பொன்னிநதி பாய்ந்து வரும் சோழ தேசத்தில் எண்ணற்ற திருத்தலங்கள் புகழ் பல கொண்டு மகோன்னத மகிமைகளோடு திகழ்கின்றது. அவ்வகையில் அதி முக்கிய திருத்தலமாக, அகிலம் போற்றும் தவமாக, அடியார்க்கு அற்புதம் புரிந்த பதியாகப் போற்றப் படுவது "அம்பர் மாகாளம்" என்னும் கோயில் திருமாளம் ஆகும்.
இப்பூவுலகில் மூன்று மாகாளங்கள் மிகவும் பிரசித்தம். அவை...1. உஜ்ஜயினி மாகாளம், 2. அம்பர் மாகாளம், 3. இரும்பை மாகாளம். ஒவ்வொரு மனிதனது ஆயுளையும் நிர்ணயிக் கக்கூடிய திருத்தலங்கள் இவை களாகும்.
அரிசொல் ஆற்றங்கரை யில் உள்ள இந்த அம்பர் மாகாளத்தின் மீது திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்கள் பாடிப் போற்றியுள்ளார். சோழ தேசத்து காவிரித் தென்கரையின் 55 ஆவது திருத்தலமிது.
சோமயாக சிறப்புத் தலமாக உள்ள இப்பதி ஈசனை... மகாகாள மகரிஷி, ஸ்ரீ காüதேவி, வாசுகி மாநாகம், மதங்க ரிஷி, உதங்க ரிஷி, மன்மதன், மகுடவர்தன மஹாராஜா, மருத மன்னன், சோமாசிமாறர், விமலன் என்கிற அந்தணன் ஆகியோர் வழிபட்டு பெரும் பேறுகள் பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan_14.jpg)
காüதேவி:
துர்வாச மகரிஷி அம்பல் பிரம்ம புரீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு வான் வழியே செல்கையில், மதலோலை என்கிற பெண் துர்வாசரின் மீது மையல் கொண்டு அவரிடம் தனக்கு புத்திர பேறு வேண்டிட, அவ்வாறே அருüனார். உச்சிவேளையில் வானிலேயே அம்பன், அம்பராசுரன் என்ற இரு அசுரத்தன்மை பொருந்திய குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றாள்.
அசுர குழந்தைகள் என்பதால் தாயின் பாலை குடிப்பதற்கு பதிலாக அவளது இரத் தத்தையே உறிந்து குடித்தது. தாய் வருந் தித் துடித்தாள். இரு வரையும் அம்பலில் விட்டுவிட்டு, ஈஸ்வரரை வழிபடும்படி அறிவுறுத்தி, பிரிந்து செல்கிறாள் மதலோலை. அவ்வாறே அவ்விருவரும் சிவனை வழிபட்டு வரங்கள் பல பெற்று, வில்வித்தை, வாள் வித்தை, மல்யுத்தம் போன்றவற்றில் தேர்ச்சி அடைந்து, வீரமும் தீரமும் பெற்று, எதிர்ப்போரை அழித்தனர். பலரைக் கொன்று குவித்ததோடு, வானோரை யும் வம்புக்கிழுத்து கொல்ல முனைந்த னர். இதனால் துன்புற்ற தேவர்கள் பரமனை சரணாகதியடைந்தனர்.
பரமன் பார்வதியை கண்ணுற, அடுத்த கணம் பார்வதி யௌவனம் மிக்க மோகினி ரூபம் எடுத்து நின்றாள். திருமால் ஒரு வயோதிகர் வடிவம் பூண்டார். இருவருமாக அம்பலைச் சென்று அடைந்தனர். மோகினியின் பேரழகில் மயங்கினர் ஆடவர் பலர். பெருங் கூட்டம் அங்கே திரண்டது. இதைக் கேள்வியுற்ற இரு அசுரர்களும் அவ் விடம் அடைந்த னர். இருவரும் அவளது அழகில் மயங்கி, ஒவ்வொருவரும் தானே அவளை மணக்க விண்ணப் பம் செய்தனர். ஒருவரை மட்டுமே மணப்பேன் என மோகினியாய் வந்த அம்பிகை கூற, இருவருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் அம்பன், அம்பராசுரனைக் கொன்றான். பிறகு, அம்பன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மோகனிடம் வேண்டி, அவளருகே சென்றான்.
உடன் மோகின

உடன் மோகினியான பார்வதிதேவி பத்ரகாüயாக மாறினாள். காüதேவியின் கோர ரூபம் கண்டு பயந்த அம்பன் எருமைக் கிடாவாக உருமாறினான். அவ்வாறு உரு மாறிய இடம் கிடாமங்கலம் என்றழைக்கப் படுகிறது. எருமைக்கிடாவாக மாறிய அம்பனை விரட்டிச் சென்ற காü அம்ப கரத்தூரில் அவனைக் கொன்று அழிக்கின் றாள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan1_12.jpg)
அம்பன், அம்பராசுரன் இருவரும் அம்ப கரத்தூர் காüயின் தலையிலும், காலிலும் பிரம்மஹத்தியாக இடம் பெறுகின்றனர். காüக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் பொருட்டு, கருங்காலி வனமான இந்த கோயில் திருமாளத்திற்கு சிவராத்திரியில் வந்து தனது கரத்தால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பெறுகின்றாள். ஈசனது கட்டளைப்படி சிவராத்திரியின் நான்கு காலத்தில் ஸ்ரீ காü தேவி முறையே அம்பர் மாகாளம், அம்பர், இளையாத்தங்குடி மற்றும் சீயாத்தமங்கை ஆகிய தலங்கüல் வழிபாடு செய்கின்றாள். அம்பகரத்தூர் காüயை வழிபட்ட பின் இந்த கோயில் திருமாளத்திற்கு வந்து, காü உருவாக்கிய லிங்கத்தை வழிபட வேண்டும் என்பது தொன்றுதொட்டு வரும் மரபாகும். இதுவே இவ்வழிபாட்டின் பூரணமாகும்.
மதங்க மகரிஷி:
மதங்க மகரிஷி இத்தலத்தில் தங்கி, இறைவனை வணங்கி, தனக்கு புத்திர பாக்கியம் வேண்டினார். அதன்படி ஈசன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ராஜமாதங்கி என பெயர்சூட்டி, வளர்த்து வந்தார் மகரிஷி. அப்பெண்ணும் வளர்ந்து பருவமடைந்தாள். சாட்சாத் அந்த ஈஸ்வரியே இம்மகரிஷிக்கு பெண்ணாக பிறந்ததால் இத்தலத்தில் ஈசனை மணந்து, திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். மணக் கோலத்தில் இங்கே வீற்றிருந்த வேளையில் தேவியானவள் பரமேஸ்வரனிடம் கேட்ட வரத்தின்படி திருமணத்தடை உள்ளவர்கüன் தடைகளைக் களைந்து திருமணப் பேற்றினை இன்றும் அருü வருகின்றாள்.
விமலன்:
காசியில் பிறந்த விமலன் என்ற அந்தணனுக் குப் புத்திரப் பேறு இல்லை. இதனால் பல தலங்களுக்கும் சென்று, இறைவனை வழிபட்டு வந்தான். தல யாத்திரையாக தென்னாடு வந்தான். நீண்ட நாட்களாக இறைவனிடம் கோரிக்கை வைத்தும் பலன் கிடைக்காதது கண்டு மனம் வருந்தினான் விமலன். ஒருநாள் இந்த மாகாள கோயிலுக்கு வந்த விமலன் முன்னர் இறைவன் மாறு வேடத்தில் தோன்றி அவனது மனக்குறையை கேட்கின்றார். உரியபலன் கிடைக்க வழிமுறை ஒன்றை கூறி மறைகிறார்.
அதன்படி அந்த அந்தணன் இத்தலத் தின் அம்ச தீர்த்தத்தில் நீராடி, மாகாளநாதரை வழிபட்டு, இங்கு எழுந்தருüயுள்ள ஆதி நரமுக குழந்தை விநாயகரையும், குழந்தை வடிவில் உள்ள வேலவனையும் வழங்குகின் றான். இதன் பலனாக விமலனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கின்றது. அக்குழந்தைக்கு மகாதேவன் என்ற பெயர் சூட்டி மகிழ்கின் றான்.
புத்திரப்பேறு பெற இத்தல வழிபாடு அதி சிறந்தது என்பதை இவ்வரலாறு மெய்ப் பிக்கின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan2_9.jpg)
மன்மதன்:
தேவர்கüன் ஏவலினால் மன்மதன் விசுவா மித்திரரின் தவ வலிமையை குறைக்கத் தேவ கன்னிகைகளை துணையாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது புஷ்பபானங் களைத் தொடுத்தான். மன்மதனின் செயலைக் கண்டு கோபம் கொண்டு, அவனது மலர்க் கனைகள் வலிமையிழந்து அழிந்திட சாபமிடுகின்றார் விசுவாமித்திரர். அச்சாபம் நீங்க இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைகின்றான். இதனால் இப்படி மகாபுரி என்றும் அழைக்கப்பட்டது. எனவே சாப - பாபங்கள் நிவர்த்தித் தலமாகவும் விளங்குகிறது.
வாசுகி:
அஷ்ட நாகங்கüல் ஒன்றான வாசுகி நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத் தியை நீக்கிட, பல தலங்களுக்கும் சென்று வழி பட்டது. இருப்பினும் பலனில்லை.
இறுதியில் பரமனின் திருவருளால் இந்த மாகாளம் வந்து, சர் வேஸ்வரனை வணங் கிட, உரிய பலன் கிட்டியது. நாக தோஷம், இராகு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் ஆகியன நீங்கிட வழிபட உகந்த திருத்தலமிது.
சோமாசிமாற நாயனார்:
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் காலத்தில் இக்கோவில் திருமாளத்தில் அந்தணர் குலத்தில் பிறந்து, வாழ்ந்த சிவனடியார் சோமாசிமாற நாயனார். இவர் தனது மனைவி சுசீலையுடன் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகம் செய்ய விரும்பினார். இந்த யாகத்தில் அவிர்ப்பாகம் பெற திருவாரூர் தியாகேசப்பெருமானையே அழைக்க விரும்பியது இவரது உள்ளம். அந்த பரமனையே அவிர்பாகம் பெற அழைப்பது அவ்வளவு சுலபமானதா என்ன ? யாரை அணுகினால் இது சாத்தியமாகும் என எண்ணினார். உடன் அவர் மனத்திரை முன் வந்து நின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவர்தான் தம்பிரான் தோழன் ஆயிற்றே... உடன் திருவாரூருக்குப் புறப்பட்டார்.
அச்சமயம் சுந்தரருக்கு கபம் கட்டி சüத் தொல்லையால் அவதியுற்றிருந்தார்.
சüயை போக்கும் அருமருந்தான தூதுவளைக் கீரையை நாள்தோறும் பரவையாரிடம் கொடுத்து, சுந்தரருக்கு கூட்டு செய்து கொடுத்து வந்தார். இதனை உண்ட சுந்தரரின் சüத் தொந்தரவு குறைந்தது.
இதனால் சுந்தரரின் தோழமையைப் பெற்றார் சோமாசியார். தான் செய்யவிருக் கும் யாகத்தில் தியாகேசர் நேரில் கலந்து கொண்டு அவிர்பாகம் பெற வேண்டுமென் கின்ற தனது வேட்கையை சுந்தரரிடம் தெரிவித்தார் சோமாசிமாறர். அவ்வேண்டு கோள் சுந்தரர் வாயிலாக தியாகேசருக்கு எட்டியது.
சுந்தரர் மூலமாக தியாகேசரைப் பணிந்த சோமாசியாருக்கு அசரீரியாக இறைவன்... "தான் அந்த யாகத்தில் கலந்து கொள்வதாகவும், ஆனால் எப்போது, எப்படி, எந்த உருவத்தில் வருவேன் என்பதை தெரிவிக்க மாட்டேன் என்றும், தன்னைக் கண்டு அச்சப் படவோ, அருவருப்படையவோ, வேண்டாம்" என்றும் கூறியருüனார்.
சோமாசியாருக்கு பெருமகிழ்ச்சி. எந்த உருவில் வந்தால் என்ன? இறைவன் வருவதே பெரும் பாக்கியம் தானே!!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan3_6.jpg)
வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் கூடிய நன்னாüல் அச்சம் தீர்த்த கணபதி ஆலயம் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு, யாக பூஜை இனிதே தொடங்கியது. வேத விற்பன்னர்கüன் வேதமுழக்கங்களோடு தொடங்கிய யாகம் இனிதே முடிந்தது. இப்பொழுது அவிர்பாகம் தர வேண்டிய நேரம். இறைவன் வரவில்லை. ஆனால் அதற்கு மாறாய் சற்று தூரத்தில் ஒரு கூட்டம். தாரை, தப்பட்டை முழங்கியபடி, பறையும், எக்காளமும் இசைத்தபடி வந்த அந்த கூட்டத்தினரை கண்ட வேதியர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.
சோமாசிமாறரோ யாகத்திற்கு பங்கம் விளைந்துவிடுமோ என்று அஞ்சினார்..!
இறந்த பசுங்கன்றை உடலில் சுமந்தவண்ணம், கயிற்றால் கட்டப்பட்ட நான்கு நாய்களை ஒரு கையில் பிடித்தபடியும், மறு கையில் பறையை ஒலித்தபடியும், தலைப்பாகை கட்டிய ஆஜானுபாகுவான ஒர் ஆண்மகன் முன்னே வர, அவனது துணைவி கல்குடம் சுமந்தபடி பின்னே வர... சிறு பாலகர்கள் இருவரும் உடன் வர, பார்த்தவர்கள் பதைத்தனர். மாறரோ ஒரு கணம் கண்மூடி கணபதியை தியானித்தார். அச்சம் தீர்த்த கணபதியின் அருளால் உண்மை உணர்ந்தார். வந்திருப்பது சாட்சாத் அந்தத் தியாகேச மூர்த்தியே என்று...!!
அடுத்த கணம் ஓடிச்சென்று அக்கூட்டத் தார் திருமுன் விழுந்து, அவர்களை வணங்கி வலம் வர.... பேரொüப் பிரவாகமாக, ரிஷபத்தின் மீது தேவியுடன் எழுந்தருü, அற்புத தரிசனம் தந்து, அவிர்பாகத்தினைப் பெற்று, அருள்புரிந்து மறைந்தார், ஆரூர் அண்ணல்...!! இப்பேறு கிட்டுவதற்குத்தான் எப்பாடு ? இச்சம்பவத்திற்குச் சான்றாக சில ஊர்கள் காட்டப்படுகின்றன. முதலில் அக்கூட்டம் அடியெடுத்து வைத்த இடம் அடியக்கமங்கலம் என்றும், குடத்திலிருந்த கள் பொங்கிய இடம் பொங்குசாராயநல்லூர் என்றும், சகடை ஒலி எழும்பிய இடம் சகடமங்கலம் என்றும் ஆனதாகவும் குறிப்பிடு கின்றனர்.
இன்றும் வைகாசி மாதம் கொளுத்தும் கோடையில் இவ்வைபவம் பெருவிழா வாக இங்கு விமரிசையுடன் நடத்தப்படுகின்றது. இவ்விழாவை காண வருவோர், பருகிட நீர்மோரும், பானகமும் அüக்கின்றனர். ஆங் காங்கே தாகம் தணித்திட தண்ணீர் பந்தலும் அமைக்கப்படுகிறது. தெரு வெங்கும் மாக்கோலம் போட்டு, அன்போடு அழைக்கின்றனர் ஊர் மக்கள் அம்பர் மாகாளரை...!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan4_1.jpg)
ஆயில்ய நட்சத் திரத்தன்று முதலில் சுந்தரருக்கு தூதுவளைக் கீரை வழங்குதல், திருவாரூரிலிருந்து வரும் தியாகேசப் பெருமானை எதிர்கொண்டழைத்தல், பின்னர் சோமயாகம். அதன் பின்னர் யாகசாலைக்கு எழுந்தருளும் (வெட்டியான் கோலத் தில் இருக்கும்) கண்டு சோமாசியார் அஞ்சுவதும், பின் இறைவனை அறிந்து, அவரது திருவடியை சரணடதல், அதன்பிறகு ஆரூரர் காட்சி கொடுத்தருளல் என நடக்கின்றது. இறுதியாக தியாகேசருக்கு அவிர்பாகப் பிரசாதம் நிவேதிக்கப்பட்டு, அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்றிரவு சோமாசிமாறர் புஷ்பப் பல்லக்கில் பவனி வருகின்றார்.
மறுதினம் மகத்தன்று இறைவனை கண்டு அஞ்சி ஓடியவர்களுக்கு காட்சி தருதல், ஸ்ரீ காüதேவி பூஜை செய்தல் என முடிவடைகிறது இந்த பெருந்திருவிழா.
வருடாவருடம் வைகாசி ஆயில்யத்தன்று தியாகராஜப் பெருமான் இந்த அம்பர் மாகாளத்திற்கு எழுந்தருளுவதால் அன்று திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் உச்சிகால பூஜை கிடையாது என்பது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.
கோயில் அமைப்பு:
எழில் கொஞ்சும் கிராமத்தின் மேற்குப் புறத்தில் பிரமிக்கவைக்கும் கலா திறத்திற்கும், பிரம்மாண்ட கோவிலமைப்பிற்கும் பெயர் போன சோழர்கüன் அசரவைக்கும் திருக் கோவில்கüல் ஒன்றாக இந்த மாகாளநாதர் ஆலயம் மிகப் பிரம்மாண்டமாக எழுந்து நின்று கோலோச்சுகின்றது.
இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த இவ்வாலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கின்றன. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
விசேடங்கள்:
வைகாசி பிரம்மோற்சவம், குருவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பௌர்ணமி, கார்த்திகை தீபம், பதினெட்டாம் பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, ஆடி வெள்üகள், நவராத்திரி, விஜயதசமி, அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், தை மாத கணு உற்சவம், மகா சிவராத்திரி போன்ற எண்ணற்ற விசேடங்கள் இங்கு சீரும் சிறப் புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esan5.jpg)
பரிகாரங்கள்:
1. ஆயில்யம், மூலம், மிருகசீரிஷ நட்சத்திர நாüல் தீர்த்த நீராடி, மாகாளநாதருக்கு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்ய, சகல பாவங்கள் மற்றும் தோஷங்கüலிருந்து விமோசனம் பெறலாம்.
2. திருமணத் தடை யுள்ளவர்கள் இரண்டு செவ்வரü மாலைகள் வாங்கி வந்து, அம்பாளுக்கு சாற்றி அதில் ஒன்றைப் பெற்று, கழுத் தில் அணிந்து செல்ல, விரைவில் உரிய பலன் கிட்டும்.
3. இராகுகால வேளையில் இத்தல வாசுகி நாகத்திற்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சிக்க.... ராகு - கேது - காலசர்ப்ப - களத்திர தோஷங்கள் நீங்கும்.
4. இத்தலத்தில் உற்சவ விக்ரகமாக உள்ள நரமுக கணபதி மற்றும் நரமுக முருகனுக்கு முழுக்கால் சட்டை மற்றும் முழுக்கை சட்டை தைத்து அணிவித்து, அர்ச்சனை செய்ய... குழந்தை வரம் கிட்டும்.
5. மரண அவஸ்தையில் இருப்பவர்களுக்கு இங்குள்ள மோட்ச லிங்கத்திற்கு எண்ணெய்க் காப்பிட்டு, பாலாபிஷேகம் செய்து, சர்க்கரை பொங்கலை ஓர் வெள்ளைத்துணியில் கட்டி, லிங்கத்தின் சிரசில் வைத்து நமசிவாய ஜபத்தை ஜபிக்க... மரணத்திற்குப்பின் மோட்சம் கிட்டும்.
6. இங்கு ஏகாதச ருத்ர ஜப பாராயணம் மற்றும் யாகம் செய்ய... தொழில் அபிவிருத்தி, வியாபார மேன்மை, வேலைவாய்ப்பு, கல்வி, பொருள்வளம் ஆகிய அனைத்தும் கிட்டும்.
இத்தலத்திற்கு அருகிலுள்ள அம்பல் பிரம்ம புரீஸ்வரர் மற்றும் அச்சம் தீர்த்த கணபதி ஆகியோரையும் வழிபடுதல் உசிதமாகும்.
வழி:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், திருவாரூர் -மயிலாடுதுறை பேருந்து சாலையில் உள்ள பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோயில் திருமாளம்.
Follow Us