"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவத்கீதையில் கண்ணபரமாத்மா கூறுகிறார்.
இந்த மாதத்தில்தான் தேவலோகத்தில் பகல்பொழுது ஆரம்பமாகிறது.
நமக்கு இருபத்து நான்கு மணிநேரம் கொண்டது ஒருநாள் என்றால், தேவர்கள் உலகத்தின் ஒருநாள் என்பது நமக்கு ஒருவருடமாகும் என்று வேதநூல்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க மார்கழிமாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி இறைவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
இந்த மாதத்தில் இயற்கையாகவே சிறப்பான பிராணவாயு (ஓசோன்) வெளிப்படுகிறது. அது மக்கள் நலத்திற்கு உகந்தது என்று அறிவியல் கூறுகிறது. அதனால்தான் அந்தக்காலத்தில் மார்கழி மாதம் முழுக்க பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு, ஒரு குழுவாக வீதி வீதியாகச்சென்று, இறுதியாக கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
பெண்கள் விடியற்காலையில் பசுஞ்சாணத்தை தூயநீரில் கரைத்து வீட்டின் வாசலி−ல் தெளித்து தூய்மை செய்து, பெரிய அளவில் கோலம்போடுவார்கள். அதிகாலையில் இவ்வாறு குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் உடல் வளம் பெறும். ஆனால் தற்பொழுது நாகரிகம் என்ற பெயரிலும், பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களில் அட
"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவத்கீதையில் கண்ணபரமாத்மா கூறுகிறார்.
இந்த மாதத்தில்தான் தேவலோகத்தில் பகல்பொழுது ஆரம்பமாகிறது.
நமக்கு இருபத்து நான்கு மணிநேரம் கொண்டது ஒருநாள் என்றால், தேவர்கள் உலகத்தின் ஒருநாள் என்பது நமக்கு ஒருவருடமாகும் என்று வேதநூல்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க மார்கழிமாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி இறைவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
இந்த மாதத்தில் இயற்கையாகவே சிறப்பான பிராணவாயு (ஓசோன்) வெளிப்படுகிறது. அது மக்கள் நலத்திற்கு உகந்தது என்று அறிவியல் கூறுகிறது. அதனால்தான் அந்தக்காலத்தில் மார்கழி மாதம் முழுக்க பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு, ஒரு குழுவாக வீதி வீதியாகச்சென்று, இறுதியாக கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
பெண்கள் விடியற்காலையில் பசுஞ்சாணத்தை தூயநீரில் கரைத்து வீட்டின் வாசலி−ல் தெளித்து தூய்மை செய்து, பெரிய அளவில் கோலம்போடுவார்கள். அதிகாலையில் இவ்வாறு குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் உடல் வளம் பெறும். ஆனால் தற்பொழுது நாகரிகம் என்ற பெயரிலும், பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீட்டில் வசிப்பதாலும் கோலமிடுவதற்கோ, ஆண்கள் பஜனைக் கோஷ்டியாகச் செல்வதற்கோ வசதியில்லாத நிலையுள்ளது. இருந்தாலும், ஒருசிலர் தங்கள் வீட்டுவாசல்முன் அழகிய வண்ணக்கோலங்கள் இடுவதையும் காணலாம். அந்தக் கோலத்தின் நடுவில் ஒரு மலர் வைத்து, கோலத்திற்கு அழகூட்டுவார்கள். பெரும்பாலும் கோலத்தின் நடுவில் பூசணிமலர் வைப்பதுதான் சிறந்தது. இம்மலர் நச்சுக்கிருமிகளை அழிக்கும் சக்திகொண்டது. தீயசக்திகளையும் அழிக்கும். இந்த பூசணிமலர் குறித்து புராணங்களில் பல தகவல்கள் உள்ளன. அந்த மஞ்சள்நிற மலர் எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு விளக்கமும் உள்ளது.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்மூண்டது மார்கழி மாதத்தில்தான். அப்போது பாண்டவர்களின் படையில் கலந்துகொண்ட வீரர்களின் வீட்டுவாசலி−ல் கோலமிட்டு, நடுவில் ஒரு பறங்கிப்பூவினை (பூசணிப்பூ) சாண உருண்டைமீது வைக்கும்படி பகவான் கண்ணன் கூறியிருந்தார். எந்த வீட்டின் கோலத்தின் நடுவில் மலர் வைக்கப்பட்டிருக் கிறதோ, அந்த வீட்டு ஆண்மகன் பாண்டவர்களின் போர்ப்படை யில் கலந்துகொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமே இது. அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை பகவான் அளித்தார்.
காலமாறுதல்களால், கோலத் தின் நடுவில் பறங்கிமலர் வைப்ப தற்கு சொல்லப்படும் காரணங்கள் சற்று வித்தியாசமானது. எத்தனைப் பூக்கள் கோலத்தின் நடுவில் இருக்கிறதோ, அத்தனைக் கன்னிப்பெண்கள் அந்த வீட்டில் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் வெளிப்படுத்தும் அடையாளமாக இருந்ததாம்.
மார்கழி மாதத்திற்கு தனுர்மாதம் என்ற பெயரும் உண்டு. சூரியன் தனுர் ராசியில் பிரவேசிப்பது மார்கழி மாதத் தொடக்கத்தில்தான்.
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் முதல் பாசுரம் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்' என்று ஆரம்பமாகிறது.
இம்மாதத்தில் விடியற்காலையில் திருமால் ஆலயங்களில் திருப்பாவையும், சிவாலயங்களில் திருவெம்பாவையும் ஒ−க் கும்.
மார்கழி மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜப் பெருமான் ஐந்தொழிலையும் புரிகிறார் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. இம்மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிகவும் போற்றப் படுகிறது.
சபரிமலை ஐயப்பன் மார்கழி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் அவதரித்தார். தொண்டரடிப் பொடியாழ்வார் மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் மண்டங்குடி திருத்தலத்தில் அவதரித்தார். மேலும் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையன்றுதான் மார்கழி மைந்தன் என்று போற்றப்படும் அனுமன் அவதரித்தார் என்று புராணம் கூறுகிறது.v திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர் களும் கடைந்ததும் மார்கழி மாதம்தான்.
பாற்கட−−ருந்து தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவைத் தேடி மாலை சூடியது இம்மாதத்தில்தான் என்கிறது புராணம். ஆண்டாள் மார்கழி விரதம் மேற்கொண்டு இம்மாதம் முழுக்க அதிகாலையில் எழுந்து நீராடி, தினமும் ஒவ்வொரு பாசுரமாகப்பாடி, ஸ்ரீமன் நாராயணனை மகிழ்வித்து அவர் மனதில் இடம்பிடித்ததும் இம்மாதத்தில்தான்.
அந்தக் காலத்தில் கன்னியர்கள் தாங்கள் விரும்பும் மணாளனை அடைவதற்காகவும், சுமங்க−கள் தாங்கள் விரும்பி ஏற்ற கணவர் தம்மைவிட்டு என்றும் பிரியாமல் அன்புடன் இருப்பதற்காகவும், இல்லறம் நல்லறமாக விளங்கவும் அம்பிகையை வழிபட்டு கார்த்தியாயினி நோன்பு நோற்றதும் மார்கழியில்தான். இந்த நோன்பினால் வேண்டியது கிட்டுவதுடன், உடல்நலமும் வளமுடன் திகழும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஐப்பசி மாதம் துலாஸ்நானம், கடைசி நாள், கார்த்திகை முதல்நாளும் போற்றப் படுவதுபோல் மார்கழி நீராடலும் சிறப் பிக்கப்படுகிறது.
காவேரிக் கரையோரங்களிலுள்ள ஊர்களில் வசிப்பவர்கள் இந்த நீராடலை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள திருவையாறு ஐயாறப் பர் ஆலயத்தின் தெற்கு கோபுர வாசலுக்கு நேரே, சுவாமி தீர்த்தம் தந்தருளும் காவேரி படித்துறை உள்ளது.
இங்கு காவேரி நீராடல் செய்வது குறித்து அப்பரடிகள் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். இங்கு நீராடும் பக்தர்களை செல்வந்தராகவும் ஆரோக்கியமாகவும் வாழ அருள்புரிகிறாறாம் ஐயாறப்பர்.
மார்கழிமாதக் கடைசி நாளன்று காவேரி நதி தேவதை இங்கு தங்கி ஐயாறப்பரை வழிபட்டு, மறுநாள் தைமாதப் பிறப்பன்று வருணனை அடைந்ததாகப் புராணம் கூறுகிறது. எனவே, பெண்கள் இன்றும் மார்கழி கடைசி இரவு இங்கு தங்கி, தை முதல்தேதியன்று காவேரியில் நீராடி, படித்துறையில் பொங்கல் படைத்து, தானதர்மங்கள் செய்கிறார்கள்.
அகலமான படித்துறையும், இருபுறமும் ரதவடிவில் அமைந்திருக்கும் வசந்த மண்டபமும், அதன் சிறப்பான சிற்ப எழிலும் அழகிற்கு அழகூட்டுகிறது என்றால் மிகையல்ல.
பல சிறப்புகள் பெற்ற இம்மாதம் பீடுடைய மாதம் என்பதால் (அதாவது பெருமை மிகுந்த மாதம்) தெய்வ வழிபாட்டிற்குரிய மாதம் என்று போற்றப்படுகிறது.