ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தாங்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப- சூழலுக்கேற்ப- சிந்தனைக் கேற்ப ஊர் பெயர்களை அமைத்துக்கொள்வார்கள். அவர்கள் வாழும் இயற்கை அமைப்பினையும் செழிப்பி னையும் வைத்தே அந்தந்த ஊர்களைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம். அரசியல், சமுதாயம், மக்களின் வாழ்க்கை காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.
மக்களிடமும் உளவியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட நிலையிலும் குடியிருப்புப் பெயர்கள் நிலைத்திருக்கும். அதே நேரத்தில் பல ஊர்களில் வட்டார வழக்குச்சொல் லில் ஊர்ப்பெயர்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப் பார்கள். இறைவனின் பெயராலும் ஊர்கள் அமைந் திருக்கும். அப்படி இறையுணர்வின் காரணமாக ஏற்பட்ட ஊர்தான் தொண்டங்குறிச்சி.
சிவனுக்குத் தொண்டுசெய்யும். சிவனடியார்கள் பலர் இவ்வூருக்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர். மேலும் முனிவர்கள், சித்தர்கள், சந்நியாசிகள் இந்த ஊரில் வந்து தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இந்த ஊரில் உள்ளன.
அதற்கு உதாரணம், அண்ணாமலையார் கோவிலுக்கு முன்புறம் சந்நியாசிக் கல் என்றொரு கல் உள்ளது. அதற்கு முறையாக பூஜைசெய்கிறார்கள். சந்நியாசிகள் வந்து இறைவனை தரிசித்துச் சென்றதற்கான அடையாளமாக அந்தக் கல் உள்ளது.
மன்னர்கள் காலத்தில் வீரர்கள் போர்க்களத்தில் வீர மரணமடைந்தால், அவர்கள் நினைவாக அவர்கள் வாழ்ந்த ஊரில் நடுகல் அமைத்து அந்த வீரனை தெய்வமாக வணங்குவார்கள். அதுபோல் இந்த ஊரில் சந்நியாசிக் கல்லையும் தெய்வமாக வணங்குகிறார் கள். இங்கு விநாயகர், சிவன், உமையவள் ஆகியோருக்குப் பெரிய அளவில் கோவில்கள் இருந்துள்ளன. இவ்வூருக்குத் தென்மேற்குப் பகுதியில் வீடுகள், கோவில்கள், குளங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. (தொல்லியல் துறை ஆய்வு செய்யுமளவுக்கு).
மொகலாய மன்னர்கள் படையெடுப் பின் காரணமாக இங்கிருந்த கோவில்கள் சிதைக்கப்பட்டுள் ளன. இங்கு குடியிருந்த மக்கள் வீடு களை இழந்து பல்வேறு திசைகளுக்குச் சிதறிப் போய் விட்டார்கள். பிறகு மீண்டும் இப்பகுதியில் பூர்விக மக்க ளும், பல்வேறு பகுதிகளிலிருந்து பிழைப்பு தேடிவந்தவர்களும் தங்கி மீண்டும் ஊர் உருவாகியுள்ளது. தற்போதும் இந்த ஊரின் அரசு வருவாய்த்துறை கணக்கில் முதலிடத்தில் உள்ளது.
"தொண்டங்குறிச்சி கிராமத்தில் குடிகொண்டுள்ள தெய்வங்கள் மிகவும் அபரிமிதமான சக்திவாய்ந் தவை. இந்த ஊரைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு திடீரென்று பார்வை பறிபோனது. அவரால் எந்த வேலையும் செய்யமுடியவில்லை. இருந்தும் இங்குள்ள அம்மன் கோவிலுக்கு தினசரி வந்து, தட்டுத்தடுமாறி குடத்தில் தண்ணீர் எடுத்துவந்து அம்மனுக்கு ஊற்றி பூஜைசெய்து வந்துள்ளார். இப்படி அவரது பணி சில ஆண்டுகள் தொடர்ந்தது.
அம்மனின் அருள் பார்வை கருப்பையாமீது விழுந்ததன் காரணமாக அவருக்குப் பார்வை மீண்டும் கிடைக்கப்பெற்றது. தற்போது அவர் நல்ல நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்'' என்கிறார்கள் தங்கதுரை, சக்திவேல் ஆகியோர்.
இவ்வூரிலுள்ள அண்ணாமலையார் கோவில் குறித்து ஆசிரியர் புலிவலம் செல்வராசு கூறும்போது, "இந்த ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தனது மகன்களுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்து பெண்தேடும் படலத்தைத் தொடங்கினார். ஆனால் திருமணம் நடைபெறுவது தடைப்பட்டு வந்தது. பெண்ணாடத்திலுள்ள சேகர் என்னும் ஜோதிடரிடம் சென்றுள்ளார்.
அந்த ஜோதிடர், "உங்கள் ஊரில் ஒரு சிவன் கோவில் உள்ளதா?' என்று கேட்டுள்ளார். "எங்கள் ஊரில் மற்ற கோவில்கள் உள்ளன. ஆனால் சிவன் கோவில் மட்டும் இல்லை' என்று கூறியுள்ளார் சுப்பிரமணியம். ஆனால் ஜோதிடர், "நிச்சயமாக உங்கள் ஊரில் சிவன் கோவில் இருந்துள்ளது. தற்போது அந்த சிவன், அம்பாள் இருவரும் பூமியில் மறைந்திருக்கிறார் கள். உங்கள் ஊருக்குச் சென்றதும் வயது முதிர்ந்தவர்களிடம் விசாரித்து கோவில் இருந்ததற்கான அடையாளத்தைக் கண்ட றிந்து தேடிப்பாருங்கள். சிதிலமடைந்ததிருந்தாலும் அங்கே சிவலிங்கம் இருந்தால், அதையெடுத்து நேர்செய்து, அதற்குப் பாலாபிஷேகம் செய்து வாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். அவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள்'' என்று கூறியுள்ளார்.
சுப்பிரமணியம் நம் ஊரில் சிவன் கோயில் இல்லையே என்ற குழப்பத்துடனே ஊருக்கு வந்தார். என்னிடம் இது குறித்து தகவல் கூறினார். நானும் இந்த ஊரில் நீண்டகாலம் ஆசிரியர் பணியில் உள்ளேன். ஆனால் இங்கு சிவன் கோவில் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. இருந்தும் ஜோதிடர் சொல்வது உண்மையா என்பதை ஆய்வுசெய்யவேண்டுமென்று முடிவு செய்தோம். ஊரிலுள்ள சிலர் உதவியோடு அப்போது ஊரில் வாழ்ந்து வந்த 92 வயது முதியவர் ஒருவரிடம் சென்று விவரம் கேட்டோம்.
அவர், நான் சிறுவனாக இருந்தபோது விளையாடப் போகும்போது, ஊருக்கு தென்கிழக்குப் பகுதியில் கருவேலங்காட்டில் புதையுண்ட நிலையில் ஒரு குழவிபோன்ற கல் பாதி தெரிந்தும் தெரியாமலும் இருந்ததாக நினைவு. அது சிவலிங்கமாகக்கூட இருக்கலாம். நீங்கள் வேண்டுமானால் அந்தப் பகுதியில் போய்த் தேடிப் பாருங்கள்'' என்று கூறினார்.
அதன்படி அந்த கருவேலங்காட்டில் பல மணிநேரம் தேடினோம். ஓரிடத்தில் பூமியில் புதையுண்ட நிலையில் சிவலிங்கம் வெளியே தெரிந்தது.
அதன்பிறகு அப்பகுதியை சுத்தம் செய்து பூமியைத் தோண்டியபோது விநாயகர், சிவலிங்கம், அம்பாள், சண்டிகேஸ்வரர், சந்நியாசிக் கல் (இந்தக் கல் கடலூர், சின்னசேலம், தென்பரப்பி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது. தற்போது நான்காவது இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது) ஆகியவை கிடைத்தன. அவற்றைத் தற்போதுள்ள இந்த இடத்தில் வெட்டவெளியில் பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தோம்.
பிறகு இறைவன்மீது பக்திகொண்ட சிலர் உதவியுடன், தற்போது இவ்வாலய இறைவனுக்குப் பூஜை செய்துவரும் இதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன், அவரது மனைவி இளவரசி தம்பதிகள், அன்பர்களின் உதவியோடு இறைவனுக்கு மேற்கூரை அமைத்து, முறையாக பிரதோஷம், பௌர்ணமி பூஜை, சிவராத்திரி உட்பட சிவபெருமான், அம்பாளுக்கேற்ற அனைத்து வழிபாட்டு முறைகளையும் தங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்'' என்றார்.
இதுகுறித்து கார்த்திகேயன், அவரது துணைவியார் இளவரசி ஆகியோர், "பல்வேறு குடும்ப சிக்கல்கள் காரணமாக ஊரைவிட்டு ஒதுங்கி விவசாய நிலத்தில் குடியிருந்துவந்தோம். இந்த நிலையில் ஏகநாயகனாக இருந்த இந்த இறைவன் எங்களை ஆட்கொண்டார். அதனால் இவ்வாலயத்திற்கு வந்து பூஜைகளைத் தூய எண்ணத்தோடு செய்ய ஆரம்பித்தோம். தற்போது எங்கள் குடும்பத்தில் சந்தோஷம், நிம்மதி ஏற்பட்டுள்ளது. எந்த நிலையிலும் இறைவனை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு நாங்களே உதாரணம்'' என்கிறார்கள்.
"சிவலிங்கம் இருப்பதை ஜோதிடர்மூலம் தெரிவித்த பெரியவர் சுப்பிரமணியம், சிவலிங்கம் கண்டெடுத்த பிறகு தினசரி அந்த சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். 28 நாட்களுக்குள் அவரது இரு மகன்களுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவ்வாலய இறைவனுக்கும் அம்பாளுக்கும் என்ன பெயர் வைப்பது என்னும் குழப்பம் ஏற்பட்டது. தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலய அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி இந்த ஆலய இறைவனை தரிசிப்பதற்கு ஒருமுறை வந்தார். அவர், பூமிக்குள்ளிருந்து வெளிவந்தத னால் இவருக்கு அண்ணாமலையார், அம்பாளுக்கு உண்ணாமுலை அம்மன் என்று பெயர் வைத்தார். அதுவே தற்போது நிலைத்துவிட்டது. உண்மையான இறையுணர்வோடு இவ்வாலய இறைவனை வேண்டினால் அனைத்தும் நிறைவேறுகிறது" என்கிறார் இளவரசி.
"இங்கு விநாயகர் சதுர்த்தி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. பிரதோஷத்தன்று சிவலிங்கத் திற்கு மூலிகைச்சாறு அபிஷேகம் செய்யப் படுகிறது. அந்த அபிஷேக சாற்றை இங்குவரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கிவருகிறோம். பிணியுள்ளவர்கள் அதை சாப்பிட்டு வந்தால் பிணிநீங்கி நலம் பெறலாம். ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நிச்சயம் நீங்கும். அப்படி பலனடைந்தவர்கள் ஏராளம். அதேபோன்று திருமணத் தடை நீங்குகிறது; குழந்தை பாக்கியம் கிடைக்கிறது'' என்கிறார் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் அன்னக் கிளி.
"ஆலயத்திலுள்ள விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை தற்போது அண்ணாமலையார் சந்நிதியின் அருகே வைத்து வழிபாடு செய்துவருகிறோம். விநாயகர் சதுர்த்தியின்போது இவருக்கு பாலாபிஷேகம் செய்வதுண்டு. எவ்வளவு பாலை விநாயகர்மீது ஊற்றினாலும், அந்தப் பால் வழிந்தோடியபிறகு விநாயகரின் அடிபீடத்திலிருந்து தானாகவே அபிஷேகப் பால் நீண்ட நேரம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் விநாயகரின் பீடத்தில் எந்தப் பகுதியிலும் சிறு துவாரம்கூட இல்லை. இந்த அதிசயத்தை நிகழ்த்திவருகிறார் விநாயகர். இவரது நிறமும்கூட வித்தியாசமாக இருக்கும்.
விநாயகர் கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து நேர்க்கோட்டில் 100 மீட்டர் தூரத்தில் அண்ணாமலையார்; அதற்கடுத்து 100 மீட்டர் தூரத்தில் செல்லியம்மன். இப்படி ஒரே நேர்க்கோட்டில் அந்தக் காலத்தில் கோவில்கள் அமைத்துள்ளனர். தற்போதும் அதேபோன்ற நேர்க்கோட்டில் கோவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்'' என்கிறார் கள் கார்த்திகேயன், ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த தங்கதுரை, ஆசிரியர் செல்வராசு, வாசுதேவன், செல்லியம்மன் கோவில் பூசாரி தங்கராசு மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்.
இங்குள்ள செல்லியம்மன் மரங்கள் சூழ்ந்த குளிர்ந்த இடத்தில், ஏரிக்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து மக்களுக்கு வேண்டிய வரத்தை வாரிவழங்கு வருகிறாள். தீராத வினைகளையும் தீர்த்து வைக்கிறாள் செல்லியம்மன். இந்த ஆலயத்தை, இவ்வூர்ப் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி பெருமுயற்சியெடுத்து, ஊர்மக்களின் ஒத்துழைப்போடும், குலதெய்வமாக வழிபடும் சேலம், ஆத்தூர், கோவை போன்ற மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் உதவியோடும் சிறப்பாக செய்துமுடித்தார்.
"ஒவ்வொரு மனிதனின் மனமும் எங்குவேண்டுமானாலும் தாவும். அப்படிப்பட்ட மதம் பிடித்த மனம் என்னும் யானையை, இறைவனது பாதம் என்னும் கட்டுத்தறியில் கட்டும் சங்கிலியே பக்தி. ஊசி தானாகவே காந்தத்தில் ஒட்டிக்கொள்வதுபோல, அழிஞ்சி மர விதைகள் தாமே ஒன்று சேர்ந்து அந்த மரத்தின் தண்டிலேயே ஒட்டிக்கொள்வதுபோல இறைவனிடத்தில் அனைவரும் வசியப்படுவதே பக்தி' என்கிறார் ஆதிசங்கரர். அதுபோன்று பக்தியை மக்கள் தொண்டங்குறிச்சி கிராமத்திலுள்ள தெய்வங் களிடம் செலுத்தி நன்மையடைகி றார்கள். இந்த ஊரிலுள்ள தெய்வங்களை பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாடிவந்து வழிபடுகிறார் கள்.
இவ்வூர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரி லிருந்து தெற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஆலயத்திற்குச் சென்றுவர வேப்பூரிலிருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
ஆலயத் தொடர்புக்கு: 94893 88969