ:

நாம ஸஹஸ்ரகம் ருத்ரஸ்ச பௌருஷம்

ஸுக்தம் நித்யம் ஆவர்த்தயேத் யத:

என்றொரு சுலோகம் உண்டு. உபநிடதம், கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம், ருத்ரம், புருஷஸுக்தம் ஆகிய ஐந்தும் புத்திமானால் தினமும் திரும்பத்திரும்ப ஜபிக்கப்பட வேண்டுமாம். நூற்றுக்கணக்கான வடிவங்களில் ருத்ரன் போற்றப்படுவதால் இதற்கு "சதருத்ரீயம்' எனப் பெயர். ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் அது எவ்வாறு வளர்ந்து பயன்தருகிறதோ, அதுபோல் ருத்ரஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தியடைகின்றனர் என சூத சம்ஹிதை கூறுகிற

கோச்செங்கட் சோழ நாயனார் ஆராதனை-22-3-2019

மும்பை ராமகிருஷ்ணன்

ம்பாளுக்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. புரட்டாசி மாத நவராத்திரியையே யாவரும் கொண்டாடுவர். மற்ற மூன்றை ஸ்ரீவித்யா உபாசகர்கள் வழிபடுவர்.

சிவனுக்கு ஒரே இரவு மகாசிவராத்திரி- மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவு கொண்டாடப்படுகிறது. கோவில்களில் இரவு முழுவதும் ஸ்ரீருத்ரம் சொல்லி நான்கு கால அபிஷேகம் நடைபெறும். சிவபக்தர்களுக்கு மகாசிவராத்திரி வெகு உன்னத வழிபாட்டு இரவு.

யஜுர் வேதத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படும் தைத்ரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நான்காவது காண்டத்தில் உள்ளது ருத்ரம். இதன் இதயஸ்தானம் நமசிவாய எனும் பஞ்சாட்சரமே. இது ஜபம், அபிஷேகம், பூஜை, ஹோமம் எனப் பலவிதமாகப் பூஜிக்கப்படுகிறது. "பஞ்சாட்சரம் ஜபித்தால் பஞ்சம் தீரும்' என்பர். "சிவ தஞ்சமடைந்தால் அஞ்சா நெஞ்சம் படைப்பர்; வஞ்சம் செய்யார்' என்பர்.

ஸ்வசாகோபநிஷத் கீதா விஷ்ணோ:

நாம ஸஹஸ்ரகம் ருத்ரஸ்ச பௌருஷம்

ஸுக்தம் நித்யம் ஆவர்த்தயேத் யத:

என்றொரு சுலோகம் உண்டு. உபநிடதம், கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம், ருத்ரம், புருஷஸுக்தம் ஆகிய ஐந்தும் புத்திமானால் தினமும் திரும்பத்திரும்ப ஜபிக்கப்பட வேண்டுமாம். நூற்றுக்கணக்கான வடிவங்களில் ருத்ரன் போற்றப்படுவதால் இதற்கு "சதருத்ரீயம்' எனப் பெயர். ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் அது எவ்வாறு வளர்ந்து பயன்தருகிறதோ, அதுபோல் ருத்ரஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தியடைகின்றனர் என சூத சம்ஹிதை கூறுகிறது. மாதப் பிரதோஷ காலத்திலும் ருத்ரம், சமகம் கூறி அபிஷேகம் செய்யப் படுகிறது.

ருத்ர பாராயணம் சமகப் பாராயணத் துடன் செய்யப்படுகிறது. இது ஐந்து ரூபம் என்பர்.

ருத்ரம், பின் சமகம்- சாதாரண ரூபம்.

ருத்ரம் (11 அனுவாகம்), சமகத்தின் முதல் பாகம் என பதினோரு முறை. ஒவ்வொரு முறையும் ஒரு சமக பாகம் என்பது ருத்ர ஏகாதசினி.

11 ருத்ர ஏகாதசினி- லகு ருத்ரம்.

11 லகு ருத்ரம்- ஒரு மகாருத்ரம்.

11 மகாருத்ரம்- ஒரு அதிருத்ரம்.

(11 நாட்கள், 121 பேருடன் செய்யவேண்டும்).

ருத்ர ஜபத்தில் ஸ்வரம் (உச்சரிப்பு- ஓசை) மிக அவசியம். நன்கு கற்றே உச்சரிக்க வேண்டும். உச்சரிப்பு மாறினால் பொருள் வேறுபடும்; விபரீதப் பலன் உண்டாகும்.

(நாரதரே ஒரு வேள்வி செய்யும்போது உச்சரிப்பு மாறியதால், ஹோமகுண்டத்தி லிருந்து சிறிய ஆடு கிளம்பி, அது பெரியதாகி துன்புறுத்தியது. நாரதர் வேண்ட, முருகன் அதை அடக்கித் தன் முதல் வாகன மாக்கினார்.)

இக்காலங்களில் பிரதோஷ சமயம் ருத்ராபிஷேகத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொள்கிறார்கள். தேவார- திருவாசகம் பஜிக்கப்படுகின்றன.

ருத்ரன் என்றாலே கோபமானவராயிற்றே- உக்ரமானவராயிற்றே என்று எண்ணுவர். ஆயினும் அவர் சிவ சங்கரர்- மங்களமே செய்பவர். (சம் கரோதி இதி சங்கர: மங்களமே செய்பவன் சங்கரன்). எனவேதான் அவருக்கு "ஆசுதோஷி' என்று பெயர். அதாவது, துதித்தால் வெகுசீக்கிரம் மகிழ்ந்து அருள்புரிபவர் என்று பொருள். அறுபத்து மூன்று நாயன்மார்கள் சரிதம் பார்த்தால் சிவனின் கருணை குணம் புரியும்.

சிவ பஞ்சபூதத் தலங்கள் என்போம்.

காஞ்சிபுரம்- ஏகாம்பரநாதர்- மண்.

அருணாசலம்- அருணாசலேஸ்வரர்- நெருப்பு.

காளஹஸ்தி- காளஹஸ்தீசர்- வாயு (காற்று.)

சிதம்பரம்- நடராஜர்- ஆகாயம்.

திருவானைக்கா- ஜம்புகேஸ்வரர்- நீர்.

nayanar

திருவானைக்கா தலத்தில் சிவலிங்கக் கருவறையில் நீர் சுரக்கும். சிவன் ஜம்பு (நாவல்) மரத்தின்கீழ் உள்ளார். ஆற்றில் மிதந்துவந்த நாவல் பழத்தை சம்பு முனிவர் உண்டார். அப்பழம் அவர் வயிற்றில் முளைத்து மண்டையைப் பிளந்து மரமாக வளர்ந்தோங் கியது. அவர் சிவபெருமானை வேண்ட, அவரருகேயே (அதனருகிலேயே) இடம் கொண்டார்.

அந்தச் சிவனை ஒரு வெள்ளை நிற யானை பூவும் நீரும் கொணர்ந்து பூசித்தது. அங்கிருந்த சிலந்தி சிவலிங்கம்மீது மரச்சருகு விழாதிருக்கத் தன் வாய் நூலால் வலை விரித்தது. யானை அதனை அழித்து நீரும் பூவும் இட்டது.

சினம் கொண்ட சிலந்தி யானை யின் துதிக்கையில் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாத யானை துதிக்கையைப் பாறையில் அடிக்க, இரண்டும் இறந்தன. சிவத்தொண்டு ஆர்வம்!

யானை சிவனுக்குச் செய்தது நோன்பு (கிரியை) என வரம் பெற்றது.

சிலந்தி செய்தது சீலம் (சரியை) என்று அது சோழர் குலத்து அரசனாகப் பிறந்தது. அந்த அரசனே கோச்செங்கட் சோழன்.

அவன் முன் நினைவு காரணமாக திருவானைக்கா கோவிலுக்குப் பல பணிகள் செய்தான். தான் கட்டும் கோவில்களில் யானை புகக்கூடாதென்று படிகள் வைத்து மாடக்கோவில்களாக அமைத்தான். அவ்வாறு சுமார் எழுபது மாடக்கோவில்கள் கட்டி வழிபட்டுள்ளான். என்னே ஆழ்ந்த சிவபக்தி!

திருவானைக்காவில் தேவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி. சிவனைப் பூஜிப்பவள். மதிய சிவபூஜையின்போது அம்பாளே பூஜிப்பதாக ஐதீகம். எனவே அர்ச்சகர் புடவை, கிரீடம் அணிந்து பூஜைசெய்வது ஒரு தனிச் சிறப்பு. ஆக, மற்ற சிவன் கோவில்களில் நடக்கும் பங்குனி உத்திர கல்யாண உற்சவம் இங்கு நடத்தப்படுவதில்லை.

ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வந்தபோது, தேவி உக்ரமாக இருந்தாளாம். எனவே, தேவி எதிரே பெரிய கணபதியைப் பிரதிஷ்டை செய்தார். அவரை இன்றும் கோவிலில் காணலாம். "தன்பிள்ளை'யைக் கண்டால் கோபம் தணிந்து ஆனந்தம் பெருகுமே! மேலும், அம்பாள் காதுகளில், ஸ்ரீசக்ரம்- சிவசக்ரம் பதித்தார். இதுவும் ஒரு நூதனம். (காஞ்சியில் காமாட்சியின் உக்ரம் தணிக்க அம்பாளுக்கு எதிரே தனியே ஸ்ரீசக்ரம் பதித்தார்).

திருவானைக்காவில் மதில்சுவர் மிகவும் உயர்ந்தது. அதற்கு "நீறிட்டான் மதில்' என்று பெயர். ஏன்? சிவபெருமானே சித்தராக எழுந்தருளி, ஆலயத் திருப் பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கூலியாக விபூதி தர, அதுவே அவரவர் வேலையின் தகுதிக்கேற்ப பணமானதாம்.

உறையூர் சோழ மன்னன் கழுத்தில் முத்தாரம் அணிந்து காவிரியில் நீராடினான்.

அப்போது அவனது முத்தாரம் காவிரியில் விழுந்துவிட்டது. சிவபக்தனான அவன் "நீரினின்றடி போற்றி, நின்னைக் கொள்ளென' என்று வேண்டிவிட்டு ஆலயத்திற்கு வந்தான். அங்கு அவன் ஈசனை வணங்கியபோது, அர்ச்சகர் சிவலிங்கத்துக்கு காவிரி நீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீரிலிருந்து முத்துமாலை வந்து சிவனது திருமேனியில் விழுந்தது!

கச்சியப்ப முனிவர் திருவானைக்கா புராணம் பாடியுள்ளார். இத்தல அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால், சாதாரண ஆலயப் பரிசாரகர் காளமேகப் புலவரானது அனைவரும் அறிந்ததே.

ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், "அகிலாண்டேஸ் வர்யை நமஸ்தே; அணிமாதி ஸித்தீஸ்வர்யை நமஸ்தே' என்று ஆரபி ராகத்தில் பாடியுள்ளார். அனுபல்லவியில் "நித்ய முக்தஸ்வரூபிணி' என்றும், சரணத்தில் ஸ்ரீசக்ர வர்ணனை மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்குப் பாடியுள்ளதும் ஒரு பொக்கிஷமே!

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் இச்சிவனைப் பாடியுள்ளனர். ஒருசில ரசிப்போமா-

"துன்பமின்றி துயரின்றி என்று நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

என் பொன் ஈசன் இறைவன் என்று உருகுவார்க்கு

அன்பனாயிடும் ஆணைக்கா அண்ணலே!

"நேசமாகி நினைமட நெஞ்சமே

நாச மாயாகுல நலஞ்சுற்றங்கள்

பாசம் அற்றும் பராபர ஆனந்த

ஆசையுற்றிடும் ஆணைக்கா அண்ணலே!'

என்று பாடுகிறார் அப்பர்.

"செங்கட்பெயர் கொண்டவன் செம்பியர் கோன்

அங்கட்கருணை பெரிதாய் அவனே

வெங்கன்விடையாய் எம்வெண் நாவலுளாய்

அங்கத்து அயர்வாவினன் ஆயிழையே'

எனப் புகழ்கிறார் சம்பந்தர்.

சுந்தரர் இவ்வாலயத் திருப்பணி செய்த கோச்செங்கட்சோழனை "தென்னவனாய் உலகாண்ட செங்கனார்க்கு அடியேன்' எனப் படுவார்.

சேக்கிழார் பெரியபுராணத்தில் இவரைப்பற்றி 4197- 4214 பாடல்களில் பாடி யுள்ளார். கோச்செங்கணாரின் ஆராதனை தினம் மாசி மாதசதய நட்சத்திரம். இவ்வருடம் 22-3-2019-ல் வருகிறது. இறையடியார் பாதம் பணிந்து சிவனருள் பெறுவோம்.

om010319
இதையும் படியுங்கள்
Subscribe