வசிஷ்ட மகரிஷி மேருமலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மிக அழகான- நிறைவான அந்த ஆசிரமத்தில் நந்தினி என்னும் தெய்வீகப் பசு கன்றுடன் இருந்தது.
ஒருமுறை அஷ்ட வசுக்களும் தத்தமது மனைவியருடன் மிக ஆனந்தமாக விளையாடிப் பொழுதைக் கழித்தனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி அந்தப் பசுவைக் கண்டாள்.
அது தனக்கு கண்டிப்பாக வேண்டுமென பிரபாசனிடம் அடம்பிடித்தாள். அதற்கு அவன், ""அது தெய்வீகப் பசு. வசிஷ்ட முனிவருடையது. அதன் பாலைப்பருகும் மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் இளமை குன்றாது வாழ்வர். அதனால் அதன் மீது ஆசைகொள்ளாதே. அது வேண்டாம்'' என்று
வசிஷ்ட மகரிஷி மேருமலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மிக அழகான- நிறைவான அந்த ஆசிரமத்தில் நந்தினி என்னும் தெய்வீகப் பசு கன்றுடன் இருந்தது.
ஒருமுறை அஷ்ட வசுக்களும் தத்தமது மனைவியருடன் மிக ஆனந்தமாக விளையாடிப் பொழுதைக் கழித்தனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி அந்தப் பசுவைக் கண்டாள்.
அது தனக்கு கண்டிப்பாக வேண்டுமென பிரபாசனிடம் அடம்பிடித்தாள். அதற்கு அவன், ""அது தெய்வீகப் பசு. வசிஷ்ட முனிவருடையது. அதன் பாலைப்பருகும் மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் இளமை குன்றாது வாழ்வர். அதனால் அதன் மீது ஆசைகொள்ளாதே. அது வேண்டாம்'' என்று எவ்வளவோ கூறினான். ஆனால் அவன் மனைவி அதைக் கேட்கவில்லை.
பிறகு அவன் மற்ற வசுக்களுடன் சேர்ந்து அந்த நந்தினி எனும் பசுவைப் பிடித்துச் சென்று விட்டான். ஆசிரமம் திரும்பிய வசிஷ்ட முனிவர் நந்தினியைக் காணாமல், தனது ஞானதிருஷ்டியால் நிகழ்ந்ததைக் கண்டறிந்து, "பசுவைக் கடத்திச்சென்ற வசுக்கள் மானிடர்களாகப் பிறக்கக் கடவர்' என சபித்துவிட்டார்.
இதையறிந்த வசுக்கள் பசுவுடன் சென்று முனிவரை வணங்கி சாபவிமோசனம் வேண்டினர்.
அதற்கு அவர், ""நீங்கள் எழுவரும் மானிடராகப் பிறந்து, உடனே இறந்து சாபவிமோசனம் பெறுவீர்கள். ஆனால் பிரபாசன் மட்டும் நீண்ட காலம் பூமியில் சந்ததியின்றி, பெண் இன்பமின்றி வாழ்வான்'' எனக் கூறினார்.
மேற்கண்ட கதை கங்கையோடு தொடர்புடையது.
முற்காலத்தில் மகா பிஷக் என்னும் மன்னன் ஆயிரம் அஸ்வ மேத யாகம், நூறு ராஜசூய யாகம் செய்ததன் சிறப்பு காரணமாக சொர்க்கத்தில் அமரும் பாக்கியம் பெற்றான். ஒருநாள் இந்திரன் அவை யிலிருக்க, மற்ற தேவர்கள் அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். அங்கு மகாபிஷக் மன்னனும் இருந்தான். அப்போது மிகமிக அழகாக கங்கா தேவி அங்குவந்தாள். அவள் வரும்போது அவளது மேலாடை காற்றினால் சற்று விலகி யிருந்தது. அதனைக்கண்ட அனைவரும் தலைகுனிந்து கொண்டனர். ஆனால் மகாபிஷக் மன்னனோ அவளை வெறித்துப் பார்த்தான். இதனைக்கண்ட இந்திரன் கோபமுற்று, ""அறிவற்றவனே, எந்த கங்கையை இப்படிப் பார்த்தாயோ, அவளால் பூமியில் மிகவும் துன்பமடையப் போகிறாய்.
உன்னைத் துன்புறுத்தும் செயலை இவள் செய்வாள். எப்போது அவள்மீது உனக்குக் கோபம் வருகிறதோ அப்போதுதான் சாபத்திலிருந்து உனக்கு விமோசனம் கிட்டும். நீ மானிடனாகப் பிறப்பாய்'' என சாபமிட்டான். விலகிய மேலாடை சரி செய்யாமல் அவைக்கு வந்த கங்கைக்கும் இதுவொரு தண்டனைதான்.
அந்த மகாபிஷக் மன்னன்தான் பிரதீப மன்னனின் மகனாக சந்தனு என்னும் பெயரில் பிறந்தான். அவனிடமிருந்தே மகாபாரதக் கதை தொடங்குகிறது.
சந்தனு மகாராஜன்தான் கங்கையை மணந்தவன். இந்த கங்கையே அந்த ஏழு வசுக்களையும் குழந்தைகளாகப் பெற்று, உடனே அவர்களை நதியில் வீசி இறக்க வைத்து சாபவிமோசனம் கொடுத்தாள்.
எட்டாவது வசுவான பிரபாசனே கங்கையின் எட்டாவது குழந்தையாகப் பிறந்து, பீஷ்மர் என்னும் பெயர் கொண்டு நெடுநாள் வாழ்ந்தார். சாபத்தின்படி பீஷ்மர் திருமணம் செய்துகொள்ளாமல், சந்ததியின்றி, பெண் சுகமின்றி வாழ்ந்தார்.
இதிலிருந்து அடுத் தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்றும்; அடுத்த பெண் களை வெறித்துப் பார்க்கக்கூடாது என் றும்; பெண்கள் பொது இடங்களில் ஒழுக்கமாக ஆடையணியவேண்டும் என்றும் புலனாகிறது.