யற்கையை எதிர்த்தோ அல்லது இயற்கைக்கு எதிராகவோ நாம் எதைச் செய்தாலும் அதன் விளைவு மனித சமூகத்தை மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்த பூமிப் பந்தையும் சிதைத்துவிடும். நகர வாழ்க்கை வாழ்பவர்கள், கிராம வாழ்க்கை குறித்த எந்த புரிதலும் இல்லாமல், தங்களின் வாழ்க்கையை இயந்திரத்தனமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். சத்தியத்தைப் (உண்மை) புரிந்துகொள்ள இயலவில்லையெனில் கடும் விளைவுகளை மனித சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும். இங்கே இறைவழிபாடு, இறை சிந்தனை, இறையுணர்வு என்பதெல்லாம் அவரவர் தேவைக்கு மட்டுமே என்று எண்ணும் நிலையே அதிகரித்திருக்கிறது.

பூர்வ கர்மாவின்- அதாவது சுமார் 1,000 வருங்களுக்கு முந்தைய ஒருவரின் பிறப்பும், அந்த பிறப்பின் வழியாக வந்த சத்திய நோக்கத்தின் செயல்பாடுமே நிகழ்கால சந்ததியின் கர்மாவைத் தீர்மானிக்கும். இதைப் புரிந்துகொள்ளாதவரின் வாழ்க்கைப் பயணம் இனிமையாக- மகிழ்ச்சியாக இருக்காது.

இன்றைய சமுதாயம் கொடிய நோய்த்தொற்று வந்தும் திருந்தவில்லையென்று எண்ணும்போது, வருங்காலக் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபகரமானதாகக் காட்சியளிக்கிறது. ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் முதல் முதியோர்வரை பலரும் மதுப் பழக்கத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

moon

Advertisment

கண்டதை உணவென்று உண்கின்றனர். இதில் போதை தலைக் கேறி பாலியல் வன்கொடுமைகள், வழிப்பறி போன்றவை அன்றாட நிகழ்வாக அதிகரித்துவிட்டன.

இதற்குக் காரணம், நம் வாழ்வியல் ஆதாரமான வாழ்க்கைக் கல்வியைத் தொலைத்துவிட்டோம். நம் முன்னோர்கள் எவ்வளவோ அரிய விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்து நல்வாழ்வு வாழ வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

Advertisment

29-12-2020 அன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை அப்படியே பதிவு செய்கிறேன். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்பவர், தன் மனைவி சப்னா அனிஜாவுக்கு திருமணநாள் பரிசாக, நிலவில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களைத் தன் மனைவிக்கு வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அமெரிக் காவின் நியூயார்க் நகரிலுள்ள "லூனா சொசைட்டி இன்டர்நேஷ னல்' என்ற நிறுவனம்மூலம் இந்த நிலத்தை தர்மேந்திரா அனிஜா வாங்கியுள்ளார். இதற்கான நடை முறைகள் முடிய கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் ஆகியிருக்கிறது. இவருக்கு, "நிலவில் நிலம் வாங்கிய ராஜஸ்தானின் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்' என்ற பெருமை வேறு. சில மாதங்களுக்குமுன்பு புத்தகயாவைச் சேர்ந்த நீரஜ்குமார் என்பவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதைவிட கொடுமையான விஷயம், நடிகர்கள் ஷாரூக்கான், மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும் இதற்குமுன்பே நிலவில் இடம் வாங்கியுள்ளனர். இந்த நிகழ்வேதான் நிலவில் நிலம் வாங்க உத்வேகம் தந்ததாகக் குறிப்பிடுகிறார் நீரஜ்குமார்.

இவையெல்லாம் எவ்வளவு அபத்தமான விஷயங்கள்! இதற்கு எவ்வளவு காலவிரயமும், பணவிரயமும் ஆகியிருக்கும்! முதலில் நிலவில் கால்வைத்து சாதாரணமாக ஒரு சராசரி மனிதனால் நடக்கமுடியுமா? ஒன்பது கிரங்களில் ஒன்றான நிலவின் தன்மை எத்தகை யது என்று இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்களால் இன்றும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏனென்றால் நிலவிலுள்ள ஈர்ப்பு சக்தியால் சாதாரணமாக மனிதனால் நிற்க முடியாது. அங்கு மனிதன் வாழ என்னென்ன வசதிகள் இருக்கின்றன? அங்கே எப்போது குடியேற முடியும்? அதற்கு எவ்வளவு காலமாகும்? இப்படி பலநூறு கேள்விகள் இதன் பின்னணி யில் இருக்கின்றன. இப்படியான செய்திகளைப் படிக்கும், பார்க்கும் மிகப்பெரும் பணக்காரர்கள், யாருக் கும் உபயோகமில்லாமல் தாங்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தை நிலவில் முதலீடு செய்வார்கள்; செய்யமுடியும். இந்நிலத்தை விற்க நினைத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சீக்கிரம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பார்கள். இத னால் மனித சமுதாயத்திற்கு என்ன பயன் உண்டாகப் போகிறது?

சாமான்ய மனிதர்கள் ஒருவித ஏக்கப் பெருமூச்சோடு தன் ஆசையை நிறுத்திக்கொள்வார்கள். நடுத்தர மனிதர்கள் "நாமெல்லாம் இதை எப்போது வாங்கப் போகிறோம்...

என்ன வாழ்க்கை இது' என்று, ஆசையானது கவலையாக மாறிவிடும். கருணையுள்ளம் கொண்டவர்கள் மட்டுமே, "அடடா, இந்தப் பணம் நம் கையில் இருந்தால் லட்சம் பேருக்கு உணவளிக்கலாமே, உடுத்த உடை கொடுக்க முடியுமே, உறங்க இருப்பிட வசதி செய்துகொடுக்கலாமே' என்று யோசிக்கும். ஆறாவது அறிவானது, அழிவை உருவாக்கவும், அழிவை சந்திக்கவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. "காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்றார் பாரதி. அந்த இடத்தை அழகான வசிப்பிட மாகவும், இருப்பிடமாகவும் உருவாக்க முடியும்;

உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே பொருளாகும்.

மனிதனின் எண்ணங்களும் சிந்தனைகளும் இயற்கைக்கு முரணாகவும், சக மனிதனுக்குப் பயன்படாத வகையிலும் ஏன் இப்படி தறிகெட்டு அலைகிறது? உண்மையான இறையுணர்வு இல்லாததே காரணமாகும். அன்பு, பாசம், கருணை, விட்டுக்கொடுக்கும் மனப் பான்மை, நீதி தவறாமை, சுய ஒழுக்கம் இவற்றை யெல்லாம் தூய்மையான இறைபக்தியே நமக்குக் கொடுக்கும். இதற்கு ஒரு மனிதன் மனப்பக்குவும் பெறவேண்டும். மனம்பக்குவம் பெற திருமந்திரச் சிற்பி கூறும் உபாயத்தைப் பார்ப்போம்.

"தொழில றிவாளர் சுருதி கண்ணாக

பழுத றியாத பரம குருவை

வழிய றிவார் நல்வழி யறிவாளர்

அழிவ றிவார் மற்றை அல்லாதவரே.'

பேரின்ப முக்தியை அடையும் சரியான வழியறிந்து, அதனை ஆளும் வல்லமை பெற்றவர்கள், வேத ஆகம நூல்களைக் கண்போலக் கற்று, குறையொன்றுமில்லாத சீடனைக் கரை யேற்றும் செயல்திறமுடைய ஆசிரியனை வழி படும் முறையறிந்தவர்கள், நல்வழிச் செல்லும் பாதையை உணர்ந்தவராவார்கள். இதனையறியாத மற்றவர்கள் தமக்கு வரப்போகும் அழிவை அறியாதிருப்பவர்களே ஆவர்.

பேரின்பப் பெருவாழ்வு பெற மனநலம், உடல்நலம் பெற்று, ஆரோக்கியமான- ஆனந்த மான- இடையூறில்லாத வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகும். அதற்கு நம் மனம் பக்குவம் பெறவேண்டும். அதற்கு இறைவனின் திருவருளோடுகூடிய சுயநலமில்லாத குரு ஒருவரின் வழிகாட்டுதல் மிக அவசியம். இதைப் பற்றியும் திருமூலர் கூறுகூதைப் பார்ப்போம்.

"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ளபொருள் உடல் ஆவியுடன் ஈக

எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி அறியச் சிவபதம் தானே.'

உபதேசம் கேட்க, கற்பித்துப் பயிற்சிதர ஆசிரியர் ஒருவரை அடைய விரும்பினாலும், நல்லவரான ஒரு ஆசிரியரைத் தேடி அவரையே குருவாகக் கொள்ளுங்கள். அப்படித் தேடி யடைந்த ஆசிரியருக்கு உங்களிடமுள்ள உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்தையும் தயங்காது அர்ப்பணித்துவிடுங்கள். அப்படித் தந்ததை ஒரு சிறிதளவுகூடத் தடைப்பட்டுப் போகாது, தொடர்ந்து கற்று, கேட்டறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். இப்படி குரு சொல்லக் கேட்ட றிந்து உணர்தலே, சிவப்பேறு கிட்ட உதவுவதாகும்.

இதுபோன்ற கருத்தை திருவள்ளுவரின் திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.'

தூய்மையான பேரறிவினையுடைய இறைவனின் நல்ல அடிகளைத் தொழாமல் இருப் பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? ஒரு பயனும் உண்டாகாது என்பதாகும். இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பயனில்லாதவற்றைச் சொல்லவும் கூடாது. பயனில்லாதவற்றை- அதாவது துன்பப்படுபவர்களுக்கு உதவாத பொருட் களை சேர்த்துவைத்தலும் கூடாது.

சுற்றறிந்த சான்றோர்களின் ஆலோசனையைப் பெற்று, அறம் தவறாமலும், கடமை தவறாமலும், நேர்மை தவறாமலும் ஒருவன் நடக்கும்போது அவனுக்கு இறைவனின் பரிபூரண அருளாசி கண்டிப்பாகக் கிட்டும். ஏனென்றால் இறைவன் நேர்மறையாற்றலுக்குச் சொந்தக்காரன். நல்ல எண்ணங்களே வெற்றிக்கு வழிவக்கும். பெறும் வெற்றியும் நிலையானதாக இருக்கும். நேர்மறையாற்றல் எப்போதும் நேர்மறையாகவே செயல்படும். நேர்மறையாற்றலின் முன்பாக எதிர்மறையாற்றலின் செயல்பாடு நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாது. ஒருபோதும் எதிர்மறையாற்றலால் நேர்மறையாற்றலை ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் எதிர்மறையாற்றலின் செயல்பாடு எதிர்மறையாற்றலாலேயே சம்காரம் செய்யப்படும்.

எனவே எதிர்மறையான எண்ணத்தை ஒழிப் போம். நேர்மறை எண்ணங்களைவும், சிந்தனை யையும் வளர்த்துக்கொண்டு, எதிர்மறையாற்ற லைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் செயல்படு வோம். நிகழ்கால, எதிர்கால சந்ததிகளை ஊக்கப் படுத்துவோம். ஆரோக்கிய மானவாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்போம். அருட்பெருஞ் சோதியின் அன்பில் திளைப்போம்!