Advertisment

பாரதத்தில் பிள்ளை வரம்!

/idhalgal/om/child-blessing-india

காபாரதக் காவியத்தில், திருதராஷ்டிரனுக்கு நூறு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இன்னொரு பெண் மூலமும் இவருக்கு மேலுமொரு மகனும் உண்டு.

Advertisment

rra

பாண்டு மன்னனுக்கு பஞ்சபாண்டவர் எனும் ஐந்து புதல்வர்கள் உண்டு என்பதை அறிவீர்கள். ஐவர் மட்டும் ஏன் என்பதற்கு ஒரு காரணமுள்ளது. வனசத்தில் தவம்புரிந்த பாண்டு மன்னர், சுவர்க்கத்தை அடைய கடும் முயற்சிசெய்தார். அப்போது முனிவர்கள் அவரிடம், "மனிதர்கள் நால்வகைக் கடன்களோடு பிறக்கிறார் கள். பித்ருக்கடன், தேவ கடன், ரிஷிக்கடன், மனிதக் கடன். இந்தக் கடன்களை தர்மப்படி அடைக்க வேண்டும். மனிதன் யா

காபாரதக் காவியத்தில், திருதராஷ்டிரனுக்கு நூறு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இன்னொரு பெண் மூலமும் இவருக்கு மேலுமொரு மகனும் உண்டு.

Advertisment

rra

பாண்டு மன்னனுக்கு பஞ்சபாண்டவர் எனும் ஐந்து புதல்வர்கள் உண்டு என்பதை அறிவீர்கள். ஐவர் மட்டும் ஏன் என்பதற்கு ஒரு காரணமுள்ளது. வனசத்தில் தவம்புரிந்த பாண்டு மன்னர், சுவர்க்கத்தை அடைய கடும் முயற்சிசெய்தார். அப்போது முனிவர்கள் அவரிடம், "மனிதர்கள் நால்வகைக் கடன்களோடு பிறக்கிறார் கள். பித்ருக்கடன், தேவ கடன், ரிஷிக்கடன், மனிதக் கடன். இந்தக் கடன்களை தர்மப்படி அடைக்க வேண்டும். மனிதன் யாகங்களால் தேவர்களைத் திருப்தி செய்து தேவ கடனை அடைக்கிறான்.

தவத்தின்மூலம் முனிகளைத் திருப்தி செய்கிறான். குழந்தைப் பேற்றாலும், சிரார்த்த காரியத்தாலும் பித்ருகளைத் திருப்தி செய்கிறான். இரக்க நடத்தை யால் மனிதர்களைத் திருப்தி செய்கிறான்'' என்றனர்.

அப்போது முனிவர் களை நோக்கி பாண்டு, "எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் பித்ருக்கடன் தீர்க்கப்படவில்லை. பின் எவ்வாறு நான் சுவர்க்கம் செல்லமுடியும்?'' என் வினவ, முனிவர்கள் தங்கள் திவ்ய திருஷ்யால் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் உண்டென்று தெரிவித்தனர்.

இதனைக்கேட்ட பாண்டு தன் மனைவி குந்தியிடம் கூற, அவளும் முன்பு துர்வாச முனிவரிடம் தான்பெற்ற வரம்பற்றிக் கூறினாள். மிக மகிழ்ந்த பாண்டு, அதன் படி குழந்தை பிறக்கும் வரத்தைப் பயன்படுத்து மாறு கூறினார்.

துர்வாசர் உபதேசித்த மந்திரத்தைக் கூறி எமதர்மரை அழைத்த குந்தி, அவரது பிரதி பிம்பமாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.

சந்திரன் ஜேஷ்டா நட்சத்திரத்தில், சூரியன் துலா ராசியில் இருக்க, வளர்பிறை பூரண பஞ்சமி திதியில், அபிஜித் எனும் சிறந்த முகூர்த்தத்தில் யுதிஷ்டிரன் எனும் மகன் கிடைக்கப் பெற்றாள்.

பின் வாயு பகவான்மூலம், சந்திரன் மக நட்சத்திரத்திலும், குரு சிம்ம லக்னத்திலும் இருக்க, நடுப்பகலில் திரயோதசி திதி, மைத்ர முகூர்த்தத்தில் பீமன் பிறந்தான்.

அடுத்து இந்திரன்மூலம், பங்குனி மாதம் பகல் நேரம், பூர்வ- உத்திர- பங்குனி நட்சத்திர சந்தியில் அர்ஜுனன் பிறந்தான். பங்குனி- பல்குண நட்சத்திரத்தில் பிறந்த தால் அந்த மகவுக்கு அர்ஜுனன் என பெயர் உண்டாயிற்று.

பின் பாண்டுவின் இளைய மனைவி மாத்ரியின் வேண்டுகோள்படி, குழந்தை வரமளிக்கும் மந்திரத்தை குந்திதேவி அவ ளுக்கு உபதேசித்தாள். மாத்ரி, அஸ்வினி குமாரர்களை வேண்ட, அவர்களும் இரட் டைக் குழந்தைகளை வரமாக அளித்தனர்.

பின் பாண்டு, மாத்ரிக்கு மறுபடியும் குழந்தைப்பேறு அளிக்கும்படி குந்தியிடம் வேண்ட, அவள் கண்டிப்பாக மறுத்து விட்டாள். குந்திதேவி பாண்டுவிடம், "மன்னா, நான் இவளிடம் ஒரு மகனைப் பெற்றுக்கொள்ளும்படியே நியமித்தேன். ஆனால் இவளோ இரண்டு குழந்தைகளைப் பெற்று, என்னை ஏமாற்றிவிட்டாள். மேலும் ஒரு மகன் பிறந்தால் இவள் என்னை வெளியேற்றிவிடுவாள் என பயப் படுகிறேன். இரு தேவரை அழைத்து, இரு புதல்வரைப் பெறலாம் என்ற அறிவு எனக் குத் தோன்றவில்லை. எனவே இனி இந்தக் காரியத்திற்கு என்னை நியமிக்காதீர்கள். இதனை தங்களிடம் வரமாகவே கேட்கி றேன்'' என்று கூறிவிட்டாள்.

இந்த விஷயத்தினால்தான் பாண்டு மன்னனுக்கு ஐந்து குழந்தைகளோடு நின்றுவிட்டது. இல்லையெனில், இவரும் எல்லா தேவர்களையும் அழைத்து ஏராளமாகப் பிள்ளைகளைப் பெற்றிருப் பாரோ என்னவோ!

-ஆர். மகா

om011121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe