தெய்வத் தமிழின் சிறப்பு! - ஸ்ரீ ஞானரமணன்

/idhalgal/om/deivath-tamil-special-sri-gnanaraman

ரு சமயம் காஞ்சி மாமுனிவரை தரிசிக்க "வாசீசுகலாநிதி' கி.வா.ஜ. அவர்கள் வந்திருந்தார். அப்போது பெரியவர், ""உமக்கு தமிழின் சிறப்பு என்னவென்று தெரியுமா?'' என்று கேட்க, அவர் மிகவும் பணிவுடன் ""தெரியாது'' என்றாராம். பெரியவர், ""நான் சொல்கிறேன். "ழ' என்னும் எழுத்துதான்'' என்றாராம்.

உலக மொழிகளில் தெய்வத் தமிழில் மட்டுமே பொலிவது "ழ' எனும் யோக சக்தி. எல்லா யோக ரகசியங்களும் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளன. இதற்கு உதாரணம் அவ்வைப் பிராட்டியார் அருளிய "விநாயகர் அகவல்' எனும் நூல். குருவை "ஊசிநூல்' போன்று நம்மை இறைவனிடம் சேர்ப்பார் என்பர். "நூல்' என்றால் புத்தகம் என்றும் பொருளுண்டு.

tamil

தமிழ் மொழியின் "ஒலி, உரு' சப்த பாடத்திலிருந்து சில

ரு சமயம் காஞ்சி மாமுனிவரை தரிசிக்க "வாசீசுகலாநிதி' கி.வா.ஜ. அவர்கள் வந்திருந்தார். அப்போது பெரியவர், ""உமக்கு தமிழின் சிறப்பு என்னவென்று தெரியுமா?'' என்று கேட்க, அவர் மிகவும் பணிவுடன் ""தெரியாது'' என்றாராம். பெரியவர், ""நான் சொல்கிறேன். "ழ' என்னும் எழுத்துதான்'' என்றாராம்.

உலக மொழிகளில் தெய்வத் தமிழில் மட்டுமே பொலிவது "ழ' எனும் யோக சக்தி. எல்லா யோக ரகசியங்களும் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளன. இதற்கு உதாரணம் அவ்வைப் பிராட்டியார் அருளிய "விநாயகர் அகவல்' எனும் நூல். குருவை "ஊசிநூல்' போன்று நம்மை இறைவனிடம் சேர்ப்பார் என்பர். "நூல்' என்றால் புத்தகம் என்றும் பொருளுண்டு.

tamil

தமிழ் மொழியின் "ஒலி, உரு' சப்த பாடத்திலிருந்து சில மொழிகள் கிரகித்துப் பெற்றுள்ளன. சாம வேதத்தில் ஆயிரம் சாகைகள் (உட்பிரிவுகள்) உண்டு. இவற்றில் ஒருசிலவே நடப்பில் உள்ளன. இந்த "ழ' எழுத்தின் யோக ஒலி, சாமவேத மந்திரங்களில் நிறைந்துள்ளது.

நாம் ஒருவரை வாழ்த்தும்போது நாக்கு நன்கு மடிந்து யோக மாற்றமடைவதால், மனம் வலுவடைந்து அது பலிக்கின்றது. பெரியோர்கள் வேத மந்திரங்கள் கூறி மஞ்சள் அட்சதைகொண்டு ஆசிர்வதிக்கும்போது, அந்த கிரணங்கள் நம்மை வந்துசேர்கின்றன.

நமது உடல் இயக்கத்தின் தலையாய சுரப்பி (Master Gland) பிட்யூட்டரி. மன இயக்கத்திற்குரியது பீனியல் சுரப்பி. நாக்கை மடிக்கும்போது அதுவலிமைபெற்று எண்ண அலையாக மாறி நற்பலன்களை அளிக்கிறது. இதன் அடிப்படையில் ஏற்பட்டதுதான் "வாழ்க வளமுடன், வாழ்சு வையகம்' போன்ற வாழ்த்துச்சொற்கள். அவ்வாறு வாழ்த்தும்போது, இந்த வையத்திலுள்ள நாம் நம்மையே வாழ்த்திக்கொள்வது போலாகின்றதல்லவா? தியான மார்க்கத்தில் சித்தர்களின் நெறியில் "உலகெல்லாம் வாழ்க! உயிரெல்லாம் வாழ்க' என வாழ்த்தி பிறர் நலம் பேணும்வகையில் பிரார்த்தனை செய்கின்றோம்.

"ன்' என்பது தமிழின் பழமைமிகுந்த யோகசக்திக் கூட்டெழுத்து. தற்போதைய வழக்கில் பெரிதும் மறைந்து போனது.

சற்று கூர்ந்து நோக்கினால் "வ, ரு' என இரு எழுத்துகளின் கூட்டாய் "வரு'டத்தைக் குறிக்கும். இதில் வளைந்தெழும் வலச்சுழி மிகவும் சிறப்பான யோக சக்கர எந்திரங்களில் ஒன்று.தற்போது பஞ்சாங்கங்களில் மட்டுமே இந்த தமிழ்க் கூட்டெழுத்துகளை ஓரளவு பயன்படுத்துகின்றனர்.

பிறமொழிகளில் கூட்டெழுத்துகளை இந்நாளிலும் தொடர்ந்து கடைப் பிடிப்பதால், அம்மொழிகள் வெகுவேகமாய் உலகில் முன்னேறி வருகின்றன. நாமோ இருக்கின்ற கூட்டெழுத்துகளையும், தமிழுக்கே உரித்தான பிரணவ எழுத்தான

"ஃ' எழுத்தையும் வழக்கு மொழியில் விட்டுவிட்டோம். இதனால் இவற்றில் பதிந்துள்ள யோக சக்திகளை இழந்துவருகிறோம். கூட்டெழுத்துகளுக்கு பொதுவாக "சத்சங்க அட்சய சாலி' என்று பெயர். இவற்றை தினசரி வாழ்வில் பயன்படுத்தி, யோக சக்திகளை அட்சரப்பூர்வமாய் எளிதில் அடைந்து கொள்ளலாம்.

அகத்தியருக்கு "வாருணி முனிவர்' என்னும் தொன்மைப் பெயரும் உண்டு. அவர் தமிழ் மொழிக்கென "தமிழ் விசாலி' எனும் ஒலி, உரு (சப்த) இலக்கணத்தைப் படைத்த தலம். கும்பகோணம்- ஆலங்குடி சாலையில், திப்பிராஜபுரம் (சேஷம்பாடி) அருகேயுள்ள விசலூர் அகத்தீஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி புண்ணிய வளாகமாகும். அகத்தியர் பூஜித்த சிவலிங்கத்தை இங்கு தரிசிக்கலாம்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ் மொழியின் பண்டைய யோகசக்தி எழுத்து வடிவங்களைக் காணலாம்.

இறைவனின் இரு கண்களாகவே தமிழ், வடமொழிகள் கருதப்பெறுகின்றன.

"அம்மையே' என்றுதான் காரைக்கால் அம்மையாரை இறைவன் அழைத்தான்.

வள்ளுவப் பெருந்தகையும் "அகரமுதல' எனத் தொடங்கினார்.

கம்பரும் தமது கம்ப இராமயண காவியத்தை "உலகம் யாவையும்' எனத் தொடங்கிப் படைத்தார்.

சேக்கிழார் பெருமான் "உலகெலாம் உணர்ந்து' எனத் தொடங்கினார்.

இவையனைத்துமே' அ உ ம' எனும் ஓங்காரத்திலேயே தொடங்குவதைக் காணலாம்.

om010421
இதையும் படியுங்கள்
Subscribe