Advertisment

நன்றே செய் இன்றே செய்! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/do-it-today-yogi-sivananda

"ன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.'

இன்றைய சூழலில் சில திருமணப் பத்திரிகைகளில் இந்தத் திருக்குறளை ஒரு சுலோகம்போல் அச்சிடுகின்றனர். அத்துடன் சரி. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அன்பு, அறம் இரண்டும் உடையதாக இருக்கவேண்டும். அதற்கு இறைவழிபாடு மிக அவசியம். பக்தியுடன்கூடிய வாழ்க்கை நம்மை பிறவித் துயரிலிருந்து காப்பாற்றும்.

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.'

Advertisment

அறக்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் திருவடிகளை இடை விடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடப்பது இயலாது.

இந்தத் திருக்குறளுக்கு சிறிதும் மாறாத வண்ணம் சிவபெருமாள்மீது அதிதீவிரமாக பக்திகொண்ட ஒரு பக்தரைப் பற்றியும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகைக்காரோணம் என்னும் இடத்தில் அமைந்துள்ள காயாரோகநாதர் ஆலயத்தைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

நாகப்பட்டினம் கடற்கரையோரம் அமைந்துள்ள முளைப்பாடி எனும் குப்பத்தில் அதிபத்தர் எனும் மீனவர் வாழ்ந்துவந்தார். அவர் சிவபெருமான்மீது அதி தீவிர பக்தி கொண்டிருந்தார். அதன்காரணமாக அவர் அதிபத்தர் என்று அழைக்கப்பட்டார். மீன் பிடிப்பதே இவரது தொழிலாகும். நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும்போது கிடைக்கும் முதல்மீனை கடலில் விட்டு, இறைவனுக்குத் தனது காணிக்கையாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Advertisment

இவரின் அன்பை சோதிக்க விரும்பிய இறைவன் அவரின் வலையில் மீன்கள் குறைவாக சிக்குமாறு செய்தார். நாளடைவில் மீன்கள் மிகக்குறைந்து எப்போதாவதுதான் மீன்கள் கிடைக்கும். அதிபத்தரோ தனது வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருமுறை ஒரேயொரு மீன் கிடைத்தது. அதையும் இறைவனுக்குக் காணிக்கையாக கடலில் விட்டுவிட்டு வந்து விட்டார்.

ஒருநாள் அவர் வீசிய வலையில் ஒளி வீசக் கூடிய தங்கமீன் ஒன்று கிடைத்தது. அதைக் கண்ட அதிபத்தருடன் வந்தோர், "இந்த மீன் விலைமதிப்பற்றது! எனவே இதை நாம் விற்றால் பல குடும்பங்கள் பல ஆண்டுகாலம் வறுமை யின்றி வாழலாம்'' என்று அதிபத்தரிடம் வலியுறுத்திக் கூறினார்கள். ஆனால் அதிபத் தரோ ஈ

"ன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.'

இன்றைய சூழலில் சில திருமணப் பத்திரிகைகளில் இந்தத் திருக்குறளை ஒரு சுலோகம்போல் அச்சிடுகின்றனர். அத்துடன் சரி. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அன்பு, அறம் இரண்டும் உடையதாக இருக்கவேண்டும். அதற்கு இறைவழிபாடு மிக அவசியம். பக்தியுடன்கூடிய வாழ்க்கை நம்மை பிறவித் துயரிலிருந்து காப்பாற்றும்.

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.'

Advertisment

அறக்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் திருவடிகளை இடை விடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடப்பது இயலாது.

இந்தத் திருக்குறளுக்கு சிறிதும் மாறாத வண்ணம் சிவபெருமாள்மீது அதிதீவிரமாக பக்திகொண்ட ஒரு பக்தரைப் பற்றியும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகைக்காரோணம் என்னும் இடத்தில் அமைந்துள்ள காயாரோகநாதர் ஆலயத்தைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

நாகப்பட்டினம் கடற்கரையோரம் அமைந்துள்ள முளைப்பாடி எனும் குப்பத்தில் அதிபத்தர் எனும் மீனவர் வாழ்ந்துவந்தார். அவர் சிவபெருமான்மீது அதி தீவிர பக்தி கொண்டிருந்தார். அதன்காரணமாக அவர் அதிபத்தர் என்று அழைக்கப்பட்டார். மீன் பிடிப்பதே இவரது தொழிலாகும். நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும்போது கிடைக்கும் முதல்மீனை கடலில் விட்டு, இறைவனுக்குத் தனது காணிக்கையாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Advertisment

இவரின் அன்பை சோதிக்க விரும்பிய இறைவன் அவரின் வலையில் மீன்கள் குறைவாக சிக்குமாறு செய்தார். நாளடைவில் மீன்கள் மிகக்குறைந்து எப்போதாவதுதான் மீன்கள் கிடைக்கும். அதிபத்தரோ தனது வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருமுறை ஒரேயொரு மீன் கிடைத்தது. அதையும் இறைவனுக்குக் காணிக்கையாக கடலில் விட்டுவிட்டு வந்து விட்டார்.

ஒருநாள் அவர் வீசிய வலையில் ஒளி வீசக் கூடிய தங்கமீன் ஒன்று கிடைத்தது. அதைக் கண்ட அதிபத்தருடன் வந்தோர், "இந்த மீன் விலைமதிப்பற்றது! எனவே இதை நாம் விற்றால் பல குடும்பங்கள் பல ஆண்டுகாலம் வறுமை யின்றி வாழலாம்'' என்று அதிபத்தரிடம் வலியுறுத்திக் கூறினார்கள். ஆனால் அதிபத் தரோ ஈசனிடம் தான் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மீற விரும்பவில்லை. கிடைத்த மீனின் மதிப்பைப் பார்க்கவில்லை. மாறாக தனது கொள்கையைக் குறிக்கோளாகக்கொண்டு அந்த மீனைக் கடலிலேயே இறைவனுக்குக் காணிக்கையாக்கினார்.

சிவபெருமானின் சோதனையில் அதிபத்தர் புடம்போட்ட தங்கமாக விளங்கினார். அதனால் இறைவன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்து, அவருக்கு சிவலோகப் பதவி தந்து, தனது அடியாராக தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.

ஆதிபத்தர் இறைவன்மீது கொண்டிருந்த அன்பையும், கடைப்பிடித்த அறத்தையும் நினைவுபடுத்தும்வகையில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத் தில் உற்சவ அதிபத்தர் படகில் கடலுக் குச் சென்று மீன் பிடிக்கும் நிகழ்ச்சி யும், அப்போது அங்கே இறைவன் சந்திரசேகரர் காளையுடன் காட்சி தரும் நிகழ்வும் முறைதவறாமல் நடைபெற்றுவருகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் அதிபத் தரும் ஒருவராக விளங்குகிறார்.

சித்தர் பெருமக்களில் ஒருவரான அழுகண்ணிச் சித்தரின் ஜீவசமாதியும் இங்கு அமைந்துள்ளது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.

சோழவளநாட்டின் தென்கரைத் தலங்களுள் 82-ஆவது தலமாக நாகை காயாரோகநாதர் ஆலயம் விளங்குகிறது. பன்னிரண்டு சிவாலயங்களின் நடுவில் அமைந்துள்ளதால் சிவராசதானி என்று இத்தலம் விளங்குகிறது.

நாகர்கள் வாழ்ந்த கடற்கரையை ஒட்டிய நகர் என்பதால் நாகர்பட்டினம் எனப்பட்டு பின்னர் நாகப்பட்டினமாக வழங்கப்படுகிறது. அதைப்போன்று அட்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் வணங்கிய கடற்கரைப் பட்டினம் என்பதால், இத்தலம் நாகப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாகவும் காரணம் கூறுகின்றனர். காரோணம் என்பது கோவிலின் பெயராகும். புண்டரீக முனிவரை இறைவன் தன் உடலோடு அணைத்துக்கொண்டதால், இறைவனுக்கு காயாரோகநாதர் எனும் திருப்பெயர் உருவானது.

முன்பொரு சமயம் இப்பகுதியை ஆண்ட நாகமன்னனுக்கு இறைவன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பருவமடைந்த நிலையில் தனது மார்பில் மூன்று தனங்களுடன் வளர்ந்தது. இதனைக் கண்டு மனம் வருந்திய மன்னன் இறைவனிடம் புலம்பினார். அப்போது எம்பெருமாள், "இவளுக்குரிய கணவன் வரும்போது ஒன்று மறைந்துவிடும்; கவலை வேண்டாம்' என்று அருளாசி வழங்கினார். அவ்வாறே சாலிசுகன் என்னும் மன்னனைக் கண்ட அவளுக்கு அந்தக் குறைபாடு நீங்கியது. அதன்பின் நாகமன்னன் இறைவனது ஆலயத்திற்குத் திருப்பணிகள் செய்து நன்றிக் கடனாற்றினான்.

இத்தலம் முசுகுந்த மன்னன் நிறுவிய சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகவும், சக்தி பீடம் 64-ல் ஒன்றாகவும் விளங்குகிறது. மேலும் அன்னை பார்வதியின் பல்வேறு பருவ காலத்தைக் குறிக்கும் காசி, நாகை, மதுரை, காஞ்சி, திருவாரூர் வரிசையில் இரண்டாவது தலமாக நாகை காயாரோகணர் சிவலாயம் திகழ்கிறது. சுந்தரரால் 11 பதிகங் களும், திருநாவுக்கரசரால் 22 பதிகங்களும் பாடப்பெற்ற சிறப்புத் தலமாகவும் விளங்கு கிறது.

தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்மூலம் இத்தலத்தில் சுமார் இருபது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மிகவும் பழமை வாய்ந்த கல்வெட்டாக முதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டு திகழ்கிறது. சேது மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் இத்தலத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரங்களை பல்வேறு கல்வெட்டுகளும் பறைசாற்றுகின்றன.

காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி எனும் வரிசையில் இத்தலத்தில் நாகை நீலாயதாட்சி அம்பாள் புகழ்பெற்று விளங்குகிறாள். திருமணத்திற்கு முந்தைய கோலத்தில் காட்சிதருகிறாள்.

ss

அன்னைக்கு கருத்தடங்கண்ணி எனும் அழகிய பெயரும் உண்டு. திருமண பாக்கியம் வழங்கும் தலமாகவும் திகழ்கிறது.

ஆடிப்பூரத்தன்று அன்னைக்கு சிறப்புப் பூஜைகளுடன், பீங்கானால் செய்யப்பட்ட வாகனத்தில் அன்னை உலாவருவது சிறப்பு டையதாகும். கன்னியாக விளங்கும் அன்னையைக் காவல்புரிந்து காக்கும்படி நந்திதேவரிடம் இறைவன் கட்டளையிட்டார். அன்னையோ நந்திதேவரிடம் தான் இறைவனைக் காண விரும்புவதாகக் கூறினாள். அதன்காரணமாக நந்திதேவர் தனது தலையை இறைவன் பக்கம் திருப்பி ஒரு பார்வையையும், மற்றொரு பார்வையை அன்னை நீலாயதாட்சிமீதும் வைத்திருக்கும் பாவனையில் அமைந்திருப்பது சிறப்பாகும். இதன்காரணமாக இவருக்கு இரட்டைப் பார்வை நந்தி என்னும் பெயரும் உண்டு.

இங்கு அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் முக்தி மண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள நவகிரகங்கள் சப்தவிடங்கத் தலங்களில் காணப்படும் அமைப்பைப் போன்று, மேற்கு நோக்கி நேர்வரிசையில் அமைந்துள்ளன. தசரத சக்கரவர்த்தி தன் நாட்டில் சனி தசையால் பஞ்சம் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பி சிவபெருமானை வணங்கினார்.

சிவபெருமானின் அருளால் சனிபகவான் அருள்கிடைத்து நாட்டில் சுபிட்சம் ஏற்பட் டது. இதன் நினைவாக தசரதர் நிறுவிய சனீஸ்வரர் சந்நிதி தெற்கு முகமாக அமைந்துள் ளது. இறைவனை தரிசிக்கும்போது நவகிரகங் களையும், மகாலட்சுமி சந்நிதியையும் ஒரே நேரத் தில் சந்திக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புகளைத் தாங்கிய இவ்வாலயத்தைச் சுற்றிலும் பன்னிரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. திருவை யாற்றில் சப்தஸ்தான விழா நடப்பதுபோல, நாகையிலும் வைகாசி மாதம் நடக்கும் பதினெட்டு நாள் விழாவில் பன்னிரண்டு சிவாலயங்களில் இருந்தும் ரிஷப வாகனங் களில் வீதியலா வந்து ஒன்றுகூடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இப்போது அந்த விழா நடைபெறுவதில்லை. இத்தலத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆதிசேடனின் நாகக் குடையுடன் சுந்தர விநாயகராக அருள்பாலிக்கின்றார்.

இத்தலத்தில் அமையப்பெற்ற தியாகராஜ ரின் பாத தரிசனத்தை வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை ஆகிய இரண்டு நாட்களில் கண்டு பரவசமடையலாம். அங்கு நடைபெறும் தியாகராஜரின் திருநடனம் வெகுவிமரிசையாக இருக்கும். இந்த நடனத் திற்கு பாராவாரா நடனம் என்று பெயர். இத்தலத்திலுள்ள புண்டரீக தீர்த்தத்தில் பைரவர் சிம்ம வாகனத்தில் காட்சிதருவது கூடுதல் சிறப்பாகும்.

சாலிச மன்னன் சிவபெருமானின் திருமணக் கோலத்தைக் காண விழைந்து, நாகையைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களிலும் கடுந்தவம் இருந்தான். அந்த தவத்தின் சிறப்பை உணர்த்தும்வகையில், திருவிழா நடைபெறும் காலங்களில் சுவாமி ஊர்வலம் நாகையைச் சுற்றி அமைந்துள்ள பொய்கைநல்லூர், பெறா லாட்சி, சிக்கல், பாலூர், வடகுடி, திக்கி, நாகை என்று ஏழு ஊர்களைச் சுற்றிவந்து காட்சிதந்து அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாகும். இத்தலத்தில் மாமரமே தல விருட்சமாக விளங்குகிறது. இதில் விளையும் காய்கள் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு எனும் மூன்று சுவையும் உடையது.

ss

வச்சிரம், முனி, பிரம்மம், காகம், அக்னி, சர்வம், தேவம், புண்டரீகம் என பல்வேறு தீர்த்தங்களுடன்கூடிய ஆலயமாக கம்பீரமாகக் காட்சிதருகிறது.

மிக முக்கியமாக ஒரு சிறப்பு- ஊரில் யாராவது கோவில் இருக்கும் பகுதியில் மரண மடைந்துவிட்டால், உடலை எடுத்துச் செல்லும்வரை ஊரிலுள்ள கோவில்கள் மூடிவிடுவார்கள்.

ஆனால் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்தர் வாழ்ந்த நம்பியான் குப்பத்தில் யார் இயற்கை மரணமடைந்தாலும், அவரது உடலை நாகை காயாரோகணேசுவரர் ஆலய வாசலுக்குக் கொண்டுவருவார்கள். திருக்கோவில் வாசலும் திறந்தே இருக்கும். அங்கே அவ்வுடலுக்கு இறைவனின் சார்பாக மாலையும், ஆடையும், தீர்த்தமும் வழங்கப்படும். அதன்பிறகே அந்த உடலை மயானத்திற்குக் கொண்டுசெல்வார்கள். இந்த வழக்கம் வேறெந்த கோவில்களிலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொள்கை மாறாத இறையடியார்களின் உறவினர்களுக்கு இறைவன் செய்யும் நன்றிக் கடனாகவே இந்நிகழ்வு போற்றப்படுகிறது.

உயிருள்ளபோதே பயனுள்ளதைச் செய்யவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த அதிபத்தரின் பக்தி சிறப்பையும், அறச் சிறப்பையும் அறிந்தோம். நாம் வாழும் காலத்தில் அறம் செய்வதின் சிறப்பை திருமந்திரம்மூலம் அறிந்து தெளிவோம்.

"தன்னை அறியாது தான்நல்லன் என்னாது இங்(கு)

இன்மை அறியா(து) இளையார் என்று ஓராது

வன்மையில் வந்திடுங் கூற்றம் வருமுன்னம்

தன்மையும் நல்ல தவஞ்செய்யும் நீரே.'

உயிரைக் கொண்டு செல்ல வருகின்ற எமன், அவன் எப்படிப்பட்டவன், எத்தகைய தன்மையன் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்க மாட்டான். இவன் ஏழை, பணம் இருப்பவன், சிறுபிள்ளை என்றெல்லாம் பார்த்து உயிரைக்கொண்டு போகாமலிருக்கமாட்டான்.

உயிரைக் கவர்ந்துசெல்ல வரும் எமன் வலிமைமிக்கவன். எனவே அவள் வருவதற்குமுன்பாக, தானத்தையும் தவத்தையும் செய்யுங்கள் என்பதே திருமந்திர வாக்காகும்.

"நன்றே செய்.... அதுவும் இன்றே செய்' எனும் கோட்பாட்டிற்கிணங்க, தானம், தர்மம், தவம் என்பதையெல்லாம் நேரம் கடத்தா மல், காலம் கடத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். நடந்ததையும் இழந்ததையும் பற்றிய வருத்தம் வேண்டாம். நாளை நடக்கப்போவதை நினைத்து கவலை வேண்டாம். இன்றைய நாள் இனியநாள்! அறம் செய்வோம். அகிலத்திற்கு அரனாக விளங்கும் எம்பொருன் சிவபெருமானின் அருளாசியையும் அருட்பேராற்றலையும் பெறுவோம்.

om010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe