டிசம்பர் மாத ராசி பலன்கள்

/idhalgal/om/december-month-rasipalans

மேஷம்

இந்த மாதக் கடைசிவரை மேஷ ராசிநாதன் செவ்வாய் துலாத்தில் நிற்கிறார். மேலும் 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. 9-க்குடைய குருவும் ஆட்சி பெற்று (9-ல்) ராசியைப் பார்ப்பது மேலும் சிறப்பு. உங்களது திறமை, செயல்பாடு, கீர்த்தி, புகழ் எல்லாம் நன்றாக இருக்கும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். உங்கள் பிள்ளைகள் நீங்கள் விரும்பியதை நிறைவேற்றித் தருவர். உங்கள் சொல்கேட்டு நடப்பதால் உங்கள் மகிழ்வுக்குக் குறை விருக்காது. புத்திப்பூர்வ லாபங்கள் அதிகரிக் கும். வெளிவட்டாரங்களில் உங்கள் சொல் வாக்கு செல்வாக்குப் பெறும். இளைய சகோதர- சகோதரி வகையில் திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக செயல்படும். தடைப்பட்ட திருமண முயற்சிகளை மீண்டும் தொடங்கும் யோகமும் கைகூடும். உங்கள் திட்டம், எண்ணம், செயல்பாடு யாவும் குறையின்றி நிகழும். தைரியத்தோடும் துணிச்சலோடும் தொழில்துறையில் முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்

தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் மந்தமான சூழ்நிலை காணப்படும். எதையும் புத்திசாலி−த் தனமாகவும் விவேகமாகவும் செயல்படுத்த முனைவீர்கள். உங்கள் முயற்சிகள் முன்னேற்ற கரமாக அமைவதோடு வெற்றியும் ஏற்படும். அட்டமத்துச்சனியால் மந்தம் காணப் பட்டாலும், பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. அவருடன் (சனி) குரு சேர்ந்திருப்பதால் மந்தத்தன்மை குறையும். அதற்கு இன்னொரு காரணம், உங்களுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தைரியமும் வைராக்கிய மும். அவை வெற்றிக்குப் பாதை வகுத்துத் தரும். சிலருக்குத் தொழில்மாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் போன்ற திட்டங்கள் உதயமாகும். அதை செயல்படுத்துவதில் தயக்கமும் குழப்பமும் இருக்கலாம். செய்வதா வேண்டாமா என்ற சந்தேகமும் எழலாம். 4-ஆம் இடம் கல்வி, பூமி, வீடு, வாகனம், சுகஸ்தானம், தாயார் ஸ்தானம் ஆகும். அந்த இடத்தை 8-ல் உள்ள குரு பார்க்கிறார். எனவே அதிலுள்ள பிரச்சினைகள் விலகும். எந்தவித பாதகப்பலனும் வராமல் தப்பிக்கலாம். போட்டி, பொறாமை களைச் சந்தித்தாலும் வெற்றிபெறும் ஆற்றலும் உருவாகும்.

மிதுனம்

இந்த மாத ஆரம்பத்தில் மிதுன ராசிநாதன் புதன் 6-ஆமிடமான விருச்சிகத்துக்கு மாறுகிறார். மாதக் கடைசிவரை விருச்சிகத் தில் சஞ்சாரம் செய்கிறார். மற்ற கிரகங் களைப்போல் புதனை மறைவு தோஷம் பாதிக்காது. 7-ல் நிற்கும் குரு ராசியைப் பார்க்கிறார். ஜென்மத்திலுள்ள ராகு உடல் உபாதைகள், சங்கடங்கள், மருத்துவச் செலவுகளைத் தந்தாலும், கு

மேஷம்

இந்த மாதக் கடைசிவரை மேஷ ராசிநாதன் செவ்வாய் துலாத்தில் நிற்கிறார். மேலும் 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. 9-க்குடைய குருவும் ஆட்சி பெற்று (9-ல்) ராசியைப் பார்ப்பது மேலும் சிறப்பு. உங்களது திறமை, செயல்பாடு, கீர்த்தி, புகழ் எல்லாம் நன்றாக இருக்கும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். உங்கள் பிள்ளைகள் நீங்கள் விரும்பியதை நிறைவேற்றித் தருவர். உங்கள் சொல்கேட்டு நடப்பதால் உங்கள் மகிழ்வுக்குக் குறை விருக்காது. புத்திப்பூர்வ லாபங்கள் அதிகரிக் கும். வெளிவட்டாரங்களில் உங்கள் சொல் வாக்கு செல்வாக்குப் பெறும். இளைய சகோதர- சகோதரி வகையில் திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக செயல்படும். தடைப்பட்ட திருமண முயற்சிகளை மீண்டும் தொடங்கும் யோகமும் கைகூடும். உங்கள் திட்டம், எண்ணம், செயல்பாடு யாவும் குறையின்றி நிகழும். தைரியத்தோடும் துணிச்சலோடும் தொழில்துறையில் முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்

தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் மந்தமான சூழ்நிலை காணப்படும். எதையும் புத்திசாலி−த் தனமாகவும் விவேகமாகவும் செயல்படுத்த முனைவீர்கள். உங்கள் முயற்சிகள் முன்னேற்ற கரமாக அமைவதோடு வெற்றியும் ஏற்படும். அட்டமத்துச்சனியால் மந்தம் காணப் பட்டாலும், பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. அவருடன் (சனி) குரு சேர்ந்திருப்பதால் மந்தத்தன்மை குறையும். அதற்கு இன்னொரு காரணம், உங்களுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தைரியமும் வைராக்கிய மும். அவை வெற்றிக்குப் பாதை வகுத்துத் தரும். சிலருக்குத் தொழில்மாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் போன்ற திட்டங்கள் உதயமாகும். அதை செயல்படுத்துவதில் தயக்கமும் குழப்பமும் இருக்கலாம். செய்வதா வேண்டாமா என்ற சந்தேகமும் எழலாம். 4-ஆம் இடம் கல்வி, பூமி, வீடு, வாகனம், சுகஸ்தானம், தாயார் ஸ்தானம் ஆகும். அந்த இடத்தை 8-ல் உள்ள குரு பார்க்கிறார். எனவே அதிலுள்ள பிரச்சினைகள் விலகும். எந்தவித பாதகப்பலனும் வராமல் தப்பிக்கலாம். போட்டி, பொறாமை களைச் சந்தித்தாலும் வெற்றிபெறும் ஆற்றலும் உருவாகும்.

மிதுனம்

இந்த மாத ஆரம்பத்தில் மிதுன ராசிநாதன் புதன் 6-ஆமிடமான விருச்சிகத்துக்கு மாறுகிறார். மாதக் கடைசிவரை விருச்சிகத் தில் சஞ்சாரம் செய்கிறார். மற்ற கிரகங் களைப்போல் புதனை மறைவு தோஷம் பாதிக்காது. 7-ல் நிற்கும் குரு ராசியைப் பார்க்கிறார். ஜென்மத்திலுள்ள ராகு உடல் உபாதைகள், சங்கடங்கள், மருத்துவச் செலவுகளைத் தந்தாலும், குரு ஜென்ம ராசியைப் பார்க்கும் காரணத்தால் அவற்றிலி −ருந்து விடுபடலும் ஆறுதலும் தேறுதலும் ஏற்படும். அவரவர் ஜாதகரீதியாக 6, 8, 12-க்குடைய தசாபுக்தி நடந்தால் மட்டும் நோய், வைத்தியச் செலவு அல்லது வட்டிச் செலவு, தண்டச் செலவு போன்ற வகையில் சில விரயங்கள் உண்டாகலாம். 7-ல் வந்திருக்கும் குரு திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளம்பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் இக்காலம் திருமண ஏற்பாடுகளை நடத்தித் தருவார். மணவாழ்க்கையும் இனிதாக அமையும். கணவனைப் பிரிந்த பெண்களுக்கும், மனைவியைப் பிரிந்த ஆண்களுக்கும் (சட்டரீதியாக) மறுமணம் போன்ற வாய்ப்பு களும் அமையும்.

கடகம்

கடக ராசிக்கு 6-ல் இருக்கும் குரு உடல் உபாதைகள், மருத்துவச் செலவுகள், போட்டி, பொறாமை, திருஷ்டிபோன்ற சங்கடங்களைத் தந்தித்திருக்கலாம். மாத முற்பகுதிவரை சுக்கிரனும் 6-ல் மறைகிறார். (சுக்கிரன் 4, 11-க்குடையவர்). தொழில்துறையில் ஒருபடி முன்னேறிச்சென்றால் இரண்டு படி பின்வாங்கும் சூழலும் உருவாகலாம். மாதப்பிற்பாதியில் மகரத்திற்கு சுக்கிரன் மாறியபிறகு செவ்வாயால் பார்க்கப் பெறுவார். அந்த காலகட்டத்தில் பின்வாங்கிய வற்றுக்கெல்லாம் சேர்த்து வேகமாக முன்னேறலாம். 9-க்குடைய குரு 6-ல் ஆட்சிபெற்று 11-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எந்தவொரு சூழலி−லும் வெற்றி தடைப்படாது. தாமதமாகலாமே தவிர தடைப்படாது. தாமதமென்பது வேறு; தடையென் பது வேறு. ஒரு தொழிலி−ல் பிரச் சினை ஏற்பட்டாலும் அதை ஈடுசெய்யும் வகையில் வேறொரு தொழில் அல்லது வேலை அமையும். வருமான மும் அமையும். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். இறைவன் எல்லாரையும் ரட்சிப்பான்; கைவிட மாட்டான். நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை 4-ல் விருச்சிகத்தில் சஞ்சாரம் செய்கிறார். அவருடன் 2, 11-க்குடைய புதனும் சஞ்சாரம். பொருளாதாரப் பிரச்சினைகள் விலகும். தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் பாதிப்பில்லாமல் பயணிக்கலாம். 5-ல் உள்ள சனி, கேது உங்கள் திட்டம், எண்ணம், செயல்பாடு ஆகியவற்றுக்கு அவ்வப்போது முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், குரு 5-ல் மாறிய நிலையில் இவற்றிலி−ருந்து ஒன்றன்பின் ஒன்றாக நிவர்த்தியும் முன்னேற்றமும் கைகூடிவரும். 5-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பது பெரிய பலம். எந்தவொரு ஜாதகத்திலும் ராசியையோ லக்னத்தையோ குரு பார்த்தால் தடைகள் விலகி வெற்றிவாகை சூடலாம் என்பது ஜோதிட விதி. சிலர் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கஷ்டங்களும் பணக் கஷ்டங்களும் விலகும். 3-ல் உள்ள செவ்வாய் சகோதரவகையில் ஆறுதல்களையும் ஒத்துழைப்புகளையும் தரும். நண்பர்கள் ஆதரவும் ஏற்படும். போட்டி, பொறாமை களும் விலகும்.

mm

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 3-ல் சூரியனோடு சம்பந்தம். 4-ல் உள்ள சனியும் கேதுவும் தாயார் சுகம், தன் சுகம் ஆகியவற்றில் பாதிப்பு களைக் கொடுத்திருந்தாலும், குரு 4-ல் மாறியதால் வைத்தியச்செலவு, பாதிப்பி−ருந்து ஆறுதலடையலாம். 2-க்குடைய சுக்கிரன் 4-ல் சனி, கேது, குருவுடன் சம்பந்தம். பொருளாதாரத்தில் அவ்வப்போது சங்கடங் களும் சஞ்சலங்களும் காணப்பட்டாலும், கடைசி நேரத்தில் தேவைகள் நிறைவேறும். 17-ஆம் தேதிமுதல் (சுக்கிரன் மகரத்திற்கு மாறியபிறகு) செவ்வாய் சுக்கிரனைப் பார்ப்பார். சுக்கிரன் வீட்டில் செவ்வாய். எனவே அதுவும் ஒருவித பரிவர்த்தனை யோகத்திற்குச் சமம். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவிக்குள் சச்சரவு, சலசலப்பு இருந்துகொண்டுதான் இருக்கும். சிலருக்கு சக்திக்குமீறிய கடன் ஆதிக்கம் காணப்படலாம். அல்லது போட்டி, பொறாமைகளைச் சந்தித்து எதிர்நீச்சல் போடலாம். என்றாலும் 3-ல் உள்ள சூரியன் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவார். கொடுக்கல்- வாங்க−ல் யாருக்கும் பொறுப்பேற்பதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்

இந்த மாத முற்பகுதிவரை துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கிறார். 17-ஆம் தேதிமுதல் மகரத்திற்கு மாறியபிறகு துலா ராசியில் இருக்கும் செவ்வாய் அவரைப் பார்ப்பார். செவ்வாய்க்கு வீடுகொடுத்த சுக்கிரன் செவ்வாயால் பார்க்கப்படுவதால் கிட்டத்தட்ட பரிவர்த்தனை யோகத்திற்குச் சமம்தான். பொருளாதாரத் தேக்கம் விலகும். 3-ல் இருக்கும் சுக்கிரன் குருவுடன் சேர்க்கை. பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். ஆனால் குருவின் வீடான மீனத் தில் சுக்கிரன் உச்சமடைவார். பகைவர் வீட்டில் உச்சமடைய முடியுமா? குரு- தேவர்களின் குரு; சுக்கிரன்- அசுரர்களின் குரு. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும்தான் பகையே தவிர, குருவுக்கும் சுக்கிரனுக்கும் அல்ல! வாதிக்கு வழக்காடும் வக்கீல், பிரதிவாதிக்கு வழக்காடும் வக்கீல்களுக்குள் பகையில்லை; வாதிக்கும் பிரதிவாதிக்கும்தான் பகை. அதேபோல சுக்கிரன் 1, 8-க்குடையவர். குரு 3, 6-க்குடையவர் என்பதால், இவர்களின் தசாபுக்திக் காலங்களில் வேறுபட்ட பலன்களைச் சந்திக்கலாம். வீண்விரயங்கள் குறையும். தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் இருக்கிறார். ஏழரைச்சனியில் பாதச்சனி நடந்துகொண்டிருக்கிறது. ஜென்ம ராசியில் 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் சேர்க்கை. அது உங்களுக்கு தொழில்துறையிலும் வேலையிலும் வெற்றிவாய்ப்புகளையும் முன்னேற்றத்தை யும் தரும். 2-ல் உள்ள சனி உங்கள் பேச்சில் நச்சுக்களை உண்டாக்கலாம். எனவே வார்த்தைகளில் கவனமும் நிதானமும் மிகவும் அவசியம். சகோதர- சகோதரி வகையில் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். தொழில்துறையில் சில மாற்றங் களை நிகழ்த்தலாம். சிலர் குடியிருப்பு மாற்றங்களையும் சந்திக்கலாம். அது நல்ல மாற்றமாகவும் நிகழும். 8-ல் உள்ள ராகு திடீர் யோகம் அல்லது அதிர்ஷ்டத்தை உண்டாக்கலாம். வாகனத்தில் கவனமும் எச்சரிக்கையும் முக்கியம். வேலை, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் அமையும். முடிந்தவரை- உங்களது காரியங்கள் பூர்த்தியாகும்வரை பிறரிடம் தம்பட்டம் அடிக்காமல் ரகசியம் காப்பது நல்லது. ஐந்தாம்படையாக வேலை செய்பவர்களும் உங்களுடன் பழகலாம்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சி. 11-க்குடைய சுக்கிரன் ஜென்ம குருவுடன் சேர்க்கை. குரு, சுக்கிரன் சேர்க்கை உங்கள் காரியங்களிலும் செயல்களிலும் மறைமுக ஆதரவுதந்து ஜெயிக்கச் செய்யும். அல்லது எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற சந்தர்ப்ப சாதகமான பலனையும் தரும். சொந்தக் குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் உருவாகி ஒரே வீட்டுக்குள் தனித்தனி சமையல் செய்யும் சூழ்நிலைகள் விலகி ஒற்றுமையுணர்வு உண்டாகும். குருவும் சுக்கிரனும் உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றத்தையும் வெற்றியையும் தருவர். ஜென்ம கேதுவும், 7-ல் உள்ள ராகுவும் கணவன்- மனைவிக்குள் சச்சரவு, சங்கடங்களைத் தந்தாலும் பிரிவு, பிளவுக்கு இடம் ஏற்படாது. சிலருக்கு குடும்பக் குழப்பம் அல்லது வெளியில் சொல்லமுடியாத வருத்தம், மன உளைச்சல் ஏற்படலாம். ஏழரைச்சனி இவற்றைத் தந்தாலும் ஜென்மத்தில் ஆட்சிபெறும் குரு அவற்றுக்குத் தீர்வுகளையும் தரும். சகோதர ஒற்றுமை பலப்படும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. 12-க்குடைய குரு 12-ல் ஆட்சி. எனவே, விரயங்களும் செலவுகளும் ஒருபுறம் இருந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றலும் திறமையும் உருவாகும். 11-க்குடைய செவ்வாய் 10-ல் இருக்கிறார். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் சாதகமான நல்லபலன்கள் உண்டாகும். தவிர முற்பகுதிவரை 11-ல் இருக்கும் சூரியன் வெற்றியையும் தரும். பொதுவாக ஒரு காரியம் ஆரம்பிக்கும்போது 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்துக் கொடுத்தால் அந்தக்காரியம் தடையின்றி வெற்றியாகும் என்பது ஜோதிடவிதி. மாதப் பிற்பகுதியில் சுக்கிரன். ஜென்மத்திற்கு வரும்போது, 10-ல் இருக்கும் செவ்வாய் சுக்கிரனைப் பார்ப்பார். அது ஒருவகையில் பலம். சிலருக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் அமைப்புகள் உருவாகும். தேகசுகம் நன்றாக இருக்கும். சிலருக்கு சொந்தவீடு இல்லையே என்ற ஏக்கம் உருவானாலும் அதற்குண்டான யோகமும் அமையும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் 11-ல் நின்று தன் ராசியைத் தானே பார்க்கிறார். 11-க்குடைய குரு 11-ல் ஆட்சி. எனவே இதுவரை நிலவிய தவிர்க்கமுடியாத செலவுகளும் விரயங் களும் விலகும். சிலசமயம் செய்த செலவையே திரும்பவும் செய்யும்படியான சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி வீடு மாறியவர்கள் இனி நிலையாகக் குடியமர ஒரு இடம் கிடைத்துவிடும். வீடு, வாகனங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். சிலர் தாய்க்காக வைத்தியச் செலவுகள் செய்யநேரும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குருவால் பிள்ளைகள் வகையில் நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். உங்களது நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் பூர்த்தியாகும். தனவரவுக்குப் பஞ்சமிருக்காது. சரளமான பணப்புழக்கம் இருக்கும். சகோதர- சகோதரி களுக்கு அனுகூலமும் உண்டாகும். குரு உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் யோகத்தையும் தருவார். புதிய சிந்தனைகளும் திட்டங்களும் எதிர்கால இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும். வீடு, வாகனம் போன்றவகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி பெறுகிறார். "10-ஆம் இடத்து குரு பதிமாறச் செய்யும்' என்று பொதுவாக வழக்கத்தில் சொன்னாலும், இங்கு குருவுக்கு 10-ஆமிடம் சொந்த இடம். அங்கு ஆட்சிபெறும் அவர் நற்பலனைத் தருவார். மதிப்பு, மரியாதை, கௌரவம். கீர்த்தி, திறமை, செல்வாக்கு உண்டாகும். நன்மதிப்பும் பாராட்டும் கிட்டும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடும்பக் குழப்பத்திலி−ருந்து நிவர்த்தி தருவார். பொருளாதாரத் தேக்கம் அகலும். கேட்ட இடத்தி−ருந்து பண உதவிகள் கிடைத்து தொழிலை மேம்படுத்தலாம். 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேகம் சுகம்பெறும். தாயார் உடல்நலனில் ஆரோக்கியம் தெளிவாகும். மாதப் பிற்பகுதியில் சுக்கிரன் 11-ல் மாறுகிறார். எனவே ஒருபடி மேலே ஏறுவதற்கு வழிவகுக்கும். நட்புவகையில் ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டாகும். நீங்கள் செய்த பூஜை, பிரார்த்தனைக்கு இனிமேல் கூடுதல் பலனும் பயனும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு ஏற்படும்.

om011219
இதையும் படியுங்கள்
Subscribe