உலகிலுள்ள நாடுகளில் நமது பாரத தேசத்தில் உள்ளதுபோல இவ்வளவு கோவில்களோ, புண்ணிய தீர்த்தங்களோ, நதிகளோ வேறெங்கும் கிடையாது. பாரத தேசத்தில் அவதரித்த உத்தமமான மகான்கள் போல வேறு நாடுகளில் அவதாரம் செய்ததில்லை. இதிகாச, புராணங்கள் நம்மிடையே இருப்பதுபோல வேறெங்கு மில்லை. தன் இதயத்திலேயே எந்த நேரமும் ஆத்ம ஸ்வரூபத்தில் திளைத்திருக்கும் மகா ஞானியர்கள் தோற்றமும் இங்கேதான். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி போன்ற புனிதமான பாடல் நூல்கள், கம்பராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை போன்ற நந்நூல்கள் போன்றவை நம் தேசத்தில் உள்ளதுபோல எந்த தேசத்திலும் இவ்வளவு இல்லை. இவையெல்லாம் சேர்ந்ததுதான் பாரததேசம்.
இமயம்முதல் குமரி வரை வந்தால், தெற்கே தமிழ்நாட்டில் தாமிர பரணி ஆற்றுக்கு அருகே தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினர். தாமிர பரணி கடந்து மேல்நோக்கி வந்தால் திருவண்ணா மலை முக்தி க்ஷேத்திரம். இங்கே ரமண மகரிஷிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகிராம் சுரத்குமார் போன்றவர்களும், காஞ்சியில் மகாப் பெரியவரும் தோன்றி பல அற்புதங்களை நிகழ்த்தினர். இன்னும் சற்று தள்ளி க
உலகிலுள்ள நாடுகளில் நமது பாரத தேசத்தில் உள்ளதுபோல இவ்வளவு கோவில்களோ, புண்ணிய தீர்த்தங்களோ, நதிகளோ வேறெங்கும் கிடையாது. பாரத தேசத்தில் அவதரித்த உத்தமமான மகான்கள் போல வேறு நாடுகளில் அவதாரம் செய்ததில்லை. இதிகாச, புராணங்கள் நம்மிடையே இருப்பதுபோல வேறெங்கு மில்லை. தன் இதயத்திலேயே எந்த நேரமும் ஆத்ம ஸ்வரூபத்தில் திளைத்திருக்கும் மகா ஞானியர்கள் தோற்றமும் இங்கேதான். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி போன்ற புனிதமான பாடல் நூல்கள், கம்பராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை போன்ற நந்நூல்கள் போன்றவை நம் தேசத்தில் உள்ளதுபோல எந்த தேசத்திலும் இவ்வளவு இல்லை. இவையெல்லாம் சேர்ந்ததுதான் பாரததேசம்.
இமயம்முதல் குமரி வரை வந்தால், தெற்கே தமிழ்நாட்டில் தாமிர பரணி ஆற்றுக்கு அருகே தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினர். தாமிர பரணி கடந்து மேல்நோக்கி வந்தால் திருவண்ணா மலை முக்தி க்ஷேத்திரம். இங்கே ரமண மகரிஷிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகிராம் சுரத்குமார் போன்றவர்களும், காஞ்சியில் மகாப் பெரியவரும் தோன்றி பல அற்புதங்களை நிகழ்த்தினர். இன்னும் சற்று தள்ளி கிழக்கே வந்தால், காவேரிக்கரையில் பகவந்நாம போதேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீதர ஐயாவாள், மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், சதாசிவப் பிரம்மேந்திராள் போன்ற மகான்களின் அதிஷ்டானங்கள் இருக்கின்றன. ஆந்திரம் பக்கம் போனால், பத்ராசல ராமதாஸர், போதண்ணர், அன்னமாச்சார்யார் போன்ற மகான்களும், கர்நாடகத்தில் புரந்தரதாஸர், கனகதாஸர் போன்ற அஷ்டதாஸர்களும், மேலே வடக்கே போனால் மகாராஷ்ட்டிரத்தில் பக்த துக்காராம், ஞானேஸ்வரர், நாமதேவர் போன்ற எண்ணற்றோரும் அவதரித்து பகவான்
புகழ்பாடியுள்ளனர். குஜராத்தில் நரசிம்மமேதா, ராஜஸ்தானில் மீரா, உத்தரப்பிரதேசத்தில் உதித்து ஸ்ரீகிருஷ்ண பக்தி செய்த எண்ணற்ற மகான்கள்; வங்காளத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி, விவேகானந்தர், சைதன்யர் போன்ற சிறப்புமிக்க மகான்களும், பஞ்சாபில் குருகோவிந்த், குருநானக் போன்றோரும்- இப்படி பாரத தேசத்தில் தோன்றிய மகான்கள் எண்ணற்றோர். இவர்களெல்லாம் தத்துவஞானிகள் மட்டுமல்ல; பிரும்ம ஞானிகள், ஜீவன் முக்தர்கள்.
இந்த தேசத்தின் காற்று, மண், மரம், செடி, கொடி, மலைகள், தீர்த்தங்கள், நதிகள் எல்லாமே தெய்வீக மானவை.
மகான்களும் மாமுனிவர்களும் நமக்கு சில சாஸ்திர சம்பிரதாயங்களை நியமனம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவற்றை நாம் கடைப்பிடித்து வந்தால் நடப்பதெல்லாம் நன்மையாகவே முடியும். அதேசமயம் சில சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அடிப் படை என்னவென்று இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. முன்னோர்கள் சொல்−ச் சென்றுள்ளார்கள். அது அவர்களின் அனுபவ மாகக்கூட இருக்கலாம். இதில் நல்லதை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். அதைவிட்டு ஆராய்ச்சியில் இறங்கு வதில் பயனேதுமில்லை. சாஸ்திரத்தில் நம்பிக்கைதான் முக்கியம். நாம் நரகம்- சொர்க்கம் இரண்டையும் பார்த்ததில்லை. இவை பற்றி புராணங்களில் காணப்படுவதுதான் நாம் அறிந்தது. புண்ணியம் செய்தவன் சொர்க்கத்திற்குப் போவான்; பாவம் செய்தவன் நரகத்திற்குப் போவான் என்பது நாம் வாழும் வகையைப் பொருத்தது.
நமது மூதாதையர்களுக்கு நாம் எள்ளும், தண்ணீரும் தர்ப்பணனமாக விட்டோமா னால், அது "பிதுர்' உலகத்திலி−ருக்கும் மூதாதை யர்களுக்குச் சென்றுசேர்வதாக ஐதீகம். எனவே "பிதுர்லோகம்' என்று ஒன்றிருக்கிறது என நாம் நம்புகிறோம்.
பிதுர்லோகத்திற்கு மேலே கந்தர்வர்கள் வாழும் கந்தர்வலோகம் உள்ளது. யக்ஷர்கள் வாழும் யக்ஷலோகம், சப்தரிஷிகள் வாழும் லோகம், கிண்ணரர்கள், பிரம்மன், இந்திரன், தெய்வங்கள், தேவதைகள், பரப்பிரம்மம் போன்றோர் வாழும் ஈரேழு லோகங்கள் இருக்கின்றன. ஆனால் இவை இருப்பது நமது அறிவுக்கு எட்டியவரை தெரியாது. புராணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. அதை நாம் நம்பவேண்டும்.
மேலே இப்படி இருப் பதுபோல, பூமியில் ஏழு வகையான பிறவிகளும் இருக்கின்றன. ஓரறிவுமுதல் ஆறறிவு படைத்த ஜீவன்கள் இருக்கின்றன. முதல் பிறவி தேவர்கள், அடுத்து மனிதன், மிருகங் கள், பறவைகள், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர் வன, தாவரங்கள் என்று ஏழு பிறவிகள் உள்ளன.
இதில் மிகப்பெரிய உருவம் படைத்த யானை முதல் கண்ணுக்கே தெரியாத பாக்டீரியாக்கள் வரை எத்தனையோ வகை உயிரினங்கள் வாழ்கின்றன.
இவற்றுள் இறைவனைப் பற்றி நினைப்பதற்கும் வணங்குவதற்கும் மனிதப்பிறவி ஒன்றினால் தான் முடியும். பூமியில் மனிதனாய்ப் பிறப்ப தற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். முக்தி என்பதை மனிதனால் மட்டுமே அடைய முடியும்.
இந்த மனிதப் பிறவியில் பகவானை மனம்விட்டுத் தொழுது, அவன் கல்யாண குணங்களைப் புகழ்ந்து பாடி முக்தியடைய வேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல. அதற்கு பல நியம நிஷ்டைகள், பூஜைகள், தவங்கள் இருக்கவேண்டும். மோட்சத்தை அடையும் தகுதி தேவர்களுக்கும் இல்லை. அதனால்தான் அவர்களெல்லாம் பூமியை மிக விரும்பிவந்து தவமிருந்து, இறைவனைத் துதித்து மோட்சத்தையடைகிறார்கள். தேவர்களும், தெய்வங்களும் மோட்சத்தை அடையவேண்டுமென்றால் இந்தப் பிரளயம் முடியும்வரை உயிருடன் இருக்கவேண்டும். மனிதன் அப்படியல்ல; குறைந்தபட்சம் நூறாண்டுகள் பூமியில் வாழ்ந்து, தெய்வத்தைத் தொழுது அறநெறியோடு வாழ்ந்தால் மோட்சமடையலாம்.
இந்த கலி−காலத்தில் இறைவனின் அருளைப்பெற அவனுடைய பெயரை உச்சரித்து வழிபட்டாலே போதும். அதாவது இதை "நாம சங்கீர்த்தனம்' என்று சொல்வார்கள். இறைவன் நாமங்களிலேயே "க−' பயந்து ஓடக்கூடிய நாமம் "ராமா', "கிருஷ்ணா' என்பதுதான். இப்போதைய காலகட்டத்திற்கு "ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண ஹரே ஹரே!' என்ற நாம வழிபாடே சிறந்தது. இந்த நாமத்தை இடைவிடாது முழுபக்தியோடு அனுதினமும் சொல்−வந்தாலே போதும்; நமக்கு எல்லா நன்மையும் வந்துசேரும். இது மிகச்சுலபமானது. இதற்கு மடி, ஆச்சாரம் எதுவுமில்லை. எப்போது வேண்டுமானா லும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம்.
பகவந் நாமாவைச் சொல்வோம். நற்பலன் பெற்றுய்வோம்.