சித்தர் கால சிறந்த நாகரிகம்! (10)
ஆதித் தமிழ்க்குடிமக்கள், தம் முன்னோனான குருநாதரையும், அவருக்கு இணையான முன்னோ ளான அங்காளம்மாளையும் தம்பதித் தெய்வங்களாக வணங்கி வந்தனர்.
பின்னாளில், இவ்விருவரும் சிவ- பார்வதியாக வழிபடப்பட்டனர்.
அதன்பிறகு, இவர்களின் கூட்டு சூட்சும வடிவமான சிவலிங்க வழிபாட்டு முறையை மெய்ஞ்ஞானிகள் உருவாக்கினர்.
பிரபஞ்ச ஆராய்ச்சி!
நமது முன்னோர்கள் முதன்முதலில் ஆராய முற்பட்ட துறை சூழ்நிலையிய லும், அதற்குக் காரணமாக உள்ள பிரபஞ்ச வியலும்தான். இப்பிரபஞ்சம் உருவான ரகசியத்தையும், அதன் இயக்கத்தையும், அதனால் புவியில் ஏற்படும் மாற்றத்தையும், புவியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பிரபஞ்ச மாற்றத்தினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும் மிகவும் உற்று நோக்கி ஆராயத் தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, இவ்வுல கிலுள்ள உயிரினங்களில் உச்சப் பேரறிவு கொண்ட உயிரினமான மனிதனின் மனம் சார்ந்த செயல்பாடுகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது? அதற் கான காரணிகளாகத் திகழ்ந்து கொண்டி ருக்கும் விண்கோள்கள் எவை? அவற்றின் மர்மங்கள் என்ன? அதனை எவ்வாறு கணிப்பது? கணித்தபின், அப்பாதிப்பிலிருந்து பேரறிவுள்ள மனிதன் தன் தகவமைப்பைத் தனக்கான முறையில் உருவாக்கி எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொண்டு துன்பமின்றி வாழ்வது? அவ்வாறு வாழ்ந்தபின், அவனுக்கு ஏற்படும் முடிவு தவிர்க்கமுடியாமல் போவது எதனால்?
மனித அறிவால் நிலையான வாழ்க்கை?
இயற்கையோடு இயற்கையாய் உருவான மனிதனின் அறிவு ஏன் இயற்கையின் ரகசிய உண்மையைப் புரிந்துகொள்ள முடியாதவாறு உள்ளது? புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவனது பேரறிவை முடக்கச் செய்வது எது? அதையும் தாண்டி, இயற்கையின் மர்மங்களை மனித அறிவால் கண்டறிந்து, அதனை வெற்றிகொண்டு, மாற்றமற்ற, முடிவற்ற, தான் வாழும் வாழ்க்கையை நிலையானதாக ஆக்கிக்கொள்ள முடியுமா? அதாவது, மனித ஆற்றலையே ஒரு நொடிப்பொழுதில் அழித்துவிடக்கூடிய மரணம் என்பது மனிதன் அச்சம் கொள்ளும் ஒரு மர்ம நிகழ்வாகவே இருக்கின்றதே! அதனை வென்றெடுக்கும் முறைதான் என்ன? ஒரு பாசமிக்க, வலிமை மிக்கவனாக வாழ்ந்துவந்த சொந்த உறவினன், பாதுகாவலன், ஒரு நொடிப்பொழுதில் மரணத்தால் அழிக்கப்படுவதைப் பார்த்துப் பரிதவித்துக் கதறும் உறவுகளுக்குச் சொல்லும் ஆறுதல்தான் என்ன? அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாணத் துடித்த நம் பேரறிவுமிக்க முன்னோர்கள், பல கடுமையான வான் நகர்ச்சி பற்றிய நீண்டகால ஆய்வுகளுக்குப் பின், கடுமையான விவாதங்களுக்குப் பின், அவர்களது அறிவுமிக்க மனதை ஒரு நிலைப்படுத்தி, அதன் வலிமையான ஆற்றலால் ஒரு விஷயத்தைக் கண்டறிந்து, தத்தமது வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதற்காகத் தந்த ஒரு மிகப்பெரிய சூட்சுமக் குறியீடுதான் சிவலிங்க வடிவம். அதனால்தான், சிவலிங்க வடிவத்தை மரணத்தை வெல்லும் குறியீடாக’ போற்றிப் புகழ்ந்தனர்.
பகுத்து ஊடுருவிய பேரறிவாற்றல்!
அந்தப் பெருங்கண்டுபிடிப்பான சிவலிங்கத்தின் வடிவம் பற்றிய சூட்சுமத்தை சென்ற இதழில் கூறியிருந்தோம். அதிலுள்ள
லிங்க பாணத்தின் மூன்று பகுதிகள், ஆவுடைக்கு மேலே இருக்கும் இயற்கையின் ஐந்திறன்களின் கூட்டுப் பொருளான, நம் கண்களால் பார்க்கக்கூடிய பிர பஞ்சத்தைக் குறிக்கிறது என்று கூறியிருந்தோம். இந்த ஐந்திறன்களால்தான் இப்பிரபஞ்சத்தை ஆதித்தமிழன் பகுத்து, திறன்கள் ஒவ்வொன்றின் வழியே தன் பேரறிவாற்றலை ஊடுருவச் செய்து ஆய்வுகளை மேற்கொண்டான். இவ்வாறு தான் ஆதி இலக்கண நூலான தொல் காப்பியமும், அந்த ஐந்திறன்களை அடிப்படை யாக வைத்து மனித வாழ்க்கைத் தத்துவ இலக்கணங்களும், அதனோடு பின்னிப் பிணைந்து உருவான தமிழ்மொழி இலக் கணங்களும் தெளிவாகப் பகுத்துப் படைக் கப்பட்டிருக்கின்றன.
உணர்வுகளுக்கு எட்டாத ஊடகம்!
அந்த ஐந்து திறன்களில் ஒன்று ஆகாயம் அல்லது சுத்தவெளி. இதற்கு முன்னோர் கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். ஏனெனில், இந்த ஆகாயத்தில்தான் அத் துணை பிரபஞ்சக் கருப்பொருள்களும் மிதந்து கொண்டு சுழற்சி இயக்கத்தில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டனர்.
அதனால், பிரபஞ்சப் பொருள்கள் மிதந்துகொண்டிருக்கும் ஆகாயம் என்ற திறன் வெற்றிடமாக இருக்க முடியாது. எனவே, ஆகாயமானது அனைத்துப் பிரபஞ்சக் கருப்பொருள்களையும் சுமந்து கொண்டிருக்கக்கூடிய, மனிதக் கண்களுக்குப் புலப்படாத, உணர்வுகளுக்கு எட்டாத ஒரு ஊடகமாகத்தான் இருக்கமுடியும் என்பதை அறிந்து கொண்டனர். இந்த மர்ம ஊடகத்திற்கு "சிவம்'’ எனப் பெயரிட்டனர்..
இதன் குறியீடாகத் தமிழில் ‘"ய'’ என்ற எழுத்தைக் குறிப்பிட்டனர். ஏன் இந்த எழுத்தைக் குறியீடாக்கினர் என்பதை வரும் இதழில் பார்ப்போம்.
இந்த ஆகாயத்திற்குள் தான் அத்துனை ஆற்றல் களும் பொதிந்துள்ளன. ஆகவே, சிவத்திற்குள்தான் அத்துனை மர்மங்களும் உள்ளன எனத் தெளி வடைந்தனர். சிவத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு தனித்தனி ஆற்றல் துணுக்குகளுக்கும் "சிவன்'’ எனப் பெயரிட்டனர்.
இந்த சிவன்- சிவம் என்ற சொற்களை ஏன் பயன்படுத்தினார்கள் .என்பதையும் வரும் இதழில் பார்ப்போம்.
இந்த மகாசிவம்’ தற்போது எப்படி இருக்கிறது? இதற்குமுன் எப்படி இருந்திருக்கும்? இனி எப்படி இருக்கும் என்பதை ஆழ்ந்து ஆராய்ந்தனர். ஆகாயத்திற்குள் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியிருக்கும்? இந்தக் கேள்விக்கான விடையை ஆராய்வதற்கே பல ஆயிரம் வருடங்கள் சென்றன. ஒருவர் பின் ஒருவராக ஆதித் தமிழ்க்குடிகள், குரு- மாணாக்கர்கள் முறையில் தங்களது ஆய்வுகளை விரிவுபடுத்தினர்.
உச்சரித்தபோது அவிழ்ந்த மர்ம முடிச்சு!
இந்த ஆய்வுகளின் பலனாக ஒரு மிகப்பெரிய உண்மையைக் கண்டுபிடித் தனர். அதன்படி, ஆதியில் ஆகாயத்தில் இருவகை ஆற்றல்கள் இருந்ததை உணர்ந்த னர். இவற்றிலிருந்துதான் பிரபஞ்சங்கள் உருவாகியிருக்கின்றன என்பதை அறிந்துகொண்டனர்.
அந்த இரண்டு ஆற்றல்கள்-
✶ ஒலி (sound)
✶ ஒளி (light)
இவற்றை நம் முன்னோர் கள், உயிரினங்களை உருவாக்கிய இரண்டு காரணிகளான நாதம்- விந்து’ எனக் குறிப்பிட்டனர்.
இவற்றில் நாதத்தை வட்ட வடிவிலும் விந்துவைப்புள்ளி (●) வடிவிலும் குறியிட்டனர்.
அதன் பின்னர், இந்த இரு முக்கிய காரணிகளில் ஒலியைப் (ள்ர்ன்ய்க்) பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். ஆகாயத்தில் அல்லது சிவத்தில் இந்த ஒலியானது நிலைத்து இருந்துகொண்டே இருந்த- இருக்கின்ற- இருக்கப்போகின்ற ஆற்றல்’ எனக் கண்டறிந்தனர்.
இந்த ஒலி ஆற்றலுக்கு “வித்தொலி அல்லது “பிரணவம் எனப் பெயரிட்டனர்.
இந்த ஆற்றலானது, ஆதி-
அந்தம்’ எனப்படும் ‘தொடக்கம்- முடிவு’ என்ற இரண்டு நிலைகளும் அற்றது எனக் கூறினார்கள். இதுவே, நம் முன்னோர்கள் குறிப்பிட்ட ’"ஓம்'’ எனும் பிரணவ ஒலி!
பிறகு, இந்த ‘"ஓம்'’ எனும் பிரணவ ஒலிக்குள் மூன்று வித்தொலிகள் இருப்பதைக் கண்டுணர்ந்தனர்.
அவை அ + உ + ம் = ஓம்.
இதில் ‘அ’ என்பதைத் ‘தாய்’ என்றும், ‘"உ'’ என்பதைத் ‘தந்தை’ என்றும், "ம்' என்ற குறியீட்டை இரண்டாகப் பகுத்துணர்ந்தனர்.
அதில் ஒன்று ‘"ம'. இதுவே, இயற்கையின் உண்மை நிலையை மனித மூளை கண்டறியவிடாமல் தடுக்கும் மாயா சக்தி’ எனக் குறிப்பிட்டனர். இரண்டாவது புள்ளியை (●) ஊமை எழுத்து எனக் குறிப்பிட்டனர். இம்மூன்றினுடைய கூட்டு அதிர்வாக, "ஓம்' எனும் பிரணவ ஒலி உருவாவதை, தானே தன் குரல்வளை வழியாக உச்சரித்துப் பார்த்தபோதுதான், ஒரு பேரதிர்ச்சி நிறைந்த மர்ம முடிச்சு அவிழத் தொடங்கியது.
அந்த பேரறிவு நிறைந்த இன்ப அதிர்வலைகளோடு கூடிய மர்மத்திற்குள் அடுத்த அத்தியாயத்தில் பயணிப்போம்