Advertisment

சென்ற இதழ் தொடர்ச்சி... அண்ட சராசரங்களையும் அடக்கியாண்ட அதிசய சித்தர்கள்!

/idhalgal/om/continuation-previous-issue-miraculous-siddhas-who-conquered-universe

ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் சித்தர் சுவாமிகள்

சித்தரான வேலப்பதேசிகர் சுவாமிகள் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீகத்தின் 10-ஆவது குருமூர்த்தமாவார். குருமகா சன்னிதமான ஸ்ரீ வேலப்ப தேசிகர் 1800-களில் நெல்கட்டும் செவல் பாளையத்திற்கு வந்தவர். மன்னர் சிவஞான தேவரின் ஆஸ்தான வைத்தியருமாவார். மன்னர் சிவஞானத் தேவர் நீண்டகாலமாக குன்ம வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு துடித்தவர். அவரது தீராத நோயான குன்ம வயிற்றுவலியைப் போக்கிய சித்தர் வேலப்ப தேசிகர். அதன்காரணமாகவே நெல்கட்டும்செவல் பாளையத்தின் அங்கமானார்.

Advertisment

சர்வ சித்திகளையும் கொண்டவர். சிவஞான தேவருக்குப் பின் ஆட்சி பீடமேறிய அவரது வாரிசு மாமன்னன் பூலித்தேவனுக்கு ஆஸ்தான குருவாக இருந்து ஆட்சிக்கு உதவிய மகான் ஸ்ரீ வேலப்பதேசிக சுவாமிகள்.

Advertisment

s

மக்கள் நலம் பேணுதல், இறைத் தொண்டு என்றிருந்த சுவாமிகள் 18-ஆம் நூற்றாண் டின்போது அருகிலுள்ள தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜீவ சமாதியடைந்தார். தன் குன்ம வயிற்று வலியைப் போக்கியதால் மன்னர் சிவஞான தேவர், வேலப்ப தேசிக சுவாமிகளின் ஜீவசமாதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை பட்டயமாக எழுதிவைத்தார். அந்த நிலங்களில் குத்தகைக்காகப் பாடுபாடும் விவசாயிகள், சுவாமிகளின் ஜீவசமாதி மடத்திற்கான குத்தகைத் தொகையினை அவர்மீதான பக்தி பயம் காரணமாக இன்றளவும் தவறாமல் நெல் மூட்டைகளாகக் கொடுத்துவருவது சிறப்பான அம்சம். அதுவும் சுவாமிகளின் அந்த நிலங்களில் நல்ல தரமான சன்னமான நெல் வி

ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் சித்தர் சுவாமிகள்

சித்தரான வேலப்பதேசிகர் சுவாமிகள் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீகத்தின் 10-ஆவது குருமூர்த்தமாவார். குருமகா சன்னிதமான ஸ்ரீ வேலப்ப தேசிகர் 1800-களில் நெல்கட்டும் செவல் பாளையத்திற்கு வந்தவர். மன்னர் சிவஞான தேவரின் ஆஸ்தான வைத்தியருமாவார். மன்னர் சிவஞானத் தேவர் நீண்டகாலமாக குன்ம வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு துடித்தவர். அவரது தீராத நோயான குன்ம வயிற்றுவலியைப் போக்கிய சித்தர் வேலப்ப தேசிகர். அதன்காரணமாகவே நெல்கட்டும்செவல் பாளையத்தின் அங்கமானார்.

Advertisment

சர்வ சித்திகளையும் கொண்டவர். சிவஞான தேவருக்குப் பின் ஆட்சி பீடமேறிய அவரது வாரிசு மாமன்னன் பூலித்தேவனுக்கு ஆஸ்தான குருவாக இருந்து ஆட்சிக்கு உதவிய மகான் ஸ்ரீ வேலப்பதேசிக சுவாமிகள்.

Advertisment

s

மக்கள் நலம் பேணுதல், இறைத் தொண்டு என்றிருந்த சுவாமிகள் 18-ஆம் நூற்றாண் டின்போது அருகிலுள்ள தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜீவ சமாதியடைந்தார். தன் குன்ம வயிற்று வலியைப் போக்கியதால் மன்னர் சிவஞான தேவர், வேலப்ப தேசிக சுவாமிகளின் ஜீவசமாதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை பட்டயமாக எழுதிவைத்தார். அந்த நிலங்களில் குத்தகைக்காகப் பாடுபாடும் விவசாயிகள், சுவாமிகளின் ஜீவசமாதி மடத்திற்கான குத்தகைத் தொகையினை அவர்மீதான பக்தி பயம் காரணமாக இன்றளவும் தவறாமல் நெல் மூட்டைகளாகக் கொடுத்துவருவது சிறப்பான அம்சம். அதுவும் சுவாமிகளின் அந்த நிலங்களில் நல்ல தரமான சன்னமான நெல் விளைவதாகவும் கூறுகிறார் கள். அதன்மூலம் மடத்தின் பிற காரியங்கள் நடக்கின்றனவாம். தட்சிணாமூர்த்தி தினமான வியாழன்தோறும் ஸ்ரீவேலப்பதேசிகரின் ஜீவசாமதியை வலம்வந்து அவர்முன் அமர்ந்து தங்களின் குறைகளை மானசீகமாக அவரிடம் முறையிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விட்டழுதால் குறைகள் தீரும் என்ற நம்பிக்கை இன்றுமிருப்பதால் பக்தர்கள் திரளுகிறார்கள். இரவு, பகல் என நேரம் பார்ப்பதில்லை. வேலப்ப தேசிக சுவாமியின் ஜீவசமாதியைச் சுற்றிவருகிற சர்ப்பங்கள்கூட, அங்கு வேண்டுதலுக்காக வருகிற பக்தர்களை இன்றுவரை தீண்டியதில்லை. ஜீவசமாதிக்குக் கட்டுப்பட்டவைகள் அவைகள் என்பது பரவலான பேச்சு.

வெள்ளை ஆட்சிக்கு நீங்காத தலைவலியாய் இருந்து வரி கொடுக்கமாட்டேன் என எதிர்த்து வீர முழக்கமிட்ட முதல் மன்னன் பூலித்தேவன், வடபுலத்தில் நிராயுதபாணியாயிருந்தபோது நயவஞ்சக சூழ்ச்சியால் மன்னனை வளைத்துக் கைது செய்து வெள்ளைக்காரர்கள் அவரை பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுசமயம் வழியில் சங்கரன்கோவில் நகர் வந்தபோது கோரிக்கையின்படி சங்கரன்கோவிலின் ஸ்ரீகோமதியம்பிகை ஆலயத்தின் ரத வீதியில் கையில் விலங்கிட்ட நிலையில் மன்னன் பூலித் தேவன் சுற்றிவருகிறபோது மேல ரதவீதியில் தன் குருநாதர் அடங்கிய வேலப்ப தேசிகரின் ஜீவசமாதி மண்டபம் முன்னே நின்று அவரை மானசீகமாக வேண்டி நினைத்தான். ஜீவ நிலையிலிருந்த குருமூர்த்தமும், என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது குருநாதா நான் இவர்களிடம் சிக்காமல் விண்ணுலகம் செல்ல வேண்டும் என்று வேண்ட, குருசுவாமியான வேலப்பதேசிகரும் மன்னா, நீ ஆலயம் முன்பாக சென்று குலதெய்வத்தை வணங்கி வரவேண்டும் என்று சொல் என தெரிவித்த சுவாமிகள், நான் அருவமாய் உன்முன்னே செல்கிறேன். என் பின்னே நீ வா, என்று சொல்லி சுவாமிகள் அருவமாய் முன்னே சென்றார். ஆலயத்தின் முன்னே சிப்பாய்கள் பின்தொடர வந்த மன்னர் பூலித்தேவன், சற்று நிதானித்தவர், நான் என்னுடைய குலதெய்வமான ஸ்ரீகோமதியம்பிகையை ஆலயம் உள்ளே சென்று தரிசித்து வரவேண்டும் என்று சொல்ல, அதற்கு ஆகட்டும் என்று சொன்ன கேப்டன், மன்னர் பூலித் தேவன் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதித் திருக்கிறார்.

மிகப்பெரிய ஸ்ரீகோமதி அம்பிகை ஆலயத் தினுள்ளே சென்ற குருமகாசன்னிதானம் மன்னன் பூலித்தேவனை அம்பிகை சன்னதியின் முன்புறமுள்ள மேல் பகுதியில் தான் அமைத்த ஸ்ரீசக்கரம் முன்பாக நிற்கவைத்தார். தன்னுடைய ஆத்ம சக்தியின்மூலமாக மாமன்னனை அப்படியே விண்ணுலகம் அனுப்பினார். மகா சன்னிதானம் வெள்ளையர்களின் கையில் சிக்காமல் தன் குலதெய்வம் முன்பாக தான் நினைத்த விண்ணுலகம் சென்ற பூலித்தேவன் வராததைக் கண்டு திடுக்கிட்ட கேப்டனும், சிப்பாய்களும் ஆலயத்தின் உள்ளே சென்று குடைந்து தேடியதில் பூலித்தேவ மாமன்னன் சிக்கவே இல்லை. இதுதான் வரலாறு. இந்த சம்பவம் திருவாவடுதுறை ஆதீனத்திலுள்ள சித்தர்களின் வரலாறு எனும் நூலில் இன்றளவும் காணப்படுகிறது. ஆனால் ஆலயத்தில் மாயமான மன்னன் பூலித்தேவன் பற்றிய கதைகள் பல்வேறு ரூபங்களில் இன்றளவும் பேச்சளவில் உளவுகின்றன.

சித்தர்களில் இப்படியான அசகாய சக்தியைக் கொண்டவர் குருமூர்த்தமான ஸ்ரீவேலப்ப தேசிக சுவாமிகள் சித்தர்.

sssss

அப்பரானந்த சித்தர் சுவாமிகள் (நெட்டூர்)

தற்போதைய தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் பக்கமுள்ள நெட்டூர் கிராமத்தின் அருள்மிகு சுப்பிரமணிய கோவிலின் சமீபமாக ஜீவசமாதியாகி இருப்பவர் அப்பரானந்த சித்தர் சுவாமிகள்.

சுவாமிகளின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினம்மருதூர் கிராமம். மகாராஜன், மருதவல்லி அம்மையார் தம்பதியின் புதல்வரானவர் அப்பரானந்த சுவாமிகள். இயல்பிலேயே சுவாமிகளின் தந்தை அங்குள்ள ஸ்ரீஆனந்தா சுவாமிகளின் சிஷ்யர், குருவிற்கு பணிவிடை செய்துவந்தவர். அதனால் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சுவாமிகள் ஆனந்தாவின் சீடரானார். இல்லறவாழ்விலிருந்த சுவாமிகளுக்கு இரண்டு மகள்கள், பிள்ளைகளுக்கு திருமணமானது. இல்லற வாழ்வை வெறுத்து தியானத்திலிருந்தபோது திருச்செந்தூர் முருகனுக்கும் சுவாமிக்கும் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அதில் ஈர்ப்பு ஏற்பட, சுவாமிகள் அங்குள்ள பொத்தையில் தியானம் செய்தபோது உடல் முழுவதும் செம்மண் நிறமானது அப்போது அங்குவந்த யானை ஒன்று சுவாமிகளை தன் துதிக்கையால் தூக்கிக்கொண்டுசென்று குளத்தில் வைக்க அதில் குளித்துவிட்டு பொன்மேனியுடன் வந்தார் சுவாமிகள்.

தன் குருவான ஆனந்தா சுவாமிகளை ஆனந்தா, ஆனந்தா என்று நினைத்து தியானம் செய்தவருக்கு அது சமயம் வயது 80. குரு வாக்காக சுவாமிகள் அப்பரானந்த சுவாமியானார்கள். குருவின் பாதரட்சையை நினைவிடாமாக்கி பூஜித்தார் அப்பரானந்த சுவாமிகள். அவர் முன்தோன்றியகுருவும் நீ, ஜீவசமாதியடைவாய். உனக்கு நாலு காலபூஜை நடக்கும் என்றார் அருள் வாக்காக. இதனிடையே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்ற சுவாமிகள் அங்கு பூஜையில் கலக்க, அது சமயம் தோன்றிய முருகன் என்ன வரம் வேண்டும் கேள் என்றதும் சுவாமி, நான் உங்களின் திருப்பாதங்களில் இருக்க வேண்டும் என்க, எனது கருவறையில் இருப்பாயாக உனக்கு நாலு கால பூஜை நடக்கும் என ஆசி வழங்கினார் முருகன்.

அவரின் அனுக்கிரகத்தால் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம், வந்து குடியமர்ந்தார் அப்பரானந்த சுவாமிகள். அங்கு கோரிக்கைகளுடன் வருகிற மக்களின் குறைகளைத் தீர்த்தார். சுவாமிகளை நாடி மக்கள் வர ஆரம்பித்தனர். இந்தக் கால கட்டத்தில்தான் 19-ஆம் நூற்றாண்டில் அப்ப ரானந்த சித்தர் சுவாமிகள் ஜீவசமாதியானார்கள்.

இந்த ஆலயம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் சுவாமிகளின் பீடத்தை, குறைகள் தீர நாடிவரும் மக்கள், மனக்குறை திருமணத்தடை, கணவன்- மனைவி குடும்பச் சிக்கல், குழந்தை வரம் வேண்டுதல் போன்ற தங்களின் குறைகளை ஆலயத்தின் நிர்வாகம் தருகிற நினைவு வேண்டுதல் பாரத்தில் எழுதிக் கொடுத்து விட்டுச் செல்கிறார்கள். இந்த கோரிக்கை பாரங்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) அதிகாலை நடக்கிற சுவாமி களின் பூஜையில் வைக்கப்படும். அவை ஆறு மாதத்திற் குள்ளாக நிச்சயம் நிறைவேறிவிடும் அதற்கு நன்றி சொல்லவும் மக்கள் வருகிறார்கள் என்கிறார் இங்குள்ள செல்வநாயகம்.

அமானுஷ்ய சக்திகொண்ட ஜீவசமாதியடைந்த சித்தர் கள் இன்றளவும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கிறார் கள்.

om010324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe