ஹி டம்பா தேவி மந்திர்...
இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் குலு மணாலியில் இருக்கிறது.
இந்தக் கோவில் பாண்டவர்களின் வரலாற் றுடன் தொடர்புகொண்டது. பாண்டவர் களை எப்படியாவது அழிக்கவேண்டுமென்று எண்ணிய துரியோதனன் தன் தந்தையிடம் ஆலோசனை செய்தான். அதன்படி பாண்ட வர்களை அழைத்த திருதராஷ்டிரன் தர்மனி டம், "நீ உன் தாய், தம்பிகளுடன் சிறிது காலம் வாரணாவதம் சென்று தங்கியிரு' என்றான். அதை ஏற்றுப் புறப்பட்டுச் செல்லும்போது, சிற்றப்பாவான விதுரன் தர்மனிடம், "காடு தீப்பற்றி எரியும்போது எலிகள் வளைக்குள் புகுந்து தப்பிவிடும்' என்று சூசகமாக அவர் களின் சதித்திட்டத்தைக் கூற, தர்மன் புரிந்து கொண்டான்.
வாரணாவதம் சேர்ந்த பாண்டவர்களை புரோசனன் என்பவன் அழைத்துச் சென்று அரக்கு மாளிகையில் தங்கவைத்தான். இரவில் அவர்கள் உறங்கும்போது மாளிகைக்குத் தீவைத்து பாண்டவர்களைக் கொன்றுவிட ஏற்பாடு. ஆனால் விதுரனின் ஆள் அந்த அரக்கு மாளிகையில் ஒரு ரகசிய சுரங்க வழியை அமைத்திருந்தான். இரவில் பாண்ட வர்களே மாளிகைக்கு தீயிட்டுவிட்டு சுரங்கம் வழியாகத் தப்பிச்சென்றனர்.
அங்கிருந்து அவர்கள் கங்கை நதிக்கரையை அடைந்து படகின்மூலம் தெற்கு நோக்கிப் பயணித்தார்கள். பாண்டவர்கள் இறந்து விட்டார்களென்று கௌரவர்கள் நினைத் தார்கள். தப்பித்துச்சென்ற பாண்டவர்கள் காட்டிற்குள் சென்றனர்.
பாண்டவர்கள் களைப்பைப் போக்குவதற் காக ஓரிடத்தில் ஓய்வெடுத்தனர். அப்போது அருகில் நீர் பருகுவதற்காகச் சென்றான் பீமன். அவனைத் தவிர மற்ற சகோதரர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அந்த காட்டின் அரசன், அரக்கனான ஹிடம்பன். அவனுடைய தங்கை ஹிடம்பா. பீமன் எதிர்பாராமல் ஹிடம் பாவைப் பார்க்க, ஹிடம்பா அவனிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்தாள். அதைத் தெரிந்துகொண்ட அரக்கன் ஹிடம்பன் பயங்கர கோபத்திற்கு ஆளானான்.
அரக்கன் ஹிடம்பன் பாண்டவர்களைத் தாக்க, அவனுடன் கடுமையாகப் போரிட் டான் பீமன். அந்தப் போரில் அரக்கன் ஹிடம்பனை பீமன் கொன்றான். அதன்பின் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பீமனிடம் கேட்டாள் ஹிடம்பா. அந் தத் திருமணத்திற்கு தாய் குந்தியும் சம்மதித்தாள். பீமனுக்கும் ஹிடம்பாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன் பிறந் தான். அவன்தான் கடோத்கஜன். மகாபாரதப் போரில் அவன் மிகப்பெரிய வீரனாக ஈடுபட்டான்.
பீமனைத் திருமணம் செய்து கொண்டபிறகு, ஹிடம்பா தன் அரக்க குணத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு நல்ல குணங்களைக் கொண்டவளாக மாறினாள்.
மணாலிதான் ஹிடம்பா பிறந்த ஊர். அங்குதான் இந்த ஆலயம் இருக் கிறது. மிகவும் அழகான தோற்றத் தைக்கொண்ட ஆலயம் இது. இந்த தேவிக்கு தோங்க்கி தேவி, டுங்க்ரி தேவி ஆகிய பெயர்களும் உண்டு. டுங்க்ரி என்றால் பாறை. கிராம தேவதையாக ஹிடம்பாவை மக்கள் வழிபடுகிறார்கள்.
இந்த ஆலயம் தேவதாரு மரங் களுக்கு மத்தியில் அமைந் துள்ளது. பகோடா பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இப்போதி ருக்கும் இந்த ஆலயத்தை 1546-லிருந்து 1559-க்குள் குலுவின் மன்ன னான பகதூர் சிங் கட்டினார்.
ஒரு சாதாரண மனிதனான விகங்கமணிபால் என்பவனுக்கு ஹிடம்பா அருள் தந்து அவனை மன்னனாக்கினாள். அவன்தான் அங்கு ஆட்சிசெய்த முதல் மன்னன்.
ஹிடம்பாவிடம் கிருஷ்ணர் "உலகமக்களின் நன்மைக்காக நீ சேவைசெய்ய வேண்டும்' என்று கூறியதாக புராணம் சொல்கிறது.
இந்தக் கோவிலுக்கு அருகில் ஒரு குகை உள்ளது. அதற்குள் அமர்ந்துதான் ஹிடம்பா தியானம் செய்தாளாம். நவராத்திரிக் காலத்தில் இந்தியாவின் மற்ற இடங்களில் அனைவரும் துர்க்கையை வழிபடுவார்கள். ஆனால், குலு மணாலியில் இருப்பவர்கள் மட்டும் அங்கு குடிகொண்டிருக்கும் ஹிடம்பா தேவியை வழிபடுகிறார்கள். இதற்காக பல மணி நேரம் வரிசையில் அவர்கள் காத்துக்கொண்டிருப்பதைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி.
இந்த ஆலயத்தின் கோபுரம் 24 மீட்டர் உயரம் கொண்டது.
இங்கு பீமன்- ஹிடம்பா இருவருக்கும் பிறந்த மகனான கடோத்கஜனுக்கும் ஒரு கோவில் இருக்கிறது.
இந்தியாவின் பல இடங்களிலுமிருந்தும் இந்த ஆலயத்தைத் தேடி பக்தர்கள் வந்து, ஹிடம்பா தேவியை பக்தி உணர்வுடன் வழிபடுகிறார்கள்.
அதற்கான பலன்களும் அவர்களுக்குக் கிடைக்கின்றன.
டில்லியிலிருந்து மணாலிக்கு பன்னிரண்டரை மணி நேரம் பயணிக்க வேண்டும். இது சாலை வழியாக. ரயிலில் பயணிப்பதாக இருந்தால்... டில்லியிலிருந்து கால்கா என்ற இடத்திற்கு 270 கிலோமீட்டர் தூரம் பயணித்து, பின்னர் அங்கிருந்து சாலை வழியாக குலு மணாலிக்கு 240 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவேண்டும்.