சந்திரிகா தேவி மந்திர்...
இந்த ஆலயம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரத்திற்கு அருகில் இருக்கிறது. இந்த ஆலயம் இருக்கும் இடம் கத்தவாரா.
இந்த ஆலயத்திற்கு அருகில் பக்ஷித்தளாப் என்ற குளம் இருக்கிறது.
இந்த பகுதியிலுள்ள மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்குவந்து அன்னையை வழிபடு கிறார்கள்.
அனைவரும் வந்து வழிபடக்கூடிய புண்ணிய தலமாக இந்த ஆலயம் இருக்கிறது. இது ஒரு சுற்றுலா தளமும்கூட.
இந்து தர்மத்தில் இங்கு குடியிருக்கும் சந்திரிகா தேவி, துர்க்கையின் வடிவமாகக் கருதப்படுகிறார். அமாவாசை, நவராத்திரி காலகட்டத்தில் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இந்தக் கோவிலை உண்டாக்கியவர் நாரதர் என்றொரு கருத்து இருக்கிறது.
12-ஆவது நூற்றாண்டிற்கு முன்னால், இந்த ஆலயம் புதுப்பித்து கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண்: 24-ல் இந்த ஆலயம் இருக்கிறது.கோமதி நதியின் கரையில் இது அமைந்துள்ளது. 300 வருடங்களுக்குமுன்பு மீண்டும் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
அடர்ந்த செடி, கொடி, மரங்களுக்கு மத்தியில்... இயற்கை எழில் ஆட்சி செய்யும் இடத்தில் இந்தக்கோவில் உள்ளது. இராமாயண காலத்தைச் சேர்ந்த பல இடங்கள் இதற்கு அருகில் இருக்கின்றன.
மஹாய் சாகர் தீர்த்தம் என்று இந்த ஆலயம் இருக்கும் பகுதியை மக்கள் அழைக் கிறார்கள். ஸ்கந்த புராணம், கூர்ம புராணம் ஆகியவற்றில் இந்த ஆலயத்தைப் பற்றி கூறப் பட்டிருப்பது இதன் சிறப்பு.
இந்த ஆலயத்தின் நாயகியான சந்திரிகா தேவியைப் பற்றிய ஒரு சம்பவம் இது...
இராமனின் தம்பியான இலக்குவனின் மூத்த மகன் சந்திரகேது அஸ்வமேத யாகம் நடத்துகிறான். குதிரையுடன் கோமதி ஆற்றின் கரையில் அதற்காக அவன் சென்று கொண்டிருக்கிறான். அப்பொழுது இருள ஆரம்பிக்கிறது. அவனும், அவனுடன் இருப்பவர்களும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் தங்குகிறார்கள்.
அந்தச் சமயத்தில் அவன் சந்திரிகா தேவியை மனதில் நினைத்து வழிபடுகிறான்.
"எங்களுக்கு எந்த பிரச் சினையும் வராமல் பார்த்துக்கொள் அன்னையே!'' என்று அவன் வேண்டிக்கொள்கிறான்.
அப்போது நிலவைப் போன்ற ஒரு ஒளி தோன்றுகிறது. அன்னை சந்திரிகாதேவி அவர்களுக்கு முன்னால் காட்சிதருகிறாள்.
"பயப்படாதே... நிம்மதியாக இரு. நான் இருக்கிறேன்'' என்று அன்னை கூறுகிறாள். அன்னை சந்திரிகாதேவியின் அருளால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் உண்டாகவில்லை.
மகாபாரத காலத்தில், துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணன், கடோத்கஜனின் மக னான பர்பரிக்கிடம் "நல்ல உடல்பலத்துடன் இருப்பதற்கு, சந்திரிகாதேவியை வழிபடு'' என்று கூறியிருக்கிறார். பர்பரிக் இங்குவந்து மூன்று வருடகாலம் தவம் இருந்திருக் கிறான்.
இங்குவரும் பக்தர்கள் அன்னை சந்திரிகாதேவிக்கு பூஜை செய்வதுடன், தங்களின் தலைமுடியைக் காணிக்கையாக அளிக்கவும் செய்கின்றனர்.
இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள், சென்னையிலிருந்து லக்னோவிற்குப் பயணிக்கவேண்டும். பயண தூரம் 1,907 கிலோமீட்டர். அங்கிருந்து இந்த ஆலயம் 28 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
லக்னோ விமான நிலையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.