னிதன் என்பவன் கடவுளிடம் ஒரு கடனை வாங்கிக்கொண்டபின்புதான் பூமியில் பிறக்கிறான். அவன் வாங்கிய கடன் உயிர் என்பதுதான். இந்தக் கடனை கடவுள் எப்பொழுது வேண்டு மானாலும் திரும்பப் பெற்றுக் கொண்டுவிடுவான்.

நாம் கொடுக்க முடியாதென்று சொன்னா லும் விடமாட்டான். "இப்பொழுதே, இந்த நிமிடமே உன்னிடம் பெற்ற உயிர் என்ற கடனைத் திரும்பத் தந்துவிடுகிறேன். பெற்றுக்கொள்' என்று கூவி அழைத்தாலும் அவன் வாங்கிக்கொள்ள வரமாட்டான். "அதற் கென்று ஒரு காலத்தையும் நேரத்தையும் நான் நிர்ணயம் செய்திருக்கிறேன். அப்போது பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறிவிடுவான். அப்படி ஒரு உயிரைப் பெற்றுக்கொண்டு விட்டான் என்றால், நாம் என்ன அழுது புலம்பினாலும், கெஞ்சிக்கேட்டாலும் கொடுக்கமாட்டான். கொண்டுபோனது போனதுதான்.

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன்- "இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா உறவைச் சொல்லி அழுவதாலே உயிரை மீண்டும் தருவானா? இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது!' என்று பாடியுள்ளார்.

கடவுளிடத்தில் உயிர் என்ற கடனை வாங்கிவிட்டு, இந்த பூமியில் பிறந்து படாத பாடெல்லாம்பட்டு, "பட்டதே போதுமடா சாமி' என்று வாய்விட்டு அலறி, "எனக்கு இந்தக் கடன் வேண்டாம்' என்று நாம் கூறினா லும், நம் விதி என்ற பழைய கடனை அடைக்க நம்மை மீண்டும் பூமியில் இழுத்துப் போட்டுவிடுவான். இந்தக் கடனிலிருந்து தப்பிக்கவே முடியாது.

Advertisment

கடன் வாங்கியவன் விஷயத்தில் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும்- அதாவது கடன் கொடுத்தவனைவிட சுகமாக வாழ்கிறான். கடன் கொடுத்தவனோ அதை வசூலிக்க அரும் பாடு படுகிறான்.

கடன் வாங்கியவனோ மேன்மேலும் கடனை வாங்கிக்கொண்டு கவலையில்லாமல் நிற்கிறான். அமோகமாக வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பான். இப்படித்தான் "பேங்க் லோன்' கதையும் இன்றுள்ளது.

திருப்பதியில் வேங்கடேசப்பெருமாள் குபேரனுக்குக் கடன்பட்டவர்தான். இருந் தாலும் கடன் கொடுத்த குபேரனைவிட கடன் வாங்கிய பெருமாள் எவ்வளவு அமர்க்கள மாக, அமோகமாக இருக்கிறார். இன்றுவரை குபேரனிடம் வாங்கிய கடனை பெருமாள் திரும்பக் கொடுக்கவில்லையாம்.

Advertisment

சிலர், வாங்கிய கடனை நியாயமாகத் திரும் பத் தந்துவிடுகிறார்கள். சிலர் ஏமாற்றி விட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். இப்படி ஓடிப்போனவன் ஏதோ தான் மிக சாமர்த்திய மாக ஏமாற்றிவிட்டதாக எண்ணிப் பூரிப்பான். கடவுள் அவனை சும்மா விடுவாரா? அவன் ஏமாற்றிவிட்ட பணத்தை அவனுடைய சந்ததி களான மகன், பேரன் போன்றவர்களைக் கொண்டு கட்டவைத்துவிடுவான். இப்படி யொரு அவலநிலை நிழல்போல தொடர்ந்து வரும்.

vv

ஒரு ஹோட்டலில் வித்தியாசமான விளம்பரம் ஒன்றை இரண்டு நண்பர்கள் பார்த்தார்கள். அதில், "உங்கள் விருப்பம்போல என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டு மானாலும் சாப்பிடலாம். அதற்கு இப்போது நீங்கள் பணம் தரவேண்டிதில்லை. நீங்கள் சாப்பிட்டதற்கான தொகையை உங்கள் சந்ததியர், பேரன், பேத்திகளிடம் வாங்கிக் கொள்கிறோம்' என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப்பார்த்த அந்த நண்பர்கள் கடைக்குள் சென்று ஆசை தீர தின்றுவிட்டு, "பில்'லைக் கொண்டுவந்து கேஷியரிடம் கொடுத்துவிட்டு "டாட்டா' காட்டினார்கள். ஆனால் அந்தக் கேஷியர் அவர்களை விடாமல் இழுத்துப்பிடித்து, வேறொரு "பில்'லைக் காண்பித்து, ""இது உங்கள் தாத்தா, பாட்டன் சாப்பிட்ட "பில்'. இதை பேரன்களாகிய நீங்கள் செலுத்திவிட்டுச் செல்லுங்கள்'' என்று மிரட்டினார். இப்போதுதான் அவர்களுக்கு தாத்தா, பாட்டன் என்ற உறவுமுறை எப்படி யென்று தெரிந்தது.

பாட்டன் சேர்த்துவைத்த சொத்தை உரிமையோடு அனுபவிக்கும் பேரன்கள், அவர்கள் வைத்துவிட்டுப்போன கடனையும் அடைக்கத்தான் வேண்டும். இதுதான் நம்மை நிழல்போல தொடர்ந்துவரும் பாவம் என்ற உயிர்க்கடன். இறைவன் போட்ட கணக்கை எவராலும் மாற்றமுடியாது.

முற்பிறவியில் ஒருவன் ஏமாற்றிய கடனை அடுத்த பிறவியில் அவனே கட்டுவான். எப்படி யென்றால், பைநிறைய பணத்தை எடுத்துக் கொண்டு போகும்போது, அதை அவனுக்குத் தெரியாமலே எங்காவது தொலைத்து விடுவான். "ஐயோ! என் பணம் எப்படியோ பறி போய்விட்டதே' என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறுவான். அன்று ஒருவனுக்கு அவன் பணத்தைக் கொடுக்கா மல் ஏமாற்றினான். இன்று பணத்தை இழந்து விட்டு அலறுகிறான். இதுதான் இறைவன் பாடத்தில் பாவ- புண்ணியக் கணக்கு. கடன் வாங்கிப் பழகிவிட்டால், கோடிக் கணக்கில் கடன் வாங்கி வைத்திருந்தாலும் மேன்மேலும் வாங்கச் சொல்லும். அப்படி வாங்கி, இருந்த கோடியையும் இழக்கவும் நேரிடும். எனவே கடன் வாங்குவது நல்ல பழக்கமல்ல.

இராவணன் பட்ட கடன், சீதையைக் கடத்திக்கொண்டுபோய் வைத்திருந்து பின் அவப்பெயரோடு உயிரைவிட்டான்.

ஸ்ரீராமன் பட்ட கடன், சீதையை இழந்து விட்டு மீண்டும் அவளை மீட்டுக்கொண்டு வந்தது. பாண்டவர்கள் பட்ட கடன் நாடிழந்து கானகம் போனது. கண்ணன் பட்ட கடன் பாண்டவர்கள் பக்கம் இருந்து, நாட்டை மீண்டும் பாண்டவர்களுக்கு வாங்கிக் கொடுத்தது. கண்ணகியின் கடன் கோவலனிட மிருந்தது. கோவலனின் கடன் சிலம்பில் இருந்தது. அந்த சிலம்பு மதுரையை எரித்து அந்த மாமதுரையின் கடனை அடைத்தது. இதெல்லாம் இறைவன் ஏற்கெனவே விதித்த விதிக்கோடுகள்.

புண்ணியம் செய்தால் அது புண்ணியக் கடன். பாவம் செய்தால் அது பாவக்கடன். புண்ணியக்கடன் அள்ளிக்கொடுக்கும். பாவக்கடன் பழிதீர்க்கும்.

ஏழேழு பிறவிக்கும் தொடர்ந்துவரும் பாவ- புண்ணியக் கடன்கள்.