குழந்தைகள்முதல் பெரியோர்வரை அனைவரையும் ஈர்க்கும் மகிழ்ச்சிகரமான பண்டிகை தீபாவளி. அதிகாலை நீராடல், புத்தாடை, வழிபாடு, விதவிதமான இனிப்புப் பண்டங்கள், பட்டாசு, மத்தாப்பு, பெரியோரிடம் ஆசி என்று அந்தநாளே மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைந்தோடும்.
அஞ்ஞான இருளகற்றி நம்முள் ஞான தீபமேற்றும் தீபாவளித் திருநாள் குறித்து புராணங்களில் பல தகவல்கள் உள்ளன. அந்த வகையில் இது எமதர்மராஜனுக்கும் பிடித்த பண்டிகை என்று ஞானநூல்கள் போற்றுகின்றன.
வடஇந்தியாவில், தீபாவளித் திருநாள் ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.
தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று நம் இல்லங்களுக்கு திருமகள் வருவதாக ஐதீகம். திருமகளை வரவேற்கும்விதமாக இல்லந்தோறும் விளக்குகள் ஏற்றிவைப்பார். மேலும் ஸ்ரீலட்சுமி பூஜையும் நடைபெறும்.
இந்

இந்தத் திருநாளை ஒடிஸாவில் "தனதிரயோதசி' என்று போற்றுகிறார்கள்.
அன்று தங்களது வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றிவைப்பர். வசதியுள்ளவர்கள் அன்று தங்கநகைகள் வாங்குவதும் உண்டு.
மகாளயபட்ச நாட்களில்- குறிப்பாக மகாளயபட்ச அமாவாசையன்று முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில் பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி வருபவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ரு லோகத்திற்குத் திரும்பு கின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றவேண்டுமாம். சாஸ்திரங்களும், தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதியன்று மாலை நேரத்தில் "எமதீபம்' ஏற்றவேண்டும் என்கின் றன. எமதீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதியில்லாதவர்கள், வழக்கமாக சுவாமிக்கு விளக்கேற்றும்போது தனியே ஓர் அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல; எமதர்மராஜனும் மகிழ்ச்சியடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது; நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
அடுத்த நாள் தீபாவளித் திருநாள்- தேய்ப்பிறை சதுர்த்தசியன்று வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றிவைத்து, அதிகாலை வேளையில் எண்ணெய்க் குளியல்செய்து, குலவழக்கப்படி பூஜைகள் செய்வர். சில குடும்பங்களில் இந்த நாள் விரதநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மூன்றாம் நாள் விநாயகர், சரஸ்வதிதேவி மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன், வணிகர்கள் புதுக்கணக்கும் எழுதுவர். சில இடங்களில் (குடும்பங்களில்) கேதாரகௌரி விரதமும், லட்சுமிகுபேர பூஜையும் மேற்கொள்வர்.
நான்காம் நாளானது இந்திரன், கோகுலவாசிகள்மீது கோபம்கொண்டு பலத்த மழையைப் பெய்விக்க, அதிலிருந்து அனைவரையும் பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக அனுஷ்டிக்கப் படுகிறது. வடநாட்டில் இந்த தினத்தை ஒருசிலர் புதுவருட பிறப்பாகக் கொண்டாடுவர்.
ஐந்தாம் நாளையே (ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை) "எம துவிதா'வாக வடமாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். "பால்பிஜி' என்றும், "பையாதுஜ்' என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருநாள்.
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் இந்த நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒருமுறை... ஐப்பசி மாத வளர்பிறை துவிதியையன்று தன் சகோதரி "எமி'யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து மாலைசூட்டி, திலகமிட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் சகோதர பாசத்தைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது எமதர்மன், "இந்த தினத்தில் தன் சகோதரியின் கைகளால் திலகமிட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்தமாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாது' என்று வரம் தந்தாராம். எனவே எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள் தங்கள் சகோதரர்களை சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள்; வாழ்த்துப் பெறுகிறார்கள்.
சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, "எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன.
ஆக, தீபாவளியை ஒட்டிவரும் எம துவிதியை மற்றும் எமதீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் எமனுக்கு உகந்தவை. ஆதலால், தீபாவளிப் பண்டிகையை எமதர்மன் விரும்புவதாக ஆன்றோர்கள் கூறுவர்.