ரு மகானின் குருகுலத்தில் சீடர்கள் பலர் சேர்ந்திருந்தனர். குருகுலவாசத்தின்போது ஒருநாள் சீடர்களில் சிலருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. "கடவுளை வேண்டி சதா பூசை, யாகம், அருளுரை என்றே நமது குரு செய்து வருகிறார். குரு கடவுளை நேரில் பார்த்திருக்கி றாரா?' என்று பேசிக்கொண்டார்கள். "இருக் காது; கடவுளாவது இங்கே வருவதாவது' என ஆளாளுக்கு விவாதம் செய்தனர். இறுதியாக குருவிடமே தங்கள் சந்தேகத்தைக் கேட்டு விடுவது என்று முடிவெடுத்தனர்.

auvadai

குரு சீடர்கள்முன்பு அருளுரை வழங்க அமர்ந்தார். அப்போது சீடர்கள் குருவிடம், ""குருவே, கடவுளை நீங்கள் பார்த்ததுண்டா? அப்படியானால் நாங்களும் கடவுளைப் பார்க்கமுடியுமா?'' என்று கேட்டனர். சில நொடிகள் அமைதியாக இருந்த குரு ஒரு சீடனை அழைத்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் ஒரு பிடி உப்பையும் கொண்டுவரச் சொன்னார். அவற்றை சீடர்களிடம் காட்டி ""இவை என்ன'' என்று கேட்டார். ""பாத்திரத் தில் தண்ணீர்; கையில் உப்பு'' என்றனர். உப்பைத் தண்ணீரில் போட்டார் குரு. சிறிது நேரம் கழித்து சீடர்களிடம் பாத்திரத்தைக் காட்டி, ""இதனுள்ளே போட்ட உப்பு எங்கே?''

Advertisment

என்று கேட்க, சீடர்கள் ""உப்பு தண்ணீரில் கரைந்துவிட்டது'' என்றனர். குரு, ""இதுபோல் தான் இறைவனும் எல்லா இடங்களிலும், எல்லா உயிரினங்களிலும் கலந்து கரைந்துள்ளார்'' என்றவர், உப்பு கரைந்த பாத்திர நீரை அடுப் பில் வைத்து சூடேற்றினார். சிறிது நேரத்தில் தண்ணீர்வற்றி உப்பு மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. ""இது என்ன?'' என்றார். ""உப்பு'' என்ற னர். ""இதுபோல மனிதன் நல்ல எண்ணங்கள், செயல்களை வளர்த்துக்கொண்டு அனைத்து உயிர்கள்மீதும் அன்பு செலுத்தி, இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு இறைவன் தெரிவார்'' என்று விளக்கமளித்தார். சீடர்கள் மனமுருகிப் போனார்கள். மனித உருவிலுள்ள இறைவன் நமது குரு என்று உணர்ந்தனர்.

auvadaiஅப்படிப்பட்ட இறைவனிடம் தன்னையே முழுமையாக ஒப்படைத்த சீடன் போன்ற ஒருவர் சிவனுக்கு ஆலயம் எழுப்பி வருகிறார். எங்கே தெரியுமா? வேப்பூர் காவல் நிலையத்தில் கடை நிலை ஊழியர் கல்யாணசுந்தரம். ஊருக்கு மேற்குப் பகுதியிலுள்ள ஆவுடை யார் தோப்பு ஏரிக்கரைப்பகுதிக்கு அவ்வப்போது சென்றுவரும் வழக்கம் கொண்டவர். சில ஆண்டு களுக்கு முன்பு ஏரி தூர்வாரும் பணி நடந்தது. அப்போது பூமிக்கு அடியிலிருந்து ஒரு சிவலிலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர் வெளிப் பட்டனர். சிலைகள் ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடந்ததைப் பார்த்து வேதனையுற்ற கல்யாண சுந்தரம் அவற்றை எடுத்து ஒரு கருவேல மரத்தடியில் வைத்துப் பூஜைசெய்ய ஆரம்பித்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் களுக்கு பந்தலாக பழைய டிஜிட் டல் பேனர்களை அமைத்தார். நேரம் கிடைக்கும்போது இறைவனிடத்தில் தஞ்சமானார். எத்தனை நாளைக்குதான் இப்படி வெட்டவெளியில் கருவேல மரத்தடியில் இறைவனை வைத்திருப்பது? சிறிய அளவிலாவது ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று மனம் எண்ணியது. "நாமோ ஏழை; நம்மால் கோவில் கட்டமுடியுமா? கற்பனையாக மனதில் கட்டிப்பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்' என்றபடியே ஏக்கப் பெருமூச்சுவிட்டார். இந்த நிலையில் கல்யாணத்தின் நண்பர்களும் இறைவனை வழிபட வந்து போனார்கள். அவர்களிடத்தில் கோவில்கட்டும் விருப்பத்தை வெளிப்படுத்தினார் கல்யாணசுந்தரம். ""இறைவனின் விருப்பம் அதுவாக இருந்தால் அது நடந்தே தீரும். நீ முயற்சி செய்'' என்று ஊக்கமளித்தனர்.

வெட்டவெளியில் வீற்றிருந்த ஆவுடையாரின் பெருமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் பரவியது. பலரும் இங்குவந்து வழிபட்டதோடு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். கல்யாணத்தின் கற்பனையில் வளர்ந்த கோவில் உண்மையாக உருவெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இப்போது இறைவனுக்கு தனிச் சந்நிதி முழுமைபெறும் நிலையில் உள்ளது. அம்பாள் யோகாம்பிகை, விநாயகர், முருகன், நவகிரகங்கள், கஜலட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனிச் சந்நிதிகள் உருவாகி நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆலயத்திற்குள் சென்று அமர்ந்து அருளாட்சி செய்வதற்கு முன்பே தன் புகழைப் பரவச்செய்து பக்தர்களைத் தன்பக்கம் கவர்ந்துள்ளார் ஆவுடையார்.

Advertisment

""அவரது அருளை பக்தர்களிடமே நேரடியாகக் கேளுங் கள்'' என்று கை காட்டினார் கல்யாணம். சிறுநெசலூரைச் சேர்ந்த நாராயணசாமி- வாசுகி தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. பல மருத்துவம் பார்த்தும் பயனில்லை. இறுதியில் ஆவுடையார் என்ற மருத்துவரே கதி என்று இங்கு வந்து வழிபட ஆரம்பித்தனர்.

தற்போது ஆவுடையார் அருளால் லாவண்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ""வாழ்க்கையில் எங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தையளித்த இந்த ஆவுடையார்- யோகாம்பி கையை மறக்கமாட்டோம்'' என்கிறார்கள் நாராயணசாமி- வாசுகி தம்பதி. இவர்களுக்கு மட்டுமா குழந்தைப் பேறு கிடைத்தது? இங்கு நம்பிக்கையோடு வரும் தம்பதிகளுக்கு குழந்தை வரத்தை வாரி வழங்கி வருகிறார் ஆவுடையார். செல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த சரண்ராஜ்- நிர்மலா தம்பதிகள், ""எங்களுக்குத் திருமண மாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தையில்லை. மருத்துவ சிகிச்சைக் கைவிட்டது. திசை தெரியாமல் தவித்தோம். ஆவுடையார் பற்றித் தெரிந்து இங்கே வாரந்தோறும் வந்து வழிபட்டோம். அவரது அருளால் எங்களுக்கு குமார், சந்தியா, ஜான்சிராணி என மூன்று குழந்தைச் செல்வங்கள் உள்ளன. குழந்தையில்லாத குடும்பம் எப்படி இருக்கும்? அதோடு நண்பர்கள், உறவினர் கள் "திருமணமாகி இன்னுமா குழந்தை இல்லை' என்று கேட்ட கேள்விகளால் மனம்பட்ட வேதனைகள் ஏராளம். இவற்றுக்கெல்லாம் ஆவுடையார் மருந்தாக இருந்து எங்களைக் காப்பாற்றினார்'' என்கிறார்கள்.'

auvadai

செல்லிலியாம்பாளையம் சேகர், ""ஒருநாள் காட்டுக்குள் தேன் எடுக்கப் போனேன். அப்போது அளவுக்கதிகமாகத் தேனைக் குடித்துவிட்டேன். என் னால் பேச முடியவில்லை. "தேனின் அடர்த்தி ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கிவிட்டது. "இனி பிழைப்பது சந்தேகம்' என்று உள்ளூர் மருத்துவர்கள் கூறினர்.

அப்போது கல்யாணசுந்தரம் ஆவுடையார் கோவில் விபூதியை என் நெற்றியில் பூசினார். "எது நடந்தாலும் நடக்கட்டும்' என்றார்.

பெரம்பலூர் தனியார் மருத் துவமனைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்து என்னை ஆம்புலன் சில் ஏற்றினார்கள். அதன்பிறகு சுயநினைவு இழந்து போனேன். இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனையில் கண் விழித்தேன். உடல்நிலை சரியாகிவிட்டது. என்னையே என்னால் நம்பமுடியவில்லை. அங்கிருந்து நேராக வீட்டுக்குக்கூட போகவில்லை. இங்கு ஆவுடையாரை தரிசிக்கதான் ஓடிவந்தேன். நோயாளிகளை ஆவுடையார் கைவிடமாட்டார்'' என்றார் மனமுருக.

""வேப்பூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி ராஜேஸ்வரி 12-ஆம் வகுப்பு முடித்தார். நீட் தேர்வில் வெற்றிபெற்று டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்தார். நீட் கோச்சிங் செல்லும் அளவிற்கு வசதியில்லை. ஆவுடையாரை வேண்டி வீட்டிலும், ஆவுடை யார் கோவிலிலிலும் வந்து தானே நீட் சம்பந்தமான புத்தகங்களைப் படித்தார். இறைவன் அருளால் தேர்வில் வெற்றிபெற்று டாக்டர் சீட்டு கிடைத் துள்ளது. இப்படி ஆவுடையார் தம்மை நாடி வருபவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து தம் புகழைத் தாமே நிலைநாட்டி வருகிறார்.

அப்படிப்பட்ட இறைவனுக்கு பொதுமக்கள், சிவனடியார்கள் ஆதரவோடு ஆலயப்பணி நடந்துவருகிறது. அவர் விருப்பப்படி விரைவில் கும்பாபிஷேகம் நடத்தும் முனைப் போடு பணிசெய்து வருகிறோம்'' என்கிறார் கல்யாணசுந்தரம்.

இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முயல்பவர் களுக்கு ஆயிரம் பிறப்புகளில் செய்த பாவங் கள் நீங்கும்; பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; பல புண்ணியதீர்த்தங்களில் நீராடிய பலனை அடைவார்கள். சொர்க்கத்தை அடைவார்கள் என்பர். பல கோடிகளில் பணம் புரளும் வசதிபடைத்த மனிதர்கள் எல்லாருக் குமே கோவில் கட்டும் பாக்கியம் கிடைப்பதில்லை. இறைவன் விரும்பினால் சாதாரண பக்தனைக்கூட கோவில்கட்ட அனுமதிப்பார் என்பதற்கு கல்யாண சுந்தரமே சாட்சி. இக்கோவிலை தரிசிக்க வாருங்கள் வேப்பூருக்கு.

அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் பஸ் நிலையத்தின் தென்மேற்கில் கூப்பிடு தூரத்தில் உள்ளது ஆவுடையார் ஆலயம். தொடர்புக்கு அலைபேசி: 90253 84725.