"தனம்தரும் கல்விதரும்
ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே.'
இறையருளால் எல்லாமே கிட்டும் என்று உறுதிபடக் கூறுகிறார் அபிராம பட்டர்.
கண்ணன் கீதையில், "மா சுச'- "யாமிருக்க பயமேன்' என்று கூறுகிறாரே- அத்தகைய உத்தரவாதம் இது. ஆனால் இது ஒருவழிப் பாதையல்ல. பக்தனின் கடமையும் உள்ளடங்கியது. உள்ளன்புடன் பணிந்தால் அருள்பெறலாம்.
பக்தன் பெரியவனா? பகவான் பெரியவனா?
அத்வைதம் கூறும்- "அஹம் பிரம்மாஸ்மி; தத் த்வம் அஸி' என்றெல்லாம்! ஸ்ரீமத் பாகவதம் அம்பரீஷன் சரிதத்தில்
"தனம்தரும் கல்விதரும்
ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே.'
இறையருளால் எல்லாமே கிட்டும் என்று உறுதிபடக் கூறுகிறார் அபிராம பட்டர்.
கண்ணன் கீதையில், "மா சுச'- "யாமிருக்க பயமேன்' என்று கூறுகிறாரே- அத்தகைய உத்தரவாதம் இது. ஆனால் இது ஒருவழிப் பாதையல்ல. பக்தனின் கடமையும் உள்ளடங்கியது. உள்ளன்புடன் பணிந்தால் அருள்பெறலாம்.
பக்தன் பெரியவனா? பகவான் பெரியவனா?
அத்வைதம் கூறும்- "அஹம் பிரம்மாஸ்மி; தத் த்வம் அஸி' என்றெல்லாம்! ஸ்ரீமத் பாகவதம் அம்பரீஷன் சரிதத்தில் பகவான், "அஹம் பக்த பராதீன: ஹிஅ ஸ்வதந்த்ர இவ த்விஜ'- "நான் பக்தர்களின் அடிமை; எனக்கு சுதந்திரமில்லை' என்கிறார்.
"ஸாதவோ ஹ்ருதயம் மஹ்யம்
ஸாதூனாம் து ஹ்ருதயந்து
அஹம் மதண்யத்தே நஜானந்தி
நாஹம் தேப்யோ மனாகபி'-
"சாதுக்கள் இதயத்தில் நான் இருக்கிறேன்; என் இதயத்தில் சாதுக்கள் உள்ளனர். அவர்கள் என்னைத் தவிர வேறெதையும் அறிவதில்லை; நானும் அவ்வாறே' என்கிறார். ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய துதி.
பகவான் இவ்வாறு கூறக் காரணமென்ன?
அம்பரீஷன் என்னும் அரசன் ஆழ்ந்த விஷ்ணுபக்தன். ஏகாதசி விரதமிருந்து துவாதசி யில் உரிய நேரத்திற்குள் உணவுண்பான்- மற்றவர்களுக்கும் அளித்தபின்பு. அவனது பக்தியை மெச்சிய மகாவிஷ்ணு தனது சக்க ரத்தை அவனுக்குக் கொடுத்தாராம். ஒருசமயம் துர்வாச முனிவர் அம்பரீஷன் அரண்மனைக்கு வந்தார். அவரோ மிகுந்த கோபம் குணம் உள்ளவர்; சாபம் கொடுப்பதில் வல்லவர்.
அவர் மன்னனிடம், "நான் யமுனையில் நீராடிவிட்டு ஆராதனை முடித்து உணவருந்த வருகிறேன்'' என்று சொல்-ச் சென்றார்.
அம்பரீஷனுக்கு மகிழ்ச்சி- இன்று ஒரு மிகப்பெரிய மகாமுனி துவாதசி பாரணைக்கே வருகிறாரே என்று! விரதத்தை நேரத்தில் முடிக்கவேண்டும் என்பது நியதி. துர்வாசர் வருவதற்கு நேரமாயிற்று. ஒருவரை அழைத்த பின் அவர் வருவதற்குள் உணவுண்பது பாவம். அதுவும் துர்வாச முனிவர் வராமல் எவ்வாறு உணவருந்துவது? என்ன செய்யலாமென்று அங்கிருந்த பெரியோரிடம் கேட்டான் அம்பரீஷன். "ஒரு உத்தரணி (சிறு கரண்டி) நீர் குடித்தால் அது விரத பங்கமாகாது; உணவுண் டதுபோலும் ஆகாது' என்று அவர்கள் சொல்ல, அம்பரீஷன் அவ்வாறே செய்தான். பிறகு துர்வாசருக்காகக் காத்திருந்தான்.
இதனைத் தவ வ-மையால் உணர்ந்த முனிவர் வந்து, "எனக்கு உணவளிக்கும் முன் நீ பாரணை செய்தாயா?'' என்று கோபத்துடன் கேட்டு, தனது ஜடாமுடியி-ருந்து ஒன்றைக் கிள்ளி அரசன்மீது வீச, அது ஜுவாலையாக மாறியது. அம்பரீஷனது வேண்டுகோளை- மன்னிப்பை அவர் ஏற்கவில்லை.
மகாவிஷ்ணு அவனுக்குக் கொடுத்த சக்கராயுதம் பூஜையில் இருந்தது. துர்வாசரின் ஜுவாலை அம்பரீஷனை நோக்கி வர, சக்கரா யுதம் தானே எழுந்து அதனைத் தடுத்து, அதை ஏவிய துர்வாசரைத் துரத்தியது. அவர் வியந்து, பயந்து ஓடினார். அவரைக் காப்பாற்ற எவரும் முன்வரவில்லை.
பிரம்மலோகம் சென்று காப்பாற்றுமாறு பிரம்மாவிடம் வேண்டினார். அவர் இசைய வில்லை. கயிலை சென்று சிவபெருமானை வேண்டினார். அவரும் "என்னால் இயலாது' என்று கூறிவிட்டார். வைகுண்டம் சென்று மஹா விஷ்ணுவை வேண்ட, அவர்கள் கூறியபடியே, "என்னால் எதுவும் செய்ய இயலாது. நான் பக்தனின் அடிமை. எனவே நீர் அம்பரீஷனையே நாடிச்செல்' என்றார்.
வியந்த துர்வாசர், விதியே என்று அம்பரீஷ னைச் சரணடைய, சுதர்சன சக்கரம் அவனது பூஜையறையில் அமர்ந்தது; துர்வாசரின் பயமும் அகன்றது. அதுவே பக்த- பகவான் ஈடுபாடு!