Advertisment

டிசம்பர் மாத எண்ணியல் பலன்கள் - ஆர்.மகாலட்சுமி

/idhalgal/om/december-numerical-results-r-mahalakshmi

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களில் பலர் இந்த மாத முற்பகுதியில் வீடு வாங்குவது, மனையில் முதலீடு செய்வது, வாகனம் வாங்க திட்டமிட்டு அதற்கான தேடுதலில் இறங்குவது என மிகவும் விறுவிறுப்பாக இருப்பீர்கள். மாதப் பிற்பகுதியில் உங்கள் மகனுக்கோலி மகளுக்கோ வரன் பார்க்கும் விஷயத்தில் ஈடுபடுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் கையில் நன்கு பணம் புழங்கக் காண்பீர்கள். சிறு தடைகளுக்குப் பின் வீடு, மனை விற்பது- வாங்குவது நடக்கும். தொழில் மற்றும் வீட்டில் வேலைசெய்ய பிறமொழி இனத்தவர் பணியாட்களாகக் கிடைப்பர். உங்கள் வாரிசுகளின் சில எதிர்மறைப் பழக்க வழக்கம் தெரியவரும். இதனால் தம்பதிகளுக்குள் சச்சரவு ஏற்படும். சில தம்பதிகள் வேலை மாற்றத்தின் பொருட்டு பிரிய நேரலாம். சிலர் வேலை சம்பந்தமாக லஞ்சம் கொடுக்கவும் அல்லது வாங்கவும் நேரும். உங்களில் சிலருக்கு தொழில்விஷயமாக பெருமையும் வசையும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் பங்கு வர்த்தகத்தில் வருமானம் கிடைக்கும். சிலருக்கு மறைமுக வருமானமும் உண்டு. அரசியல் வாதிகள் தாங்கள் பிறந்த பூர்வீக இடத்தில் நிறைய சேவைகள் செய்வர். சில பெண்கள் உணவு சம்பந்தமாக சிறு தொழில் ஆரம்பிக்கக்கூடும். பெற்றோர்களின் உடல்நலன் மற்றும் கௌரவம், வேலையாட்கள் என இவைபோன்ற விஷயங்களில் உங்கள் பெற்றோரை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகள் விற்பனையின்போது சற்று சிரமப்படக்கூடும். மூத்த சகோதரியின் பொருட்டு உங்கள் மாமனார்- மாமியாரின் உதவியை நாடுவீர்கள். கல்வி விஷயம் சற்று தடுமாறும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: முருகன் கோவிலிலுள்ள அங்காரகனை வணங்குவதும், இளம் மாணவர்களுக்கு கல்விசார்ந்த பொருட் களை வழங்குவதும் நன்று. நரசிம்மர் வழிபாடு நன்மைதரும்.

Advertisment

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் பூர்வீக வீடு, மனை சம்பந்தமான விற்பனை நடைபெறுவதால் கையில் பணப் புழக்கம் இருக்கும். உங்களிடம் பணி புரிவதற்கு பழைய ஆட்கள் அல்லது சொந்த ஊரிலிருந்து நபர்கள் கிடைப்பார்கள். இளைய சகோதரருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேறுசிலர் தகவல் தொழில் நுட்பம் சார்ந்து வேலை கிடைக்கப் பெறுவர். அரசு ஒப்பந்த வேலை சிலருக்கு அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கலைத்துறையில் உள்ளோர் வேலை வாய்ப்பும், அலைச்சலும், தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும் செலவும் பெறுவர். இந்த எண்களில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும். சில தம்பதிகளுக்கிடையே கருத்துமோதல் ஏற்படும். உங்களில் சிலருக்கு, முதலில் வேண்டாமென்று மறுத்த வரனுடன் மீண்டும் திருமணப்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களில் பலர் இந்த மாத முற்பகுதியில் வீடு வாங்குவது, மனையில் முதலீடு செய்வது, வாகனம் வாங்க திட்டமிட்டு அதற்கான தேடுதலில் இறங்குவது என மிகவும் விறுவிறுப்பாக இருப்பீர்கள். மாதப் பிற்பகுதியில் உங்கள் மகனுக்கோலி மகளுக்கோ வரன் பார்க்கும் விஷயத்தில் ஈடுபடுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் கையில் நன்கு பணம் புழங்கக் காண்பீர்கள். சிறு தடைகளுக்குப் பின் வீடு, மனை விற்பது- வாங்குவது நடக்கும். தொழில் மற்றும் வீட்டில் வேலைசெய்ய பிறமொழி இனத்தவர் பணியாட்களாகக் கிடைப்பர். உங்கள் வாரிசுகளின் சில எதிர்மறைப் பழக்க வழக்கம் தெரியவரும். இதனால் தம்பதிகளுக்குள் சச்சரவு ஏற்படும். சில தம்பதிகள் வேலை மாற்றத்தின் பொருட்டு பிரிய நேரலாம். சிலர் வேலை சம்பந்தமாக லஞ்சம் கொடுக்கவும் அல்லது வாங்கவும் நேரும். உங்களில் சிலருக்கு தொழில்விஷயமாக பெருமையும் வசையும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் பங்கு வர்த்தகத்தில் வருமானம் கிடைக்கும். சிலருக்கு மறைமுக வருமானமும் உண்டு. அரசியல் வாதிகள் தாங்கள் பிறந்த பூர்வீக இடத்தில் நிறைய சேவைகள் செய்வர். சில பெண்கள் உணவு சம்பந்தமாக சிறு தொழில் ஆரம்பிக்கக்கூடும். பெற்றோர்களின் உடல்நலன் மற்றும் கௌரவம், வேலையாட்கள் என இவைபோன்ற விஷயங்களில் உங்கள் பெற்றோரை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகள் விற்பனையின்போது சற்று சிரமப்படக்கூடும். மூத்த சகோதரியின் பொருட்டு உங்கள் மாமனார்- மாமியாரின் உதவியை நாடுவீர்கள். கல்வி விஷயம் சற்று தடுமாறும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: முருகன் கோவிலிலுள்ள அங்காரகனை வணங்குவதும், இளம் மாணவர்களுக்கு கல்விசார்ந்த பொருட் களை வழங்குவதும் நன்று. நரசிம்மர் வழிபாடு நன்மைதரும்.

Advertisment

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் பூர்வீக வீடு, மனை சம்பந்தமான விற்பனை நடைபெறுவதால் கையில் பணப் புழக்கம் இருக்கும். உங்களிடம் பணி புரிவதற்கு பழைய ஆட்கள் அல்லது சொந்த ஊரிலிருந்து நபர்கள் கிடைப்பார்கள். இளைய சகோதரருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேறுசிலர் தகவல் தொழில் நுட்பம் சார்ந்து வேலை கிடைக்கப் பெறுவர். அரசு ஒப்பந்த வேலை சிலருக்கு அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கலைத்துறையில் உள்ளோர் வேலை வாய்ப்பும், அலைச்சலும், தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும் செலவும் பெறுவர். இந்த எண்களில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும். சில தம்பதிகளுக்கிடையே கருத்துமோதல் ஏற்படும். உங்களில் சிலருக்கு, முதலில் வேண்டாமென்று மறுத்த வரனுடன் மீண்டும் திருமணப் பேச்சு தொடரும். தொழிலில் வெளிநாடு அல்லது முஸ்லிம் இனத்தவர் சம்பந்தம் தொடரும். வீட்டிற்கு மருமகன் வருவார். சில அரசியல்வாதிகளுக்கு குழந்தைகள் அல்லது போதைத் தடுப்புத் துறைக்கு மாற்றம்பெறும் நிலை ஏற்படும். உங்கள் வாரிசுகளில் சிலர் வெளிநாடு செல்வர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: சனிபகவானை வணங்குவதும், சனிபகவான் அபிஷேகத்திற்கு திரவப் பொருட்கள் வாங்கித் தருவதும் நன்று. தூய்மைப்பணி செய்யும் வயதுமுதிர்ந்த பெண்களுக்கு உதவிசெய்யவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு கல்வி விஷயமாக செலவும் மாற்றமும் உண்டு. தரகர்களுக்கு பணவரவு மெதுவாக வரும்; ஆனா லும் ஏதோ கிடைத்துக்கொண்டே இருக்கும். இவர்களில் சிலருக்கு இருக்கும் தீயபழக்கம் செலவையும் அலைச்சலையும் உண்டாக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் இடமாற்றம் பெறுவர். சிலர் திருமணமாகி வெளிநாடு செல்லக்கூடும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தை வேலை இடமாற்றம் பெறுவார். தொழிலில் முதலீடுண்டு அல்லது தொழில் இடத்தை மாற்றுவீர்கள். சில அரசியல்வாதிகள்மீது விழும் கரும்புள்ளி, அவர்களுக்கு அரசியல் இடமாற்றத்தைத் தரும். திருமணம் கைகூடும். அதன்பொருட்டு செலவு, அலைச்சல் உண்டு. கோவில் தரிசனம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டிலுள்ள மகன், மருமகள் உங்களுடன் வந்துசேர்வர். உங்களது மாமியார் வேறிடம் செல்வார். கலைஞர்கள் வேலைவிஷயமாக வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். விவசாயிகள் கைபேசிமூலம் தங்கள் விளைபொருட்களை விற்றுப் பணம் சம்பாதிப்பர். மாதப் பிற்பகுதியில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களுடன் கூடியிருக்கும் அமைப்புள்ளது. கருவுற்ற பெண்கள் மருத்துவர்கள் கூறும் அறிவுரையைக் கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். உங்கள் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை. வீடு விஷயமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். கடன் விஷயமான அலைச்சலுண்டு. பங்கு வர்த்தகத்தைப் பக்குவமாக நடத்தவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: கருவுற்ற பிற இனப் பெண்களுக்கு மருந்து வாங்க உதவிசெய்யவும். குலதெய்வ வழிபாடு நன்று. சாந்தமான துர்கையை வணங்கவும்.

dd

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத ஆரம்பத்தில் உங்களது சொற்களே உங்களுக்குத் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். பின்னர் பேச்சில் பொறுமை வந்துவிடும். பணியாட்களுடன் சண்டை வந்து பின்னர் சரியாகும். அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். பள்ளி மாணவர்கள் கல்வியில் சற்று திணறினாலும் பின் அதிலிருந்து மீண்டுவிடுவார். திருமணப் பேச்சுகள் சிறிய தடைக்குப்பின் முடிவாகும். காதல் சற்று இன்னலைத் தரும். கலைஞர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். சில அவமானங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு வரிக் கணக்கை முன்னேற் பாடுடன் சீர்செய்து கண்காணிக்கவும். இல்லையெனில் அரசு தொடர்பாக இன்னல் கள், தண்டனைத் தொகை செலுத்த வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் சிலபல நெருடலுக்குப்பிறகு நன்மைபெறுவர். சில நேரங்களில் நீங்களே உங்களுக்கு எதிரியாகும் சூழலும் உருவாகும். எனவே சொல்லிலும் செயலிலும் கட்டுப்பாடு தேவை. மறதியாக வைத்த பொருள் கண்ணிற்குத் தென்படும். வியாபாரிகள் சீரான, அமைதியான, பரபரப்பில்லாத லாபம் பெறுவர் ஆன்மிகப் பயணமுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம் வாய்பேச முடியாத மனிதர்களுக்குத் தேவையறிந்து உதவவும். அன்னதானம் நன்று. மகா மாரியம்மனை வணங்கவும்.

5, 14 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நிறைய செலவுசெய்தால் இடப் பெயர்ச்சியுடன் அரசு வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்குபவர்களும், தொழில் சார்ந்த லைசன்ஸ் வாங்குவோரும் செலவுசெய்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம். கையூட்டு கொடுத்து அரசு சார்ந்த ஒப்பந்தங்களைப் பெறும் நிலை காணப்படுகிறது. அதுபோல அரசு ஒப்பந்தம் கொடுக்க கையெழுத்திடும் அதிகாரிகளும் நல்ல பணவசதி பெறுவர். மாணவர்கள் டியூஷன் விஷயமாக சற்று அலைச்சலை சந்திப்பார்கள். குடும்பத்தில் சில குளறுபடிகள் ஏற்படக்கூடும். சில வம்புப் பேச்சுகளால் சண்டை ஏற்படும். மாதப் பிற்பகுதியில் வீடு சம்பந்த முதலீடு உண்டு. சிலரது பெற்றோர் ஆன்மிகப் பயணம் செல்வர். அப்போது சிறு காயம் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை வேலைகிடைக்கப் பெறுவார். மருத்துவ உதவியுடன் வாரிசு யோகமுண்டு. சிலருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இந்த மாதம் உங்களது கௌரவம், புகழ் ஆகியவை சற்று குறையக்கூடும். பழமையான கலைஞர்கள் லாபம் பெறுவர். வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்கு காதல் அல்லது சொந்தத்தில் திருமணம் நிறைவேறும். அரசியல்வாதிகள் தகவல் தொடர்புமூலம் புகழ்பெறுவர் பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 14, 25.

பரிகாரம்: விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிபுரியவும். வயதான யாராவது ஒருவருக்கு தேவையறிந்து பயணத்துக்கான சீசன் டிக்கெட் வாங்கிக் கொடுங்கள். ஹயக்ரீவரை வணங்கவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமண விஷயங்களில் சற்று குழப்பமுண்டு. வியாபாரம் மட்டுமின்றி தினசரி வாழ்விலும் பணம் விஷயமாக சற்று ஏமாறும் வாய்ப்புண்டு. உங்கள் சொந்தங்கள் உங்களுக்கெதிராகத் திரும்பும் நிலையும் உண்டாகலாம். மாத முற்பகுதியில் திருமணப் பேச்சு நடக்கும்போது வரதட்சணை, திருமணச் செலவு குறித்து தெளிவாகப் பேசி முடிவெடுக்கவும். ஏனெனில் அதில் குழப்பம் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு வேலை சம்பந்தமாக கைபேசியில் தகவல் கிடைக்கும். சிலர் தொலைக்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்புண்டு. வாரிசுகளின் வீடு விஷயம் சார்ந்து நல்ல செய்தி வரும். வேலைசார்ந்த முயற்சிகள் பலிதமாகும். பல்வலி, கண்வலி வர வாய்ப்புண்டு. இளைய சகோதரனுக்கு திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் வாயைக் கொடுத்து சிக்கிக்கொண்டு விழிக்கும் நிலை ஏற்படும். கைபேசி வகையில் செலவுண்டு. உங்களது வியாபாரம் சார்ந்த அன்பளிப்புகள் பிற மத, இனத்தவர்மூலம் நடக்கும். இந்த மாதம் எதிர்பாராத பணம் வருவதும் நடக்கும். அதுபோல எதிர்பாராத அவமானமும் சிலருக்கு ஏற்படக்கூடும். இதுவரை வீடு, வாகனம் விற்க முயற்சித்திருந்தால் இந்த மாதப் பிற்பகுதியில் நல்ல லாபத்துடன் விற்பனையாகும். உங்களில் சிலர் மருத்துவம் சம்பந்தமான வேலை அல்லது கல்வி தொடர்பு பெறுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாங்கான வேளாண்மை பெறுவர். கலைஞர்கள் விளம்பரத் துறையில் ஈடுபாடு கொள்வார்கள். உங்களது தந்தை சிறுதூர இடமாற்றம் பெறுவார். உங்களது மாமனார், வீட்டுக் கடன் சம்பந்தமாக உங்களை விசாரிக்கக் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: இந்த மாதம் கையூட்டு வாங்கும்போதும் கொடுக்கும்போதும் மிக கவனமாக இருக்கவேண்டும். பிற மத, இன திருமணத்திற்கு முடிந்த பண உதவி செய்யவும். முருகப்பெருமானை வணங்குவது சிறப்பு.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களுக்கு இந்த மாதம் திருமண வாய்ப்புண்டு. அதில் சிலருக்கு தகராறுகளும் ஏற்படலாம். சில காதல் திருமணங்களும் நடக்கும். அரசு வேலைக்கு, யாருக்குப் பணம் கொடுப்பதென்று மிகவும் யோசிப்பீர்கள். இதன்பொருட்டு பணச் செலவும், பயணச் செலவும் வரும். கல்விசார்ந்த மாற்றம் பொருட்டு மாணவர்களும் பெற்றோரும் சேர்ந்தலைவர். உங்களது மூத்த சகோதரர் கீழே விழுந்து சிறு காயங்களை ஏற்படுத்திக் கொள்வார். சிலருக்கு தந்தையுடன் கருத்து வேற்றுமை உருவாகும். நிலம் விஷயமாக குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். கேட்ட கடன் கிடைக்குமென்று குறுஞ்செய்தி வரும். மேலும் உங்கள் இளைய சகோதரர் அல்லது உங்கள் தந்தை வாங்கிய கடன்பொருட்டு உங்களுக்கும் மனைவிக்கும் சண்டை வரும். குலதெய்வக் கோவில் தரிசனம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பண விஷயமான வீடியோ, ஆடியோ வெளிவந்து சஞ்சலத்தை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: வீட்டில் பணிபுரிவோரின் கடன் சுமையைக் குறைக்க உதவுங்கள். பிற இன, மத சிறு இளம்பருவப் பெண்களுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். விநாயகரை வணங்குவது நன்று.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் முயற்சிகள் வெற்றிபெற மிக அலைச்சலை மேற்கொள்வீர்கள். இதன்காரணமாக நிறைய மனிதர்களை சந்திக்கவேண்டி இருக்கும். இந்த முயற்சி பல ஒப்பந்தம், பத்திரங்களில் கையெழுத்திடும் வாய்ப்பைப் பெற்றுத் தரும். சிலர் உங்களின் பழைய வீட்டை விற்க முற்படுவீர்கள். சிலருக்கு உங்களது தாயின் குயுக்தியான யோசனை லாபம் சேர்க்கும். வீட்டிற்கு மணம்புரிந்து மருமகள் வரும் நேரமிது. பங்கு வர்த்தகம் பணம் தரும். கலைஞர்கள் முன்னேற் றமும் மகிழ்ச்சியும் காண்பர். வேலையில் இருப்போர் பதவி உயர்வடைவர். தாய்மாமன் வகையில் அன்பளிப்பொன்று கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத புதையல் கிடைக்கும் யோகமுண்டு. சிலரது தந்தையின் கெட்ட பழக்கவழக்கங்கள் சில உங்களுக்கு அவமானம் தரக்கூடும். அரசியல்வாதிகளில் சிலர் மறைமுக ஆதாயம் அதிகம் பெறுவர். வேறு சில அரசியல்வாதிகள் அவமானம் அதிகம் பெறுவர். புதுத் தொழில் தொடங்க அல்லது விரிவாக்கத்துக்கு முதலீடு செய்வீர்கள். சிலர் அரசு மானியம் பெறுவீர்கள். மாணவர்கள் ஏதாவது செய்தாவது தேர்வாகிவிடுவார்கள். வீடு மாறும் நிலையுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: மாணவர்களுக்கு உதவிபுரியவும். வேலை செய்யுமிடத்தில் கீழ்மட்ட ஊழியர் களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். காளியை வணங்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பண விஷயத்தில் சிக்கல் உண்டாகிப் பின் அது தீரும். அல்லது பணம், நகை, பத்திரம் போன்றவை காணாமல் போகவோ அல்லது மறதியாக எங்காவது வைத்துவிட்டுத் தேடிப் பின் கிடைக்கவோ வாய்ப்புண்டு. குடும்பத்திலும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டுப் பிறகு சரியாகிவிடும். இளைய சகோதரனைப் பற்றிய ரகசியம் வெளிப்படும். ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை விற்காமலிருந்த மனை, வீடுகள் இப்போது விற்கும் வாய்ப்புண்டு பங்கு வர்த்தகத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சற்று தடுமாறி, பிறகு தேறிவிடுவர். திருமணப் பேச்சு சற்று தடையை சந்திக்கும். சட்டத்துறையினர் லாபம் காண்பர். அரசியல் வாதிகளில் இதுவரை பதவி, வீடு கிடைக்காத வர்கள் இப்போது அவை கிடைக்கப் பெறுவர். தொழில்புரிவோர் தொழில் முன்னேற்றத் திற்காக அவை சார்ந்து செலவழிப்பர். சிலர் பழைய கடையை வாங்கிப் புதுப்பிக்க முதலீடு செய்வர்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகரை வழிபடவும். பள்ளிகளுக்கு அவசர மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தருவது நன்று.

செல்: 94449 61845

om011222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe