"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.'
ஒரு மனிதனின் நல்லகுணங்கள், அவனிடமுள்ள குற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, அதில் எது மிகுதியாக உள்ளதோ அதைவைத்து முடிவெடுங்கள் என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்க்கை நமக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கக் காரணம், அதற்குள் ளிருக்கும் அதிர்ச்சிக்கான அதீத வாய்ப்பு கள்தான். வேதங்களின் சாரம் என மதிக்கப் படுபவை உபநிடதங்கள். அவற்றுள் மகிதாச ஐதரேயர் என்னும் முனிவரால் அருளப்பட்டதுதான் ஐதரேய உபநிடதம்.
அதில், "பிரம்மன் உயிரினங்களைப் படைத்தவுடன் அவை கடலில் விழுந்தன' என்று குறிப்பிடுகிறார். கடலி-ருந்து தான் உயிரினங்கள் தோன்றின என்னும் விளக்கத்தைக் கடந்து இதற்கு உரை எழுதும் போது, "இங்கே கடல் என்பது வாழ்க்கைக் கடல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை எனும் கடலைக் கடக்க நமது தோணியின் துடுப்புகளாக நேர்மை, தானம், கருணை, புலனடக்கம், பொறுமை போன்ற குணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கை அதன் இயல்பில் அபாயங்கள் நிறைத்ததாக இருக்கலாம். ஆனால் மனிதன் அதனைப் பாதுகாப்பாகப் பயன் படுத்தி பிறப்பற்ற நிலையை அடையலாம் என்று சங்க இலக்கியம் சொல்கிறது.
அப்படி பிறப்பற்ற நிலையை அடைவதற்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை விரும்பி, ஏதாவது ஒருமுறையில் பூஜை செய்கிறார்கள். நாம் செய்யும் பூஜை எதிர்பார்த்த பலனைத் தருகிறதா? இல்லையா என்னும் எண்ணம் பலருக்குண்டு. "தெய்வம் உன்நின்று உணர்த்தும்' என்பதை உணர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியும்.
பீமசந்திர சட்டர்ஜி என்னும் பொறியாளர் தனது மனைவி, மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவருடைய அண்ணன் சாளக்கிராமம் ஒன்றைக் கொடுத்து, "தம்பி, இது மகாவிஷ்ணுவின் வடிவம் என்பார்கள். இதைவைத்து ஒருமாதகாலம் தொடர்ந்து வழிபாடு செய்துவா. உனக்கு நல்லது நடக்கும்; ஒரு கெடுதலும் உண்டாகாது'' என்றார்.
அண்ணன் சொன்னதை அப்படியே ஏற்ற பொறியாளர் சாளக்கிராமப் பூஜைசெய்ய ஆரம்பித்தார். முப்பத்தாவது நாள் அவரது மனைவி, "ஒரு மாதகாலமாக தொடர்ந்து பூஜை செய்துவருகிறீர்கள். ஆனால் எந்தவொரு நன்மையும் நடந்ததாகத் தெரியவில்லையே!'' என்று கேட்டார்.
பொறியாளர் பொறுமையாக பதில் சொல்லத் தொடங்கினார். "அம்மா, நீ நினைப் பதைப்போல ஒரு நன்மையும் ஏற்படாவிட்டா லும், நான் பூஜை செய்வதைப் பார்த்து "நாமும் பூஜை செய்யவேண்டும்' என்னும் எண்ணம் நம் பிள்ளைகளுக்குத் தோன்றுமல்லவா? "மாதா, பிதா செய்தது மக்களுக்கு' என்பார்களே! மேலும், நமக்குத் தெரியாமல் ஏதேனும் ஒரு பெரிய ஆபத்து நேர இருந்திருக்கலாம்.
அதை நமக்குத் தெரியாமல் பகவான் தடுத்து நிறுத்தியிருப்பார். இதை யார் அறிவார்கள்!''
இந்த நிலையில் பொறியாளரின் இரு மகன்கள், "அப்பா, அண்ணனுடன் சேர்ந்து கங்கையில் நீராடப்போகிறோம். அனுமதி தாருங்கள்'' என்று கேட்டனர். பொறியாளருக்கு தன் பிள்ளைகளை கங்கையில் நீராட அனுப்பு வதில் விருப்பமில்லை. "பிறகு பார்த்துக் கொள்வோம்'' என்றார்.
அப்போது அவரது உதவியாளர், "ஐயா, உங்கள் பிள்ளைகளுடன் நானும் செல்கிறேன். அவர்களை பத்திரமாக அழைத்துக் கொண்டு திரும்புகிறேன். நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்'' என்றார். பொறியாளரும் ஒருவாறு அனுமதியளித்தார்
"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.'
ஒரு மனிதனின் நல்லகுணங்கள், அவனிடமுள்ள குற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, அதில் எது மிகுதியாக உள்ளதோ அதைவைத்து முடிவெடுங்கள் என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்க்கை நமக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கக் காரணம், அதற்குள் ளிருக்கும் அதிர்ச்சிக்கான அதீத வாய்ப்பு கள்தான். வேதங்களின் சாரம் என மதிக்கப் படுபவை உபநிடதங்கள். அவற்றுள் மகிதாச ஐதரேயர் என்னும் முனிவரால் அருளப்பட்டதுதான் ஐதரேய உபநிடதம்.
அதில், "பிரம்மன் உயிரினங்களைப் படைத்தவுடன் அவை கடலில் விழுந்தன' என்று குறிப்பிடுகிறார். கடலி-ருந்து தான் உயிரினங்கள் தோன்றின என்னும் விளக்கத்தைக் கடந்து இதற்கு உரை எழுதும் போது, "இங்கே கடல் என்பது வாழ்க்கைக் கடல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை எனும் கடலைக் கடக்க நமது தோணியின் துடுப்புகளாக நேர்மை, தானம், கருணை, புலனடக்கம், பொறுமை போன்ற குணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கை அதன் இயல்பில் அபாயங்கள் நிறைத்ததாக இருக்கலாம். ஆனால் மனிதன் அதனைப் பாதுகாப்பாகப் பயன் படுத்தி பிறப்பற்ற நிலையை அடையலாம் என்று சங்க இலக்கியம் சொல்கிறது.
அப்படி பிறப்பற்ற நிலையை அடைவதற்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை விரும்பி, ஏதாவது ஒருமுறையில் பூஜை செய்கிறார்கள். நாம் செய்யும் பூஜை எதிர்பார்த்த பலனைத் தருகிறதா? இல்லையா என்னும் எண்ணம் பலருக்குண்டு. "தெய்வம் உன்நின்று உணர்த்தும்' என்பதை உணர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியும்.
பீமசந்திர சட்டர்ஜி என்னும் பொறியாளர் தனது மனைவி, மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவருடைய அண்ணன் சாளக்கிராமம் ஒன்றைக் கொடுத்து, "தம்பி, இது மகாவிஷ்ணுவின் வடிவம் என்பார்கள். இதைவைத்து ஒருமாதகாலம் தொடர்ந்து வழிபாடு செய்துவா. உனக்கு நல்லது நடக்கும்; ஒரு கெடுதலும் உண்டாகாது'' என்றார்.
அண்ணன் சொன்னதை அப்படியே ஏற்ற பொறியாளர் சாளக்கிராமப் பூஜைசெய்ய ஆரம்பித்தார். முப்பத்தாவது நாள் அவரது மனைவி, "ஒரு மாதகாலமாக தொடர்ந்து பூஜை செய்துவருகிறீர்கள். ஆனால் எந்தவொரு நன்மையும் நடந்ததாகத் தெரியவில்லையே!'' என்று கேட்டார்.
பொறியாளர் பொறுமையாக பதில் சொல்லத் தொடங்கினார். "அம்மா, நீ நினைப் பதைப்போல ஒரு நன்மையும் ஏற்படாவிட்டா லும், நான் பூஜை செய்வதைப் பார்த்து "நாமும் பூஜை செய்யவேண்டும்' என்னும் எண்ணம் நம் பிள்ளைகளுக்குத் தோன்றுமல்லவா? "மாதா, பிதா செய்தது மக்களுக்கு' என்பார்களே! மேலும், நமக்குத் தெரியாமல் ஏதேனும் ஒரு பெரிய ஆபத்து நேர இருந்திருக்கலாம்.
அதை நமக்குத் தெரியாமல் பகவான் தடுத்து நிறுத்தியிருப்பார். இதை யார் அறிவார்கள்!''
இந்த நிலையில் பொறியாளரின் இரு மகன்கள், "அப்பா, அண்ணனுடன் சேர்ந்து கங்கையில் நீராடப்போகிறோம். அனுமதி தாருங்கள்'' என்று கேட்டனர். பொறியாளருக்கு தன் பிள்ளைகளை கங்கையில் நீராட அனுப்பு வதில் விருப்பமில்லை. "பிறகு பார்த்துக் கொள்வோம்'' என்றார்.
அப்போது அவரது உதவியாளர், "ஐயா, உங்கள் பிள்ளைகளுடன் நானும் செல்கிறேன். அவர்களை பத்திரமாக அழைத்துக் கொண்டு திரும்புகிறேன். நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்'' என்றார். பொறியாளரும் ஒருவாறு அனுமதியளித்தார்.
பொறியாளர் பூஜை முடித்து எழுந்த நேரம், கங்கைக்கு நீராடப் போயிருந்த நால்வரும் உடல் முழுவதும் புழுதி படிந்து வந்தார்கள்.
அவர்களை அக்கோலத்தில் பார்த்த பொறியாளர் "என்ன ஆயிற்று?'' பதட்டத்துடன் என்று கேட்டார்.
உதவியாளர், "கங்கையில் நீராடிவிட்டு நால்வருமாகத் திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் கண்ணெதிரில் ஒரு நான்கு மாடிக் கட்டடம் அப்படியே சரிந்து விழுந்தது. நாங்கள் ஓரடி முன்னால் போயிருந்தால்கூட அதில் சிக்கி இறந்துபோயிருப்போம். அரை விநாடி தாமதித்ததால் உயிர் பிழைத்தோம். எங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு காளை, ஒரு குதிரை, மூன்று ஆட்கள் ஆகிய ஐந்து ஜீவன்கள் உயிரிழந்துவிட்டன'' என்று உதவியாளர் கூறியதைக் கேட்ட பொறியாளர் மெய்சிலிர்த்து, பூஜை செய்யப் பட்ட சாளக்கிராமத்தை விழுந்து வணங்கி னார். அருகிலிருந்த மனைவியிடம், "அம்மா, காலையில் பூஜைக்கு முன்னால் கேட்டாயே... ஒரு மாதகாலம் சாளக்கிராமப் பூஜை செய்தும் ஒரு பலனும் தெரியவில்லையே என்று வருந்தினாயே? நம்முடைய மூன்று பிள்ளைகளும் உதவியாளரும் உயிர் பிழைத்தார்களே... இது போதாதா? வேறென்ன வேண்டும்'' என்றார். "உண்மை உணர்ந்த அவரது மனைவி விழுந்து வணங்கி சாளக்கிராமப் பெருமாளுக்கு நன்றி செலுத்தினார்.
1919-ஆம் ஆண்டில் நடந்த உண்மை நிகழ்விது. அன்றைய காலகட்டமானா லும் சரி; இந்த காலகட்டத் திலும் சரி- யாருக்கு எப்பொழுது எப்படிப்பட்ட பலன் தரவேண்டுமென்று தெய்வத்திற்குத் தெரியும்.
அத்தகைய தெய்வம் குடிகொண்டுள்ளதொரு திருத்தலம்தான் மேலத்திருப்பூந்துருத்தி ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.
இறைவி: சௌந்தர நாயகி, அழகாலமர்த்த நாயகி. விசேஷமூர்த்தி: ஸ்ரீ வீணாதர தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி.
புராணப் பெயர்: திருப்பூந்துருத்தி
ஊர்: மேலத்திருப்பூந்துருத்தி.
தலவிருட்சம்: வில்வமரம்.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காசிப தீர்த்தம், கங்கை தீர்த்தம், காவிரி தீர்த்தம், அக்னி தீர்த்தம்.
சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில் 74-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 11-ஆவது தலமாகவும் திகழ்கின்ற இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் அன்றா டப் பூஜைகள் முறைப்படி நடக்கின்ற தலம். அப்பரால் பாடப்பட்டதும், ஏழூர்த் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களையும் பெற்ற தலம்தான் புஷ்பவனேஸ் வரர் திருக்கோவில்.
"அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொரு நீர்வரு திருப்பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடி கீழ்நாம் இருப்பதே.'
-அப்பர்.
ஆற்றிடையிலுள்ள ஊர்களை "துருத்தி' என்றழைப்பர். காவிரி- குடமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊரானது மேலத் திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் கோவில் அமைந்த இடம் மேலத்திருப்பூந்துருத்தி என்பதுதான்.
தலக்குறிப்பு
ஒருமுறை இந்திரன் சீர்காழியில் தங்கி மலர்வனம் அமைத்து ஈசனை வழிபட்டான். அப்போது அந்த பூங்காவுக்கு வேண்டிய தண்ணீரைத் தருவித்துத் தரும்படி விநாயகப் பெருமானிடம் வேண்டினான்.
விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தைக் காக்கை வடிவில் சென்று கவிழ்த்துவிட, அது காவிரியாய் கரைபுரண்டு ஓடியது. அது ஓரிடத்தில் கடல்போல் தேங்கியது. அதாவது செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம் பிரப்பூர், ஆற்காடு, கண்டியுர், திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவை யாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை பரவி, இடைப்பட்ட இடங்களில் கடல் போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரி ராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கியிருந்தன.
இந்திரன் சிவபெருமானை (ஐயாறப்பர்) வழிபட்டு, காவிரியை கிழக்கு நோக்கி அழைத்துச்சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அதன் படி காவிரி கிழக்கு நோக்கிச் செல்லும்போது முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்றுமணல் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. மேடிட்ட நிலம் மென்மை யான பூப்போல இருந்ததால் இந்நிலப்பரப்பு பூந்துருத்தி என்று அழைக்கப்பட்டது.
கௌதம முனிவரின் சாபத்தால் இந்திரன் உடல்முழுக்க ஆயிரம் குறிகள் தோன்றப் பெற்றான். சாபம் நீங்க திருக்கண்ணார் கோவிலில் வழிபட்டு, பிறருக்கு அவை கண்களாகத் தெரியும் வரம்பெற்றான். உடம்பெல்லாம் கண்களாகத் தோன்றிய தோஷம் குணமாக பல தலங்களுக்குச் சென்று வழிபட்டான். அப்போது இத்தலத்தில் பூவின் நாயகனாய் விளங்கிய சிவபெருமானை மலர்கள்கொண்டு வழிபாடு செய்து மீண்டும் மலர்போல் தூய நல்லுடல் பெற்றான். எனவே பூந்துருத்தி என பெயர் பெற்றதாகத் தலபுராணம் சொல்கிறது.
வானோர்கள் அனைவரும் மலர்கொண்டு வழிபட்டதாலும் இப்பெயர் ஏற்பட்டது. இதனை அப்பர், "வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சிமலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை' என்று குறிப்பிடுகிறார்.
திருவையாற்றைத் தலைமையாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தான தலங்களில் இது ஆறாவது திருத் தலமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. அது எப்படி சாத்தியம்? அதற்கு ஒரு புராணக் கதை உண்டு.
ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தனர். ஆடி அமாவாசை யன்று வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் போன்ற 13 தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும் என்கின்றன புராணங்கள். இது யாரால் சாத்தியமாகும் என்பதுதான் அவர்களது பேச்சு.
அப்போது அங்கிருந்த காசிப முனிவர், "ஏன் முடியாது? நான் இந்த 13 தீர்த்தங்களிலும் அமாவாசையன்று நீராடி பித்ரு தர்ப்பணம் செய்துகாட்டுகிறேன்'' என்றார். பின்னர் அவர் ஈசனை நினைத்துத் தவமிருந்தார். பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டுவந்தார். அதன் ஒருபகுதியாக திருப்பூந்துருத்தி வந்து தவம் மேற்கொண்டார்.
அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை நாளில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகத் திருக்காட்சி தந்து, 13 தீர்த்தங்களையும் ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தி) பாயும்படி செய்தார். அந்த புனிதநீரில் நீராடி, அந்த நீரால் ஈசனையும் அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் சொல்கிறது.
சிறப்பம்சங்கள்
=சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார் இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர்.
=இறைவி சௌந்தரநாயகிக்கு அழகாலமர்ந்த நாயகி என்றும் பெயருண்டு. உடல், முகம், மனம், வாழ்க்கை அமைப்பு போன்ற அனைத்துவிதத்திலும் அழகுறச் செய்து, அதனை ரசித்துப்பார்த்து அருள்பவள் என்பதால் இப்பெயர் அமைந்தது.
=இசைக்கலை மற்றும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க, அவற்றைப் பயிலத் தொடங்கும்முன் இங்கு வீணையைக் கையில் கொண்டருளும் வீணாதர தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட மேன்மையடைவர். மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லுமுன் பேனா, பென்சில், நோட்டு வைத்துப் பூஜை செய்ய வெற்றியுடன் உயர்கல்வி கிட்டும்.
=திருஞானசம்பந்தருக்காக நந்தியை விலகச் செய்த தலமாதலால் பிரதோஷம் விசேஷமானது. விலகிய நந்தி சங்கடங்களை விலக்கும் நந்தியாக அருள்வதால், பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரரை வழிபட அனைத்து செல்வங்களையும் அருள்வதால் இவரை பெரிய நந்தி என்றழைப்பர். உருவில் சிறிதாக இருந்தாலும் பல காரியங்களில் மகத்தான பலனைத் தருவதால் பெரிய நந்தி எனப்படுகிறார்.
=சோழ மன்னன் ஒருவன் தன் பிறந்த மாதத்தில் தினமும் ஒரு சிவாலயத் திருப்பணி செய்து குடமுழுக்கு கண்ட பிறகே உணவுண்பது என்னும் விரதம் மேற்கொண்டு வந்தான். இந்த நிலையில் குறிப்பிட்ட தினத்தில் ஒரு ஆலயத்தில் லிங்க வடிவம் செய்து முடிக்கவில்லை. சிற்பிகள் அரசனின் ஆணைக்கு அஞ்சி, உலையூதும் துருத்தியில் மணலை நிரப்பி அதை லிங்க வடிவமாக்கி பிரதிஷ்டை செய்துவைத்தனர். அதற்கு அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்தனர்.
அரசனும் இதனை வணங்கிவிட்டு அரண் மனைக்குச் சென்றுவிட்டான். அரசன் சென்றபின் சிற்பிகள் சிலையைச் செய்து முடித்துவிட்டனர். அதனைப் பிரதிஷ்டை செய்வதற்காக மணல் நிரப்பிய துருத்தியை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதற்கிடையில் அரசனது கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். உடனே அரசன் ஆலயம் சென்று, துருத்தி லிங்கமாய் இருப்பதைப் பார்த்து இறைவன் திருவருளை எண்ணி உருகினான். உலகைக்காக்க துருத்தியே லிங்கமாய் மாறியதால் திருப்பூந்துருத்தி என்று பெயர் பெற்றதாகவும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
= கருவறையின் தென்புறம் தென்கயிலாயம், வடப்புறம் வடகயிலாயம் என்று இரண்டு சிறு சந்நிதிகள் உண்டு. திருவையாற்றில் ஐயாறப்பர் வடகயிலை, தென்கயிலை காட்சிகள் காட்டியருளியதுபோல இங்கும் காட்டியருளியதாக ஐதீகம்.
= மகாலட்சுமி சந்நிதியில் சக்தி தீபம் ஒன்றும், அஷ்டலட்சுமி தீபம் எட்டும் சேர்த்து நவதீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
= சூரியன், தக்கன் வேள்வியில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட சிவநிந்தனை காரணமாக, அது நீங்க இத்தலத்தில் தீர்த்தம் அமைத்து வழிபட்டு அருள்பெற்றான்.
அப்பர் மடத்திற்கு வடப்புறம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
= கோவிலின் வடதிசையில் குடமுருட்டி ஆறு ஓடுகிறது. அதனருகில் இறைப்பணி பல செய்த மகான் தீர்த்த நாராயணர் ஜீவசமாதி யடைந்தார். அதன் அருகில் உள்ளதுதான் அக்னி தீர்த்தம்.
= பாண்டி நாட்டு யாத்திரை முடிந்து திரும்பிய திருஞானசம்பந்தர், அப்பர் கயிலைக் காட்சி கண்டது பற்றி அறிந்தார். எனவே அவரைக்காண திருப்பூந்துருத்தி நோக்கி வந்துகொண்டிருந்தார். சம்பந்தரது வருகையை அறிந்த அப்பர், தனது தொண்டர் களோடு தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல் இரண்டு கல் தொலைவிலுள்ள வெள்ளாம் பெரம்பூருக்குச் சென்றார். சம்பந்தர் அவ்வூர் இறைவனை வழிபட்டு வரும் வழியில், அப்பர் கூட்டத்துள் புகுந்து சம்பந்தர் அமர்ந்துவந்த பல்லக்கைத் தாங்கினார்.
(அந்த இடம் சம்பந்தர் மேடு என்றழைக்கப் படுகிறது.)
இந்த நிலையில் திருப்பூந்துருத்தியை நெருங்கியதும் சம்பந்தர், "அப்பர் எங்குள் ளார்?'' என்று வினவ, "உங்கள் பல்லக்கைத் தாங்கும் பேறுபெற்று இங்குதான் உள்ளேன்''
என்று பதிலளித்தார். சம்பந்தர் பதறிப்போய் பல்லக்கில் இருந்து கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் ஞானசம்பந்தரை வணங்க, இருவரும் உளமுருக திருப்பூந்துருத்திக்கு நடந்தே வந்தனர். அப்பர் அமைத்த திருமடத் தில் சம்பந்தர் சிறிது காலம் தங்கியிருந்து இருவரும் உழவாரப் பணி செய்த அற்புதமான தலம் இதுவே.
= திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில், அசுரனை அழித்த பாவம் நீங்க ஒற்றைக் காலில் தவம் செய்யும் துர்க்கை மிகுந்த வரப்பி சாதியாக அருட்காட்சி தருகிறாள்.
= சப்த ஸ்தான விழா, கந்த கஷ்டி, திருவாதிரை, அமாவாசை தரிசனம், நவராத்திரி, திருக்கார்த்திகைத் திருக்கல்யாணம், பிரதோஷம் போன்றவை ஆலய விழாக்கள்.
இயற்கை எழிலோடு கூடிய அமைதியான சூழலில், ஐந்துநிலை ராஜகோபுரம் கொண்டு, கிழக்கு நோக்கி நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப் பெற்று அமைந்துள்ளது ஆலயம். சிவாலயத்திற்குரிய சந்நிதிகளெல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன.
"மனிதர்கள் வாழ்வில் எவ்விதமான இன்பங்களையும், பேறுகளையும் அடையவிடாமல் தடுப்பது முன்னோர் கள் சாபம் என்னும் பித்ரு சாபம்தான்.
அப்படிப்பட்ட சாபங்களை நீக்கவல்லதொரு திருத்தலமாக திருப்பூந்துருத்தி அமைந்துள்ளது. அமாவாசை நாளில் இத்தலத்தை 18 முறை வலம்வந்து வழிபட்டால் அனைத்துவிதமான சாபங்களும் நிவர்த்தியாகும். சுவாமியின் பேரருளால் அற்புதமான பலன்களைப் பெற்று ஆனந்த வாழ்வு வாழலாம்'' என்று பெருமித்தத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர் சரவண குருக்கள்.
வாழ்நாளில் ஒருமுறையேனும்- குறிப்பாக அமாவாசை தினத்தில் வலம் வருவோம்;
பித்ரு சாபம் நீங்கி பிரகாச வாழ்வு பெறுவோம்.
காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
அமைவிடம்: திருவையாற்றிலிருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும்; கண்டியூரிலிருந்து மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்பூந்துருத்தி. பேருந்து வசதியுண்டு.
ஆலயத் தொடர்புக்கு:
ஸ்ரீ புஷ்பவனேஸ்வர் திருக்கோவில், கண்டியூர் வழி, மேலத்திருப்பூந்துருத்தி (அஞ்சல்), திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம். 613 103.
செயல் அலுவலர் அலைபேசி: 88833 32650.
கோவில் கணக்கர் அலைபேசி: 63852 13880.
மேலும் தகவல் தொடர்புக்கு: சரவண குருக்கள், ஜி. பத்மநாபன். அலைபேசி: 98944 01250.