ஆயிரக்கணக்கான ரங்கோ- கோலங்களை வரைந்து பல போட்டிகளில் பரிசுபெற்று அனைவரது பாராட்டையும் பெற்றவர் தீபிகா. குறிப்பாக கடவுள் படங்களை வரைவதில் திறமை வாய்ந்தவர். மதுரையில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கலையார்வம் குறித்து அவரிடம் பேசியபோது...
"முதலில் பொழுதுபோக்காக ரங்கோலி வரைய ஆரம்பித்தேன். என் தோழிகள், உறவினர்களுக்கு அதை அனுப்புவேன்.
அவர்கள் எல்லாரும் மிக அருமையென்று பாராட்டி, தொடர
ஆயிரக்கணக்கான ரங்கோ- கோலங்களை வரைந்து பல போட்டிகளில் பரிசுபெற்று அனைவரது பாராட்டையும் பெற்றவர் தீபிகா. குறிப்பாக கடவுள் படங்களை வரைவதில் திறமை வாய்ந்தவர். மதுரையில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கலையார்வம் குறித்து அவரிடம் பேசியபோது...
"முதலில் பொழுதுபோக்காக ரங்கோலி வரைய ஆரம்பித்தேன். என் தோழிகள், உறவினர்களுக்கு அதை அனுப்புவேன்.
அவர்கள் எல்லாரும் மிக அருமையென்று பாராட்டி, தொடர்ந்து எனது ரங்கோலி கோலங்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
நானும் அப்படி வரைய ஆரம்பித்து, இப்போது தினமும் ரங்கோலி வரையாமல் தூங்குவதே இல்லையென்ற நிலை வந்துவிட்டது. பல ரங்கோலி கோலப்பேட்டிகளில் பங்கேற்று, "கோலக்கலையரசி' போன்ற பட்டங்கள், பரிசுகள், விருதுகள் கிடைத்தன. இப்போது என் முழுநேரப் பணியே ரங்கோலி கோலங்கள் வரைவதுதான்.
தினமும் வீடு முழுக்க நன்றாகக் கழுவிவிட்டு விதவிதமான ரங்கோலி கோலங்களை வரைவதை வழக்கமாக்கிவிட்டேன்.
முதலில் சின்னச் சின்ன கோலங்கள் போட்டேன். இப்போது பிரம்மாண்டமான பெரிய ரங்கோலி கோலங்கள்கூட போடுகிறேன். குறிப்பாக தெய்வத் திருவுருவ ரங்கோலி கோலங்கள் போடும்போது மிகவும் சுத்தமாக இருப்பேன். சமையலறை மிகவும் தூய்மையாக இருக்கும். வீட்டுப் பூஜையறையில் சிறப்பு அலங்காரம் செய்துவிட்டு, தெய்வீகப் பாடல் களைப் பாடியபடி மனம் முழுக்க பக்தி உணர்வு மட்டுமே நிறைந்திருக்க கோலங்களை வரைவேன்.
அதனால்தான் எனது தெய்வ ரங்கோலி கோலங்களில், தெய்வங்களை நேரடியாக தரிசிப்பதுபோல் மனநிறைவு இருப்பதாகப் பலரும் பாராட்டுகிறார்கள்.
மார்கழி மாதங்களில் ஆண்டாள் கோலம் வரைவேன். முப்பரிமாண கோலங்களும் வரைகிறேன். ஆன்லைனில் நடத்தப்படும் கோலப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் பள்ளியில் படிக்கும் காலம் முதலே ரங்கோலி கோலங்கள் வரையத் தொடங்கிவிட்டேன். திருமணங்கள், திருமண வரவேற்பு, பிறந்தநாள் விழாக்களில் கோலம் வரைய எனக்கு அழைப்பு வரும். ஆர்வத்துடன் சென்று அனைவரையும் வியக்கவைக்குமளவு வரைந்துவிடுவேன்.
ரங்கோலி கோலம் வரைய எந்தவித கருவிகளையும் பயன்படுத்துவதில்லை. கைகளாலேயே வரைந்துவிடுவேன். கோலங்கள் வரைய நான்கு மணிமுதல் பத்து பதினைந்து மணி நேரம்கூட ஆகும்.
தூக்கம், சாப்பாடு மறந்து பல ரங்கோலி கோலங்களை எனக்குத் திருப்தி வரும்வரை வரைந்திருக்கிறேன். தெய்வத் திருவுருவங்கள் வரையும்போது கிடைக்கும் ஆத்மசுகம் அலாதியானது.''
சந்திப்பு: விஜயா கண்ணன்