Advertisment

விஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும் ஏகாதசி விரதம்! - ரங்கநாயகி

/idhalgal/om/ekadashi-fast-brings-complete-blessings-vishnu-ranganayaki

காயத்ரிக்குமேல் மந்திரமில்லை. தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை. காசிக்கு மேலே தீர்த்தமுமில்லை. ஏகாதசிக்கு சமமானமாக விரதமெதுவுமில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மற்றதெற்கெல்லாம் மேலே ஒன்றுமில்லை என முடிகிறது. அவற்றுக்கு சமமாக ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்றாகிறது. ஆனால் விரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு மேலே மட்டுமில்லாமல், அதற்கு சமமாகக்கூட விரதம் எதுவுமில்லை என மிகச் சிறப் பித்து கூறப்பட்டுள்ளது.

ஏகாதசி ஏற்பட்ட காரணம் விஷ்ணு நித்திரை செய்து கொண்டிருந்தபோது, உலகை இம்சித்துக் கொண்டிருந்த ஒரு அரக் கனை கொல்வதற்காக, விஷ்ணுவின் சரீரத்திலிருந்த ஒரு சக்தி வெளிவந்து சம்ஹாரம் செய்துவிட்டுவர, அந்த சக்திக்கு, ஏகாதசி என பேர் கொடுத்து, ஏகாதசி விரதத்தை ஏற்படுத்தினார் என ஒரு புராணக் கதை உள்ளது.

பால் கடலை கடைந்து, அமிருதம் எடுத்துக் கொடுத்த நாளே, ஏகாதசி என்கின்றனர். ஆனாலும், அன்று முதலில் காலகூட விஷம் உண்டாக, அதனை பரமேஸ்வரன் அதனை விழுங்கி, தன் தொண்டையில் நிறுத்திக்கொண்டார். அதனால்தான் ஏகாதசியன்று யாரும் சாப்பிடக்கூடாது என்கிற நியமம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

vv

ஏகாதசியின் பெயர்கள்

1. மார்கழி

1. மார்கழி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு உத்பத்தி ஏகாதசி என்று பெயர்.

2. மார்கழி சுக்லபட்ச ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்கின்றனர். அன்று அம்ருதம் கடைந்தெடுத்தும், மேலும் கிருஷ்ண பரமாத்மா கிதோபதேசம் என்று உபநிஷத்துக் களை கடைந்தெடுத்து கொடுத்ததும் அன்றுதான். அதனால் கீதா ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.

3. தை கிருஷ்ண பட்சத்தில் வருவது- ஸபலா ஏகாதசி.

4. தை சுக்ல பட்சத்தில் வருவது- புத்ரதா ஏகாதசி.

5. மாசி கிருஷ்ண பட்சம்- ஷட்திலா ஏகாதசி.

6. மாசி சுக்ல பட்சம்- ஜயா ஏகாதசி.

7. பங்குனி, கிருஷ்ண பட்சம்- விஜயா.

பங்குனி, சுக்ல பட்சம்- ஆமலகி.

8. சித்திரை, கிருஷ்ண பட்சம்- பாப மோசனிகா.

சித்திரை, சுக்ல பட்சம்- காமதா.

9. வைகாசி கிருஷ்ண பட்சம்- வ்ருதினி.

வைகாசி, சுக்ல பட்சம்- மோகினி.

10. ஆனி கிருஷ்ண பட்சம்- அபரா.

ஆனி சுக்ல பட்சம்- நிர்ஜலா.

இந்த நிர்ஜலா ஏகாதசியன்றுதான் பீமன் வருசத்தில் ஒருமுறை ஏகாதசி விரதமிருப்பார்.

11. ஆடி கிருஷ்ண பட்சம்- யோகினி.

ஆடி சுக்ல பட்சம்- சயினி.

இந்த சயினி ஏகாதசியில் பகவான் விஷ்ணு சயனிக்க ஆரம்பிப்பார்.

12. ஆவணி கிருஷ்ண பட்சம்- சாமிகா.

ஆவணி சுக்ல பட்சம்- புத்ரதா.

13. புரட்டாசி கிருஷ்ண பட்சம்- அஜா.

புரட்டாசி சுக்ல பட்சம்- பத்மநாபா.

14. ஐப்பசி கிருஷ்ண பட்சம்- இந்திரா.

ஐப்பசி சுக்ல பட்சம்- பாபாங்குசா.

15. கார்த்திகை கிருஷ்ண பட்சம்- ரமா.

கார்த்திகை சுக்ல பட்சம்- ப்ரபோதினி.

Advertisment

இந்த கார்த்திகை சுக்ல பட்ச ஏகாதசி யில் விஷ்ணு சயனித்திலிருந்து விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்கு ப்ரபோதினி என்று பெயர்.

அதிகப்படியாக வரும் ஏகாதசிக்கு கமலா என்று பெயர்.

இப்படிப்பட்ட ஏகாதசியன்று, உணவு உண்ணாமல் உபவாசம் இருக்கவேண்டும். பொதுவாக மக்கள் விரதமென்றால் பலகாரங் கள் சாப்பிடலாம் என்ற நியதி கொண்டி ருக்கிறார்கள். இட்லி- தோசை என சாப்பிடு கிறார்கள். ஆனால் பல (ஆ) ஹாரம் என்ற கூற்றுப்படி விரதமன்று முழுபட்டினி அல்லது வெறு பழங்கள் சாப்பிடலாம் என்றுதான் அர்த்தம்.

ஏகாதசியன்று, முழு உபவாசம் இருந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல; ஆத்மா சம்பந்தமாகவும் நல்லது ஏற்பட்டு, விஷ்ணுவின் பூரண அருளைப் பெறலாம்.

விஷ்ணுவின் அனுக்கிரகம் என்றால் மகா லட்சுமி தாயாரின் அருளும் சேர்ந்ததுதான்.

13-1-2025

ஆரூத்ரா தரிசனம்: கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் பிறந் தார் எனக்கொண்டாடுகிறோம். இராமர் புனர் பூச நட்சத்திரம், நவமி திதியில் பிறந்தார் என விரதம் இருக்கிறோம். முருகர் விசாக நட்சத் திரத்தில் பிறந்தார். அப்போது முருகருக்கு சிறப்பு வழிபாடு செய்கிறோம். ஆனால் சிவனின் பிறந்தநாள், திதி, நட்சத்திரம் எது எனக் கேட்டால், அது யாருக்கும் தெரியாது என்றே கூறவேண்டும். அதனால் சிவனை ஆதி அந்தமில்லா இறைவன் என்கின்றனர் போலும்.

மார்கழி திருவாதிரை நட்சத்திரமன்று, சிவபெருமான், வியகரபாதா என்ற முனிவருக் கும் பதஞ்சலி முனிவருக்கும், அவர்களின் தவ நோக்கத்தை பூர்த்திசெய்யும் பொருட்டு, நடன கோலத்தில் காட்சியளித்தார். இதுவே ஆரூத்ரா தரிசனமாகும். திருவாதிரையன்று சிவபெருமான் நடனம் ஆடுவது பாரம்பர்ய மான நிகழ்வுதான். இந்த நாட்டியத்தில் பலவகை உள்ளது. தாண்டவம் லாஸ்யம் என்று உள்ளது. ஆண்கள் கம்பீரமாக, பௌருஷமாக ஆடுவது தாண்டவம். பெண்கள், லலிதமாக ஆடுவது லாஸ்யம். பரமேஸ்வரன் ஆடுவதை, தாண்டவம், சிவ தாண்டவம், நடராஜ தாண்டவம், ப்ரளய தாண்டவம், ஊழித் தாண்டவம் என்று கூறுகிறோம்.

அம்பிகை ஆடுவது லாஸ்யம். அதனால்தான், அம்பாளின் லலிதா சகஸ்ரநாமத்தில், லாஸ்யப்ரியா, லயகரி என்ற பெயர்கள் வருகிறது.

பிரதோஷ நாட்டியத்தில் அம்பிகை, சிவ தாண்டவத்தை, நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆடுவதை, வெறுமே பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். இது ஆனந்த தாண்டவம் ஆகும்.

கலபப் பிரளயத்தில், சிவபெருமான் எல்லாவற்றையும் தன்னில் ஒடுக்கி, ஸம்ஹார தாண்டவம் ஆடும்போது, அம்பாள் மட்டும், அழிந்து போகாமல், பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதனை, லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "மகேஸ்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷினி' எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. பிரதோஷகால நடராஜ தாண்டவத்தை பதஞ்சலி முனிவர், சம்பு நடன அஷ்டகம் என்று வர்ணித்திருக்கிறார்.

இவர் ஆதிசேஷன் அவதாரம். இந்த அஷ்டக ச்லோகங்களின் சொல்லமைப்பாலும், கதியாலும், சொல்கிறபோதே, எதிரே நாட்டி யம் நடக்கிறது போன்று பிரமை தட்டுமாம். இதை பிரதோஷ பூஜையில் ந்ருத்யோபசாரம் பண்ண வேண்டிய இடத்தில், சந்திர மௌலீஸ்வரருக்கு நாட்டியமாக அர்ப் பணிக்க வேண்டுமென்று, மகா பெரியவர் ஆசைப்பட்டாராம்.

ஆக திருவாதிரையன்று சிவதாண்டவம் ரொம்ப முக்கிய நிகழ்வாகும். அன்று விரத மிருந்து, ஈசனை வழிபட, தம்பதிகள் ஒற்றுமை யும், தாலி பாக்கிய ஸ்தரமும் கிடைக்கும்.

அன்றைய பிரசாதமாக களியும், பல காய்கறி கறியும் செய்து படைப்பர்.

13-1-2025 அன்று ஆரூத்ரா தரிசன திருநாள் ஆகும். ஈசனை வணங்க அம்பாள் நலம் அருள்வாள்.

om010125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe