அர்ச்சனை என்னும் அர்ப்பணிப்பு! -கோபி சரபோஜி

/idhalgal/om/dedication

6

வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!

ழிபாட்டின் ஒரு அங்கம் அர்ச்சனை. அர்ச்சனை என்பதற்கு "அர்ப்பணித்தல்' என்று பொருள். இறைவனுக்கு ஆத்மார்த்தமாக எல்லாவற்றையும் அர்ச்சனைமூலம் அர்ப் பணித்து விடுகி றோம். அதனால் தான் அர்ச் சனைக்காகக் கொண்டுவந்த எந்தப் பொரு ளையும் கொண்டு வந்தபடியே திரும்ப எடுத்துச் செல்வதில்லை. எந்த ஆலய வழிபாட்டிற்குச் சென்றாலும் வாங்கிச் செல்லும் அர்ச் சனைப் பொருட் களில் அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூக்களைத் தவிர தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், விபூதி, குங் குமம் ஆகியவை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவற்றுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? இப்படி கேள்வி கேட்டால் அது தவறில்லை. அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளே ஆரோக்கியமான ஆன்மிக வளர்ச்சி பெறுவதற்குரிய சரியான அணுகுமுறை. "இறைவன் இருக்கிறான் என்றால் அவனை எனக்குக் காட்ட முடியுமா?' என்ற கேள்வி நரேந்திரனை விவேகானந்தராக் கியது. அறிவின் எழுச்சியில் பிறக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களில் ஆன்மி கத்தின் அற்புதங் கள் புதைந்து கிடக் கின்றன.

வெளியே பளபளப்பான மேல்தோலையும், உள்ளே பிசிறு பிடித்த நார்ப்பகு தியையும் கொண்ட தேங் காய் நம் உடம்பைக் குறிக்கும். தேங் காயில் உள்ள மட்டையை உரித்துவிட்டு ஆலயத்திற்குக் கொண்டு வருவ தைப்போல, நம் மன

6

வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!

ழிபாட்டின் ஒரு அங்கம் அர்ச்சனை. அர்ச்சனை என்பதற்கு "அர்ப்பணித்தல்' என்று பொருள். இறைவனுக்கு ஆத்மார்த்தமாக எல்லாவற்றையும் அர்ச்சனைமூலம் அர்ப் பணித்து விடுகி றோம். அதனால் தான் அர்ச் சனைக்காகக் கொண்டுவந்த எந்தப் பொரு ளையும் கொண்டு வந்தபடியே திரும்ப எடுத்துச் செல்வதில்லை. எந்த ஆலய வழிபாட்டிற்குச் சென்றாலும் வாங்கிச் செல்லும் அர்ச் சனைப் பொருட் களில் அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூக்களைத் தவிர தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், விபூதி, குங் குமம் ஆகியவை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவற்றுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? இப்படி கேள்வி கேட்டால் அது தவறில்லை. அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளே ஆரோக்கியமான ஆன்மிக வளர்ச்சி பெறுவதற்குரிய சரியான அணுகுமுறை. "இறைவன் இருக்கிறான் என்றால் அவனை எனக்குக் காட்ட முடியுமா?' என்ற கேள்வி நரேந்திரனை விவேகானந்தராக் கியது. அறிவின் எழுச்சியில் பிறக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களில் ஆன்மி கத்தின் அற்புதங் கள் புதைந்து கிடக் கின்றன.

வெளியே பளபளப்பான மேல்தோலையும், உள்ளே பிசிறு பிடித்த நார்ப்பகு தியையும் கொண்ட தேங் காய் நம் உடம்பைக் குறிக்கும். தேங் காயில் உள்ள மட்டையை உரித்துவிட்டு ஆலயத்திற்குக் கொண்டு வருவ தைப்போல, நம் மனதிலுள்ள அழுக்குகளை எல்லாம் வெளியி லேயே உரித் தெறிந்துவிட்டு ஆலயத்திற்கு வரவேண்டும்.

அர்ச்சனைத் தட்டை நம்மிட மிருந்து வாங்கிய ஆலய குருக்கள் தேங்காயை இரண் டாக உடைத்து உள்ளே இருக்கும் நீரை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார்.

தேங்காயில் இருக்கும் நீர் நமது வினைகளைக் குறிக்கும்.

archanaiஅந்த நீரை வெளியேற்றிவிட்டு அதை இறைவனுக்கு அர்ப் பணிப்பதைப்போல, நமது வினைகளையும் ஆசாபாசங்களையும் எல்லா சிந்தனைகளையும் நீக்கி விட்டு நம்மை இறைவனிடம் அர்ப் பணித்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்ய வைப்பதன்மூலம் இறைவன் நமக்கு ஞானத்தையளித்து அறிவுக் கண்ணைத் திறந்துவிடு கிறான். மூன்றாம் கண்ணைத் திறந்து விடுவதன் அடையாளம், தேங்காயை உடைத்தபின் அதிலுள்ள சிறுகுடுமியைப் பிய்த்துவிட்டு முக்கண் தெரியும்படியாகச் செய்வது! தேங்காயை முதலில் உடைப் பதற்கு ஒரு கதை உண்டு.

விநாயகர் தன் தந்தை சிவபெருமானிடம் அவரின் தலையைப் பரிசாகக் கேட்டாராம். எல்லாவற்றிலும் எது உயர்ந்ததோ அதைக் கொடுப்பதற்குப் பெயரே அர்ப்பணம். அதனால் தலையேயானாலும் அர்ப்பணமாய்த் தருவதற்குத் தயார் என்பதன் அடையாளமாக, தன்னைப்போலவே மூன்று கண்களையுடைய தேங்காயை சிருஷ்டித்து விநாயகருக்கு அர்ப்பண மாகக் கொடுத்தார். பக்தனாய் விநாயகர் கேட்க, இறைவனாய் சிவபெருமான் அர்ப்பணமாக முதலில் கொடுத்தது தேங்காய். இதன்மூலம் இறைவன் நமக்கு உணர்த்திக் காட்டிய அர்ப்பணத் தின் பொருள் என்னவென்றால், அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும் என்பதே. அதனாலயே வழிபாட்டின் ஆரம்பத்தில் தேங்காய் உடைக்கப்படுகிறது.

அர்ப்பணித்தலின் இன்னொரு வடிவம் தியாகம். அதற்கு மிகச்சரி யான உதாரணம் வாழை. இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல; எந்தக் காலத்திற்கும் அதுவே உதாரணம் என்பதாலயே "வாழையடி வாழை' என்ற வழக்குச் சொல் வந்தது. தன் அடிமுதல் நுனிவரை எல்லாவற்றையும் பிறருடைய பயன்பாட்டிற்குத் தருவதன் மூலம், இப்படித்தான் வாழவேண்டும் என்பது வாழை நமக்கு நடத்தும் பாடம். இந்தப் பாடத்தை நினைவில் கொள்ளும் விதமா கவே அபிஷேகத்திற்கும் அர்ச்சனைக்கும் வாழைப்பழத்தைக் கொண்டு செல்கிறோம்.

முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை அவநம்பிக்கை. இறைவனை அடைவதற்கு முட்டுக்காட்டை "நான்' என்ற அகந்தை! அகந்தை இருக்கும் இடத்தில் அன்பிருக் காது. அன்பில்லாத இடத்தில் இறைவன் இருக்கமாட்டான். அதனால்தான் அன்பே சிவமானது. அகந்தையானது நாம் செய்கின்ற நல்வினை- தீவினைகளால் உருவாகிறது. இவ்விரண்டையும் இறைவனுக்கு அர்ப் பணித்துவிட்டால் அகந்தை அகன்றுவிடும். இதை உணர்த்த நல்வினைக்கு ஒன்று, தீவினைக்கு ஒன்று என இரண்டு பழங்கள் அôச்சனையில் இடம்பெறுகின்றன.

நம்முடைய வினைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்க மனமானது கனிந்திருக்க வேண்டும். அப்படிக் கனிந்திருப்பதாலேயே வாழைப்பழம் இறைவனுக்குரியதாய் ஆனது. நாமும் இறைவனுக்குரியவராய் மாற கனிந் திருக்கப் பழகவேண்டும். அப்படிக் கனிந் திருக்காததாலேயே வாழைக்காயை அபிஷே கத்திற்கும், அர்ச்சனைக்கும் பயன்படுத்துவ தில்லை. காய் அகந்தையின் அடையாள நிலை.

பழம் அகந்தை இழந்தததன் அடையாள நிலை.

தேங்காய், பழம் இரண்டையும் அர்ப் பணம் செய்தபின் ஆலய குருக்கள் வெற்றிலை, பாக்கை எடுத்து இறைவனின் சந்நிதானத்தில் வைப்பார். வெற்றிலை என்பது நம் உடம் பின்மீது நாம் வைத்திருக்கின்ற பற்றுதலைக் குறிக்கும். ஸ்தூல உடம்பு என்ற காணக் கூடியதும், சூட்சும உடம்பு என்ற காணமுடியா ததுமான இவ்விரு உடம்பின்மீதான பற்று தலை விட்டுவிட வேண்டும். உடம்பின்மீதான பற்றை வெற்றிலை குறிப்பதைப்போல செல்வங்களின்மீதான பற்றை பாக்கு குறிக்கும். இவ்விரு பற்றையும் விட்டால் மட்டுமே பற்றற்ற பரம்பொருளை அடையும் விமோசனம் கிடைக்கும் என்பதை உணர்த்து வதற்காக, அர்ச்சனையில் இரண்டு வெற்றி லைகளும், பாக்கும் இடம்பெறுகின்றன.

இப்படியாக நம்மிடமிருந்து விலக்கி விட்ட, விட்டுவிட்ட வினைகளையும், உடல் மற்றும் செல்வங்களின் மீதான பற்றுகளையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் என்பது இதயப்பூர்வமாக நிகழவேண்டும். அதை நமக்குச் சொல்லாமல் சொல்லும் முகமாக, நாம் அர்ச்சனைக்காகக் கொண்டு செல்லும் மலர்களையும் மாலைகளையும் இறைவனின் மார்பில் (இதயத்தில்) சாற்றுகின்றனர்.

தன்னையே எரித்து அழித்துக்கொண்ட நிலையிலும் பிறருக்கு மனமகிழ்வையும் இன்பத்தையும் தரும் பத்தி, தியாகத்தின் இன்னொரு அடையாளம். "பத்தி வழி நின்றால் பரம்பொருளை அடையாளம்' என்பது பக்திமான்களின் மொழி. பத்தியைப் பற்றவைத்ததும் அதை உடனே அருகிலிருக்கும் வாழைப்பழத்தில் செருகி வைப்பார்கள். "ஸ்டாண்ட்' இல்லாததால் இப்படிச் செருகி வைக்கிறார்கள் என இதைக்கண்டு நாத்திகம் நகைக்கிறது. ஆத்திகமோ அதற்குச் சொல்லும் காரணம் அற்புதமானது.

ஆலய அர்ச்சனைக்குக் கொண்டுவந்த பொருட்களை திரும்ப எடுத்துச்செல்லும் போது எல்லாப் பொருட்களும் நாம் கொண்டுவந்த நிலையிலேயே இருக்காது. தேங்காய் உடைந்திருக்கும். மாலை, குங்குமம், விபூதி ஆகியவை வேறு ஒருவருடைய தட்டிலிருந்து நம் தட்டுக்குத் தாவியிருக்கும். பத்தியும் சூடமும் பஸ்பமாகி இருக்கும். ஆனால், வாழைப்பழம் மட்டும் அப்படியே இருக்கும். அதையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டதன் அடையாளமாகவே வாழைப்பழத் தில் பத்தியைச் செருகி அதன் நிலையில் மாற்றத்தைச் செய்திருக்கின்றனர்.

இப்படியெல்லாம் நம்மை அர்ப்பணித் தல் மூலமாக இறைவனை அடைந்துவிட முடியுமா என்றால் முடியாது. அர்ப்பணித் தல் என்பது இறைவனை அடைவதற்கான வழிமுறை மட்டுமே! இறைவனை நெருங்க வேண்டும் என்றால் அதற்கு இறைவழி பாட்டின் உன்னதங்களை உணரவேண்டும். இதை உணர்வதன் வாயிலாகவே இறைவனை உணரமுடியும்.

(தொடரும்)

om011118
இதையும் படியுங்கள்
Subscribe