தனுசு காலபுருஷனின் 9-ஆவது ராசியாகும். இதன் அதிபதி குரு. இங்கு எந்த கிரகமும் உச்சம், நீசமாவதில்லை.
தனுசு ராசியினர் பொதுவாக ஆன்மிகவாதிகள். "தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும்' எனும் கோட்பாடு உடையவர்கள். இவர்கள் குடும்பத்தினர் சற்று பழைமைவாதி களாக இருப்பர். இளைய சகோதரர் சற்று சோம்பேறியாக, எதையும் மூடிமறைத்துப் பேசுபவராக இருப்பார். தாய்- தந்தை தெய்வ நம்பிக்கை உடையவர்களாக, ஒரு கோவில் குளம்விடாமல் சுற்றுபவர்களாக இருப்பர். இவர்களு டைய குலதெய்வம் கோபம் நிறைந்த சாமியாக இருக்கும்.
இவர்களது வேலை கலை, பயணம், கட்டடம் சம்பந்தமானதாக இருக்கும். வாழ்க்கைத்துணை வம்பு பேசும் புத்திசாலியாக அமைவார். பயணங்களாலும், வயதானவர்களாலும் இவர்களுக்கு சிரமம் ஏற்படும். சிலரது தந்தை "ஈகோ' நிறைந்த வராக, அரசு சம்பந்தம் உடையவராக இருப்பார். கணக்கு, கல்வி, காவியம் சம்பந்தமான தொழில் இருக்கும். மூத்த சகோதரி லட்சணமாக- கலை நுணுக்கம் தெரிந்தவராக அமைவார். பூர்வீகம், குழந்தை சம்பந்தமாக அலைச்சல், செலவுண்டு.
இது தனுசு ராசியின் பொதுபலன்கள். பிறப்பு ஜாதக கிரக நிலையைப் பொருத்து பலன்கள் ஏற்ற- இறக்கமாக இருக்கும்.
குரு இருக்குமிடப் பலன்
தனுசு ராசிக்கு 2-ஆமிடமான மகரத்தில் இதுவரை அமர்ந்திருந்த குரு, இப்போது 3-ஆமிடமான கும்பத்திற்கு இடம் மாறுகிறார். தனுசு ராசிக்கு குருவானவர் ராசியாதிபதி மற்றும் 4-ஆம் அதிபதி.
குரு உங்களின் ராசி அதிபதியாகி, 3-ஆமிடம் எனும் வீர, தீர, வீரிய ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். இதுவரையில் சொந்த பந்தங்களைப் பார்த்து பம்மிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் பயம் தெளிந்து சகஜமாகிவிடுவார்கள்.இடமாற்றம் வந்தால் என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருந்தவர்கள், அதனை தைரியமாக எதிர்கொள்வார்கள்.
கடன் தொல்லையை எவ்விதம் தீர்ப்பதென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள், ஒன்று மனையை விற்றுக் கடனை அடைப்பார்கள் அல்லது "கடனைத் திரும்பக் கேட்க வந்து பாரு.... அப்புறம் தெரியும் சேதி' என மிரட்டி அனுப்பிவிடுவார்கள். வாரிசுகளிடம் பணிந்துசென்ற நிலைமாறி, தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
காதல் விஷயங்களில் தைரியம் வரும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாமா என விழித்துக் கொண்டிருந்தவர்கள், தைரியமாக மேற்கொள்வர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்க கூச்சப்பட்டு ஒதுங்கி நின்றவர்கள் அதில் தாராளமாகப் பங்கேற்பார்கள

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்க கூச்சப்பட்டு ஒதுங்கி நின்றவர்கள் அதில் தாராளமாகப் பங்கேற்பார்கள்.
மேலும் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வீடு மாற்றம், வாகனப் பரிமாற்றம் மனை விற்பனை, பள்ளி மாற்றம், பால்காரர் மாற்றம், தண்ணீர் கேன் போடுபவர் மாற்றம், வயல் மாற்றம், தோட்ட மாற்றம், பண்ணை குத்தகை, கைபேசி மாறுதல் என நிறைய மாறுதல் தரும்.
உங்களின் தாயார் வேறிடம் செல்வார். வாழ்க்கைத் துணையின் வேலை, தொழில் மாறும். சிறுதூரப் பயணம் அதிகரிக்கும். வீட்டில் நிறைய வேலை யாட்களை வைத்து வேலை வாங்கும் சூழ்நிலை அமையும்.
சிலர் வீடு கட்டும்போது, அது சம்பந்தமாக நிறைய வேலையாட்களிடம் மேற்பார்வை செய்யவேண்டி அமையும். உங்களின் கல்வியாற்றலை, கைபேசிமூலம் பிறர் பயன்படும்படி செயலாற்றுவீர்கள்.
5-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 5-ஆம் பார்வையால், தனுசு ராசியின் ஏழாமிடத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். ஏழாமிடம் என்பது களஸ்திர ஸ்தானம். ஆக, குரு கும்பத்துக்கு குடிபெயர்ந்தவுடன், தனுசு ராசியாருக்கு குடும்ப அமைப்பை ஏற்படுத்திவிடுவார். எனவே கல்யாணம் நிச்சயம். உங்களில் ஒருசிலர் காதல் திருமணம் செய்துகொள்வீர்கள்.
வியாபாரம், கடை ஆரம்பிக்க நினைத்தவர்கள் இந்த காலகட்டத்தில் கடை திறந்துவிடுவீர்கள். ஏற்கெனவே கடை வைத்திருப்பவர்கள். கிளைகளைத் திறப்பீர்கள்.
சிலர் தொழிலில் வெளிநாட்டுத் தொடர்பை உண்டாக்குவீர்கள். இஸ்லாமிய நண்பருடன் சேர்ந்து வியாபாரம் தொடங்குவீர்கள்.
உங்களில் சிலர் தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள். சிலர் அரசியலில் மந்திரி பதவி மற்றுமுள்ள பதவிகளில் அமர்வதால், நிறைய மனிதர்களை சந்திக்கவேண்டி இருக்கும். நிறைய விவாதங்களில் பங்கேற்பீர்கள்.
மனை சம்பந்த விற்பனை நன்கு நடக்கும். குருபகவான் உங்கள் ராசிநாதனாகி ஏழாமிடத்தைப் பார்க்கையில், அவர் உங்களுக்கு எதிரில் இருப்பவரிடம் எவ்விதம் பேசவேண்டும்- அவர்களை எவ்வாறு அணுக வேண்டும்- தன்மையாகக் கையாள்வது எங்ஙனம்- அவர்களிடம் நல்ல பெயர், புகழ், பணம் சம்பாதிப்பது எப்படி என அருமையாக சொல்லிக் கொடுப்பார். வெளியுலகத் தொடர்பு விரிவடைய, உங்களின் முன்னேற்ற எல்லையும் எல்லையின்றி அமையும். ஒரு மனிதனின் வாழ்வு வளர்ச்சிக்கு இது போதுமே. இதுவே குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஏற்படப்போகும் முக்கியமான பலனாகும்.
7-ஆம் பார்வைப் பலன்
குரு தனது ஏழாம் பார்வையால், தனுசு ராசியின் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் தனுசு ராசியினர் பலர் பேரன்- பேத்தி கிடைக்கப் பெற்று தாத்தா- பாட்டி ஆவார்கள்.
இந்த காலகட்டத்தில், தனுசு அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் செய்யாம லேயே பெரிய பெரிய பதவிகள் தேடிவரும். இதைத்தான் அதிர்ஷ்டம் என்பர்.
அரசுடன் கொண்டிருந்த பகை தீர்ந்து, சுமுக அணுசரணை உண்டாகும்.
அரசு வேலைக்குக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, கண்டிப்பாக வேலை கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம். வேலை, அரசுப்பணி, அரசியல் என தொழில் சார்ந்தவர்களுக்கு ஒருவித மறைவுத் தன்மை நீங்கி, வாழ்வில் ஒரு புத்தொளி பிறக்கும். இதனை குருவின் பார்வை நன்கு ஈடேற்றும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. அது அரசு அல்லது பதவிஉயர்வு வகையில் அமையும். சுப விஷயங்களுக்குக் கடன் வாங்குவீர்கள். மூத்த சகோதரியின் விஷயமாக கடன் வாங்கக்கூடும்.
உயர்கல்வி மேன்மையடையும். தனுசு ராசி மாணவர்கள் மருத்துவம், கட்டடக்கலை, மனிதவளம் போன்ற துறைகளில் பரிமளிப்பர். எப்போதும் இராத புதுவித சுறுசுறுப்பை உணர்வீர்கள். எனவே, உங்களின் அன்றாடச் செயல்கள் வேகம் பெறும். இதனால் வாழ்வு வளமாகும்.
குருபார்வை 9-ஆமிடத்தில் படர்வதால் தர்ம சிந்தனை, ஆன்மிக ஆவல், தெய்வ தரிசனம், ஆலய வழிபாடு, கடவுள் நம்பிக்கை- முக்கியமாக சிவ வழிபாடு, பிற மதத்தினரை மதித்தல் என இவ்வாறான நல்ல யோசனைகள் மூளையை ஆக்கிரமிக்கும்.
9-ஆம் பார்வைப் பலன்
குரு தனது ஒன்பதாம் பார்வையால் தனுசு ராசியின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-ஆமிடம் என்பது நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தரும் காமதேனுவைப் போன்ற ஸ்தானம். இந்த இடத்தை குருபகவான் தனது பார்வையால் நிரப்பும்போது, என்னதான் கிடைக்காது தனுசு ராசிக்காரர் களுக்கு? அனைத்தும் கிடைக்கும். அளவில்லாமல் கிடைக்கும்!
முதலில் வேலை கிடைக்கும். தொழில் லாபம் பெருகும். புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தின் வில்லங்கம் விலகும். கலைத்தொழில், திரைப் படம், தொலைக்காட்சித் துறையினரின் காட்டில் செல்வமழைதான்.
விளையாட்டுத் துறையினர் மேன்மையடைவர். பூமி லாபம் உண்டு. மருமகள்- மருமகன் வருவர். அவர்கள் மிக மேன்மையான இடத்திலிருந்து அமைவார்கள். மறுமணம் அமையும். வாகன விற்பனை, வாகன உதிரி பாகங்கள், வண்ணம் சம்பந்தம் கொண்டோர் நன்மையடைவர். அரசியல் வாதிகள் கல்வி, மனை, வீடு, வாகனம் சம்பந்தமான மந்திரி பதவி பெறுவர். மனை சம்பந்த வில்லங்கம், வழக்குகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.
திரைத்துறையில் டைரக்ஷன், எடிட்டிங் மற்றும் போட்டோ ஸ்டுடியோ, மதுக்கடை அருகில் கடை வைத்திருப்போர், ரசாயன சம்பந்தம் என சற்று இருளும் வெளிச்சமும் கலந்த தொழில் செய்வோர் மிகுந்த வளர்ச்சி காண்பர்.
சமையல் கலைஞர்கள்- அதுவும் அசைவ சமையல் செய்யும் கலைஞர்கள்- இதுவரையில் இல்லாத முன்னேற்றம் காண்பர். அடுக்குமாடி கட்டடம் கட்டும் துறையினர் கருப்பிலும் வெள்ளையிலும் லாபம் காண்பர்.
தனுசு ராசியினரின் வாழ்வியல் எவ்விதம் இருப்பினும், அவர்களுக்கு நிச்சயமாக ஒரு படி முன்னேற்றம் உண்டு. வட்டி, வங்கித் தொழில் செய்வோர் பலன் காண்பர். வழக்குகள் வெற்றியடையும் காலமிது.
பொதுப் பலன்கள்
இந்த குருப்பெயர்ச்சியின்போது தனுசு ராசியின் மூன்றாம் வீட்டிலமர்ந்த குரு தைரியத்தை, மனோதிடத்தை வழங்குவார். மேலும் அவர் மிக அருமையான வீடுகளான களஸ்திரம், அதிர்ஷ்டம், லாபம் ஆகிய 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். இதைவிட தனுசு ராசியாருக்கு வேறென்ன வேண்டும்? அதிர்ஷ்டமான திருமணம் நடந்து, நல்ல லாபம் பெறுவீர்கள் எனலாமா? யோகப்பலனால் வியாபாரம் பெருகி, லாபம் கொழிக்கிறது எனலாமா? எப்படி எந்த வார்த்தையில் சொன்னால் என்ன? மிக அதிர்ஷ்டம் தான்! தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமிது. இதுபோன்ற கோட்சார நேரங்களை ஜாதகர்கள் முயன்று பயன்படுத்தி வாழ்வை செம்மையாக்குதல் அவசியம். இந்த குருப்பெயர்ச்சி தனுசு ராசியாருக்கு 80 சதவிகிதப் பலன் தரும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி மனதில் ஒரு தெளிவைக் கொடுக்கும். இதுவரையில் இருந்த இனம்புரியாத அச்சத்தை அகற்றும். சந்தேகம் தெளியும். வீணான செலவுகளைக் கட்டுப்படுத்தும். வீண் பயணங்களை வெட்டிவிடும். முதலீடுகளை யோசித்து, நன்கு அலசி ஆராய்ந்து, முதலீடு செய்யவைக்கும். உங்களைப் பற்றிய வதந்திகள் உங்களுக்குத் தெரியவரும். மேலும், அது யாரால் பரப்பப்பட்டது எனவும் தெரிந்துகொள்வீர்கள். இந்த வேண்டாத செயல்பாடுகளைக் கண்டு, தெரிந்து, தெளிந்து, பாதுகாப்பான பாதை வருத்துக்கொள்வீர்கள். மனத் திருடர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பீர்கள். நல்ல ஆன்மிக சித்தரை வணங்குங்கள். சீரடி சாயிபாபா, ராகவேந்திரர், காஞ்சிப் பெரியவர் போன்ற சித்தர்களை விளக்கேற்றி வைத்து மனதார வழிபடவும்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி உங்களை "மணி மைண்டட்' மனிதராக மாற்றும். ஆற்றில் இறங்கினாலும் ஆதாயம் இல்லாவிட்டால் இறங்க மாட்டீர்கள். எங்காவது சேவை செய்தாலும், அதிலும் உங்கள் நிறுவனப் பெயர் இடம்பெறும்படி செய்துவிடுவீர்கள். யாருக்காவது தானதர்மம் செய்தாலும், அதில் வரிவிலக்குக்கு வழி உள்ளதா என முதலில் அறிந்துகொள்வீர்கள். கடன் வாங்கும்போது சற்று ஏமாளி மனிதர்களிடமிருந்தும், கடன் கொடுக்கும்போது திரும்பத் தரும் தகுதியுள்ள மனிதரிடமும் கொடுக்கல்- வாங்கல் வைத்துக்கொள்வீர்கள். எதிரிகளிடமிருந்தும் லாபம் பெற்றுவிடும் சாமர்த்தியம் உண்டு. சிலர் தங்கள் பகுதியிலுள்ள நான்கு குழந்தைகளின் மூக்கைச் சிந்தி, எட்டு வீட்டைக் கூட்டி, பதினாறு பேருக்கு துணி எடுத்துக் கொடுத்து, 32 முறை பகுதியை வலம்வந்து, பின் அந்தப் பகுதிக்கு அரசியல் சார்புடைய தலைவராகிவிடுவார்கள். அப்புறமென்ன? வசூல்தான். தர்பார்தான். ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியாரை விளக்கேற்றி வணங்கவும்.
உத்திராடம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
ஆன்மிக எண்ணங்கள் பெருகும். உங்கள் தந்தையின் மேன்மையைப் புரிந்து அவரைக் கொண்டாடுவீர்கள். நிறைய கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவீர்கள். உழவாரப் பணி செய்வீர்கள். விளக்கேற்றும் கைங்கர்யம் செய்வீர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த மருத்துவர்கள் நிறைய பேரின் உயிரைக் காப்பாற்றுவார்கள். அரசியல், அரசு சார்ந்த பெரும் பதவியில் இருப்போர், பணப்பலனை எதிர்பார்க்காமல் பிறர்நலம், பொதுநலன் புரிவர். முதுமையடைந்தவர்களை ஆதரவுடன் கவனிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் பிறர் மெச்சும்படி அமையும். உங்களது மிக உயரிய குறிக்கோளை தெளிவான மனநிலையுடன், உறுதியாகச் செய்து முடிக்க இயலும். இதன்மூலம் பிறரின் உள்ளார்ந்த ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சூரியனார் கோவில் சென்று விளக்கேற்றி வழிபடவும்.
பரிகாரங்கள்
சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். இந்த குருப்பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் உதவி, குழந்தைகள் சார்ந்து அமையட்டும். வேலை செய்யும் தொழிலாளர்களின் தேவையறிந்து உதவவும். சாலை சீரமைக்கும் தொழிலாளர்களுக்கு வேண்டியதைக் கேட்டு உதவுங்கள். வீடு விற்றாலோ வாங்கினாலோ தரகு கமிஷன் பேசியப்படி கொடுத்துவிடுங்கள். வாகனம் பழுது பார்க்கும் இடத்திலுள்ள சிறு பையன்களுக்கு உதவிசெய்யுங்கள். பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு வெளிச்சம் வர ஆவன செய்யவும்.
"கல்லால் நிழல் மேயவனே கரும்பின்' எனத் தொடங்கும் பஞ்ச புராணப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.