Advertisment

கொண்டாடப்படும் தேவிகள்! - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/celebrated-goddesses-mumbai-ramakrishnan

ஞான மார்க் கத்துக்கு அத்வைதம் பரப்பிய ஆதிசங்கரர், பக்தி மார்க்கத்துக்கு அறுசமய வழி பாட்டை வகுத்தார். அதில் சக்தி வழி பாட்டுக்கு முக்கியத் துவம் கொடுத்தார்.

Advertisment

சிவபெருமானுக்கு வளர்பிறை, தேய்பிறை யில் வரும் பிரதோஷம் (13-ஆவது திதி) உகந்ததென்றால், அம்பிகைக்கு அமா வாசை, பௌர்ணமி உகந்த தினங்கள்.

Advertisment

மகாசிவராத்திரி யன்று விஷ்ணு ஆலயங் களில் விசேஷங்கள் இருக்காது. அது போல வைகுண்ட ஏகாதசியன்று சிவாலயங்களில் விசேஷங்கள் இருக்காது. இவ்விரு ஆலயங் களிலும் பொது வாக நடக்கும் விழாக்கள் பங்குனி உத்திரம், நவராத் திரி ஆகியவையே. நவராத்திரியின் போது சிவாலயங் களில் அம்பி கைக்கே சிறப்பு ஆராதனைகள் நடக்கும்.

தேவியை நாம் பலவிதங்களிலும் கொண்டாடு கிறோம். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, மாஹேந்திரி, சாமுண்டா என்று ஏழு கன்னி யராகவும்; காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா என்று தசமகா வித்யா தேவி களாகவும்; வனதுர்க்கா, சூ-னி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரீ துர்க்கா, ஜ்வல துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆஸூரி துர்க்கா என்று ஒன்பது துர்க்கைகளாகவும் (வேறு பெயர்களும் உண்டு); சிவ, விஷ்ணு, பிரம்ம சக்திகளாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதியாகவும் (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி) வழிபடுகிறோம்.

ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு வகை யான ஆற்றல், பயன்கள் என்றாலும், எந்த இஷ்டதெய்வத்தையும் ஆழ்ந்து பணிந்தால் நாம் விரும்பியதைப் பெறலாம் என்பதே பரப்பிரம்ம தத்துவம்.

தாட்சாயணியின் உடற்கூறுகள் பதிந்த தலங்களை 51 சக்தி பீடங்களாக வழிபடுகிறோம். அந்த அன்னையருக்கும் வெவ்வேறு பெயர்கள். நம் தமிழகத்தில் தேவாரப் பாடல்பெற்ற 2

ஞான மார்க் கத்துக்கு அத்வைதம் பரப்பிய ஆதிசங்கரர், பக்தி மார்க்கத்துக்கு அறுசமய வழி பாட்டை வகுத்தார். அதில் சக்தி வழி பாட்டுக்கு முக்கியத் துவம் கொடுத்தார்.

Advertisment

சிவபெருமானுக்கு வளர்பிறை, தேய்பிறை யில் வரும் பிரதோஷம் (13-ஆவது திதி) உகந்ததென்றால், அம்பிகைக்கு அமா வாசை, பௌர்ணமி உகந்த தினங்கள்.

Advertisment

மகாசிவராத்திரி யன்று விஷ்ணு ஆலயங் களில் விசேஷங்கள் இருக்காது. அது போல வைகுண்ட ஏகாதசியன்று சிவாலயங்களில் விசேஷங்கள் இருக்காது. இவ்விரு ஆலயங் களிலும் பொது வாக நடக்கும் விழாக்கள் பங்குனி உத்திரம், நவராத் திரி ஆகியவையே. நவராத்திரியின் போது சிவாலயங் களில் அம்பி கைக்கே சிறப்பு ஆராதனைகள் நடக்கும்.

தேவியை நாம் பலவிதங்களிலும் கொண்டாடு கிறோம். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, மாஹேந்திரி, சாமுண்டா என்று ஏழு கன்னி யராகவும்; காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா என்று தசமகா வித்யா தேவி களாகவும்; வனதுர்க்கா, சூ-னி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரீ துர்க்கா, ஜ்வல துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆஸூரி துர்க்கா என்று ஒன்பது துர்க்கைகளாகவும் (வேறு பெயர்களும் உண்டு); சிவ, விஷ்ணு, பிரம்ம சக்திகளாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதியாகவும் (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி) வழிபடுகிறோம்.

ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு வகை யான ஆற்றல், பயன்கள் என்றாலும், எந்த இஷ்டதெய்வத்தையும் ஆழ்ந்து பணிந்தால் நாம் விரும்பியதைப் பெறலாம் என்பதே பரப்பிரம்ம தத்துவம்.

தாட்சாயணியின் உடற்கூறுகள் பதிந்த தலங்களை 51 சக்தி பீடங்களாக வழிபடுகிறோம். அந்த அன்னையருக்கும் வெவ்வேறு பெயர்கள். நம் தமிழகத்தில் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவத் தலங்களிலும், அன்னைக்கு வெவ்வேறு பெயர்கள். இவற்றில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சி (திருவா னைக்கா) அகிலாண்டேஸ்வரி ஆகிய மூன்று தல தேவிகளும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார் கள். என்ன காரணம்?

ff

காஞ்சி காமாட்சி

ஏழு மோட்சபுரிகளில் ஒன்று காஞ்சி.

சதி தேவியின் ஒட்டி யாணம், தொப்புள் பகுதி விழுந்த சக்தி பீடம். ஆதிசங்கரர் மறைந்த தலம்.

காஞ்சியிலுள்ள 108 சிவத்தலங்களுக்கும் ஒரே தனிக்கோவில் காமாட்சி கோவிலே. அன்னை கம்பையாற்றங் கரையில், வேதமாகிய மாமரத்தினடியில் ஈசனுட -ல் பாகம் கேட்டு தவம்புரிந்த தலம். சரஸ்வதியும் (கா) லட்சுமியும் (மா) அவளது கண்கள். (அக்ஷி). எனவே காமாட்சியைத் துதிக்க கல்வி, கலை, பொருள் என யாவும் கிட்டும். காமகோடி- அதாவது ஆசைகள் கோடி இருந்தாலும் பெறலாம். ஆசைகளின் கோடி (இறுதி) எனும் முக்தியையும் பெறலாம்.

மதுரை மீனாட்சி

பாண்டிய அரச தம்பதியர் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, அக்னி குண்டத்தி-ருந்து உதித்தவள் மீனாட்சி.

ராணியாகப் பட்டமேற்று, சிவனிடமே போருக்குச் சென்று, அந்த சோமசுந்தரனையே மணந்தாள். மதுரையில் மீனாட்சிக்கே முன்னுரிமை. தூப தீப நிவேதன ஆராதனை எல்லாம் முத-ல் தேவிக்கே. மீனாட்சி என்றால் மீன்போன்ற கண்கள் உடையவள். மீன் தன் பார்வையாலேயே தூரத்தி-ருக்கும் குஞ்சுகளை வளமடையச் செய்யும். அதுபோல தன் கடாட்சத்தா லேயே பக்தர்களுக்கு மிகப்பெரிய நன்மை களை வழங்குபவள் மீனாட்சி.

திருச்சி அகிலாண்டேஸ்வரி

காஞ்சிபோலவே தேவியானவள் இங்கும் சிவனை பூஜை செய்தாள். எதற்கு?

இந்த அகிலமெங்கும் வாழும் உயிரினங் கள் அனைத்தும் நலமுடன் வாழ்வதற் காக. இங்கு நண்பகல் சிவபூஜையின் போது, அர்ச்சகர் புடவை கட்டி, கிரீடம் தரித்து பூஜை செய்வார். அம்பாளே பூஜிப்பதாக ஐதீகம். வேறெங்கும் காணமுடி யாத காட்சி. எல்லா தலங்களிலும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடை பெறும். ஆனால் இங்கு அன்னை உலக நன்மைக்காக சிவபூஜை செய்வதால் கல்யாண உற்சவம் நடத்துவதில்லை.

அன்னை பராசக்திக்கு விநாயகர், முருகன் மட்டுமல்ல; நாம் அனைவரும் குழந்தைகளே. இனம், மதம், மொழி, ஆண்- பெண், உயர்ந்தவன்- தாழ்ந்த வன், ஏழை- பணக்காரன் என எந்த பேதமும் இல்லாதவள். ஆழ்ந்த பக்திக்கு லயமாக அருள்பவள். அவள் ஆங்கிலேய ருக்கு அருளிய இரு சம்பவங்களைக் காண்போமா...

பீட்டரைக் காத்த மீனாட்சி

1812-ல் ரோஸ் பீட்டர் என்பவர் மதுரை கலெக்டராக இருந்தார். அவர் பிரம்மாண்டமான கோவில் கோபுரங்களைப் பார்த்து பிரமித் தார். சிறப்பாக விழாக்கள் நடைபெறு வதையும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவதையும் கண்டு நெகிழ்ந்தார். அவர் அயல் நாட்ட வரென் பதால் கோவி லுக்குள் நுழைய அனுமதி யில்லை. அவர் ஆலய அதிகாரி களை அழைத்துப்பேசி, மீனாட்சி ஆலய மகிமையையும், பக்திச் சிறப்பையும் உணர்ந்தார். ஆலய விழாக்களின் போது உற்சவ மூர்த்திகள் வீதியுலா வருவதன் தத்துவமென்ன? வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் போன்ற ஆலயத் துக்கு வர இயலாதவர்களுக்கு தெய்வமே வெளியில் வந்து காட்சி தருவதுதான். இந்த கலெக்டர் போன்றோருக்கும் அது பொருந்தும்.

விழாக்காலங்களில் அன்னை மீனாட்சி அற்புதமான அலங்காரங் களுடன் வீதியுலா வருவாள். நாதஸ் வரம், மேளம், தேவாரப் பாடல்கள் போன்றவை பக்தர்களுக்கு குதூகலமூட்டும். இவற்றையெல்லாம் கண்டு பீட்டருக்கு மீனாட்சிமீது பக்தி உண்டானது.

ff

அவரது பக்தியைக் கண்டு பீட்டர் பாண்டியன் என்றே மக்கள் அழைத் தனர்.

ஒருநாள் இரவு அவர் தன்வீட்டு மாடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம். ஒரு சிறு பெண் அவர் அறைக்கு வந்து, "பீட்டர், எழுந்திரு' என்று உத்தரவிட்டாள். விழித்தெழுந்தார் பீட்டர். வெளியே பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. யாரிந்த சிறு பெண்? அறைக் குள் எப்படி வந்தாள் என்று யோசிக் கும் போதே, "சீக்கிரம் கீழே போ' என்று அதட்டலா கச் சொன் னாள். அதற்கு அப்படியே கீழ்ப்படிந்து பீட்டர் வீட்டை விட்டு வெளியேவர, அவர் படுத்திருந்த அறையின் கூரை சரிந்து விழுந்தது. அங்கு அவர் இருந்திருந்தால் நிச்சயம் இறந் திருப்பார். பதட்டத்துடன் அவர் அந்த சிறுமி யைப் பார்க்க, ஒரு விநாடி மீனாட்சி போல் தோற்றம்காட்டி மறைந்துவிட்டாள் சிறுமி. நெருக்குருகி நின்றார் பீட்டர். "மீனாட்சி தேவியே! சாற்றப்பட்டிருந்த அறைக்குள் சிறு பெண் வடிவில் வந்து, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி உயிரைக் காப்பாற்றினாயே!' என்று கண்ணீர் சிந்தினார். அதற்கு நன்றி தெரிவிக்க மீனாட்சியின் குதிரை வாகனத்துக்கு தங்கக் காப்பு வழங்கினாராம். அன்னையின் கருணையில் வேற்றுமை உண்டோ? வில்-யத்துக்கு அருளிய பவானி கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் இடம் திரிவேணி சங்கமம். பிதுர் கடன் செய்ய உகந்த இடம்.

அதுபோல தமிழகத்தில் காவேரி, பவானி, அமுத நதி கூடும் இடம் பவானி முக்கூடல். அமுத நதி வெளியே தெரியாது. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகள் சூழ அமைந்த தலம். குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர் வழிபட்ட தலம். இதை திருநனா என்றும் சொல்வர். அதாவது எந்த தீங்கும் நண்ணாத தலம். தட்சிணப் பிரயாகை என்று சொல்லப்படும் இத்தலத்தி லும் பித்ரு கடன் செய்கின்றனர்.

இங்கு 1802 முதல் வில்-யம் காரோ என்பவர் பத்தாண்டுகள் கலெக்டராகப் பணியாற்றினார். இவர் மனநிலையும் பீட்டரைப் போன்றதே. தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவற்றின் பெருமையும், தேவியின் மகிமையும் அவரை மிக ஈர்த்தது. கோவில் அதிகாரிகள், ஆன்மிக அன்பர்களிடம் இனிமையாகப் பழகுவார்.

அவரை ஆலயத்தினுள் அனுமதிக்கா விட்டாலும், கோவில் மதில் சுவரில் ஒரு துளையிட்டனர். அதன்மூலம் கொடிமரம், ப-பீடம், கருவறை விளக்கு வரை பார்க்கலாம்.

(அது தற்போதும் உள்ளது.) அந்த துவாரம் வழியாக தரிசித்தும்; உற்சவ காலங்களில் வீதியுலாவின்போது தரிசித்தும் இன்புற்றார்.

திருநீறு, குங்குமமும் அணிந்தார். இவ்வாறி ருந்த நாளில் பீட்டருக்கு நடந்ததுபோன்றே இவருக்கும் நடந்தது. ஒரு மழை நாள் இரவில் சிறுபெண்ணாக வந்த பவானி, வீட்டி-ருந்து வில்-யத்தை வெளியேற்றி உயிர்காத்தாள். ஒரு விநாடி பவானியாக காட்சிதந்து மறைந் தாள். சி-ர்ப்படைந்த வில்-யம், நன்றிக் கடனாக அன்னைக்கு தங்கக் கட்டில் ஒன்றை 11-1-1804-ல் வழங்கினார். அதை இப்போதும் கோவி-ல் காணலாம். "அந்தர்முக சமாராத்யா' என்று ல-தா சகஸ்ரநாமம் கூறும். உள்ளன்பு டன் வழிபடுப வரைக் காப்பவள் என்று பொருள்.

மகாராஷ்டிர மாநிலத்தில், துல்ஜாபூரில் பவானி கோவில் உள்ளது. மாவீரன் சிவாஜி யின் உள்ளம் கவர்ந்த தேவி இவள்.

இந்த தேவியே சிவாஜிக்கு வீரவாள் கொடுத்தாள்.

ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரியின் 22-ஆவது துதியில், "பவானி' என்னும் நாம மகிமை யைக் குறிப்பிடுகிறார்.

"பவானி த்வம் தாஸே மயி

விரத திருஷ்டிம் ஸ கருணம்

இதிஸ் தோதும் வாஞ்சன்

கதயதி பவானி த்வம் இதி

ததைவத்வம் தஸ்மை திஸஸி

நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த பிரம்ம இந்த்ர

ஸ்புட முகுடா நீராஜித பதாம்.'

"பவ' என்பது சிவனது ஒரு பெயர். பவானி என்றால் அவனது தேவி. "பவ' என்றால் "அப்ப டியே ஆகட்டும்' என்றும் பொருள். பவானி, என்மீது கருணை வை. சாயுஜ்ய பதவியைத் தா. முகுந்த, பிரம்ம, இந்திரன் வணங்கும் உன் பாதத்தில் நான் சேரவேண்டும் என்று கேட்க ஆரம்பிக்கும்போதே- "பவ' என்றதுமே "அப்படியே ஆகட்டும்' என்கிறாளாம். என்னே அன்னையின் கருணை!

om011123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe