உச்சம் பெற்ற படைப்பின் குறியீடு! (9)

/idhalgal/om/cropping-code-9

சித்தர் கால சிறந்த நாகரிகம்!

(9)

றருத நிலத்து மெய்ஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, பண்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்த அன்றைய வாலைகுருநாதன்- அங்காளம்மாள் திருக்கோவிலுக்கு மிக நேர்த்தியான அலங்காரத்துடன் முன்னே சென்றது குருநாதரின் பட்டத்து யானை. இளவரசனின் பூப்பல்லக்கானது,

அங்கிருந்து நூறடி தூரத்திற்குப் பின்னே, மக்களின் அன்போடு கலந்த பக்தியால், இளவலுக்குத் தரப்படும் மரியாதைகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு, 12 நிலைகளிலும் நின்று அருளாசி வழங்கிவிட்டு, வாலை குருநாதன்- அங்காளம்மாள் கோவில் நுழைமண்டபத்தைச் சென்றடைந்தது. அங்கு முல்லை நிலத்து அலங்காரப் பண்டாரத்தாரால் கொடுக்கப்படும் மாலை, மலர் மகுடம் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, மருதநிலத்து குருகுலத்தால் உருவாக்கப்பட்ட பூசகப் பண்டாரத் துறவியாரின் நிறைகுட கும்ப மரியாதையைப் பெற்று, தான் கொண்டுவந்த அரச மரியாதையாக, பொன் பட்டாடை, பொன் மாணிக்க ஆபரணங்களை வாலை குருநாதரின் காலடிக்கு காணிக்கை ஆக்குவதற்காகத் தனது குருநாதரிடம் ஒப்படைத்து, கருவறைமுன் வணங்கி நிற்பார் இளவல்.

சித்தத்தை சிவன்பால் வை!

"உன்னை அறிந்து, இறைவன் இவ்வுடம்பைக் கொடுத்த மெய்க்காரணத்தை அறிந்து, இறவா நிலை அடையும் உண்மையை உணர்ந்து, பிறர் துன்பம் எதுவென்று அறிந்து, அதைத் துடைத்த

சித்தர் கால சிறந்த நாகரிகம்!

(9)

றருத நிலத்து மெய்ஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, பண்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்த அன்றைய வாலைகுருநாதன்- அங்காளம்மாள் திருக்கோவிலுக்கு மிக நேர்த்தியான அலங்காரத்துடன் முன்னே சென்றது குருநாதரின் பட்டத்து யானை. இளவரசனின் பூப்பல்லக்கானது,

அங்கிருந்து நூறடி தூரத்திற்குப் பின்னே, மக்களின் அன்போடு கலந்த பக்தியால், இளவலுக்குத் தரப்படும் மரியாதைகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு, 12 நிலைகளிலும் நின்று அருளாசி வழங்கிவிட்டு, வாலை குருநாதன்- அங்காளம்மாள் கோவில் நுழைமண்டபத்தைச் சென்றடைந்தது. அங்கு முல்லை நிலத்து அலங்காரப் பண்டாரத்தாரால் கொடுக்கப்படும் மாலை, மலர் மகுடம் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, மருதநிலத்து குருகுலத்தால் உருவாக்கப்பட்ட பூசகப் பண்டாரத் துறவியாரின் நிறைகுட கும்ப மரியாதையைப் பெற்று, தான் கொண்டுவந்த அரச மரியாதையாக, பொன் பட்டாடை, பொன் மாணிக்க ஆபரணங்களை வாலை குருநாதரின் காலடிக்கு காணிக்கை ஆக்குவதற்காகத் தனது குருநாதரிடம் ஒப்படைத்து, கருவறைமுன் வணங்கி நிற்பார் இளவல்.

சித்தத்தை சிவன்பால் வை!

"உன்னை அறிந்து, இறைவன் இவ்வுடம்பைக் கொடுத்த மெய்க்காரணத்தை அறிந்து, இறவா நிலை அடையும் உண்மையை உணர்ந்து, பிறர் துன்பம் எதுவென்று அறிந்து, அதைத் துடைத்திடும் போது, அறிவுகொண்டு அதனைச் செயலாற்ற வேண்டும். அப்போது, தன் சித்தத் தைச் சிவன்பால் வைத்திடல் வேண்டும்'’ என்பார். இளவலுக்கு ஆசி வழங்கிவிட்டு மேலும் அவர், சிவம் என்றால் என்ன? சிவத்தின் ரகசியம் என்ன? அதன் குறியீடான சிவலிங்கத்தின் ரகசியம் என்னவென்பதை இளவலுக்கு உபதேசிப்பார் ஞானகுரு.

அதன்படி, இறைவனானவன் சூரிய, சந்திர ஆற்றல்களாகவும், நெருப்பு ஆற்றலாகவும், நம் உடம்பில் இயங்கி வருகிறான்.

இம்மூன்று ஆற்றல் களும், மூன்று நாடி களாக நம் உடம்பில் செயல்பட்டு வருகின் றன. இம்மூன்றிலும் நின்றுதான், உன்னையும் உன் விதியையும் செயல்படுத்துகிறான் இறைவன்.

உன் செயலானது, இவ்வுலகில் ஐந்து நிலைகளில் செயல்படுகின்றன. அதிலொன்று ஆகாயம்- அதாவது சுத்தவெளி.

அது என்றும் அழியாத- மாற்றம் அடையாத ஒன்று. இந்த ஆகாயமானது, மண், காற்று, நீர், நெருப்பு என, நான்கு நிலைகளைத் தனக் குள்ளே கொண்டு பிரபஞ்சமாகியுள்ளது. இவற்றில் காற்றும் நெருப்பும் உயிர் சக்தி ஆற்றல்களாக இருந்து, நீரும் மண்ணும் பல பரிமாண மாற்றங்களுக்குட்பட்டு உடம்பெடுத்து உயிரினங்களை உருவாக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான உயிரினங்களில் பரிணாம வளர்ச்சியின் உச்சம்பெற்ற படைப்பு மனிதன். இதனை விளக்கும் குறியீடாக உருவாக்கப்பட்டதுதான் சிவலிங்கம்.

ஆவுடைக்கு நடுவில் சிவலிங்கத் தண்டு!

ss

ஐம்பூத வடிவ கூட்டுப் பொருளான பூமியும், பூமியிலுள்ள உயிரினங்களும், லிங்கத்திலுள்ள பாணம் அல்லது தண்டாக உருவாக்கப்பட்டது. பூமியின் சுழற்சிதான் லிங்கத்திலுள்ள ஆவுடையாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. சிவலிங்கத்தில் உள்ள தண்டு பூமியாகக் காட்டப்பட்டுள்ளது. பூமியின் சுழலும் தன்மையால், பூமியிலுள்ள அனைத்து அணுக்களிலும் எட்டு வகையான மாற்றங்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த மாற்றங்களைத்தான் ஞானகுருமார்கள் "அஷ்ட சக்திகள்' என்று குறிப் பிட்டு, சிவலிங்கத் தண்டின் நடுப்பகுதியை எட்டுப்பட்டைகளாகச் செதுக்கி, ஆவுடைக்கு நடுவே இருக்குமாறு பொருத்தினர். இவ்விதம் புவி அணுக்கள் முழுவதிலும் நொடிக்கு ஒருமுறை என எட்டு வகை மாற்றங்கள் நிகழ்வதால், நான்கு வகையான படைப்புகள் புவியில் உருவாகின. இந்த நான்கு வகைப் படைப்புகளையும் குறிக்கும் விதத்தில், சிவலிங்கத் தண்டுப்பகுதியின் அடிப்பாகத்தை நான்கு பட்டைகளாகச் செதுக்கி வைத்தனர்.

நான்கு பரிமாண சொர்க்க பூமி!

இந்த நான்கு படைப்புக்களில் முதலாவது கண்ணுக்குப் புலப்படாத படைப்பு ஆகும்.

உதாரணம்: வெப்பம் மற்றும் காற்றை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு உருவாகும்- காற்று, நீர், நிலத்தில் வாழும் வைரஸ், பாக்டீரியா, பேன் மற்றும் புழுக்கள். இவற்றைக் குறிப்பிடுவது மேற்கு திசையில் உள்ள பட்டை.

இரண்டாவது படைப்பானது கண்களுக்குத் தெரியும். ஆனால், ஆண், பெண் பேதமற்றதாக இருக்கும்.

உதாரணம்: விதைகள். இதனைக் குறிப்பிடுவது லிங்கத் தண்டின் அடிப்பாகத் தில் உள்ள தெற்குப் பட்டையாகும்.

மூன்றாவது படைப்பு ஆண், பெண் பேதங்களைப் பெற்றிருக்கும். ஆனால், கரு வளர்ச்சியானது உடம்புக்கு வெளியே நடைபெறும்.

உதாரணம்: முட்டை. இந்தப் படைப்பை உணர்த்துவது லிங்கத் தண்டின் அடிப்பகுதியில் உள்ள கிழக்குப் பட்டையாகும்.

நான்காவது படைப்பு ஆண், பெண் பேதமுடையது. ஆனால், கரு பெண்ணின் உடம்புக்குள்ளேயே வளரும். இவற்றைத் தான் பாலூட்டி இனம் என்கிறோம். இதுதான் தாய்மையின் உச்ச நிலையை உணர்த்துவதாக இருக்கிறது. இதனைக் குறிப்பிடும் லிங்கப்பகுதியானது, லிங்கத் தண்டின் அடிப்பகுதியில் உள்ள வடக்குத்திசை பட்டை ஆகும். இப்படைப்பே, உலகிலுள்ள படைப்புகளில் உயர்வானது. இவற்றின் உச்சம்தான் மனம் படைத்துள்ள மனிதன். இவன், தன்னையும் தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கை குறித்தும் அறியும் ஆற்றல் உடையவன். இப்படைப்பைக் குறிப்பிடும் சிவலிங்கப் பட்டை வடக்கு நோக்கி இருப்பதற்கான காரணம் என்னவென்றால், நமது பூமியானது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. இவ்வுலகம், உயிரினங்களை மீண்டும் மீண்டும் பூமியிலேயேதான் பிறக்கச் செய்யும்.

மனிதன், தன் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி, இம்முப்பரிமாண உலகத்திலிருந்து விடுபட்டு, இவ்வுலகைக் காட்டிலும் ஆற்றலும் ஆனந்தமும் அதிகமாக உள்ள நான்கு பரிமாண உலகத்திற்குச் சென்றுவிட வேண்டும். இந்த நான்கு பரிமாண உலகம் பூமிக்கு மேலே, அதாவது வடக்குத் திசையில் இருப்பதால், மனிதப் படைப்பிற்கான பட்டை வடதிசை நோக்கி இருக்கும். சான்றோர்கள், இந்த நான்கு பரிமாண உலகத்தையே "சொர்க்க பூமி' என்றழைத்தனர்.

உள்ளுக்குள் இருக்கும் கடவுள் தன்மை!

ஒரு மன்னனுக்கு அனைத்துத் துறைகளிலும் பாண்டித்துவம் இருந்தாலும், ஆன்மிகப் பேரறிவு பெற்ற ஞானியாகவும் திகழவேண்டும். அதற்காக, இயற்கை யின் ரகசியங்களையும், உள்ளாற்றல் பொருந்திய மனவளப்பயிற்சியையும் குரு குல குருவானவர் அளிப்பார். அருகிலேயே இருந்து கவனிக்கக்கூடிய தாயாகவும், தந்தையாகவும், நற்குருவுமாக விளங்கி, இளவலுக்குள் இருக்கும் கடவுள் தன்மையை வெளிக்கொணர்வார்.

இவ்வாறு பஞ்சபூத வடிவமாய், அறிவு நிறைந்த அமுதமாய், மன்னனைத் திகழச் செய்வதற்கான வித்தையை அடைவதற்கு, ‘"வாசி'’ என்ற சூட்சுமத்தை குரு எவ்வாறு உணர்த்துவார் என்பதை வரும் இதழில் காண்போம்!

(தொடரும்)

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010619
இதையும் படியுங்கள்
Subscribe