ரமேஸ்வரரின் அம்சமாகத் தோன்றிய ஆதிசங்கரருக்குப்பின் வந்த ஆச்சார்யர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர். அவருடைய திவ்ய சரித்திரம் அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒன்றாகும்.

ஆங்கில ஆண்டு 1,554, புரட்டாசி மாதத்தில் அப்பய்ய தீட்சிதர் பிறந்தார்.

Advertisment

அவருடைய இயற்பெயர் விநாயக சுப்பிரமணியம். அவருக்குப்பின் ஆச்சார்யா என்ற தம்பியும், ஞானாம்பிகா என்ற தங்கையும் பிறந்தனர்.

ஆரம்பத்தில் சிறிது காலம் அப்பய்யருக்கு அவரது தந்தை ஸ்ரீரங்கராஜத்வரியே குருவாக இருந்தார். பின்னர் வைஷ்ணவ ஆச்சாரியார் குரு ராமகவியிடம் நாடகம், அலங்காரம் கற்றார். மிகக்குறைந்த வயதிலேயே சாஹித்யம் செய்யும் திறனையும் பெற்று, இளஞ்சூரியன்போல் பிரகாசித்து வந்தார். காலம் உருண்டோடியது. ஸ்ரீ ரங்கராஜத்வரி சிவபதமடைந்தார். அவரை ஆதரித்துவந்த அரசன் சின்னபொம்மு ஸ்ரீமத் அப்பய்யரையும் அவரது தம்பி ஆச்சார்யாவையும் தனது சபையில் வித்வான்களாக்கி ஆதரிக்கலானார்.

அரசரவையில் தாதாச்சாரியார் மந்திரியாக இருந்தார். தீவிர வைணவப் பண்டிதரான இவருக்கு சிவபெருமானையும் சிவபக்தர்களையும் பிடிக்காது. இதன்காரணமாக அப்பய்யருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தார். எனினும் ஒரு கட்டத்தில் மனம் திருந்தி, சிவ பூஜை, பழைய கோவிலைப் புதுப்பித்துக் கட்டி, அன்றாட பூஜை நடைபெற நிலங்களையும் எழுதிவைத்துப் பிராயச்சித்தம் செய்துகொண்டார் என்பதெல்லாம் தனிக்கதை.

Advertisment

சின்னபொம்மன் ஆதரவில் தமது பெரும்பாலான காலத்தைக் கழித்த சமயத்தில் அப்பய்யர் அதிக நூல்களை இயற்றினார்.

சிவ பக்தி செய்துகொண்டும், உள்ளூர் மற்றும் பிற தேசங்களி −ருந்து வரும் சீடர்களுக்கும் கற்பித்துக்கொண்டும், சாஸ்திர பிரவசனங்கள் செய்துகொண்டும் வாழ்ந்து வந்தார். மேலும் வேதங்களில் கூறியவண்ணம் யாகங்கள் பல செய்தார். குறிப்பாக வாஜபேய யாகம் செய்தார். "சிவார்க்கமணி தீபிகா' என்ற நூலுக்காக அரசன் சின்னபொம்மு அப்பய்யருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பொருள்களைக் கொண்டு அடையப் பலத்தில் காலகண்டேஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார்.

ஒருசமயம் தாதாச்சாரியார் அரசர் சின்னபொம்முவிடம், ""தாங்களும் மற்ற அரசர்களும் நிறைய அளவில் பொருள்கள் கொடுத்து உதவியபோதும், அப்பய்யர் ஒன்றும் இல்லாதவர்போல் எளிமையாக இருக்கிறாரே... பெற்ற பொருள்களை என்ன செய்தார்'' என்று கோள் மூட்டியபோது, அப்பய்யர், தமக்குக் கிடைத்த பொருள்களை யாகங்கள் செய்தபோது அக்னியில் அர்ப்பணம் செய்ததாகக் கூறினார். அதை நிரூபிக்குமாறு சொன்னபோது, யாகம் ஒன்றை நடத்தினார். அக்னி குண்டத்தி−ருந்து அபிஷேகத் திரவியங்கள், மணிகள், மாலைகள், அரசர்கள் வழங்கிய வெண் பட்டாடைகள் போன்ற பல பொருட்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர, பார்த்த வர்கள் திகைத்தனர்.

Advertisment

aa

மற்றொரு சமயம் அரசவையில் தாதாச்சாரியார் தீட்சிதரைப் பார்த்து, ""நீலகண்ட உபாசகரே, சிவன்தான் தலைவன் என்றும், எல்லா ஔஷதங்களும் சிவனைச் சார்ந்ததே என்றும் கூறுகிறீர்கள். விஷத்தை உண்டவனும் சிவன்தான் என்கிறீர்கள். தங்கள் கூற்றை நிரூபணம் செய்யும் வகையில் சிவன் பிரசாதமாக தாங்கள் விஷத்தை அருந்தமுடியுமா'' என்றார் பரிகாசமாக.

அப்பய்யரோ எவ்விதத்திலும் தயக்கமின்றி விஷத்தை வரவழைத்து அருந்தி, எவ்வித பாதிப்புமில்லாமல் நலமுடன் இருந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.

அத்வைத சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த அப்பய்யருக்கு, பிறமதத் துவேஷம் கொஞ்சமும் கிடை யாது. உண்மையில் மாற்று சித்தாந்தங் களையும் நன்கு கற்றுணர்ந்து நூல்களை இயற்றினார். அந்நூல்கள், அந்தந்த தத்துவப் பண்டிதர்களால் பெரிதும் பாராட்டப் பட்டது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு பாடநூல்களாகவும் ஏற்றுக் கொள்ளப் பட்டன.

தீவிர வைணவ சமயத் தைச் சார்ந்தவர்கள், சைவ சமயத்தவர் கள்மீது கொண்ட துவேஷத்தைத் தக்க வாதங்கள்மூலம் நீக்க எண்ணி, அதற்கேற் பவும் செயல்பட்டார். இதனடிப்படையில் இவர் எழுதிய நூலே "சிவார்க்கமணி தீபிகை.' 500 வித்வான்களுக்குப் பயிற்சியளித்து, சிவ பக்தியை மக்களிடையே பரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு அரசரும் உதவிபுரிந்தார்.

தீவிர வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள், சிவனை ஆராதிப்பவர்கள்மீது கொண்ட வெறுப்பை இரண்டு எடுத்துக்காட்டு கள்மூலம் காண்போம்.

ஒருசமயம் காஞ்சிபுரத்தில் வைணவப் பண்டிதர்களால் நடத்தப்பட்ட "ஸங்கல்ப சூரியோதயம்' என்ற நாடகத்தை அப்பய்யர் பார்த்துக்கொண்டிருந்தார்.

நாடக நடிகர்கள், "இராமானுஜரைப் பின்பற்றுபவர்கள் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குவேன். அதேசமயம் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரின் தலைகளில் என் இடது காலை வைப்பேன்' என்னும் பொருள்கொண்ட கவிதையைக் கூறி நடிக்கும்போது, அப்பய்யரின் தலைமீது காலைவைப்பதுபோல நடித்தார்கள்.

அடுத்து, அப்பய்யரின் குரு, குரு ராம கவி, சிறந்த வைணவப் பண்டிதர். அப்பய்ய ருக்கு குருவாக இருந்தார் என்ற காரணத் திற்காகவே வைணவர்களால் அவமதிக்கப் பட்டார்.

ஒருசமயம் அப்பய்யருக்கு சந்தேகம் வந்தது. உடலும் உள்ளமும் நல்ல நிலையில் இருக்கும்போது மட்டுந்தான் ஈஸ்வர பக்தி இருக்குமா? மனநிலை பாதிக்கப்பட்டு- அதாவது பைத்தியம் பிடித்த நிலையிலும் ஈஸ்வர பக்தி இருக் குமா என்பதை அறிய விரும்பினார். இது ஒரு விஷப் பரிட்சை. ஆம்; பைத்தியம் பிடிக்க விஷம் அருந்த வேண்டும். இதற் கேற்ப ஊமத்தை விஷத்தையும், மாற்று மருந்தையும் தயாரித் துக் கொண்டார். பின்னர் சீடர்களிடம், தான் விஷத்தை அருந்தி உன்மத்தம் பிடித்த நிலையில் கூறுவதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மாற்று மருந்து தரவேண்டு மென்றும் தெரிவித்து விஷமருந்தினார். பைத்தியமான நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் "உன்மத்த பஞ்சாயத்' அல்லது "ஆத்மார்ப்பண ஸ்துதி' என்று கூறப் படுகிறது. நவவித பக்தி நிலைகளில் ஆத்ம நிவேதனம் என்ற நிலையை அடைந்தார் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு சமயம் தஞ்சாவூர் அரசரின் அழைப்பின்பேரில் அப்பய்யர் தஞ்சாவூர் சென்றார். தாதாச்சாரியாரும் உடனிருந்தார். அரசருடன் இருவரும் சில இடங்களுக்குச் சென்றனர். ஒரு கிராமத்தில் வித்தியாசமாக தர்மசாஸ்தாவின் சிலை இருந்தது. ஆம்; தர்மசாஸ்தா சுட்டு விரலைத் தம் வலது கன்னத்தில் வைத்தி ருந்தார். அரசர் அங்கிருந்த வர்களிடம் இதைப்பற்றி விசாரிக்க, அவர்கள், "அரசே, இது எங்கள் குலதெய்வம். "இவ்விடத்திற்கு ஒரு மகான் வருவார். அவர் இதற்கான விளக்கத்தைக் கூறுவார்.

அப்பேது தர்மசாஸ்தா தன் கன்னத்தி லி−ருந்து விரலை எடுத்துவிடுவார்' என்று எங்கள் முன்னோர்கள் சொல்−யிருக்கிறார் கள்'' என்றனர்.

இதைக் கேட்டதும் அரசர் வியந்து, தாதாச்சாரியாரைப் பார்த்து, ""தங்களால் பொருத்தமான காரணத்தைக் கூற இயலுமா'' என வினவ, அவரும், "மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு என் தாயாவார். எனவே நான் மிக உயர்ந்தவன். இருந்தும் மயானத் தில் வாழும் ஈசன் என் தந்தை என்பதை எண்ணும்போது மிகவும் வருத்தமாக உள்ளது' என்ற பொருளடங்கிய கவிதையைக் கூறினார்.

தர்மசாஸ்தா தம் விரலை கன்னத்தி−ருந்து எடுக்கவில்லை. அரசர் அப்பய்யரிடம், ""உமக்குத் தோன்றுவதைக் கூறவும்'' என்றார். அப்பய்யர், ""கைலாசவாசியான ஈஸ்வரன் என் தந்தை. அவருடைய மனைவி அன்னை பார்வதி எனக்குத் தாயாராவார். அதேசமயம் மோகினி அவதாரமெடுத்த மகாவிஷ்ணு என்னுடைய தாயார். அவருடைய மனைவியை எந்த முறை யில் அழைத்து வணங்கி ஆசிபெறுவேன் என்று எண்ணி, கன்னத்தில் விரலை வைத்துள்ள தர்மசாஸ்தாவே... என்னை ஆசிர்வதிக்க வேண்டும்'' என்ற பொருளடங்கிய கவிதை யைக் கூறினார். தர்மசாஸ்தா இவரது கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக விரலை எடுத்துவிட்டார்!

இவ்வாறு பெரும் புகழ்பெற்று வாழ்ந்து வந்த அப்பய்யர் தம்முடைய அந்திமக் காலத்தில் சிதம்பரத்தில் வாழ விருப்பம் கொண்டார். எனவே அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சிதம்பரம் வந்தார். அங்கு ஓர் ஆசிரமத்தில் இருந்துகொண்டு நடராசப் பெருமாளையும், கோவிந்தராஜப் பெருமாளையும் மனமார தரிசித்து வந்தார். வாழ்நாள் இறுதிவரை அனுஷ்டானங்களையும் சிவ பூஜையையும் தவறாது செய்து வந்தார். தமது மோட்சக்காலம் வருவதை உணர்ந்தார். அந்தச் சமயத்தில் அவரைச் சூழ்ந்தி ருந்த மக்களும், உறவினர் களும் அப்பய்யரின் மனதில் என்ன தோன்றுகிறது என வினவினர். அப்பய்யரும், "சிதம்பரம் புண்ணிய ஷேத்திரம். ஏதோ சில நூல்களை எழுதியுள்ளேன். இனி எதையும் அடைய விருப்பமில்லை. பரமசிவனின் பதம் பார்க்கவே விரும்புகிறேன்' என்ற பொருள்கொண்ட கவிதையைக் கூறினார்.

அந்தச் சமயம் அவர் கண்களுக்குப் பேரொளி தோன்றி, அவ்வொளியில் நடராசப் பெருமானின் தூக்கிய திருவடியைக் கண்டார்.

தில்லை அம்பலவாணன் சந்நிதியில் அப்பய்யர் நுழைவதைக் கண்ட அர்ச்சகர்கள், அவருக்குத் தரிசனம் செய்துவைக்க விரைந்தனர்.

அப்பய்யரோ சந்நிதியுள்சென்று, நடராசப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார்.