க்தியென்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு வலிமையான தவமாக இருக்கவேண்டும். ஒருவரது உள்ளம் பக்தியில் லயித்திருக்கவேண்டும். லயித்திருத்தல் என்றால் ஒன்றியிருத்தல் என்று பொருளாகும். எதில் ஒன்றியிருக்கவேண்டும்? இறைவன்மீது கொண்டுள்ள அன்பில், காதலில் ஒன்றியிருக்கவேண்டும். அந்த பக்தியில் உள்ளன்போடுகூடிய உண்மை இருக்க வேண்டும்.

அத்தகைய பக்தி எதையும் சாதிக்கும் வலிமைவாய்ந்தது.

Advertisment

dd

மனம் வலிமையாக இருப்பது அவசியம். மனதின் வலிமையைப் பற்றி வீரத்துறவி விவேகானந்தர், "மனம் மிகவும் வலிமையானது.

அந்த மனதை வலிமைமிக்க களஞ்சியமாக மாற்றுங்கள்' என்கிறார். இந்த மனமானது ஒளி ஆண்டைவிட (கண்ஞ்ட்ற் வங்ஹழ்ள்) வேகமானது.

Advertisment

ஒரு ஒளியாண்டு என்பது 9.46 லட்சம் கோடி மைல்கள் என்று நவீன விஞ்ஞானம் சொல்கிறது. அத்தகைய பேராற்றல்மிக்க மனதை அலைபாயவிடாமல், இடைவிடாது எம் பெருமானை நினைப் போமாயின் துன்பமென் பது தொலைந்துபோகும். பக்தியில் ஒருவரது மனம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் திருமந்திரச் சிற்பி திருமூலர்-

"உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்

பெறுதுணை செய்து பிறப்பறுத்து உய்மின்

செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து

உறுதுணையாய் அங்கியாகி நின்றானே'

என்று கூறுகிறார்.

இந்த பூமிப்பந்தில் ஆருயிர்கள் படும் துன்பங்களைப் போக்கி பேரருள்புரிய உற்றத் துணையாக இருக்கிற நந்தியெம்பெருமானை, வானுலக தேவர்களின் தலைவனை, ஒரே துணையாகவும், பெறத்தக்க பேறாகவும் கொண்டு, பிறவித்துயரைப் போக்கிப் பிழைத்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த பக்திகொண்டு அவன் திருவடியே துணை யென்று மனதால் எண்ணி தியானித்தோமா னால், அப்போது எம்பெருமான் சிவ பெருமான் தோன்றாத்துணையாக, ஒளி வடிவாய்த் தோன்றி நின்று காத்தருள்புரிவார்.

இத்தகைய உயரிய பாடலின் பொருளை உணர்த்தும்வகையில் திருச்சி எனும் திருசிராமலை யில் நடந்த சிறப்புவாய்ந்த நிகழ்வினைப் பார்ப்போம், திருச்சி என்றதும் நம் கண்முன்னே முதலில் காட்சியளிப்பது மலைக்கோட்டையாகும். அங்கு அமையப்பெற்ற தாயுமானசுவாமிகன் திருநிகழ்வினை இப்போது பார்ப்போம்.

Advertisment

வணிகர் குலத்தில் பிறந்த ரத்தினகுப்தன் எனும் மிகப்பெரும் வணிகன் பூம்புகார் நகரில் வசித்துவந்தான். அவனுக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. குழந்தைவரம் வேண்டி எம்பெருமானை வழிபட்டுவந்தான் ரத்தினகுப்தன். இறைவனின் பேரருளால் பேரழகு வாய்ந்த பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ரத்னாவதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

ரத்னாவதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெரியவளாகி திருமணப் பருவத்தையடைந்தாள். திருசிராமலையில் வசித்துவந்த வணிகன் தனகுப்தனுக்குத் தன் மகள் ரத்னாவதியை மணம்முடித்துக் கொடுத்தான். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் ரத்னாவதி கர்ப்பவதியாகி தாய்மைப் பேறடைந்தாள். அவள் திருச்சி மலைக் கோட்டையில் அருள்பாலிக்கும் செவ்வந்திநாதரை மிகவும் பக்தி சிரத்தையோடு வழிபட்டுவந்தாள். மகப்பேறு காலமும் நெருங்கிக்கொண்டிருந்தது.

இந்த செய்தியை பூம்புகாரில் வசிக்கும் தனது தாயாருக்குத் தெரியப்படுத்தி, தனக்கு உதவி செய்ய உடனே வருமாறு தகவல் அனுப்பினாள் ரத்னா வதி. தாயார் மிகவும் மகிழ்ந்து, ஆண்டவனுக்கு நன்றி கூறி மகளுக்குத் தேவையான மருந்துகள், எண்ணெய்ப் பொருட்கள், சத்துணவுகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு திருசிராமலையை நோக்கிப் பயணமானாள். இங்கே விதி விளையாடியது. அதை யாரால் அறியமுடியும்? எல்லாம் அவள் செயலல்லவா...

ரத்னாவதியின் தாயார் திருசிராமலைக்கு வரும்சமயம் காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. தாயார் செய்வதறியாது திகைத்து நின்றாள். மகள் ரத்னாவதியோ தனது தாயார் இப்போது வருவார், அப்போது வருவார் என்று வழிமேல் விழிவைத்து பதட்டத்தோடு காத்துக்கொண்டிருந்தாள். கரைபுரண்டோடும் வெள்ளமும் குறைய வில்லை; ரத்னாவதியின் தாயார் வர வழியும் தெரியவில்லை. இன்று, நாளை வந்துவிடுவாள் தாய் எனக் காத்திருந்த ரத்னாவதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. துக்கமும் ஏக்கமும் ஒருசேர தொற்றிக்கொண்டன.

தாயார் வராத துயரத் தையும், அதன்காரணமாகத் தான் படும் அவஸ்தையை யும் மலைக்கோட்டையில் அருளும் செவ்வந்திநாதரிடம் முறையிட்டாள். எவருக்கும் இரங்கிடும் எம்பெருமானின் உள்ளம் ரத்னாவதியின் பக்தியில் கரைந்தது. உடனே இறைவன் செவ்வந்திநாதர் ரத்னாவ தியின் தாயார் வடிவம்கொண்டு, வீட்டைச் சென்றடைந்தார். தாயைக் கண்ட மகளுக்கு எல்லையில்லா ஆனந்தமும் மகிழ்ச்சியும் சொல்லி முடியவில்லை. தாயாக வந்த இறைவன் ரத்னாவதியோடு அவள் வீட்டிலேயே தங்கி, ஒரு தாய் தன் மகளுக்குச் செய்யும் பணிவிடைகள் அனைத்தையும் செய்தார். ரத்னாவதிக்கு பிரசவத்திற்கான நேரம் வந்தது. தாய் வேடத்திலிருந்த ஈஸ்வரனே ரத்னாவதிக்கு மருத்துவம் பார்த்தார். ரத்னா வதியும் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இறைவன், ரத்னா வதியோடு இருந்து தாயையும் சேயையும் கவனித்துவந்தார்.

இதற்கிடையில் காவிரியில் வெள்ளம் வடிந்துவிட்டது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்துவந்தாள். "என்னே ஆச்சரியம்! ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இரண்டு தாய்கள் இருக்கிறார்களே! இதெப்படி சாத்தியம்? இவர்களில் யார் உண்மையான தாய்' என்று ரத்னாவதி குழப்பமடைந்தாள். அவள் குழப்பம் தீருவதற்குள் இறைவன் மறைந்துவிட்டார். அப்போது வானத்தில் செவ்வந்திநாதர் இறைவி மட்டுவார்குழலம்மையுடன் ரிஷப வாகனத்தில் காட்சிதந்தார். தன்னையும் தன் குழந்தையையும் தாயாக இருந்து கவனித்தவர் ஈசனே என்றுணர்ந்து, ரத்னாவதி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இந்த நிகழ்வுக்குப்பின்பு திருச்சி மலைக்கோட்டையில் விளங்கும் இறைவன் செவ்வந்திநாதர், "தாயுமானசுவாமி' எனும் திருநாமத் தோடு போற்றி வணங்கப் படுகிறார்.

dd

அருள்மிகு தாயுமானசுவாமிக்கு வாழைத்தார் படைத்து, பாலாபிஷேகம் செய்துவந்தால் குழந்தைப்பேறும் சுகப்பிரசவமும் உறுதியாகக் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இறைவி மட்டுவார்குழலம்மை தனிச்சந்நிதி யில் எழுந்தருளியுள்ளாள். கர்ப்பம் தரித்த பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, மட்டுவார்குழலம்பிகைக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, அப்பம், கொழுக்கட்டை முதலியன படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், சுகப்பிரசவம் நூறு சதவிகிதம் நிச்சயமாகும். மன ஒருமைப்பாட்டுடனும், உள்ளன்புடனும், நம்பிக்கையோடும் வழிபட வேண்டும். திருமந்திரம் சொல்வதைப் பார்ப்போம்.

"விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்

பொருப்பகம் சேர்தரு பொற்கொடி போல

இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்

நெருப்பு உருவாகி நிகழ்ந்து நின்றாரே'

உள்ளன்போடு சிவப்பரம்பொருளை எண்ணித் துதிக்கவேண்டும். பொன்மயமான இறைவனுடன் சேர்ந்த உமையம்மைபோல, அவரையே எண்ணித் தவமிருப்பவரின் மனதினுள்ளே பரம்பொருளான பரமேஸ் வரன் சோதிச் சுடர்வடிவாகத் திகழ்ந்து அருள்புரிவார்.

எனவே, ஈசன் எம்பெருமானை உள்ளன் போடும், நம்பிக்கையுடனும் துதிப்போம். அவர் தனது அருட்பேரருளை அள்ளி வழங்குவார். அன்பே சிவம்; அவனருளே நாம் பெறும் பெரும்வரம்!