பிரபஞ்ச சக்தியும் வாழ்வியலும்!

/idhalgal/om/cosmic-power-and-biology

பிரபஞ்சம்(Universe- Cosmo) எனப்படுவது நம் கண்ணில் தென்படும் சூரியன், பூமி, சந்திரன், பல கிரகங்கள், பல நட்சத்திரங்கள் மற்றும் கண்களுக்குப் புலப்படாத பல அரிய சக்திகள் அடங்கிய ஒரு பிரம்மாண்டமான அமைப்பாகும். பிரபஞ்சம் ஒரு பேராற்றல். இதனை யாராலும் அளவிடமுடியாது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், பிரபஞ்சத்தில் இயங்கும் அனைத்து கிரகங்களும் தங்களது கதியி-லிருந்து மாறாமல் இயங்கிக்கொண்டுள்ளன. v அண்டவெளியில் உள்ள எல்லா கோள்களும் ஒரே மாதிரியாக ஒன்றையொன்று மோதிக்கொள்ளாமலும், பாதை மாறிப் போகாமலும், கீழே விழாமலும் அந்தரத்தில் மிதப்பதைக் காண்கிறோம்.

இவற்றின் இயக்கம் தர்மத்திற்குக் கட்டுப் பட்டு நடப்பதை உணர்த்துகிறது.

அதாவது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி இவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறதென்பது புரிகிறது. இது நம் அனைவராலும் மறுக்கமுடியாத உண்மை. ஏன், இவைமட்டுமா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டுதான் தங்கள் பணி களைச் செய்கின்றன.

இத்தகைய சக்திமிகுந்த பிரபஞ்சம் பல அரிய படைப்புகளை பூமிக்கு வழங்கி யுள்ளது. பிரபஞ்சத்தின் படைப்புகளை உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை என இரண்டாக வகைப்படுத்தலாம். இதன் படைப்புகளை சற்று உற்றுநோக்கினால் ஒரு உண்மை தென்படும். அதாவது பிர பஞ்சத்தால் படைக்கப்பட்ட உயிர்களில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களும் நிம்மதியாக வாழ்வதை உணரமுடியும். ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு வரையுள்ள அனைத்துயிர்களும் பிரபஞ்ச விதிக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன.

ஏனென்றால் விதியைமீறி வாழவேண்டு மென்ற ஆறாமறிவு அவற்றுக்கு இன்மை யால், அந்த உயிரினங்கள் பெரிய சிரமங்கள் ஏதுமின்றி தங்கள் வாழ்நாளைக் கழித்து விடுகின்றன. மனிதர்கள் தங்கள் வாழ்க்கை யைத் தாமே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரத்தை பிரபஞ்சம் ஆறாமறிவுமூலம் வழங்கியுள்ளது. ஆனால் மனிதர்கள் அந்த அறிவை பிரபஞ்சத்திற்கு எதிராக திசைதிருப்பு வதால் நிம்மதியின்றி வாழும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதைத்தான் நமது முன்னோர் கள் விதி, கர்மா என்று கூறியுள்ளார்கள்.

கர்மாவின் வெளிப்பாடே பிறவி கலி-யுகத்தில் பிறக்கும் அனைத்துயிர்களும் கர்மாவை அனுபவிக்கவே பிறக்கின்றன.

அனுபவிக்கும் கர்மா நல்லவையா? தீயவையா என்பது முன்வினை கர்மாவான பிராரப்த கர்மாவைப் பொருத்தது. பிராரப்த கர்மா என்பது, ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ- புண்ணியப் பலன்மூலம் இந்தப் பிறவியில் கிடைக்கக்கூடிய நன்மை- தீமைகளாகும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் பிராப்தம், விதி, கொடுப்பினை என்று கூறலாம். சென்ற பிறவியில் ஒருவர் செய்த கர்மாவின் வெளிப்பாடு எனலாம்.

சென்ற பிறவியில் மிகுதியான புண்ணியம் செய்திருந்தால் இந்தப் பிறவியில் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், அதிக பாவங்கள் செய்திருந் தால் துன்பகரமான வாழ்க்கையையும் அனுபவிக்க நேரும். ஏறக்குறைய எழுபது சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைத் துன்பத்தில் கழிப்பதை நடைமுறையில் பார்க்கிறோம். துன்பத்தை அனுபவிப்பவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்று தங்களது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிரிடம் செல்வார்கள். அவர்கள் ஏதாவது பரிகாரம் சொல்லமாட்டார்களா- அதி-லிருந்து தப்பித்துவிட மாட்டோமா என நினைப் பார்கள். ஜாதகரின் கர்மாவில் விதியை வெல்லும் பிராப்தம் இருந்தால் நல்ல வழியைக் காட்டும் ஜோதிடர்கள் கிடைப்பார்கள். விதிப்பயன் வ-லியதாக இருந்தால் பரிகாரமென்ற பெயரில் நிறைய பணம் பறித்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் ஒருவரிடம் சிக்குவார்கள். ஒருசிலர் நல்ல சித்தர்கள் அல்லது மகான்களின் சந்திப்பி னால் புனிதமடைகிறார்கள். பலர் போ-லிச் சாமியார்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார் கள்.

இவையனைத்தும் முன்வினை கர்மா என்றால், ஏற்கெனவே பிறந்தோமா? இனியும் பிறப் போமா? நான் யார்? ஜனனமும் கர்மவினை யும் எங்ஙனம் நிகழ்கிறது? அதை நிகழ்த்து வது யார் என, இதுபோன்ற கேள்விகள் மனிதனுக்கு வாழ்வில் சலி-ப்பு ஏற்படும் போது மட்டுமே வரும்.

பூமியில் பிறக்கிறோம். நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் செல்கிறோம்.

திருமணம் செய்கிறோம். நமக்கான சந்ததியை உருவாக்குகிறோம். நமது சந்ததி யினர் சுகமாக வாழ அதிகமாக உழைக்கி றோம். உழைத்துக்

திருமணம் செய்கிறோம். நமக்கான சந்ததியை உருவாக்குகிறோம். நமது சந்ததி யினர் சுகமாக வாழ அதிகமாக உழைக்கி றோம். உழைத்துக் கொண்டிருக்கும்போதே வயதாகி ஒய்வுபெறுகிறோம். ஒய்வு பெற்று உட்காரும்போது உழைத்த உழைப் பிற்கு அங்கீகாரம் கிடைத்து உழைப்பு பயனுள்ளதாகவும், தன் வாழ்நாட்களைப் பயனுள்ளதாகவும் உணரும் மனிதன், அங்கீ காரம் இல்லாதபோது தன் உழைப்பிற்குப் பயனில்லாமல் வாழ்நாள் வெறும் சம்பவங்களின் கோர்வையாகிவிட்டதே? என் ஜனனத்தின் நோக்கம் என்ன? நான் ஏன் பிறந்தேன்? நான் யார் என்ற கேள்வி களைக் கேட்க ஆரம்பிக்கிறான். இதனைக் காணும் இன்னொருவன் தனது வாழ்க் கையை சம்பவங்களின் கோர்வையாக்கிக் கொள்ளாமலி-ருக்க நான் யார் என்ற கேள்விக்கு விடைகாண முயல்கிறான்.

ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவகம்- ஆன்மா (சென்ற ஜென்மம், பூர்வ புண்ணியம்); ஜென்ம லக்னம்- உயிர் (இந்த ஜென்மம்); ஜென்ம ராசி- உடல். சுருக்கமாக ஆன்மாவானது கர்மாவை அனு பவிக்க உடலும் உயிரும் தேவை. கர்மா ஆன்மாவை இயக்குகிறது. இயக்குபவர் இல்லையெனில், இயங்குபவர் இல்லை. ஐந்தாமிடம் எனும் பூர்வபுண்ணியம் இல்லையெனில் லக்னம், ராசிக்கு வேலையில்லை.

உயிர் என்பது உடலை இயக்கும் ஒரு சக்தியாகப் புரிந்துகொண்டால் குழப்பமேதும் இருக் காது. உயிர் என்பது உட-லின் இயங்குசக்தி மட்டுமே. உடல் அழிந்தவுடன் உயிரான சக்தி பஞ்சபூதங் களோடு ஐக்கியமாகிவிடுகிறது.

இதை ஜோதிடரீதியாகச் சொன்னால், ஒரு உயிரானது சூரியன் என்னும் ஆன்ம சக்தியால், சந்திரன் என்னும் தேகம், மனதுடன் இணைந்து, சுக்கிரன் என்னும் ஆசையால் ராகுவின் மாய வலையில் சிக்கி, செவ்வாய் என்னும் தைரிய, அதிகாரத் தால் தவறுகள் செய்து, சனி என்னும் கர்மா செயல் பட்டு, குரு என்னும் நீதியால், கேது என்னும் ஞானத்தால் மோட்சமடைகிறது.

நான் என்றால் உடலா? நான் என்றால் உயிரா? நான் என்றால் ஆன்மாவா?

உடலென்பது சதைப் பிண்டம். இந்த உடலை இயக்க உயிர் வேண்டும். உடலி-ல் உயிர் இருந்தால்தான் மனிதன். உயிரில்லாத உடல் பிணம். உடலினுள் உயிர் இருந்தால் தான் சிவம்; இல்லையேல் சவம். உடலும் உயிரும் சேர்ந்திருந்தால் மட்டுமே இயங்கமுடியும்.

பிரிந்திருந்தால் இயக்கமில்லை. அப்படி யென்றால் உடலைவிட உயிர்தானே முக்கிய மானது என்ற எண்ணம் தோன்றும். உடலை இயக்குவது உயிர். உயிரை இயக்குவது ஆன்மா. ஆக, ஆன்மா உயிர், உடல் என்று பயணிக்கிறது.

உடல் அழிந்ததும் உயிரும் அழிகிறது. ஆனால், ஆன்மா அடுத்த பயணத்திற்குத் தயாராகிறது. ஆன்மாவின் பலமே உயிரை இயக்கும். உயிரின் பலமே உடலை இயக்கும். ஆன்மா அணிந்திருக்கும் சட்டையே இந்த உடல். உண்மையில் நாம் என்பது இந்த உடலல்ல. நாம் என்பது ஆன்மா. பஞ்ச பூதங் களாலான உடல் வரம்புக்குட்பட்டது; அழியக்கூடியது. இந்த உடல் ஆதியும், அந்தமுமில்லாத ஆன்மாவுக்காகப் படைக் கப்பட்டதாகும். அது ஆன்மாவிலி-ருந்து முற்றிலும் வேறானது.

அழியக்கூடிய இந்த உடலோடு ஆன்மாவை ஐக்கியப்படுத்திக் கொண்டால், முரண்பட்ட ஆயிரமாயிரம் ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும் இடை யில் அகப்பட்டுக்கொண்டு துன்பப்பட நேரிடும். ஆன்மாவோடு மனசாட்சியை ஐக்கியப்படுத்திக் கொண்டால், "நான்' என்பது மறைந்து போய்விடும். ஆசைகளுக்கோ, தேவை யற்ற எண்ணங்களுக்கோ வேலையில்லை. இந்த "நான்' என்கிற பொய்யான எண்ணமே மனிதனை ஆன்மாவிடமிருந்து பிரித்துவைக்கும் திரை.

planetss

புலன்களின் வாயிலாக மனம் ஒன்றை விரும்பி விட்டால், அதனை அடைந்து திருப்தியடையும் வரை ஓயாது. எப்பொழுதும் அதனையே சிந்தித்தவாறு இருக்கும். இது மனதின் இயல்பெனலாம். இதற்கு உடல் கருவியாகப் பயன் படுகின்றது. ஒன்றை விரும் பிய மனம், அதனை புலன்களின் வாயிலாக வும், உட-லின் வாயிலாகவும் அனுபவித்து திருப்தியடைந்து, அத்துடன் தன் தேவையை நிறுத்திக்கொள்கிறதா எனில், நிச்சயமாகக் கிடையாது.

அது தற்கா-லிகமான திருப்தியை மட்டுமே அடைந்துள்ளது. ஆதலால் அது மீண்டும் மீண்டும் அதன் சுவையை, சுகத்தை விரும்பு கிறது. அது உணவுண்பதில், உறவு கொள்வதில், இறைவனை வழிபடுவதில், பணம் சம்பாதிப் பதில், பயணம் செய்வதில் என எதில் வேண்டு மானாலும் இருக்கலாம். இந்த தற்காலி-கமான மனத் திருப்தியே மீண்டும் தேவைகளுக்காகத் தேடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கச் செய்கிறது.

இதன்விளைவாகவே மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். தன் தேவை களுக்காக தேடிக்கொண்டே இருக்கிறான்.

தன் வாழ்நாள் இறுதிவரை ஓயாமல் ஓடி ஓடி ஓய்ந்துபோகிறான். உட-லின் ஓட்டத் தையும், மனதின் ஓட்டத்தையும் அறிந்து கொள்ள முடியாமல், ஒருநாள் இந்த உலகைவிட்டும் ஓடிவிடுகிறான்.

இந்த மனதிற்கு எப்பொழுது முழுமை யான திருப்தி உண்டாகும்? இதற்கு என்னதான் தீர்வென்று யோசித்துப் பார்ப்போம்.

மனமென்பது பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மாபெரும் சாதனமாகும். அதாவது, மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் சூழ்நிலைக்கேற்ற எண்ணங்கள் ஆழ்மனதில் பதிவாகும்.அதற் கேற்ப மனம் வடிவமைக்கப்பட்டு அது உணர்வாக அவனிடமிருந்து வெளிப்படுகி றது. அதாவது எண்ணங்களே மனிதனை உருவாக்குகிறது எனலாம்.

தனி மனிதன் என்ற எண்ணத்தையும், சுயநலம், ஆசை, குறுகிய எண்ணங்கள் போன்ற வற்றையும் கைவிட்டுவிடும் போதுதான் பரிபூரணத்தை உணரமுடியும். எனவே கொல்லவேண்டியது நம்மோடு வாழும் மனிதர்களையல்ல. 'நான்' என்னும் எண்ணத்தை மட்டுமே. அதைக் கொன்று விட்டால் பிறகு நல்லது- கெட்டது, சரி- தவறு, எனது- உனது, இன்பம்- துன்பம் எதுவுமில்லை. எல்லாம் ஒன்றுதான்.

உயிரானது உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். ஆன்மா எந்த உடலிலி--ருந்து குற்றத் தைச் செய்கிறதோ, அதே உடலி-ல்தான் அதற்கான தண்டனையைப் பெறவேண்டு மென்ற நியதி இல்லை. அந்த கர்ம நிகழ்வின் வீரியத்தைப் பொருத்து கர்மா முதிர்வடை யும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எத்தனையாவது பிறவியிலும் அதற்கான பலன் வரலாம். அப்போது உடல் மட்டுமே மாறியிருக்கும்.

பூர்வ ஜென்ம புண்ணியம் உண்மையா?

"தர்மம் தலைகாக்கும் தக்கசமயத்தில் உயிர் காக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு. ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாமிடமென்பது பூர்வபுண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானம். காலபுருஷ ஐந்தாம் அதிபதியான சூரியனே பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி. பூர்வபுண்ணிய காரகன், ஆத்மகாரகன், தந்தைகாரகன் மற்றும் ஆழ்மன எண்ணங்களுக்கும் காரகன்.

சூரியன் ஆட்சிபெறும் ஸ்திர ராசி காலபுருஷ ஐந்தாமிடமாகிய சிம்மம். இந்த ராசியில் மகம், பூரம் மற்றும் உத்திரம் 1-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. உத்திர நட்சத்திரத்தின் 2, 3, 4-ஆம் பாதங்கள் காலபுருஷ ஆறாமிடமான கன்னியில் இடம்பெறுகின்றன.உத்திரம் சூரியனின் நட்சத்திரம். பூர்வஜென்ம புண்ணியங்கள் மற்றும் பாவங்களை சேமித்து வைக்கும் ஒரே நட்சத்திரம் உத்திரம். ஒருவரின் பிறப் பைக் குறிக்கும் ஐந்தாமிடம் மற்றும் பிறவிக் கடனைக் குறிக்கும் ஆறாமிடத்துடன் உத்திர நட்சத்திரம் சம்பந்தம் பெறுவது, பெற்ற (உயிர், பொருள்) கடனை அடைக்கவே மனிதர்களாகப் பிறக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பூர்வஜென்ம புண்ணியம் அரைப்பங்கு இருக்கவேண்டும் என்னும் தத்துவத்தை உறுதிப்படுத்தவே உத்திரம் 1-ஆம் பாதம் மட்டும் சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந் திருக்கிறது.

ஏற்கெனவே கூறியபடி சூரியன் ஒரு கோளல்ல. ஒரு நட்சத்திரம். நிலையானது. எனவே ஐந்தாமிடத்தின் காரகத்துவமான நமது எண்ணங்கள், புத்தி ஒரு நிலையாக இருக்க வேண்டும். பணம் வந்தால் சந்தோஷமும், பிரச்சினைகள் வந்தால் துக்கமும் படும் மனிதர்களைப்போல வாழாமல், ஒரு நிலையான மகிழ்ச்சியோடு வாழ நாம் சூரியனைப்போல் பழகிக்கொள்ள வேண்டும்.

5-ஆமிடம் என்பது எண்ணங்களைக் குறிக்கும் இடமென்பதால், நாம் என்ன எண்ணுகிறோமோ அதைத்தான் பேசுகிறோம்.

அந்த பேச்சும்கூட ஒரு விளைவை (கர்மாவை) ஏற்படுத்தும். ஏனென்றால் ஐந்தாமிடத்திற்கு பத்தாமிடம் வாக்கு ஸ்தானமாகும். ஒருவரின் ஆழ்மன எண்ணத்தை பேச்சின்மூலமே அறியமுடியும். நல்ல விஷயங்களைப் பேசும்போதும் கேட்கும்போதும் செயல் படுத்தும்போதும் சுப கர்மாவாகி ஐந்தாமிட மெனும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சேர்த்து வைக்கப்படும்0. அதனால்தான் வீட்டுப் பெரியவர்கள், ஆன்மிகவாதிகள், 'நல்லதே நினை! நல்லதே செய்! சுபம் உண்டாகும்' என்று உபதேசித்தர்கள்.

ஆனால் கலி-யுகத்தில் பெற்றவர்கள், பெரியவர்களின் பேச்சுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. பிள்ளைகள் பெரியவர்களை, பெற்றோர்களை அடக்கி வைத்து அடிமைப்படுத்துவது, உதாசீனம் செய்வது கெட்ட கர்மாவை அதிகரிக்கத்தான் செய்யும். மேலும் ஒருவரின் வயிற்றிலடித்துப் பிழைப்பது, பிறருக்கு தீங்கிழைப்பது, தர்மத்திற்குப் புறம்பாக நடப்பது போன்றவை சுப கர்மாவை ஐந்தாமிடத்தில் பதியவிடாது. புண்ணியங்கள் மட்டுமல்ல; பாவங்களும் ஐந்தாமிடத்தில்தான் சேரும்.

ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறுமிடமும் ஐந்தாமிடம்தான். முன்ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் நிச்சயம் அதிர்ஷ்டத்தை அடைவார். தர்மம் தக்க சமயத்தில் முன்வந்து நிற்கும்.

கர்மா செயல்படும் விதம் மனிதனின் தேடுதலுக்கும், தேவைகளுக் கும் மனதில் நிறைவில்லாத தன்மையே காரணமாகிறது. மன அமைதியும் திருப்தி யும்,இல்லாதவர்கள் மட்டுமே தேவையை அதிகரித்துக் கொள்கிறார்கள். மன நிறைவாக, திருப்தியாக இருப்பவர்கள் அமைதியை யும், ஆனந்தத்தையும் அனுபவிக்கிறார்கள். அமைதி இருக்குமிடத்தில் ஆனந்தம் தானாக வந்துசேரும்.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தமானது பல பொருட்கள் சுற்றியிருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ, அதுபோல மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கை யில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒருபடி மேலேபோய் தன் ஆறாமறிவால் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறான். ஒருவரின் ஈர்ப்புத் தன்மையைத் தீர்மானிக்கும் முக்கிய மான விதிகள் மூன்று.

முதலாவது, கர்மா. ஒரு மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்வதற்குத் தேவை யான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார் கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் துல்லி-யமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்துசேர்கின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும், நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களையறியாமல் சந்திக்கி றார்கள். அதேபோல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள், அதை உறுதிசெய்வனவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். அதாவது ஒருவரின் எண்ணங்களே அவரை உருவாக்குகிறது; வடிவமைக்கிறது எனலாம்.

மூன்றாவது, அந்த ஆர்வம். ஒரு மனிதனுக்கு எதிலெல்லாம் அதீத ஆர்வம், விருப்பமிருக் கிறதோ, அது தொடர்பான ஞானத்தையும், அனுபவங்களையும் தரக்கூடிய மனிதர்களை யும், சந்தர்ப்பங்களையும் ஈர்த்துக்கொள்கிறான் அல்லது உருவாக்கிக் கொள்கிறான்.

மேலே கூறிய இந்த மூன்று நிலைகளால் ஒரு ஆன்மா தனது ஆழ்மன எண்ணங்களால் கர்மா வைக் கவர்கிறது அல்லது வரவழைக்கின்றது. மனிதன் தன் வாழ்க்கைப் பாதையில் நல்ல மற்றும் கெட்ட செயல்களைத் தேர்ந்தெடுக் கும் அதிகாரத்தைத் தனது ஆறாமறிவினால் பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

முதல் விதியான கர்மாவால் வந்தது- நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவென்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மனிதர்களுக்குக் குறைவு. நடைமுறை வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொரு தண்டனையும் ஒருவர் முன்புசெய்த ஏதாவதொரு தவறுக் காகத்தான் என்ற உணர்வு வந்துவிட்டால் பாதிப்பு குறையும். அத்துடன் பிரபஞ்சத்திடம் சரணாகதியடைந்து அனுபவித்துத் தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாம் விதியான ஆழ்மன நம்பிக்கை யால் எதிர்மறை எண்ணம், சிந்தனைகள் மிகுந்தவர்களின் ஆழ்மனதில் நம்பிக்கையற்ற பதிவுகள் மிகைப்படுத்தலாக இருக்கும்.

உதாரணமாக, 'கொரோனா வந்தால் சரியா காது' என்ற பய உணர்வு இருப்பவர்களுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும். தன் ஆரோக்கியத்தின்மேல் நம்பிக்கை இருப்பவர் களுக்கு உட-லின் எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். எளிதில் நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது ஆழ்மன எதிர்மறை எண்ணம், நம்பிக்கைகள் இருப்பவர்கள் நல்ல விஷயங்களைப் படிப்பது மற்றும் கேட்பதன் மூலமும், நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொள்வதாலும் சிறிது சிறிதாக ஆழ்மன நல்ல நம்பிக்கைகளை உருவாக்க முடியும்.

மூன்றாவது விதியான ஆர்வம், மனிதனின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும்போது நல்ல எண்ண அலைகளை ஏற்படுத்தமுடியும். எண்ணங்கள் பலப்படும்போது பலவிதமான நன்மைகள் வந்துசேரும்.

ஒருவரின் ஆர்வம் உயர்ந்ததாக, ஆழமானதாக இருந்தால் மட்டுமே அது நற்சக்தியாகி தன்மையைப் பெற்றுத்தரும். நல்ல எண்ணங் களை ஆழ்மனதில் விதைத்தால் பிரபஞ்ச சக்தியால் வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவா கத் துவங்கும். உதவக்கூடிய, உயர்த்திவிடக் கூடிய மனிதர்கள் வாழ்வில் வந்துசேர்வார் கள். கனவுகள் மெய்ப்படும்.

ஆசையும் அன்பும் மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முத-லில் மனதை நெறிப் படுத்தவேண்டியது அவசியம். தவறு செய்வது ஆன்மாவா உடலா என்று ஆய்வுசெய்தால், ஆன்மாவில் கலந்துள்ள கர்மாவே உடல்மூலம் வெளிப்படுகிறதென்பது புரியும். ஒவ்வொரு ஆன்மாவும் திரும்பத் திரும்ப பிறவியெடுத்து, துன்பத்தை அனுபவித்து பிறவிக்கடலைக் கடக்கமுடியாமல் தவிக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தும் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்? அனுபவப்பட்டும் நமக்கு இன்னும் புத்தி வரவில்லையே என்று தோன்றுகிறதல்லவா. இவையனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது ஆசை. ஆசையே துன்பத்திற்குக் காரணமென்று அனைத்து மகான்களும் கூறியிருக்கிறார்கள்.

மனிதர்கள் உயிர் வாழ்வதற்கும் அனைத்து செயல்களைச் செய்வதற்கும் ஆசைதான் காரண மாக இருக்கிறது. ஆசை, ஆர்வம் என்னும் இரு காரணிகளின் தன்மைகள், அனைத்து செயல் களைச் செய்வதற்கும் உயிர்வாழ்வதற்கும் காரண மாக விளங்குவதை உணரமுடியும்.

ஆசை என்பது 'நான்', 'எனது' என்னும் ஆணவத்தால் உருவாவது. ஆசை தனது இலக்கை குறுக்குவழியில் அடைவதற்குத் தூண்டும். தனது இலக்கை அடைந்துவிட்டாலும், நிறைவுறாமல் தன் எல்லையை மேன்மேலும் விரித்துக்கொண்டே செல்லும். ஆசையே சிற்றின்பத்திற்கும், பெரும் துன்பத்திற்கும் காரணமாக இருக்கிறது. ஆசையே இறப்புக் கும், பிறப்புக்கும் காரணமாக இருக்கிறது. பிறவிப் பெரும்பிணியில் சிக்கிச் சீரழிய வைக்கிறது.

ஆசையை விட்டொழிப்பது எப்படி?

'நான்', 'எனது' என்ற அற்பத்தனமானமான, அகம்பாவமான எண்ணங்களை அகற்றவேண்டும். அன்பே நேர்வழி. நிரந்தரமாக வெற்றிக் கனியைப் பெற்றுத்தரும் பழமுதிர்ச் சோலை. அன்பே ஒருவரை எப்பொழுதும் உயிர்த் துடிப்புடன் வைத்துக்கொண்டிருக்கும். அந்த உயிரொளிப் பிரகாசத்தால் ஈர்க்கப்பட்டு உலகமே உங்களைத் தேடிவரும். உலகையே நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உலகமும் உங்களை என்றும் சொந்தமாக வைத்துக் கொள்ளும்.

அன்பை ஆர்வமாகச் செலுத்தி தன்னையறிய முற்பட்டால் குருவருளும் திருவருளும் உங்கள்மேல் ஆர்வமாக அன்பு காட்டும். ஆசை அறவே ஒழிந்துபோகும்.

மனமும் பிரபஞ்சமும்

பிரபஞ்சம் நாம் எதைக் கேட்டாலும் அள்ளித் தரும் ஆற்றல் கொண்டது. இதை எப்படி நடைமுறைப் படுத்துவதென்று பலருக்கும் தெரிவதில்லை. முத-லில் பிரபஞ்ச சக்திகளான பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். சிறுசிறு வெற்றியையும் பிரபஞ்சத்திடம் சமர்ப் பணம் செய்தால், பெரியபெரிய வெற்றிகளைப் பரிசளிக்கும். அதையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் வளர்வதற்காக உடன் பாடில்லாத விஷயங்களில் ஈடுபடக்கூடாது. அந்த குற்றவுணர்வே உயர்வைத் தடுத்து விடும்.

நமது தனித்துவமென்று எதை உணர்கி றோமோ, அதைத் தொடர்ந்து செய்வதன் மூலமே நிலையான வெற்றி உறுதியாகிறது.

நமது திறமையை நாம் உள்ளார்ந்து பாராட் டிக் கொள்ளலாம். ஆனால் வெளிப்படை யாகச் செய்தால் அதுவே நமக்கு மிகப்பெரிய குறையாகிவிடும்.

இரண்டாவதாக, எண்ணங்களுக்கு கற்பனை சக்தி அதிகமுள்ளது. இல்லாததை இருப்பதுபோலவும், இருப்பதை இல்லாதது போலவும் கற்பனைசெய்ய வேண்டும். அதன் படி மிக வலுவான அதிர்வலைகளை மனதில் உருவாக்கி, அந்த அதிர்வலைகளை பிரபஞ்சத் திடம் அனுப்பவேண்டும். இந்த அதிர்வலைகள் மூலமாகத்தான் பிரபஞ்சத்துடன் நாம் தொடர்புகொள்ள முடியும்.

நமக்கும் பிரபஞ்சத்திற்குமுள்ள உறவே அதிர்வலைகள்தான். நம்மிலிருந்து வெளிப் படும் அதிர்வலைகள் பிரபஞ்சத் தைச் சென்றடைந்து, பன்மடங்கு பெருகி, நம்மிடம் வந்துசேரும் போது, அது நடை பெறுவதற்கான, நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளுடன் வந்தடையும். இதுவே சத்தியம்.

ஆரம்பத்தில் இந்த அதிர்வலைகள் நம்மிட மிருந்து மட்டுமே வெளிபட்டுக்கொண்டி ருக்கும், அதைமட்டுமே நம்மால் உணரமுடி யும். பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரபஞ்சத்திலுள்ள மற்ற அதிர்வலை களையும் நம்மால் அடையாளம் காண முடியும். அவ்வாறு நாம் இங்குள்ள அதிர்வலை களை உணரத் தொடங்கினால், பிரபஞ்சத் துடனுள்ள தொடர்பு முழுமைபெற்று, பல அபரிதமான சக்திகளை, தகவல்களை, உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். இதுவே சித்தர்களும், ஞானிகளும் தவசீலர் களும் பயன்படுத்திய பிரபஞ்ச ரகசியம்.

அதிர்வலைகள் மூலமாகத்தான் நாம் பிரபஞ்சத்திடம் உறவாடமுடியும். பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி அனைவரும் நற்பலன் பெற நல்வாழ்த்துகள்.

om010821
இதையும் படியுங்கள்
Subscribe