Advertisment

பனை ஓலையில் பக்தி ஓவியங்கள்! தொகுப்பு : விஜயா கண்ணன்

/idhalgal/om/devotional-paintings-palm-leaves-compiled-by-vijaya-kannan

ம் தேசம் விவசாய உயர்வு காணும் லட்சிய நோக்கில், "பனை பொக்கிஷத்தை மீட்டெடுப்போம்' என்று பனை ஓலையில் உயிர் ஓவியக் கண்காட்சி மற்றும் பனை ஓலைச் சித்திரப் பயிற்சிப் பட்டறை என இரண்டும் சேர்ந்த விழா ஒன்று மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக மையத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.

Advertisment

நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்தக் கண்காட்சியில் ஒடிசாவில் இருந்து அனுபவமிக்க பனை ஓவியக்கலையை அறிந்த ஓவியர்கள் வந்திருந்தனர். பனை ஓலை ஓவியங்கள் வரைய கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்த பெரிய வர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள், சிறார்களுக்கு ஒடிசா ஓவியர்கள் பனை ஓலையில் ஓவியங்கள் வரையவும் மற்றும் பனை ஓலை யில் கலைப் பொருட்கள் செய்வதற்கும் சிறப்புப் பயிற்சியை அளித்தனர். அது வந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது.. பெரும் கலைக் கோவிலுக்குள் நுழைந்த உணர்வையும் பெற்றனர் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்.

aa

இந்தக் கண்காட்சியில் முன்னூறு ரூபாய் முதல் எழுபத்தி ஐயாயிரம் வரை விலை மதிப்புள்ள பனை ஓலையில் செய்யப்பட்ட விதவிதமான ஓவியங்கள், கடவுள் ஓவியங்கள், அதிநவீன ஓவியங்கள், பனை ஓலையால் செய்யப்பட்ட பல்வேறு வண்ணமயமான கலைப் பொருட்கள் என அரங்கம் முழுக்க நிறைந்திருந்தது.

ஒடிசா ஓவியர்களின் கை வண்ணத் தில் பூரி ஜகன்னாதர் ஓவி

ம் தேசம் விவசாய உயர்வு காணும் லட்சிய நோக்கில், "பனை பொக்கிஷத்தை மீட்டெடுப்போம்' என்று பனை ஓலையில் உயிர் ஓவியக் கண்காட்சி மற்றும் பனை ஓலைச் சித்திரப் பயிற்சிப் பட்டறை என இரண்டும் சேர்ந்த விழா ஒன்று மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக மையத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.

Advertisment

நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்தக் கண்காட்சியில் ஒடிசாவில் இருந்து அனுபவமிக்க பனை ஓவியக்கலையை அறிந்த ஓவியர்கள் வந்திருந்தனர். பனை ஓலை ஓவியங்கள் வரைய கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்த பெரிய வர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள், சிறார்களுக்கு ஒடிசா ஓவியர்கள் பனை ஓலையில் ஓவியங்கள் வரையவும் மற்றும் பனை ஓலை யில் கலைப் பொருட்கள் செய்வதற்கும் சிறப்புப் பயிற்சியை அளித்தனர். அது வந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது.. பெரும் கலைக் கோவிலுக்குள் நுழைந்த உணர்வையும் பெற்றனர் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்.

aa

இந்தக் கண்காட்சியில் முன்னூறு ரூபாய் முதல் எழுபத்தி ஐயாயிரம் வரை விலை மதிப்புள்ள பனை ஓலையில் செய்யப்பட்ட விதவிதமான ஓவியங்கள், கடவுள் ஓவியங்கள், அதிநவீன ஓவியங்கள், பனை ஓலையால் செய்யப்பட்ட பல்வேறு வண்ணமயமான கலைப் பொருட்கள் என அரங்கம் முழுக்க நிறைந்திருந்தது.

ஒடிசா ஓவியர்களின் கை வண்ணத் தில் பூரி ஜகன்னாதர் ஓவியங்கள் பூரிக்க வைத்தது. பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியருடன் இருக்கும் ஓவியங்கள் கோலாகலமாக இருந்தது சிறுவர்கள், சிறுமிகள் பனை ஓலையில் செய்யப்பட்ட விதவிதமான கலைப் பொருட்களை கண்டுகளித்தும் வாங்கியும் மகிழ்ந்தனர்.

நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னால் ஐம்பது கோடி பனைமரங்கள் தமிழகத்தில் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இப்போது இரண்டரை கோடி மரம்தான் இங்கே இருக்கிறது. இங்கே பனை ஓலை கலை பயிற்சி பெறுபவர்கள் பயிற்சி தருபவர்களாக மாறி தமிழத்தில் பனை ஓலை கலையை தழைக்க வைக்கவேண்டும்.

பனை மரம் பணமரம்! பனைமூலம் கிடைக் கும் பனங்கருப்பட்டி, பதனீர், நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு இவற்றை பெரும் அளவில் உருவாக்கி நிறைய சம்பாதிக்க முடியும். பனையின் பல்வேறு சிறப்புகளை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்!' என்று நிகழ்ச்சியில் பேசினார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேல்.

உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி. மூத்த மொழி தமிழ் என்பதைப்போல் தமிழர் பண் பாட்டு ஆணிவேராக பனை மரம் இருந்துள் ளது. தமிழர் நாகரீகத்தை வளர்க்கும் ஆதார மாகவும் பனை மரம் இருந்துள்ளது என திருப்பூர் தொழிலதிபர் சுந்தரராஜ் உரையாற்றி னார்.

"ஒடிசா மாநிலம் சென்று அங்கே பனை ஓலை கலைஞர்களை நான்தான் அழைத்து வந்து இங்கே பயிற்சிதர வைத்துள்ளேன். இதற்காக பெருமைப்படுகிறேன். பனைமரத்தை குலசாமியாக மக்கள் வணங்கும் கிராமங்கள் இன்றும் உள்ளது. மூன்று பனை மரங்களை சிவன், விஷ்ணு, பிரம்மா என்று கும்பிட்டு பூஜைசெய்தும் வருகிறார்கள்.

எனவே இந்த பனை வளர்ப்பு, பனை கலை வளர்ப்பை தொடர்ந்து செய்வோம்' என்றார் மிராக்கிள் ட்ரீ ஈஊஞ சரவணகுமரன்.

நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக "பட்டிமன்ற நடுவர்' பேராசிரியர்- முனைவர் கு. ஞானசம்பந்தம் அவர்கள் வருகைதந்து அவருக்கே உரிய அசத்தலான பாணியில் பேசினார்.

"இங்கே பயிற்சி தரும் ஒடிசா பனை ஓலை ஓவிய கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது தந்தேன். இவர்கள்போல் பல தமிழர்கள் பயிற்சி தரும் பனை ஓலை ஓவிய கலைஞர்கள் ஆகி அவர்களுக்கும் பாராட்டு, விருதுகள் தர விரும்புகிறேன்! கடவுள்களும், பழமைகளும் பழசு ஆகாமல் நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக் கொண்டேவருகிறது. பழைய பேப்பர், பழைய டிரஸ் என்று சொல்லலாம். பழைய அப்பா, பழைய அம்மா என்று சொல்ல முடியாதே! இராமபிரானால் அகலிகை சாபவிமோசனம் பெற்றபோது உடன் வந்த குரு விசுவாமித்திரர் இராமரிடம் இப்படி கூறினார். தாடகி என்ற அரக்கியை கொன்ற போது உன் கைவண்ணம் அங்கு கண்டேன். கல்லாக இருந்த அகலிகை உன் பாதம்பட்டு கன்னிகை ஆனதை பார்த்து உன் கால் வண்ணம் இங்கு கண்டேன் என்றார். அது போல் நான் இங்கே பயிற்சி தந்த ஒடிசா ஆண்கள் மற்றும் அவர்களிடம் பயிற்சிபெற்ற பல பெண்கள் சில ஆண்களின் ஓவிய கை வண்ணம் இங்கு கண்டு உங்களைப்போல் நானும் பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த ஓவிய கண்காட்சியை காண கண்கோடி வேண்டும். ஆனா நான் உட்பட எல்லாரும் ரெண்டு கண்ணாலேயே நல்லா பார்த்து மகிழ்ந்து விட்டோம். பேப்பரில், போர்டில், தரையில் ஓவியங்கள் வரைந்து விடலாம். ஆனால் பனை ஓலையில் ஓவியங்கள் வரைவது எழுத்தாணியை வைத்து பனை ஓலை சுவடிகளில் சங்க காலங்களில் எழுதியதைவிட கடினமானது. இதனை பனை ஓலை ஓவிய சாதனை கண்காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். தென்னைமரத்தில் ஏறுவது எளிது.

பனைமரம் செதில் செதிலாக இருப்பதால் ஏறுவது கடினம். அதனால் விட்டுவிட முடியாது. பனைமரங்கள் பணம் காய்ச்சி மரங்களாக உதவுகிறது. தமிழர் பெருமை நிமிர்ந்து இருப்பதுபோல் பலகோடி பனை மரங்கள் தலைநிமிர்ந்து வளர்க்கப்பட்டு லாபம் ஈட்டப்பட வேண்டும். பனைமரம்போல வளர்ந்து இருக்கயே! என்று உயர மாய் இருப்பவர்களை கிண்டல் செய்வதுபோல் பனைமர உயரத்தை கேலி செய்ய முடியாது. ஏனென்றால் பனை மரம் தானும் உயர்ந்து வளர்க் கும் விவசாயி பலரின் வாழ்வாதாரத் தையும் உயர்த்தி உன்னத புகழ் பெறுகிறது.

மகாகவி பாரதியார் பாடிய போது முப்பது கோடி முகம் உடையாள் என்று நம் பாரத தேச ஜனத்தொகை முப்பது கோடியாக இருந்தது. ஆனால் பனை மரங்கள் 110 கோடி இருந்தது. இப்போது நம் நாட்டின் ஜனத்தொகை 130 கோடி ஆகிவிட்டது. பனைமரங்கள் வெட்டப்பட்டு இப்போது வெறும் பத்துகோடி ஆயிடிச்சு. நம் முன்னோர் களுக்கு பனைமரத்தின் அருமைகள் தெரிந்ததால் நிறைய வளர்த்தார்கள். சேரர்களின் மாலை பணம்பூமாலை. பாண்டியனுக்கு வேப்பம்பூ மாலை, சோழர்களுக்கு ஆத்தி மாலை. நாம அடி ஆத்தின்னு சொல்றோமே அது இல்லை. ஆத்தி என்பது ஒரு பூ!

கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் பலராமனின் கொடி பனைக்கொடிதான்!

பனைமரங்கள் பற்றி அதன் பெருமைகள் பற்றி பலநூல்கள் எழுதப் பட்டுள்ளது. அவற்றை படிக்கவேண்டும். நொங்கு சாப்பிடுவது சுவையான விஷயம். நொங்கு பதனீரை கிளாசில் வாங்கி சாப்பிடக்கூடாது. பனைகீற்றில் மடித்து வைத்து ஊற்றி குடித்தால்தான் தனிச்சுவையை உணரமுடியும். நாங்க சின்னப் பசங்களாக இருந்தபோது இரண்டு பனங் காய்களை வண்டிபோல் செய்து ஓட்டி மகிழ்ந்திருக்கிறோம். இந்த பனை ஓலை ஓவியங்கள் சிறிய சைஸ் முதல் பெரிய சைஸ்வரை வரைகிறார்கள். சில ஓவியங்கள் வரைந்து முடிக்க பல மாதங்கள்கூட ஆகுமாம். இங்கே கண்காட்சியில் தெய்வ ஓவியங்கள் மிக வித்தியாசமாக பத்தி பரவசப்படவைக்கிறது. பனை ஓலை கலைப் பொருட்களும் அடடா எத்தனை அழகு என்று வியக்க வைக்கிறது. பனைமரங்கள் உடல் நலனுக்கு உகந்தது. பேராசிரியரே சொல்லிட்டார்னு கள் குடிக்க ஓடி விடாதீர்கள். எதையும் அளவாக சாப்பிட்டால் அமிர்தம். அளவு மீறினால் விஷம். எனவே பனை மரங்கள் வளர்த்து பணமழை பொழிய வைப்போம். பனை ஓலை ஓவியக்கலை வளர்த்து நம் ஓவிய திறமை, பனை கலைப் பொருட்கள் செய்யும் திறமை வளர்த்து பனைமரம்போல் வாழ்வில் உயர்ந்து சிறப்பு பெறுவோம்!!' என்று நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார் முனைவர் கு. ஞானசம்பந்தம்.

படங்கள்: விஜயாகண்ணன்

om010724
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe