Advertisment

ஆதித்தமிழர் காலத்திலிருந்தே ஆடல்கலை! - அடிகளார் மு.அருளானந்தம் 42

/idhalgal/om/dance-time-adithamizhar-adikalar-marulanandam-42

ன் மகளுக்காக நற்றாய், அறிவர் கோட்டத்திலிருக்கும் ஔவை யாரை அழைத்துவர ஏற்பாடு செய்யவேண்டுமென விரும்பி னாள். சங்ககாலத்தில் மிகச்சிறந்த பல்கலைப் பாடசாலைகளாக அறிவர் மடம் திகழ்ந்துவந்தது. இது தலைநகருக்கு அருகில் கடுமையான பாதுகாவலுடன் செயல்பட்டு வந்தது.

Advertisment

அந்தக் காலத்தில் சில பெரிய அறிவர் மடங்கள், அறிவர் கோட்டமென்று அழைக் கப்பட்டு வந்தன. கோட்டம் என்பது, 18 அடி உயரம் வளர்ந்த பனை மரங்களால் வட்ட வடிவமாக, நெருக்கமாக அமைக்கப்பட்ட வேலிகளைக்கொண்ட இடமாகும். இதற்குள் காட்டு விலங்குகளும் எதிரிகளும் உள்ளே நுழையாத அளவுக்கு காவல் வீரர்கள் இருப்பார்கள். இவற்றின் உள் பரப்பளவா னது சுமார் 1,000 குழி நிலத்தை உள்ளடக்கிய வளமான கானகப் பகுதியைக் கொண்டதாக இருக்கும். ஒரு குழி நிலமென்பது, தற் போதைய நில அளவுப்படி சுமார் 60 சென்ட் பரப்பளவாகும்.

arul

இவ்வறிவர் கோட்டம், சுமார் 34 கலை களைக் கற்பிக்கக்கூடிய தனித்தனி சாலை களும், தங்குமிடமுமுள்ள தூய்மை யான பகுதியாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. இது, அரச குடும்பச் சிறார்களும், சிறுமியர்களும், மற்ற சிறார்களும் பயிற்சிபெறும் குருகுல மாகத் திகழ்ந்துவந்தது. இங்கு பயிலும் சிறார்களுக்குத் தமிழ் எழுத்து வடிவம், சொல், இலக்கணம், இலக்கியம், எண்மம், கணியம், தொன்மம், ஓகம், உறுப்பமைவு, பண்டுதம், மதுரமொழிவு, கம்மியம், மண்ணியம், ஒட்டுகை, இதழியம், பொன்- மணி நோட்டம், ஒலிதம், நடம், மதங்கம், யாழியம், குழலியம், மறவனப்பு, ஓவு, சிற்பம், வில், வாள், மல், குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சி; வேள வனப்பு, பரி வனப்பு, மலைவழி, தரைவழி, கடல்வழி, வான் வனப்பு, நீர் வனப்பு, வேளாண் வனப்பு, கார் ஆளுமை, வெள்ள ஆளுமை, நோய் நிமித்திகம், வேளாண் நிமித்திகம், நஞ்சை, புஞ்சை, மடை கால்வ

ன் மகளுக்காக நற்றாய், அறிவர் கோட்டத்திலிருக்கும் ஔவை யாரை அழைத்துவர ஏற்பாடு செய்யவேண்டுமென விரும்பி னாள். சங்ககாலத்தில் மிகச்சிறந்த பல்கலைப் பாடசாலைகளாக அறிவர் மடம் திகழ்ந்துவந்தது. இது தலைநகருக்கு அருகில் கடுமையான பாதுகாவலுடன் செயல்பட்டு வந்தது.

Advertisment

அந்தக் காலத்தில் சில பெரிய அறிவர் மடங்கள், அறிவர் கோட்டமென்று அழைக் கப்பட்டு வந்தன. கோட்டம் என்பது, 18 அடி உயரம் வளர்ந்த பனை மரங்களால் வட்ட வடிவமாக, நெருக்கமாக அமைக்கப்பட்ட வேலிகளைக்கொண்ட இடமாகும். இதற்குள் காட்டு விலங்குகளும் எதிரிகளும் உள்ளே நுழையாத அளவுக்கு காவல் வீரர்கள் இருப்பார்கள். இவற்றின் உள் பரப்பளவா னது சுமார் 1,000 குழி நிலத்தை உள்ளடக்கிய வளமான கானகப் பகுதியைக் கொண்டதாக இருக்கும். ஒரு குழி நிலமென்பது, தற் போதைய நில அளவுப்படி சுமார் 60 சென்ட் பரப்பளவாகும்.

arul

இவ்வறிவர் கோட்டம், சுமார் 34 கலை களைக் கற்பிக்கக்கூடிய தனித்தனி சாலை களும், தங்குமிடமுமுள்ள தூய்மை யான பகுதியாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. இது, அரச குடும்பச் சிறார்களும், சிறுமியர்களும், மற்ற சிறார்களும் பயிற்சிபெறும் குருகுல மாகத் திகழ்ந்துவந்தது. இங்கு பயிலும் சிறார்களுக்குத் தமிழ் எழுத்து வடிவம், சொல், இலக்கணம், இலக்கியம், எண்மம், கணியம், தொன்மம், ஓகம், உறுப்பமைவு, பண்டுதம், மதுரமொழிவு, கம்மியம், மண்ணியம், ஒட்டுகை, இதழியம், பொன்- மணி நோட்டம், ஒலிதம், நடம், மதங்கம், யாழியம், குழலியம், மறவனப்பு, ஓவு, சிற்பம், வில், வாள், மல், குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சி; வேள வனப்பு, பரி வனப்பு, மலைவழி, தரைவழி, கடல்வழி, வான் வனப்பு, நீர் வனப்பு, வேளாண் வனப்பு, கார் ஆளுமை, வெள்ள ஆளுமை, நோய் நிமித்திகம், வேளாண் நிமித்திகம், நஞ்சை, புஞ்சை, மடை கால்வாய் வனப்பு, குடியாண்மை போன்ற கலைகள் கற்றுத் தரப்பட்டு வந்தன.

இம்மடத்தில்தான் ஔவையார்கள் தங்கிவந்துள்ளனர். ஔவை என்றால் பெண் இனத்தில் ஆணாதிக்க குணமுள்ளவர்கள். இவர்களின் கருப்பை சிறுத்திருக்கும். அதிக வீரமுள்ளவர்களாகவும், துணிச்சல் மிக்கவர்களாகவும் திகழ்பவர்கள். இவர்கள் அறிவர்மட குருமார்களால் தமிழ், ஓகம், பண்டுதம், பண்பாடு கற்றுத்தரப்பட்டு வளர்க்கப்படுவார்கள். பெண்களுக்கான பண்டுதங்களை நன்றாகக் கற்றுத் தேர்ந்த இவர்கள், அறம்வளர்க்கும் ஆன்றோர் களாக வாழ்ந்து வந்தமையால், அனைத்துத் தமிழ் சமுதாயத்தவர்களால் மிகுந்த மதிப்பு டன் போற்றப்படுபவர்களாகத் திகழ்ந்தனர்.

மன்னர்களும் இவர்கள் சொல்லுக்குத் தலைவணங்குபவர்களாக இருந்தனர். குடியாண்மை சம்பந்தப்பட்ட அறிவுரைகளை அனைவருக்கும் வழங்குபவர்களாக ஔவையார்கள் திகழ்ந்தனர்.

Advertisment

arul

இவ்வறிவர் மடத்தில் இளம் சிறார் களுக்கு ஆதித் தமிழ் எழுத்து வடிவம், அதன் ஒலிப்பயிற்சிகள், யாப்பு எனப்படும் ஒலி இசைக் குறிப்புகள் இவர்களால் கற்றுத் தரப்பட்டன. உதாரணமாக வெண்பா அல்லது ஆசிரியப்பா போன்ற இலக்கண வகைகள், முதலில் இசை வடிவில்தான் கற்பிக்கப்படும். இவற்றை மறக்காமல் இருப்பதற்காக இசைக் குறிப்புகளாக கூவிளம், கருவிளம் என பெயர்ச் சொற்களால் யாப்பு வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் இசை வடிவில் கற்பிக்கப்படும் முறைக்கு "ஓதல்' என்று பெயர். இவை மறக்காமல் இருப்பதற்காகவே, "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என ஔவையாரால் வலியுறுத்தப்பட் டது.

இந்த யாப்பு வடிவத்தை நன்றாக மனதிற்குள் மனனம் செய்தபின்புதான் அதற் கேற்ற வண்ணம் சொற்களை அமைத்து செய்யுள் இயற்றும் பயிற்சி தரப்படும். இவ்வாறுதான் புலவர்களும், பாணர்களும், மன்னர்களும் சிறந்த தமிழறிஞர் களாக வளர்த்தெடுக்கப்பட்டனர்.

எண்மம் என்பது எழுத்தறிவுக்கு இணை யாகக் கற்பிக்கப்பட்டுவந்தது. கீழ்க்கணக்கு, மேல்கணக்கு, மனக்கணக்கு, முறைக்கணக்கு, கால் வாய்ப்பாடு, அரை வாய்ப்பாடு, முக்கால் வாய்ப்பாடு, முழு வாய்ப்பாடு, நில அளவை, படைமுறை அளவு, கருவூலப் பண்டார அளவு, இறையளவு போன்ற கணிதம், நீட்டல், முகத்தல், வில், வட்ட, மனையளவீடு போன்றவையும் சிறப்பாகக் கற்றுத்தரப்பட்டு வந்தன.

கணியம் என்னும் வானியல் ஆய்வினால் போர்க்காலம், கப்பல் பயணம், பெருவழிப் பாதைப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. வான் நிமித்தகத்தைக்கொண்டு முழுநிலவுக் காலம், பனிக்காலம், இளவேனில் போன்ற ஆறு பெரும்பொழுதுகளும், ஆறு சிறு பொழுதுகளும் கணக்கிடும் முறை, கால நிமித்திகம் போன்றவை கற்றுத் தரப்பட்டன.

தொன்மம் எனும் வரலாறு கலந்த சமூகவியல் கற்றுத்தரப்பட்டன. ஓகம் எனும் யோகக்கலை துறவியர்க்கும், ஔவையார்களுக்கும், சிறார்களுக் கும் பல்வேறு நிலைகளில் கற்றுத் தரப்பட்டன. உறுப்பமைவு என்பது இறந்துபட்ட விலங்குகள், மாந்தர் களின் உள்ளுறுப்பு அங்கங்களை அறுவைசெய்து, அவற்றின் நிலை களைக் கற்றுணரச் செய்வதாகும்.

பண்டுதம் என்றால் மருத்துவம். கைவைத்தியம் முதல் பெருவைத்தியம், இராஜவைத்தியம், கற்ப வகை, கட்டு வகை, பற்பவகை, சுண்ண வகை, செந்தூர வகை போன்ற மருத்துவ முறைகள் கற்றுத்தரப்பட்டன. இது குருமார்களின் நேரடிப் பயிற்சியாக இருந்தது.

மதுரமொழிவு என்ற, மனிதகுல நாகரீகப் பண்பாட்டின் உச்சத்தை வெளிப்படுத்தும் இனிய வாய்மொழி களைப் பேசுதல், மன ஆறுதல் தரும் நேர்மறை வார்தைகளைப் பேசுதல், கடுஞ்சொல் பேசாது அன்பு கெழுமிய வார்தைகளைப் பேசக் கற்றுக்கொடுத்தல் போன்றவற்றுக்கு நல்ல முறையில் பயிற்சி தரப்பட்டன.

கம்மியம் என்பது மண்ணிற்கடியிலுள்ள பல்வேறுபட்ட உலோகங்களைப் பிரித்து சுத்தம்செய்து, கலப்படமற்ற தனி உலோகங் களாக எடுப்பது.

மண்ணியம் என்பது, ஓரிடத்திலிருக்கும் மண்ணைக்கொண்டு அதற்கடியில் இருக்கும் கனிம வளங்களை ஆய்ந்தறிவது, அது எதற்குகந்த மண்வகை எனப் பிரித்தறிவது. ஒட்டுகை என்பது ஒருவகை உலோகக் கருவிகளோடு மாற்றுவகை உலோகக் கைப்பிடிகளை உருக்கி இணைத்து அழகுறச் செய்தல். இதளியம் என்றால், ஒருவகை உலோகத்திலிருந்து வேறுவகை உலோகமாக மாற்றி, படிப்படியாகப் பல நிலைகளில் தங்கமாக மாற்றுவது.

பொன்- மணி நோட்டம் என்றால், தங்கத்தின் தரத்தினையும், நவரத்தினக் கற்களின் தரத்தினையும் சரியாக ஆய்ந்து கண்டறியும் கற்றல் முறையாகும். ஒலிதம் என்றால், பண்களை முறையான இலக்கணப்படி இசைத்தல். ஐந்திணைகளுக்குரிய பண்களை பேதமின்றி இசைக்கக் கற்றுக்கொடுப்பது.

யாழியம் என்றால் ஆதியாழ், பேரியாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ், முல்லையாழ் போன்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம்கொண்டவை. குறிஞ்சி யாழைக்கொண்டு குறிஞ்சிப் பண்ணைத்தவிர வேறுவகைப் பண்களை வாசிக்கமுடியாது. இவ்வாறு மருதயாழைக்கொண்டு குறிஞ்சிப் பண்ணை வாசிக்க இயலாது. இந்த யாழ்கள் முழுவதற்குமான வடிவ முறைகளைக் கற்றுத்தந்து, அவற்றிலிருந்து அவற்றுக்கான பண்களை மீட்டப் பழக்கித்தருவது.

அதேபோல் 12 வகையான குழல்கள் சங்ககாலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான இலக்கணங்களையும், அதிலிருந்து இசைப் பண்கள் உருவாக்கக் கற்றுத் தருவதே குழலியம். மதங்கம் என்றால் தோல் கருவிகள் செய்யும் முறைகளையும், அதனை வாசிக்கும் இசைக் குறிப்புகளையும் கற்றுத் தருவது.

நடம், இசைக்கருவிகளால் வாசிக்கப்படும் இசையின் நுணுக்கங்களுக்கு ஏற்றாற்போல் நடனம் கற்றுத் தரப்பட்டன. தமிழன் தோன்றிய காலம் முதலே ஆடல்கலை பிறந் துள்ளதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் சங்ககாலத்தில் 16 வகை நடனங்கள் கற்றுத்தரப்பட்டன. அக்கலை உச்சப்புகழ் நிலைக்கும் சென்றடைந்தன.

மறவனப்பு என்பது, போர் உத்திகளுக் கேற்றாற்போல் உடல்தகுதி, மனத்திறன் இரண்டையும் ஒருசேர வளர்த்தெடுப்பது. ஓவு என்றால் ஒரு நிகழ்வை அப்படியே சித்திரமாக நகல் செய்வது. இதற்கு நல்ல நினைவாற்றல் தேவை. இதைத்தான் ஓவியம் என்றழைத்தனர். அதாவது, ஒரு ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளை தத்ரூபமாக சித்திரத்தில் பதிவு செய்வது. இந்தக்கலை ஆதிமனிதன் காலந்தொட்டே இருந்துவந்திருக்கிறது. தங்கள் கூட்டத்தில் நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பிற்கால சந்ததியினர் உணரும் வண்ணம், குறிப்பால் சித்தரித்து உணர்த்துவதற்கு, பாறைகளிலும் குகைகளிலும் ஓவியங்கள் தீட்டியிருந்தார்கள் ஆதித்தமிழர்கள்.

இதற்குப் பல பரிணாம வளர்ச்சிகொடுத்து அங்க உறுப்பமைவு, சூழல் அமைவு, காலம், தொழில், புராணம் ஆகியவற்றுக்கான சில விதிமுறைகளையும் சூத்திரங்களையும் கற்றுக்கொடுத்து, சுவர் ஓவியம், திரைச்சீலை ஓவியம், கோட்டோவியம், பச்சிலை ஓவியம், கனிம ஓவியம், தங்க- வெள்ளிக் கம்பிகளால் உருவாக்கும் ஓவியம், மர ஒட்டோவியம், பளிங்கோவியம் போன்றவை கற்பிக்கப் பட்டன.

சிற்பக்கலை என்பது, கோட்டோவியத் தைப் பள்ளமாக்கி, சிற்பக்கலையின் முன்னோடியாக மண்பாண்டங்கள், ஓலைகளில் செதுக்கிய மனிதக் கைகள், கல்லில் கல்வெட்டு சிற்பம், புடைப்புச் சிற்பம், தனிச்சிற்பம், சுண்ணச் சிற்பம் செய்து பழகியபின், அதற்கான அங்க அடையாளங்கள் வரையறுக்கப்பட்டு, பல விதிகளை உட்புகுத்தி, திறன்மிக்க சிலைகள் வடிப்பதற்கான கல்வகை, உளிவகைகளைக் கண்டறிந்து, பெருங்கலைக் கூடம் உருவாக் கும் அளவுக்குக் கற்பிக்கப்பட்டன.

வரும் இதழிலும் அறிவர் மடத்திலேயே வாசம் செய்வோம்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe