"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.'
-திருவள்ளுவர்
"காற்றுக்கு சாய்கிற நாணல் காலத்திற்கும் நிற்கும்' என்பதொரு பழமொழி. இது நாணல் புல்லுக்காக சொல்லப்பட்டதல்ல. மனிதர்களுக்காக சொல்லப்பட்டது.
வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்காக குழைந்து பணிந்து, குட்டுகளை வாங்கிக்கொள்ளவேண்டுமென்ற நியதி இல்லை. வளைந்து கொடுத்தல் என்றால் விட்டுக்கொடுத்தல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு குடும்பம் சச்சரவில்லாமல் வாழவேண்டுமானால் கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லும் குணம் வேண்டும். குறிப்பாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப் பாங்கிருந்தால் சண்டை உருவாவதற்கான வாய்ப்பே இல்லை.
பிறர்மேல் பழிசுமத்துகிற குணத்தை மாற்றிக்கொண்டாலே நாம் பிரச்சினையிலிருந்து விடுபட இயலும்.
ஒருவர் எழுதிக்கொண்டிருக்கும்போது அவரது மகள் அவருக்கு காபி கொண்டுவந்து அவரருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவரோ எழுதிக்கொண்டிருந்த சிந்தனையில் காபி டம்ளரை தட்டிவிட்டார். அது கீழே கொட்டிவிட்டது. அந்த விஷயத்தை மகளிடமும் மனைவியிடமும் கூறினார்.
""காபி கொட்டியதற்குக் காரணம் நான்தான்'' என்றாள் மகள். மனைவியோ, ""நான்தான் காரணம்'' என்றாள். அந்த நபரோ, ""நீங்கள் இருவரும் காரணமல்ல; நான்தான் எழுத்து ஞாபகத்தில் தட்டிவிட்டேன். சரியாக கவனிக்கவில்லை'' என்றார். மகளோ, ""உங்கள் கைபடும்படியான இடத்தில் காபியை வைத்தது என் தவறுதான்'' என் றாள். இப்படி குற்றத்தை ஒவ்வொருவரும் தன்மீது ஒப்புக்கொண்டால் அந்த வீட்டில் சண்டை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்பட்டால், அன்பு செலுத்தி னால், விட்டுக்கொடுத்துச் சென்றால் குடும்பத்தில் நிம்மதி தானாகவே வந்துசேரும்.
மனிதனாகப் பிறந்த நாம் மற்றவர்கள் மனதைப் புரிந்துசெயல்பட்டு, தேவையான நேரத்தில் வளைந்துகொடுத்துச் செல்லவேண்டும். இதையே "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
ஒரு அசரர் தன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோவிலில் அன்னதானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்தனர். இதை உணர்ந்த அந்த ஏழை, வரிசையில் நிற்காமல், எல்லாரும் அன்ன தானம் பெற்ற பின் நாம் வாங்கிக்கொள்வோம் என்று ஒதுங்கி நின்றான்.
நேரம் கடந்து கொண்டேயிருந்தது. எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் இவனைப் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டுப் போனார்கள். அவன் மனதிற்குள் ஒரு சோகம். "எல்லாருக்கும் தரப்படும்
"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.'
-திருவள்ளுவர்
"காற்றுக்கு சாய்கிற நாணல் காலத்திற்கும் நிற்கும்' என்பதொரு பழமொழி. இது நாணல் புல்லுக்காக சொல்லப்பட்டதல்ல. மனிதர்களுக்காக சொல்லப்பட்டது.
வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்காக குழைந்து பணிந்து, குட்டுகளை வாங்கிக்கொள்ளவேண்டுமென்ற நியதி இல்லை. வளைந்து கொடுத்தல் என்றால் விட்டுக்கொடுத்தல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு குடும்பம் சச்சரவில்லாமல் வாழவேண்டுமானால் கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லும் குணம் வேண்டும். குறிப்பாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப் பாங்கிருந்தால் சண்டை உருவாவதற்கான வாய்ப்பே இல்லை.
பிறர்மேல் பழிசுமத்துகிற குணத்தை மாற்றிக்கொண்டாலே நாம் பிரச்சினையிலிருந்து விடுபட இயலும்.
ஒருவர் எழுதிக்கொண்டிருக்கும்போது அவரது மகள் அவருக்கு காபி கொண்டுவந்து அவரருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவரோ எழுதிக்கொண்டிருந்த சிந்தனையில் காபி டம்ளரை தட்டிவிட்டார். அது கீழே கொட்டிவிட்டது. அந்த விஷயத்தை மகளிடமும் மனைவியிடமும் கூறினார்.
""காபி கொட்டியதற்குக் காரணம் நான்தான்'' என்றாள் மகள். மனைவியோ, ""நான்தான் காரணம்'' என்றாள். அந்த நபரோ, ""நீங்கள் இருவரும் காரணமல்ல; நான்தான் எழுத்து ஞாபகத்தில் தட்டிவிட்டேன். சரியாக கவனிக்கவில்லை'' என்றார். மகளோ, ""உங்கள் கைபடும்படியான இடத்தில் காபியை வைத்தது என் தவறுதான்'' என் றாள். இப்படி குற்றத்தை ஒவ்வொருவரும் தன்மீது ஒப்புக்கொண்டால் அந்த வீட்டில் சண்டை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்பட்டால், அன்பு செலுத்தி னால், விட்டுக்கொடுத்துச் சென்றால் குடும்பத்தில் நிம்மதி தானாகவே வந்துசேரும்.
மனிதனாகப் பிறந்த நாம் மற்றவர்கள் மனதைப் புரிந்துசெயல்பட்டு, தேவையான நேரத்தில் வளைந்துகொடுத்துச் செல்லவேண்டும். இதையே "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
ஒரு அசரர் தன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோவிலில் அன்னதானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்தனர். இதை உணர்ந்த அந்த ஏழை, வரிசையில் நிற்காமல், எல்லாரும் அன்ன தானம் பெற்ற பின் நாம் வாங்கிக்கொள்வோம் என்று ஒதுங்கி நின்றான்.
நேரம் கடந்து கொண்டேயிருந்தது. எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் இவனைப் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டுப் போனார்கள். அவன் மனதிற்குள் ஒரு சோகம். "எல்லாருக்கும் தரப்படும் அன்னதானம்கூட நமக்குக் கிடைக்க எவ்வளவு காத்திருப்பு... எவ்வளவு அவமானம்! போன ஜென்மத்திலே என்ன பாவம் செய்தேனா' என்று நொந்துகொண்டான் அன்னதானம் தொடர்ந்துù காண்டிருந்தது. மாலைவரை காத்திருந்தவன், "இன்று நான் பட்டினிதான் போலிருக்கிறது. ஆண்டவா... என்னை ஏன் இப்படி இழிபிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தைப் பார்த்துத் தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகேயுள்ள குளத்திற்குச் சென்று நீரையெடுத்து முகத்தைக் கழுவி, படியில் சோகமாக அமர்ந்தான்.
மன்னர் அன்னதானம் கொடுத்துமுடித்து, அந்தப் படித்துறைக்குக் காலாற நடந்துவந்தார். ""என்னப்பா சாப்பிட்டாயா?'' என்று குளத்தில் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது மன்னர் என்று தெரியாமல், ""ஊரே சாப்பிட்டது. என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளதுபோல அய்யா!'' என்று விரக்தியாக முகத்தைத் திருப்பாமல் குளத்து நீரைப் பார்த்தபடியே பதில் சொன்னான். அவனது பதில் மன்னரின் மனதை உருக்கியது. "என் பிறந்தநாளில் ஊர்மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே' என்று அவனருகில் சென்று தோளில் கைவைத்து, ""மன்னித்துவிடப்பா. மிகவும் பசிக்கிறதா உனக்கு?'' என்று கேட்டார்.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீறு, முகத்தில் வாஞ்சை என்று மன்னர் தெரிய, திடுக்கிட்டு எழுந்தான். ""அரசே! நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்... மன்னிக்கவேண்டும்'' என்று பதறினான். அவனது பண்பைப் பார்த்து சிரித்த மன்னர், ""வா... இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்துண்ணப் போகிறாய்'' என்று அவனைப் பேசவிடாமல் அழைத்துச்சென்று, தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தார். குளித்துவிட்டு வரச்சொல்லி அவனுக்குப் புத்தாடைகளைக் கொடுத்தார். பின்னர் அறுசுவை விருந்து கொடுத்தார். அதன்பின் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை வழங்கி, ""இன்றிலிருந்து நீ ஏழையல்ல. இந்த பொற்காசுகளைக்கொண்டு நீ விரும்பும் தொழிலை நேர்மையாகச் செய்து கௌரவமாக வாழ்வாயாக!'' என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது. ""அரசே, நான் இதுநாள்வரை பிறவி ஏழை என்றுமட்டும்தான் நினைத்திருந்தேன். இந்த தருணம்தான் நான் ஒரு பிறவிமுட்டாள் என்பதைப் புரிந்துகொண்டேன்'' என்றான். ""ஏன் அப்படிச் சொல்கிறாய்?'' என்று மன்னர் கேட்க, ""வாழ்க்கை யில் முதன்முறையாக இன்று தான் கோபுரத்தைப் பார்த்து "என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய்?' என்று ஆண்டவனிடம் கேட்டேன். கேட்ட சில நிமிடங்களிலேயே உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றி விட்டான். கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பலமடங்கு தருவான் என்று புரியாமல் ஒரு முட்டாளாக இருந்துள்ளேன்'' என்று சொல்லி அழுதான்.
நமக்கு ஒன்று கிடைக்கவில்லையென்றால், சராசரியைவிட மிகச்சிறந்த ஒன்றை கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும். கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்று சும்மாவா சொன்னார்கள் ஆன்றோர் கள்!
தேவையற்ற கொள்கைப்பிடிப்பு, வறட்டு கௌரவம் பாராமல், நாணல்போல வளைந்துகொடுத்து, அறம் சார்ந்த வாழ்க்கையுடன் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, உயர்வு மனப்பான்மை, உயர்ந்த பலனை உரியநேரத்தில் தந்தருளும் தெய்வம் குடிகொண்டுள்ள உன்னதமானதொரு திருத்தவம்தான் திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: சோற்றுத்துறைநாதர், ஒளிவெண்ணீற்றப்பர், ஓதவனேஸ்வரர்.
இறைவி: அன்னபூரணி.
ஊர்: திருச்சோற்றுத்துறை.
தலவிருட்சம்: வில்வமரம்.
தீர்த்தம்: காவிரி தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது இவ்வாலயம். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274-ல் இது 76-ஆவது தலம்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் என மூவாரலும் பாடப்பெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெரும் சிறப்பு களும், இன்னும் பல்வேறு சிறப்பு களையும் பெற்றதொரு தலம்தான் திருச்சோற்றுத்துறை சிவாலயம்.
"பொய் விரா மேனிதன்னைப்
பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்தனல்லேன்
வேதியாவேத நாவா
ஐவரால் அலைக்கப்பட்ட
ஆக்கை கொண்டயர்ந்து போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத்
திருச்சோற்றுத் துறையனாரே.'
திருவையாறு மையமாக- திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் திருவிழா ஏழூர்த் திருவிழா எனப்படுகிறது. இந்த ஆலயங்கள் சப்த ஸ்தான தலங்கள் என்றும் குறிப் பிடப்படுகின்றன. இதில் மூன்றாவதாகத் திகழ்வது திருச்சோற்றுத்துறையாகும்.
தலவரலாறு
ஒரு காலத்தில் அருளாளன் என்னும் சிவபக்தரும் அவரது மனைவி திருநகை யாளும் இத்தல இறைவனை வழிபட்டுத் தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்தனர். ஒருமுறை மழை பொய்த்துப் போக, எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனம் வருந்திய அவர்கள் தங்கள் நிலையை இத்தல ஈசனிடமும் அம்பாளிடமும் முறையிட்டனர்.
அப்போது ஈசனும் அம்பாளும் அவர்கள்முன் தோன்றி அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை வழங்கி மறைந்தனர். ஈசன் தந்த பாத்திரம்மூலம் அந்த தம்பதியர் சிவனடியார்களுக்கும் ஏனையோர்களுக்கும் தடையில்லாமல் உணவு வழங்கினர். மக்களின் பசிப்பிணி போக்கிய இறைவன் என்பதால் சோற்றுத்துறைநாதர் என்று அழைக்கப்படுகிறார். அருளாளர் தம்பதிக்கு ஆலயத்தில் நந்திக்கு அருகே சிலை வைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் வழிபடுவோருக்கு உணவுப்பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம்.
சிறப்பம்சங்கள்
= இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாவார். ஒளி வெண்ணீற்றப் பர், ஓதவனேஸ்வரர், தொலையாச் செல்வர் என பல காரணப்பெயர்கள் இருந்தாலும், மக்கள் மனதில் சோற்றுத்துறைநாதர் என்றே பதிவாகியுள்ளது.
= இறைவி அன்னபூரணிக்கு ஒப்பிலாம்பிகை, தொலையாச் செல்வி என்ற காரணப் பெயர்களும் உண்டு.
= மூவரால் பாடப்பட்ட இத்தலத்தை அருணாகிரிநாதரும் இராமலிங்க வள்ளலாரும் போற்றிப் பாடியுள்ளனர்.
= சிவாகம விதிப்படி தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆறு சிவத்தலங்களை வழிபட்டு சூரியன் கிரகப் பதவியடைந்ததில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. ஜாகத்தில் சூரியன், சனி சேர்ந்திருந்தாலோ, நீசம் பெற்றாலோ இங்குவந்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
= நந்திதேவருக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம்பிரகாசைக்கும் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரநாளன்று திருமழப் பாடியில் நடைபெற்ற திருமணத்திற்கு உணவுகள் எல்லாம் திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் சென்றனவாம்.
= அதிகர்த்தன் என்பவரது மகன் நற்கன தேவனின் முற்பிறவியில், அவனைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இத்தல ஈசனை வழிபட்டதும் விலகியது. எனவே நாமும் நம் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் அகல இத்தல ஈசனை வழிபடுவது சாலச் சிறந் தது.
= திருவையாறில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. சித்திரைமாதம் பௌர்ணமிக்கு மறுநாள் தொடங்குகின்ற பிரம்மோற்சவமானது திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்குத் தொடர்ந்து நடைபெற்று அதன் நிறைவு நாளில் நந்திதேவரையும் சுயம்பிரகாசையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப் பரையும் அறம்வளர்த்த நாயகியையும் கண்ணாடிப் பல்லக்கில் ஏற்றுவர். காலை ஆறுமணிக்குத் திருவையாறில் புறப் படும் ஊர்வலம், முதலில் திருப்பழனத் திற்குச் செல்லும். ஆபத்சகாயரும் பெரிய நாயகியும் எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர் அவர்களும் சேர்ந்துகொள்ள அடுத்துச் செல்லுமிடம் திருச்சோற்றுத்துறை. எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டழைக்கும் சோற்றுத்துறை நாதரையும் அன்னபூரணியையும் ஊருக்குள் அழைத்துச் செல்வார்கள். திருச்சோற்றுத்துறையில் அன்னம் பாலிக்கப்பட்டு பூஜைகள் முடிந்தபின் ஊர்வலம் திருவேதிக்குடியை நோக்கிச்செல்லும். ""இத்தகைய விழாவா னது வாழ்நாளில் பார்க்கவேண்டிய ஒன்று'' என்று பெருமிதத்துடன் கூறுகி றார் ஆலயப் பரம்பரை டிரஸ்டியான சிவகண்ணன்.
= ஊருக்கே உணவளித்த சோற்றுத்துறை நாதருக்கு ஐப்பசிப் பௌர்ணமியன்று சாதத்தால் அன்னா பிஷேகம் நடைபெறும். அன்று ஆலயத்தை வலம்வந்து வணங்கினால் வளம்பெற்று வாழ்வர் என்பது கண்கூடு.
= மூலவரின் கருவறைக் கோஷ்டத்தின் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் அருள்கிறார். இவரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். தம்பதி ஒற்றுமையுடன் வாழ்வர்.
= இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி உருவம் வெகுநேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் எமபயம் நீங்கும்; ஆயுள் விருத்தியடையும்.
= இந்திரன், பிரம்மா, விஷ்ணு, கௌதம மகரிஷி, சூரியன் ஆகியோர் ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
திருக்கோவில் அமைப்பு
திருசோற்றுத்துறை ஆலயம் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் அன்னபூரணி அம்பாள் நின்ற நிலையில் நான்கு திருக்கரங்களுடன் திருமணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். மூலவர் கிழக்கு நோக்கி அருள்புகிறார். அவருக்கு வடக்கே தெற்கு பார்த்த நடராஜர் சபை உள்ளது.
அம்பாள் சந்நிதிக்குத் தெற்கே கிழக்கு நோக்கி முருகப்பெருமான் பெரிய வடிவில் பன்னிருகரங்கள், ஆறுமுகம் கொண்டு தனிச்சந்நிதியில் அருள்கிறார். அவருக்குத் தெற்கே மகாவிஷ்ணு சந்நிதி உள்ளது. கௌதம முனிவருக்கும் அவரது மனைவி அகலிகைக்கும் சந்நிதிகள் உண்டு. முதலாம் ஆதித்த சோழன் மற்றும் சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் உள்ளன.
""பசிப்பிணி மட்டுமின்றி பிறவிப்பிணியையும் நீக்கியருளும் தலம்- திருமணத்தடை, தம்பதியர் ஒற்றுமையின்மைக்குத் தீர்வு கிடைக்கும் தலம்- எமபயம் போக்கும் காலசம்ஹாரமூர்த்தி அருள்கின்ற தலம்- சூரிய தோஷம் போக்கி தசாபுக்தி சிறப்புடன் நடைபெற வகைசெய்யும் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட திருச்சோற்றுத்துறையில் அருளும் அன்னபூரணி அம்பாள் சமேத சோற்றுத்துறைநாரை மகாசிவராத்திரியன்று வழிபடுவோம்; வலம் வருவோம்; வளம் பெறுவோம்'' என்கிறார் ஆலய அர்ச்சகரான மனோகர அகோரசிவம்.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பார் கள். சொர்க்கபூமியாய்த் திகழ்கிற சோற்றுத் துறையில் திருவிழா நாட்களில் அல்லது ஜென்ம நட்சத்திர நாட்களில் வழிபட்டு வெற்றிபெறுவோம்.
படங்கள்: போட்டோ கருணா