பெருங்குன்றம் போன்ற பட்டத்து யானை, இளவலைத் தாலாட்டுவது போல் அம்பாரியை அசைத்து, பெருமிதத்தோடு ராஜநடை போட்டு, கந்தக் கோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததும், வாலைகுருநாதர் கோவிலில் இறைவனுக்காகப் படைக்கப்பட்ட பல்லயம் பிரிக்கப்பட்டு, அக் கோவிலைச் சுற்றிலும் பரந்த வெளியில் அமைக்கப் பட்டிருந்த நிழற்பந்தலுக்குள் திருவமுது உண்ண அனைவரும் வாருங்கள் என்றழைப்பதற்கான அன்னப் பறைகள் தொடர்ந்து முழக்கப்பட்டன.

சொர்க்க வீதிகளில் மகிழ்நடை!

பலவகை விருந்துணவுகள் பெரிய வாழை இலைகளில் பரிமாறப்பட்டுக் கொண்டி ருந்த வேளையில், பெரு வழிப்பாதையில் பட்டத்து யானைக்கு முன்பாக கந்தப் பெருமானுக்குக் காவடியாட்டம், மயிலாட் டம், வேலவனாட்டம், வெறியாட்டம், வெறிக்கோள், கழங்கு போன்ற பழமையான தமிழ் நடனக்குழுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்ல, வழி யெங்கும் அம்பாரி தட்டாத வண்ணம், மிக உயர்ந்த பாக்கு மரங்களை இருபுறமும் தூண்களாக ஊன்றி, அவற்றின்மீது நெருக்கமாக வேயப்பட்ட அழகிய கலை நுணுக்கங்களுடைய தோர ணங்கள் தொங்கவிடப்பட்ட நிழற்பந்தல்களின் கீழ், சொர்க் கத்தின் வீதிகளில் நடந்து செல்வதுபோல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நடைபழகினர்.

அம்மக்களினூடே, கந்தப் பெருமானுக்காகக் கொண்டுசெல்லப்படும் வழிபாட்டுப் பொருட்கள், பலவகையான பழக்கூடைகள், மலர் மாலை கள், ஆட்டுக்கிடாய்கள், இளவலுக்கு முருகப்பெருமான் முன்பு பூட்டவிருக்கும் வீர அணிகலன்கள் முதலான பொருட்கள் மங்கள மேள முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பால் குடங்கள், பன்னீர்க்குடங்கள், தீர்த்தக்குடங் கள், தேன்குடங்கள், கள்குடங்கள், தித்திக் கும் வாழைப்பழத் தார்கள், சர்க்கரைப்பாகுக் குடங்கள், திருநீற்றுக் கொப்பரைகள், பசு நெய்க் கொப்பரைகள், புனுகு, கோரோசனை, அத்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் ஆகியன எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றின் இறுதியாக "முருகு அயர்தல்' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளுக்குத் தேவையான அரிய பொக்கிஷங்கள், மிகுந்த படை பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்லப் பட்டன.

Advertisment

சீறிப்பாயும் சேவல்களால் யானைகளே வெருளும்!

அதன் பின்னால், ஆணவப் பட்சி அல்லது பொற்கொற்றிப் பறவை எனப்படும் வீர மிக்க போர்ச் சேவல்களை, சேவற்சண்டை களுக்காக மிகப்பெரிய கழிகளில் பொருத்தி, மக்கள் அவற்றைக் காணும்படி நடனமாடுவர். இவை, பாண்டியனின் தலை நகரத்திற்கு கீழ்த் திசை மற்றும் மேல்திசைகளில் வசிக்கும் குடிச்சேரிப் பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டவையாக இருக்கும். மிகப் பெரிய யானைகளே வெருளும் அளவிற்கு சீறிப்பாயும் தன்மையுடையனவாக வும் இவையிருந்தன. பெரும் பாலும் ஊக்க மருந்துகள் தடவிய விட்டில் கிளிகள் இவற்றுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டு, பயிற்சி யளிக்கப்பட்டவையாக இருந்தன. அவற்றின் கால் களில் விஷக்கத்திகளைக் கட்டியிருப்பார்கள். இச் சேவற்சண்டை விளையாட்டு பழங் காலந்தொட்டு, இன்று வரையிலும் பாண்டியநாட்டுப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அண்ட சராசரத்தில் எங்கும் ஒரே இரைச்சல்!

Advertisment

mmதூரத்தில் தெரிந்தது கந்தக்கோட்டம். கந்தக்கோட்டம் என்றால் கந்தன் வாழும் கோவில். "கந்தம்' என்றால் இணைதல் அல்லது ஒன்றுசேர்தல் அல்லது கூடுதல் என்று பொருள். பழந்தமிழர்கள் வான்வெளி யில் உள்ள பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதத்தைப் பற்றியும் தெளிவாகக் கண்டறியும் ஆழ்ந்த ஞானமுடையவர் களாகத் திகழ்ந்து வந்தனர். அவர்களு டைய கருத்துப்படி, எல்லையற்ற பரந்த விண்வெளியில், பல்வேறுபட்ட பிரபஞ்சங் கள் எண்ணிலடங்காதவையாக உள்ளன. இவையனைத்தும் பல இயல்புகளில் ஒன்றுக்கொன்று மாறுபட்டும் வேறுபட்டும் இருக்கின்றன. ஆனால், இவற்றில் எல்லா வற்றுக்கும் பொதுவான ஒரு குணம் உள்ளது. அது என்னவென்றால், அண்ட சராசரத்தில் எங்கு சென்றாலும், அவற்றினுள் மிதக்கும் தனித்தனியான பருப்பொருளை ஆய்வு செய்யும்போது, எல்லாவற்றிலிருந்தும் ஒரே வகையான இரைச்சல் அதிர்வுமட்டம் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அந்த இரைச்சல் ஒலியே பிரணவ ஒலியென்று கூறப்பட்டது. அவர்களின் கூற்றுப்படி இம்மகாபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது இப்பேரொலி. இப்பேரொலி அதிர்வு களின் விளைவால், இப் பேரண்டத்தில் விரவி யிருந்த கண்களுக்குப் புலப் படாத நுண்நுண்துகள்கள் அதிர்வுகளுக்குள்ளாகி, அதன் விளைவால் தங்களுக் குள் மோதலுற்று, ஆறு வகை யில் அவை ஒன்றோ டொன்று இணைந்து இப்பருப் பொருள்களை உருவாக்கின.

* நுண்நுண்துகள்கள் - நுண்நுண்துகள்கள்

*நுண்நுண்துகள்கள் - நுண்துகள்கள்

*நுண்துகள்கள் - நுண்துகள்கள்

*நுண்துகள்கள் - பருத்துகள்கள்

*பருத்துகள்கள் - நுண்நுண்துகள்கள்

*பருத்துகள்கள் - பருத்துகள்கள்

இவ்வாறு, நுண்நுண்துகள்கள் ஒன்றோ டொன்று சேர்ந்து இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய நிகழ்விற்கு "கந்தம்' என்று பெயரிட்டனர். பிரணவ ஒலியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைசக்தியை "கந்தன்' எனப் போற்றினர்.

மிகப்பழமையான தமிழர் நாகரிக காலத்தில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளை "பிரம்மா' எனக் கூறவில்லை. "கந்தன்' என்றே குறிப்பிட்டு வணங்கி வந்தனர்.

இவ்வறுவகை இணைவுகளை நினைவுபடுத்தும் வகையில், ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இருக்கும் கார்த்திகை நட்சத்திரங் களை உருவகப்படுத்தினர். அதன் விளைவாக, கந்தனுக்கு கார்த்திகேயன் எனப் பெயரிட்டனர். ஆரியர்களின் வருகைக்குப் பிறகுதான், "பிரம்மா' என்ற புதிய கடவுள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவர்களது "பிரம்மா' என்ற கடவுளைப் பெருமைப்படுத்தி, தமிழர்களின் "கந்தன்' என்ற கடவுளைச் சிறுமைப்படுத்தவே, புராணத்தை இவ்வாறு எழுதினர். "பிரம்மாவை சிறையிலடைத்த கந்தன் மனிதர்களைப் படைக்கத் தெரியாமல் குரங்குகளைப் படைத்தார்' எனத் தமிழர்களின் ஆழ்ந்த அறிவினை உணரா மலே, அறிவியல் பரிணாமத்திற்கு முரணான கட்டுக் கதைகளை எழுதி அனைவரையும் நம்பவைத்தனர். குரங்கிலிருந்தே பரிணாம வளர்ச்சியின்மூலம் மனிதன் உருவாகியுள் ளதை, இன்றைய அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியபிறகு, தமிழர்களின் அறிவுச் சிந்தனைகள்மீது மேலும் வியப்புண்டாகிறது. இவ்வகையிலான அரிய இயற்கை ஞான மடைவதற்கு, ஆழ்ந்து அகன்ற நுண்ணிய மதி நுட்பம் வேண்டுமென்பதை உருவகப் படுத்தவே, ஆதித் தமிழர்கள் வேலாயுதத்தை உருவாக்கினர். இதன்மூலம், கந்தனை உணர்ந்து கொள்ள, தெய்வச் சின்னமாக வேலை உருவாக்கி வழிபடத் தொடங்கினர்.

இதன் முக்கியத்துவத்தை பின்வரும் சந்ததி யினர் தொன்றுதொட்டு உணர வேண்டு மென்பதற்காக, வேலாயுதத்தை வைத்துக் கோயில் எழுப்பினர். அக்கோயிலுக்கு, வேல் கோட்டம்' எனப் பெயரிட்டு வணங்கினர்.

பன்னிரண்டு கரங்கள்; பத்துவகை ஆயுதங்கள்!

இந்த வேலினை ஒரு குடிமக்களின் தலைவனோ அல்லது மன்னனோ ஆயுத மாகக் கொண்டானாகின், அது அருகிலிருக் கும் பகைவரை அழிக்கப் பயன்படுவதோடு, தூரத்தில் ஓடும் பகைவர்களையும் துரத்திச் சென்று அழிக்க வல்லது. மற்ற ஆயுதங்களான வாள் அருகிலிருக்கும் பகைவரை யும், வில், அம்பு போன்றவை தூரத்திலிருக் கும் பகைவரையும் அழிக்க உதவும். எனவே, முதன்மை ஆயுதமாக வேலையும், கூடுதலாக பத்துவகைப் போர் ஆயுதங்களையும் பயன் படுத்தக்கூடிய திறனுள்ளவர்களாக பைந்தமிழ் மன்னர்கள் இருக்கவேண்டுமென முன்னோர் கள் கருதினர். மேலும், தஞ்சமென்று வரும் எளியோர்களை அரவணைத்து அருளைத்தரும் அபயக்கரம் உடையவர்களாகவும், இல்லாரை வாழ்விக்கதான் சேமித்துள்ள பொருள்களை வாரிவழங்கும் உபயக்கரம் உள்ளவர்களாகவும் மன்னர்கள் திகழவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர். இதனைப் பிரதிபலிக் கும் விதத்தில், ஒரே சிலையில் பத்துக் கைகள், பத்துவகை போர்க் கருவிகளைத் தாங்கியும், ஒரு கரம் அபயக்கரமாகவும், இன்னொரு கரம் உபயக்கரமாகவும், மொத்தம் 12 கரங்களை மன்னனின் திறன்களாக உருவகப்படுத்திக் காட்டினர்.

உலகெங்கும் தமிழர்கள் உணர்ந்து வழிபடும் தெய்வம்!

இவ்வாறு உருவகப்படுத்தப்பட்ட தமிழனின் தலைவன், தம் பெற்றோரிடம் பாசமுள்ளவனாகவும், தம் இணையாளுடன் நேசமுள்ளவனாகவும், தம் குருமார்களிடம் பணிவுள்ளவனாகவும், தம் குடிமக்களிடம் கனிவுள்ளவனாகவும், தம் ஆட்சியில் அறம் படைத்தவனாகவும், போர்த்திறத் தில் உரமுள்ளவனாகவும் விளங்கும் அறுவகை உணர்வுத் திறன்களைப் பிரதிபலிக்கும் அறு முகங்களையும் ஒரே சிலையில் வடித்து, அதன் மொத்த உருவ அழகை, பகைவர் கண்டால் அஞ்சி நடுங்கும் வண்ணம் அமைத் துக் காட்டினர். இத்தனைத் திறன்கொண்ட அழகிற்கு "முருகு' என்று பெயர். இப்படி ஒரு அழகைப் பெற்றவனை "முருகன்' என்றழைத்தனர். பகைவர்களை அழிப்பதற்காக படை வீடுகளில் வீற்றிருக்கும் மன்னன், இத்தகைய பேரழகுடையவனாகத் திகழ வேண்டுமென்பதற்காகவே, அறுபடை வீடுகளிலுள்ள தெய்வமாக முருகனை வழிபட்டுவந்தனர்.

தம் மூதோனான பாண்டியர்களை முருகனாக வேலாயுதத்துடனே வழிபட விரும்பினார்கள் தமிழர்கள். அதனால், தமிழர் கள் வாழும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தமிழ்க் கடவுளாக முருகனைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆர்வம் காட்டினர். அன்றைய தமிழர்கள், தம் சொந்த நாட்டிலிருந்து புது இடங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்றாலும், அங்கெல்லாம் தமிழர்களின் அடையாளம் முருகுப்பெருமான் என்பதையுணர்ந்து முருகனுக்குக் கோவில்கள் எழுப்பினர்.

இவ்வாறு, சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே, உலகெங்கும் பரவிய கந்த, வேலன் வழிபாடுடைய கந்தக்கோட்டத்திற்கு அருகே, நீண்ட துதிக்கையை அங்கு மிங்கும் உலாத்திய பட்டத்து யானைக்கு, அதன் கழுத்தின்மீது அமர்ந்திருந்த "மாவூத்து' என இக்காலத்தில் அழைக்கப்படும் யானைப்பாகன் சில சமிக்ஞைகளைத் தெரிவிவித்ததும், அது மெல்ல அமைதியுற்று கந்தக்கோட்டத்திற்குமுன் நிற்கும். யானை யின் காலடியில் பணிசெய்யும் "காவடிகள்' எனப்படும் பாகனின் உதவியாளர்கள் சில சமிக்ஞைகளைச் செய்ததும், மெல்ல மெல்ல தனது முன்னங்கால்களை முன்னிறுத்தி, பட்டத்து யானை தரையில் அமரத் தொடங்கும். அம்பாரியின்மீது விரிந்திருந்த வெண்பட்டுக் குடையும், சாமரமும், அரண்மனைக் கைக்கோளர்களிடம் கொடுக்கப்படும். இளவல் அம்பாரியிலிருந்து தரையிறங்க கம்பளம் விரிக்கப்பட்டு, கடம்ப மரப் படிக்கட்டுகள் யானைமீது சாற்றப் படும்.

பட்டத்து யானை வருவதற்கு முன்பாகவே, அரண்மனையிலிருந்து கந்தக்கோட்டத்திற்கு வந்து, இளவலின் வருகைக்காகக் காத்திருக்கும் அகம்படி பரிவாரத்தார், அம்பாரியிலிருந்து இளவலை இருகரம் பற்றிப் பாதுகாப்பாக கம்பளத்தில் கால் பதிக்கச் செய்து, அரவணைப்போடும் பக்தியோடும் பாசத்தோடும் வரவேற்க, கந்தக்கோட்டத் தில் ஏற்கெனவே ஏற்பாடு செய்து வைத்துள்ள, "முருகு அயர்த'லுக்கான முறையான பணியாளர்கள் ஆயத்தமாவார்கள்.

வரும் இதழில் முருகு அயர்தல்...

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்